Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - அபத்தத்தின் செறிவு

ஏழாம் அறிவு - சிறுநீர்ப் பையில் சேமித்து வைத்திருந்த தனது அபரிமிதமான தமிழ்உணர்வை ஏழாம் அறிவு என்ற பெயரில் வெளியேற்றிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.


ஆரம்பத்தில் வரும் போதிதர்மன் குறித்த ஆவணப்படத்தில் போதிதர்மன் யாரென்றே தெரியாது என்கிறார்கள் நம் ஊர் மக்கள், சைனா மக்கள் எல்லாருக்கும் அவரைப்பற்றி தெரிந்திருக்கிறது. எனக்கும் இதுவரைக்கும் விக்ரம்தர்மாவைத்தான் தெரியும். போதி தர்மன் யாரென்று தெரியாது. இதில் கேவலப்படுவதற்கோ வெட்கப்படுவதற்கோ எதுவுமில்லை.

தன் வாழ்நாளில் பெரும்பகுதியை சீனாவில் கழித்துவிட்டு அவர்களுக்கு கலைகளை கற்றுக்கொடுத்துவிட்டு மறைந்த ஒருவரைப்பற்றி நம்மஊர் மக்கள் அறிந்திருக்கும் சாத்தியங்கள் எந்த அளவிற்கு இருக்கிறது.? காமராஜரையே மக்கள் மறந்துவிட்டார்கள். பரந்து விரிந்த இந்திய துணைக்கண்டத்தில் தனது திறமைகளையும் கலைகளையும் பரப்புவதை விட்டு அவர் சீனாவுக்கு செல்லக்காரணம்? பதில் கிடையாது.

தமிழ்உணர்வை தட்டி எழுப்பி காசு பார்க்க முயன்றிருப்பவருக்கு படத்தின் லாஜீக் பற்றி எந்த அக்கறையும்படவில்லை.லாஜீக் ஓட்டைகள் நிரம்பிய ரமணா, கஜீனி போன்ற மசாலா படங்களில் இருந்த அசத்தலான திரைக்கதை இதில் காணவில்லை. படத்தில் ஏதாவது ஒருவிசயத்தை அழுத்திசொல்லப்படவேண்டும். சமுக அக்கறை, சயின்ஸ், தமிழ் உணர்வு இது எல்லாவற்றையும் போட்டு குழப்பி வழக்கமான ஒரு தமிழ்சினிமாவாக ஹீரோ ஜெயிக்கிறார் வில்லன் மரணம் சுபம். இது மாதிரியான ஒரு அறிவியல் மசாலாவை நாங்க 20 வருசத்துக்கு முன்னாடி விக்ரம் படத்துலேயே பார்த்துவிட்டோம். இந்தவகையில் ஒரு முழுமையான படமாக சிலவருடங்களுக்கு முன்பு வந்த ஜனநாதனின் "ஈ" திரைப்படம் ஒரு நல்ல உதாரணம்.


ஒரு செந்தில்-கவுண்டமணி காமெடியில், செந்தில் ஊர்க்காரர்களிடம் எங்க அண்ணன் மேல கைவச்சுப்பாருங்கடா என்று சொல்லுவார், அவர்கள் கவுண்டர் மேல் சும்மா கைவைக்க, கைதான வச்சீங்க அடிச்சுப்பாருங்கடா என்பார் அவர்கள் அடிக்க தானும் ரெண்டு அடிகொடுத்துவிட்டு ஓடுவிடுவார். விஞ்ஞானிகளின் கூட்டத்தில் தமிழை கொச்சைப்படுத்தும் விஞ்ஞானிகளுக்கு சுருதி பதில் கூறும் காட்சியில் இந்த காமெடிதான் நினைவுக்கு வந்தது.    அந்தக்காட்சியில் சுருதி பேசும் வசனங்கள் அபத்தத்தின் உச்சம். விஞ்ஞானிகள் கூட்டம் ஏதோ அரசியல் கட்சியின் செயற்குழு கூட்டம் போல் இருக்கிறது.


