நம்மூரில் சீசனுக்கு பழங்கள் வருவதுபோல இப்போது பிரச்சனைகளும் சீசனுக்கு சீசன் வந்து போய்க்கொண்டிருக்கிறது. படுதீவிரமாக இருந்த முல்லைப்பெரியாறு பிரச்சனை அமைதியாகிவிட்டது. புரட்சியாளர்களும், தமிழுணவாளர்களும் அடுத்த சீசன் வரட்டும் என காத்திருக்கிறார்கள்.
விவசாயிகளுக்காக விவசாயிகள் மட்டுமே தெருவில் இறங்கிபோராட வேண்டும் என்பது மீண்டும் ஒருதடவை நிரூபணமாகி இருக்கிறது. வன்முறை மட்டுமே தெரிந்த சில அமைப்புகளும், சில சந்தர்ப்பவாதி கட்சிகளும் ஆட்டத்தில் நாங்களும் உண்டு என கரைவேட்டியுடன் காட்சிபிழை காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமது தமிழினத்தலைவரோ அணை அமைந்திருக்கும் பீர்மேடு பகுதி தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்ற கண்டுபிடிப்பை சொல்லியிருக்கிறார், இதை அவர் ஆட்சியேலேயே சொல்யிருந்தால் உடன்பிறப்புகள் அதையும் கையகப்படுத்திருப்பார்கள். அணைப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.
ஃபேஸபுக்கில் வாக்குப்பெட்டி வைத்து முல்லைப்பெரியாறு அணையும் உடையுமா? உடையாதா? என்ற கேள்விக்கு நான்கு பதில்களை வைத்து, உடையாது என்ற பதிலில் ஓட்டுக்குத்தி படுதீவிரமாக அணையின் ஸ்திரத்தன்மையை நிரூபிக்கிறார்கள். தவறுதலாக அந்தப்பக்கம் வரும் சில தமிழ்தெரிந்த சில மலையாளிகள் உடையும் என்பதில் குத்திவிட்டு தங்கள் தரப்பு நியாயத்தையும் சொல்லுகிறார்கள். உச்சநீதிமன்றம் அமைத்த நடுவர் குழு பேசாமல் இதைவைத்தே தங்கள் முடிவை தெரிவித்துவிடலாம்.
அரசும், ஊடகமும் இணைந்து ஒரு பிரச்சினையில் ஒரே தீர்வுக்காக இறங்கினால் விளைவு எப்படி இருக்கும் என்பதையே கேரளமாநிலத்தில் மு.பெ.பிரச்சனையில் காணமுடிந்தது. அணை உடைந்தால் இத்தனை குடும்பகள் பாதிக்கப்படும் என மலையாள மனோரமாவின் தலைப்புச்செய்தியே இருபது வருடங்களுக்கு மேலாக மக்களின் ஆதரவு இன்றி இருந்த இப்பிரச்சனைக்கு மக்களின் ஆதரவைப்பெற்றுத்தந்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த சில நகைச்சுவையான சம்பவங்கள் நிறைய உண்டு.
எனது அலுவலகத்தில் இருக்கும் கொச்சியை சேர்ந்த நண்பர் ஒருவர் படுசோகமாக முகத்தை வைத்துக்கொண்டு அணை உடைந்தால் என் குடும்பத்தை உடனே கோழிகோடில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு போகசொல்லிருக்கிறேன் என்கிறார். இன்னொருவரோ அதான் தண்ணிர் தருகிறோம்னு சொல்றோமல்ல அப்புறம் ஏன் அணையை கட்டுவுடமாட்டீறீங்கனு உம்மன் சாண்டியின் பன்ஞ் டயலாக்கை அடிக்கடி உதிர்த்துக்கொண்ருக்கிறார்.