.தமிழை யாராவது கொச்சைப்படுத்தினால்தான் தமிழனுக்கு தமிழுணர்வு பொங்கிவழியும் என்னும் கருத்தில் சினிமாகாரர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆட்டோகிராஃப் படத்தில் தமிழனை நாய்கள் என கொச்சைப்படுத்தும் ஒரு மலையாளியை அடித்துபுரட்டும் சேரனும் இதில் விதிவிலக்கல்ல.


ஒருவரின் மனதை நோக்குவர்மத்தால் தன்வசப்படுத்தும் அந்த சைனாக்காரன் பாத்திரம் மிகைப்படுத்துதலின் உச்சம். ஒருவரின் மனநிலையை தன்வசப்படுத்துவது ஹீப்னாடிசம், மெஸ்மெரிஸம் வழியாக சாத்தியமே ஆனால் பார்த்தமாத்திரத்தில் வரிசையாக ஒருவரின் மனதை தன்வசப்படுத்தி அவர்களை தன் கட்டளைப்பபடி நடத்துவது சாத்தியமே இல்லாத ஒன்று.  சைனாக்காரன் ஒரு கோட்சூட் போட்ட மந்திரவாதி என்று காண்பித்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.


ஹீப்னாடிசம், மெஸ்மெரிஸம் போன்ற விசயங்களை விக்கிபீடியாவிலும், கூகுள் உதவியுடன் அரைகுறையாக படித்ததால் வந்தவினை இது. சைனாக்காரன் காவல்நிலையத்திற்கே சென்று போலீசாரை கொன்றுகுவித்துவிட்டு சர்வசாதாரணமாக ஊருக்குள் நடமாடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு போலீசை இப்படி கேலப்படுத்தியிருக்கவேண்டாம். இத்தனைக்கும் சிசிடிவி கேமராவிலெல்லாம் பதிவுசெய்கிறார்கள்.

தைரியமிருந்தால் இந்திய ஆர்மியின் முன்பு வந்து நில்லுங்கள் என்று பேசும் சுருதிக்கு சீனாவின் ராணுவபலம் பற்றியோ சீனாவின் குண்டை தன் துப்பாக்கியில் செலுத்தி பாகிஸ்தானும் நம்மைதாக்கும் என்ற ராணுவ அரசியலைப் பற்றியோ தெரிந்திருக்க வாயப்பில்லை.

 மிககொடுமையான நோய்பரப்பும் கிருமிகொண்ட மருந்துகளை சீனாவிலிருந்து "ஜஸ்ட் லைக் தட்" என தன்னுடன் லக்கேஜ்-ல் கொண்டுவந்து நேரடியாக அதை பரப்புவது எத்தகையான  அபத்தம் என்பது முருகதாஸ்க்கு தெரியாமல் போனது ஆச்சர்யம். பயோவார் உண்மையில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துவிட்டு சொல்லிருக்கலாம்.

கேள்வி கேட்காமல் நீங்கள் காண்பிக்கும் அத்தனை அபத்தங்களையும் பார்த்துவிட்டு சும்மா இருக்க இது விட்டலாச்சார்யா காலமல்ல முருகதாஸ் அண்ணே.

43 comments:

கருந்தேள் கண்ணாயிரம் said...

One of the best. இதுவரை ஏழாம் அறிவைப் பற்றிப் படித்ததில், இது ஒரு நல்ல விமர்சனம். எனக்கு ரொம்பப் புடிச்சது. me sharing this.

Murali Krishnan said...

நச்சுன்னு ஒரு விமர்சனம்...

Murali Krishnan said...

நச்சுன்னு ஒரு விமர்சனம்...

Murali Krishnan said...

தல நடுல இசை சூறாவளி ஹாரிஸ் பங்கு பத்தி நீங்க சொல்லாம விட்டதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் :) :) :)

Prasannaakumar MP said...

Good Review. Its not a condition to follow what majority of people say. Keep it up.

அமைதிச்சாரல் said...

விமர்சனம் நல்லாருக்கு..

உலக சினிமா ரசிகன் said...

நாஞ்சிலாரின் கேள்விகள் நேர்மையுடன் இருக்கிறது.
தீபாவளியன்று தமிழ் மக்களை கொள்ளையடிக்க நடத்தப்பட்ட மிக மலிவான நாடகம் ஏழாம் அறிவு.

கோபிநாத் said...

கலக்கல் மச்சி ;-)

shivam said...

என்கங்கே கேக்கறானுங்க ...

shivam said...

என்கங்கே கேக்கறானுங்க ...

கொழந்த said...

நீங்கவொரு தமிழின விரோதி.......

நீங்கவொரு ரசன கெட்டவரு .......

உங்களுக்கு சினிமாமானா என்னென்னு தெரியுமா ???

ப்ளாக் இருக்கு என்பதால் என்ன வேணாலும் எழுதலாமா ?

உங்களுக்கு வேற வேல இல்லையா ??

சீப் பப்ளிசிட்டி தேடாதீங்க .........

கொழந்த said...

இந்த மாதிரி கமென்ட் வந்திருக்குமே.........ஏன் ஒண்ணை கூட வெளிவுட மாட்டேங்குறீங்க.......

நாஞ்சில் பிரதாப்™ said...

எல்லாருக்கும் சேர்த்துநீங்க போடுவீங்கன்னுதான்... என் எதிர்பார்பபை பூர்த்தி பண்ணிட்டிங்க:))

Anonymous said...

நீ ஒரு பச்சை பார்பான் என்று உன் விமர்சனம் மூலம் தெரிகிறது

நாஞ்சில் பிரதாப்™ said...

திரு அனானி, தங்களின் கண்டுபிடிப்பு என்னை சொறிய வைத்துவிட்டது. :))

நிவாஸ் said...

சகா உங்களுக்கு என்ன தொடருகிறதோ அதைத்தான் எழுதுகிறீர்கள் அதனை யாரும் குறை சொல்ல முடியாது இருப்பினும் நீங்கள் இதுபோன்ற கதையை எடுத்த விதம் தவறு என்று சொல்ல வருகிறீர்களா இல்லை தமிழனின் பெருமையை இப்படி சொல்லிக் கொள்கிறார்களே என்று எரிந்து எழுதுகிறீர்களா?

தமிழினத்தை பற்றி கஷ்டப்பட்டு எடுக்கும் இதுபோன்ற படங்களை நீங்க பாராட்ட விட்டாலும் பரவில்லை இதுpol அவற்றை அசிங்கப் படுத்தி உங்களை நீங்களே உங்களை கேவலப் படுத்திக் கொள்ளாதீர்கள்.

இதுபோன்ற படங்கள் படங்கள் வந்தாலும் வராவிட்டாலும் சரி, உங்களைப் போன்றவர்கள் இப்படி விமர்சித்தாலும் சரி தமிழனின் பெருமை என்றுமே குறையப் போவதும் இல்லை அழியப் போவதும் இல்லை.

இதில் கொடுமை என்ன வென்றால் பொதி தர்மர் யாரெண்டு யாருக்குமே தெரியவில்லை என்று நீங்கள் சொன்னீர்கள் அல்லவா அந்த அளவிற்கு தமிழனின் பெருமையும் அழிக்க முயற்சி நடக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொண்டால் சரி

உங்கள் விமர்சனம் எனக்கு எங்கெங்கோ சொரிகிறது இதுபோல் இன்னும் இன்னும் எழுதி நீங்கள் எங்களுக்கு சொரிந்துவிடுங்கள் சரியா?


இதற்க்கு அவர் வேறு உங்களுக்கு ஒரு சப்பக்கட்டு யாரது காவாலித்தேளா? இல்லை கருங்காலித்தேளா? இம் கருந்தேள் கண்ணாயிரம்

உங்க விமர்சனத்துள் போட்டு #$$$%$%$%$%$%$% அடிக்க


http://thanganivas.blogspot.com/2011/10/blog-post_27.html

Anonymous said...

ni oru stupid

Bhavanishankar said...

loosu thanamaana vimarsanam... U must be a Vijay fan.. or a guy who tries too get more visitors by negative comments... like ramadoss..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