கொடுமையின் உச்சமாக ஒரு மலையாள பண்பலை-ல் இரண்டு ரேடியோ "ஜோக்கி"கள் பேசிக்கொண்டிருந்ததுதான். முல்லைப்பெரியாறு அணையை கட்டியபோது, அணையைப்பற்றிய ஆவணங்களும், இரு மாநிலங்களுக்கும் இடையேயான அணை ஒப்பந்தம் பற்றிய ஆவணங்களும் பிரிட்டிஷ் அரசு லண்டனிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், லண்டன் ஆவணக்கிடங்கில் அதனை ஒரு பண்பலை நேயர் சேகரித்து வருவதாகவும், அந்த ஒப்பந்ததைப்பற்றிய உண்மையான விவரங்களை அரசிடம் சமர்ப்பிப்பதாக பேசிக்கொண்டிருந்ததுதான். இவர்களை பார்க்கும்போது நமக்கு பரிதாபம்தான் வருகிறது.
இந்த முல்லைப்பெரியாறு சீசன் இன்னும் நூறுவருடங்களுக்கு அணையைப்போல ஸ்திரமாக தொடர்ந்து வந்துப்போய்கொண்டிருக்கும், ஆனால் அடுத்த தலைமுறை குபீர் தமிழுணவாளர்கள் தங்கள் நியாயத்தை எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதில் பதிவு செய்வார்கள் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.



13 comments:
வாழ்த்துக்கள் நாஞ்சில்
தமிழ் மணம் நட்சத்திரமாய் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் மாப்ஸ்!!!!
வணக்கம் நண்பா. தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள்.
எக்ஸ்பிரஸ் - ல் இருந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
உங்ககிட்ட தான்ஏங்கனவே டாலர் இருக்கு
அதனால கேள்வி கேட்க மாட்டிங்க.டாலர் இல்லாதவங்க டாலர் கணக்கா கேள்வி கெட்கட்டுமே.
நெய்யாறு அணையில் விரிசல்னு வேற பேதியை ச்சே ச்சீ பீதியை கிளப்பிட்டு இருக்காயிங்க....!!!!
அன்பின் நாஞ்சில் பிரதாப் - முல்லைப் எரியாறு பிரச்னை அமுங்கி விட்டது. உச்ச நீதி மன்றம் தான் இனித் தீர்ப்பு வழங்க வேண்டும். நல்லதே நடக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வலைப்பூ ஒன்று என்னிடம் இருப்பதை நினைப்படுத்திய தமிழ்மணத்தாற்கு நன்றி.
நக்கலுலுலுலுலுலு
வாழ்த்துகள் பிரதாப்.
நட்சத்திரமாமே நீங்க, வாழ்த்துகள்.
இங்க (மலையாளிகள் நடத்தும்) ஒரு இந்தியப் பள்ளிக்கூடத்தில் போன மாசம் சயின்ஸ் எக்ஸிபிஷன் நடந்துது. அதில ரெண்டு அணை மாடல்கள் இருந்தன. எதுக்கு வச்சிருக்கீங்க, ஹைட்ரோ பவர் பத்தி விளக்கவான்னு கேட்டா, இல்லையாம். இப்ப முல்லைப் பெரியாறு பரபரப்பா இருக்கதுனால, மாடல் வச்சிருக்காங்களாம்!! கொடுமை. இதுல டேம் 999 படக் காட்சிகள் வேற ஒரு டிவியில ஓடிகிட்டிருந்துது அங்க!!
வணக்கம்! “ நம்மூரில் சீசனுக்கு பழங்கள் வருவது போல, இப்போது பிரச்சினைகளும் சீசனுக்கு சீசன் வந்து போய்க் கொண்டு இருக்கின்றன” என்ற தங்கள் கருத்து உண்மைதான். காவிரி நீர்ப் பிரச்சினை, பாலாற்றுப் பிரச்சினை என்று எல்லாவற்றையும் தீர்த்து வைத்து விட்டாற் போல இருக்கிறார்கள். வழக்கு வாய்தாவில் சிக்கியவர்கள்தான் பாவம்.
வாழ்த்துக்கள் நாஞ்சில்
வாங்க நட்சத்திரமே.. நட்சத்திர வாரத்தோட நின்னுடாம தொடர்ந்து ஜொலிக்க வாழ்த்துகள்.
நட்சத்திர வாழ்த்துகள் பிரதாப்.
:))
Post a Comment