சைனாக்காரன் பத்திரம் மிகைபடுத்துதலின் உச்சகட்டம் என்பதில் மாற்றுகருத்தில்லை.
1௦௦௦ வருடத்திருக்கு முன்பே அம்மாவாசை பவுர்ணமியை கணித்து பஞ்சாங்கம் எழுதியவர்கள்(மேலும் பல ) நாம் என்ற விசயங்களை நினைவு படுத்திய வகையில் முருகதாஸை பாராட்டலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சூப்பர்ப் விமர்சனம்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னொரு விஷயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள், ஒருவர் கற்றுக் கொண்ட திறமைகள் ஒருபோதும் டீ.என்.ஏ. வழியாக அடுத்த தலைமுறைக்கு செல்லாது. இதுவும் சாத்தியமற்ற ஒன்றே.

நாஞ்சில் பிரதாப்™ said...

பவானிசங்கர், நான் விஜய் ரசிகர்ங்கறது உண்மைய கண்டுபிடிச்சிட்டாருப்பா.. எப்படிங்க இதெல்லாம் :))) நேரங்கிடைச்சா விஜய் அப்படின்னு என் வலைப்பூவில் தேடிப்பாருங்க, நான் எப்படி வெறிப்புடிச்ச விஜய் ரசிகர்னு தெரியவரும்..))

Ramachandiran said...

என் அருமை நண்பர்களே!
முருகதாஸ் ஒன்னும் பிட் பாக்கெட் திருடன் இல்ல.
இன்றைய சினிமா வாழ்கையில மற்ற படங்களையும், மற்றவரின் ஸ்டைலையும் காப்பி அடித்தும், இளைஞர்களின் காமத்தை தூண்டியும் பணம் பறிக்கின்றபோது. முருகதாஸ் மட்டும் எப்படி ஒரு தமிழனை பெருமைபடுத்தி சொல்லலாம். அதுதானே உங்களோட ஆதங்கம். இல்லையா நாஞ்சில்?
நம்மளைவிட திறமையிலேயும், அறிவிலேயும் குறைவான மற்ற நாட்டுகாரர்கள் எல்லா துறையிலேயும் எப்படி முன்னேறுகிறார்கள் தெரியுமா?
அவர்களிடம் எதுக்கெடுத்தாலும் மற்றவர்களை குறை கூறும் பழக்கம் கிடையாது, எங்கே ஒருத்தன் வளர்ந்துவிடுவானோ என்று பொறாமை படும் எண்ணம் கிடையாது. சுருக்கமா சொல்லனும்னா ஒரு தமிழனோட முயற்சியை உங்களைபோல இன்னொரு தமிழன் கேவலபடுத்துற ஒரு கேவலமான எண்ணம் கிடையாது.
உங்களை பொறுத்தவரை நல்லதையும் செய்யமாட்டீங்க, நல்லதை செய்ய முயற்சி செய்றவனையும் விட்டு வைக்க மாட்டீங்க.
என்னை பொறுத்தவரை யாரையும் புண்படுத்தி பேச நினைப்பதில்லை. அப்படி நான் எழுதியிருந்தால் என்னை மன்னியுங்கள் நண்பர்களே. நம் தமிழனின் பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்த நினைத்த ஒரு தமிழனை கேவலப்படுத்த நினைத்ததால் என் நெஞ்சு பொறுக்கவில்லை.

நாஞ்சில் பிரதாப்™ said...

திரு ராமச்சந்திரன்@ உங்கள் தமிழுணர்வுக்கு எனது மரியாதை. இந்தப்படத்தில் தமிழுணர்வையும் தாண்டி வியாபாரத்தனமும், அதில் அவசரப்பட்டு அரைகுறையாக வைக்கப்பட்ட திரைக்கதையையும் ஏன் உங்களுக்கு தெரியவில்லை. போதி தர்மனை உலகிற்கு காண்பிக்க இப்படி மசாலா படம் எடுத்துதான் பப்ளிசிட்டி பண்ணவேண்டுமா? சரி அந்தப்படத்தை எடுத்ததை தவிர போதிதர்மரின் புகழை பேணிபாக்க தமிழ்நாட்டில் அவர் வேறு எந்த முயற்சிகளை மேற்கொண்டார். குறைந்தபட்சம் தொல்லியல் துறைக்காவது இதை தெரியப்படுத்தினாரா? இவர்கள் காசு சம்பாதிக்க தமிழுணர்வை பயன்படுத்துகிறார்கள் என்பதை தயவுசெய்து புரிந்துக்கொள்ளுங்கள்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

தம்பி நிவாஸு... ஒடம்பு எப்புடிக்கீது ராசா? அது எப்புடி, ஒரு படம் பிடிக்கலன்னு சொன்னவுடனே ‘ஹா...ஹூ’ன்னு குதிக்கிறீரு?

என்னாது தமிழனின் பெருமையா? தமிழன் பெருமை என்ன தெரியுமா? உலகின் முதல் குரங்கு, தமிழ்க்குரங்குதான். இதைச்சொன்னவரு, புதுமைப்பித்தன். ஏன்யா இப்புடி தமிழன் தமிழன்னு சொல்லிக்கினு சாவறீங்க?

நானும் பிரதாப்பும், அமெரிக்க CIA அனுப்புன உளவாளிங்க. ரெண்டு பதிவு போட்டா, தமிழன் பெருமை காணாமப்பூடும்னு எங்களுக்கு சொல்லிருக்காங்க பாருங்க. அதான் இப்புடியெல்லாம் போடுறோம் ;-0

யோவ். மொதல்ல, சுவாரஸ்யமா படம் எடுக்க சொல்லி முருகதாஸுக்கு கமெண்ட் போடுங்க. மொக்கைத்தனமான குப்பையையெல்லாம், தமிழனின் பெருமைன்னு சொல்லி வெளக்கு புடிக்கிறதை நிறுத்தும். புரிஞ்சுதா? என் பேரை வேற அனாவசியமா இழுத்திருக்கீங்க. ரெண்டா கிளிச்சிடுவேன்.

கருந்தேள் கண்ணாயிரம் said...

follow up. நிவாஸ் எதுனா பொங்கினாருன்னா, அவரு திருவாயை மூட.

நாஞ்சில் பிரதாப்™ said...

நிவாஸ் @ தமிழ் தமிழ்னு சொல்லி அம்பது வருசமா ஒங்களையெல்லாம் ஏமாத்திட்டு இருக்கறவனுஙகளை எல்லாம் சும்மா விட்ருங்க... ஒரு பதிவு போட்டா பொங்கி எழுந்திருங்க... # மொதல்ல அங்கப்போய் கூவுங்க அப்புறம் இங்க வாங்க....

தெறச்சி வால் said...

இன்னும் படம் பாக்கல, பாத்துட்டு வந்து ,நான் தான் தமிழ காப்பத்த வந்தவன்னு சொல்லுகவன எல்லாம் கீறி உப்பு வைக்கேன்

பெசொவி said...

//
Anonymous said...
நீ ஒரு பச்சை பார்பான் என்று உன் விமர்சனம் மூலம் தெரிகிறது

//

அட புண்ணாக்குங்களா, ஒருத்தர் தன்னோட கருத்தை சொல்றதுக்குதான் ப்ளாக் யூஸ் பண்றாரு. அவர் பார்வையில படத்தை விமரிசனம் பண்ணினா, அவர் தமிழின விரோதியா? பச்சை பார்ப்பானா? ஏன் பார்ப்பான்லாம் தமிழை வளர்க்கலையா? கவிப்புயல் பாரதி ஒரு பார்ப்பன், எங்கேயோ மூலையில இருந்த தமிழ் இலக்கியங்களை வெளிக்கொணர்ந்த உ.வே.சா. ஒரு பார்ப்பான் தெரியுமா? பொய்யா, உங்க புள்ள குட்டிங்களை படிக்க வைங்க, வந்துட்டானுங்க! .

பெசொவி said...

//1௦௦௦ வருடத்திருக்கு முன்பே அம்மாவாசை பவுர்ணமியை கணித்து பஞ்சாங்கம் எழுதியவர்கள்(மேலும் பல ) நாம் என்ற விசயங்களை நினைவு படுத்திய வகையில் முருகதாஸை பாராட்டலாம்.//

பஞ்சாங்கத்தை பாராட்டறாரா, அப்போ முருகதாசும் பச்சைப் பார்ப்பானா? #டவுட்டு

ashokha said...

இப்படி ஓவராய் பில்ட் அப் பண்ணும்போதே தெரியும். ஊத்திக்கபோதுண்ணு. இப்ப சரியாய்ப் போச்சு.

Anonymous said...

superunga...kalakittinga...kalavaniyum , sorry karundhelum ungalluku supportaa????

தங்கம்பழனி said...

சும்மா சொல்லக்கூடாது.. விமர்சனம் தூள்.

ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் விமர்சனம் என்பது மிகவும் முக்கியம். விளம்பரத்தை விட இப்போது விமர்சனம் படிச்சுட்டு பாடம் பார்க்கறவங்கதான் அதிகம்..!!

தங்கம்பழனி said...

நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.

எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்

தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

நிவாஸ் said...

நாங்க எப்படி கேக்கணுமோ அப்படி கேட்டுக்கிட்டுதான் இருக்கோம், அந்த @நாஞ்சில் பிரதாப் - ஒரு ஆளு அப்படி இருந்த நீங்க எப்படி வேனாலும் பதிவு போடுவீங்களா? உங்க ப்ளாக் ரேட் ஏத்த வேற என்ன என்ன சொல்லுவீங்க, அவரு ஏமாத்துனா நீங்க வேடிக்க பாப்பீங்களா? அப்போ உங்களுக்கு அக்கறை இல்லனா சும்மா இறுககவேண்டி தானே?
ஏன் இந்தமாதிரி பதிவ போடுறீங்க, அவர கேக்க ஆள் இருக்கு, அவரு என்ன பண்ணாலும் கண்டிப்பா தெரியும் உங்கள மாதிரி சில புல்லுருவிகள கண்டுபிடிக்கத்தான் ஆளே இல்ல
நீக பண்ற சின்ன சின்ன விசா ஊசி வேலையத்தான் முதல்ல தடுக்கணும்

Anonymous said...

=அன்பின் நிவாஸ்,

தமிழ் வாழ்வதற்காகவேனும், தயை கூர்ந்து தமிழை தப்பில்லாமல் தட்டச்சப் பழகவும்..


- சென்ஷி

பிரதாப் - விமர்சனம் அருமை. கருந்தேளின் பாராட்டும் கிடைத்ததில் சிறப்பு :))

நாஞ்சில் பிரதாப்™ said...

நன்றி சென்ஷீ = சில அரைகுறை காமெடி பீசுங்க அரசியலும் தெரியாம, சினிமாவும் தெரியாம தமிழ், தமிழ்னு கூவி பின்னுட்டம் போடுறானங்க..அதெல்லாம் கண்டுக்காதீங்க...:))

Anonymous said...

bodhidharmar china ponadhuku karanam andha kodiya noi india laum parava iruka nu padathula oru scene la solli iurkanga..padam olunga pakama vimarsanam poda kodadhu

பின்னோக்கி said...

முதல் இரண்டு வரிகள் மீதி விமர்சனத்தின் கடுமையைப் பறைசாற்றியது. படம் பார்க்கவில்லை. அந்த எண்ணமும் இல்லை :).

ஆட்டோகிராஃப் உதாரணம் - படத்தில் ரசிப்பதைப் போலவே இருக்கும். நாம் ஆந்திரர்களை கிண்டல் செய்வதைப் போலவே. அந்த எஃபக்ட் இந்தப் படத்தில் கொண்டுவரவில்லை என்பது உங்கள் விமர்சனத்தில் தெரிகிறது.

பின்னோக்கி said...

கருந்தேளோட ரெண்டாவது கமெண்ட்ல அந்த C.I.A உதாரணம் படிச்சுட்டு இன்னும் சிரிச்சிக்கிட்டு இருக்கேன்.

காந்திநாதன் said...

Good. keep it up.

காந்திநாதன் said...

good.

Anonymous said...

don't be serious. When compared to some other movies Eelam Arivu is enjoyable even though it has some extras.

FEEDJIT Live Traffic Feed