Monday, October 3, 2011

" ராணா" கைவிடப்பட்டதால் வரும் நன்மைகள்




ரஜீனியின் "ராணா" திரைப்படம் கைவிடப்பட்டதால் வரும் நன்மைகள்

1. பட ரிலீஸ் அன்று ஆம்புலன்ஸ்க்கு கூட இடம் கொடுக்காத விசிலடிச்சான் குஞ்சுககளின் தொல்லை இருக்காது :)

2. படம் தடைப்பட்டதால் ரிலீஸ் அன்று விசிலடிச்சான் குஞ்சுகள் வேலைக்கு போகாமால் லீவு எடுக்கமாட்டார்கள். இதனால் நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும் :)

3. தமிழ்திரையுலகில் ராணா ஒரு ஒலகப்படம் என்ற அலப்பறை பதிவுகள் இருக்காது:)

4. 60 வயது தாத்தாவின் ரொமான்ஸை கண்டு இளம் காதலர்கள் தற்கொலை செய்ய மாட்டார்கள்:)

5. சன் டிவி இதை விலைக்கு வாங்கி கேமராவுக்கு பின்னால, கேமராவுக்கு முன்னால,கே.மேல,கே.கீழ, இந்த ஒலகப்படத்தை தயாரிச்சது எப்படி போன்ற கருமாந்திர நிகழ்ச்சிகள் இருக்காது.

6. விசிலடிச்சான் குஞ்சுகள் பதிவிடும் தொடர் பாராட்டு விமர்னங்களால் கூகுள் சர்வர் டவுன் ஆகாமால் தப்பித்தது.

7. பல ரங்கமணிகளின் பர்ஸ் தப்பித்தது.

8. ராணா படத்தை பார்க்கலைன்னா உயிர் வாழவே லாயக்கு இல்லை என்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் கேவலமான அட்வைசிலிருந்து தப்பிக்கலாம்.

9.  ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்று  ஆஸ்கர் விருது மீண்டும் டேமேஜ் ஆகாமல் தப்பித்தது.  (எந்திரனால் ஆஸ்கர் ஆல்ரெடி டேமேஜ் ஆயிடுச்சு).

10. சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தலை தப்பித்தது.

11. மக்கள் தொலைக்காட்சியை தவிர உலகத்தின் அத்தனை சேனல்களிலும் ராணா பட விளம்பரங்கள் வந்து பொறுமையை சோதிக்காது.


12. எப்படியும் ஏதாச்சும் ஒரு ஆங்கில, கொரிய படத்தை சுட்டுத்தான் எடுக்கப்போறானுங்க. ஒரு உலகப்படம் தப்பித்தது.

======================
இனி இருந்தாலும் தெரிவிக்கவும்.

ஒரு படம் ட்ராப் ஆச்சுன்னா சமுதாயத்துக்கு இத்தனை நன்மைகள். இதை பிரிண்ட் அடித்து ஆட்டோவின் பின்னாலும், பிட் நோட்டிஸ் அடித்து விநியோகித்தும் நம் சமுகத்துக்கு விழிப்புணர்வு உண்டாக்குவோம் :)))

9 comments:

Madhavan Srinivasagopalan said...

//" ராணா" கைவிடப்பட்டதால் வரும் நன்மைகள் //

இந்த மாதிரி ஒரு போஸ்ட் போட்டு ஒப்பேத்தலாம்..

The S c o r p said...

எலேய். . என்ற கமெண்டு இன்னும் பப்ளிஷ் ஆகல. மக்கா பின்னூட்ட கயவாளித்தனம் ஏதாவது நடந்துது - அப்புறம் நான் மனுசனா இருக்கமாட்டேன். ஆமா

வருண் said...

கமெண்ட் மாடெரேஷன் எனாபில் பண்ணிப்புட்டீங்களே :(

இன்னொரு நன்மையை விட்டுப்புட்டீக. கைவிடப்பட்டதால இந்த மாதிரி ஒரு வீணப்போன பதிவைப்போட்டு பெரிய மேதாவியா உங்களைக்காட்ட வழி பொறந்து இருக்கே! அதை விட்டுப்புட்டீக! :)))

**10. சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் தலை தப்பித்தது.***

ஏன் சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு அஞ்சாறு ஆஸ்கர் வாங்கி கொடுத்து இருக்காங்களா? ரொம்பத்தான் ஏதோ இவனுகதான் தேசத்தியாகிகள்னு உருகுறீங்க நம்ம ஞாநிக்கு அடுத்து நீங்க..பாழாப்போன படம் எடுப்பவனும் சிறிய தயாரிப்பாள்னுகதான், தெரிஞ்சுக்கோங்க மேதாவி!

நாஞ்சில் பிரதாப்™ said...

வருண்
சிறிய தயாரிப்புகள் ஆஸ்கர் வாங்கி குடுக்கப்போறாங்கன்னு சொல்லலையே தலைவா... அவர்கள் படம் வெளியாக ஒரு தியேட்டர் கிடைக்கும்னுதான் சொன்னேன்.

ஒண்ணு தெரியுமா... இந்த வருடம் ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்ற இந்தியப்படங்களில் 150 கோடி செலவு பண்ண எந்திரன் தகுதிபெறவில்லை. அந்தக்கூட்டத்தில் வெறும் 50 லட்சம் பட்ஜெட்டில் வெளியான ஆதாமின்டே மகன் அபு என்ற மலையாளப்படம் ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்டடுள்ளது. இப்போ என்ன சொல்றீங்க... :))

எனிவேஸ் ஞாநி மாதிரியான உண்மையான அதிமேதாவிகளுடன் என்னை சேர்த்துக்கு ரொம்ப நன்றி...:)))

ஸ்ரீஹரி said...

ஆங்கிலப்படங்களுடன் தமிழ்படங்களை ஒப்பிடுவதை எப்போதுதான் நிறுத்துவார்கள் என தெரியவில்லை. எந்திரன் படம் ஆங்கிலப்படத்துக்கு இணையானது என்கிறார்கள் சிலர்.
டெர்மினேட்டர், ப்ரீடேட்டர், MIB போன்ற படங்களில் பயன்படுத்தாத டெக்னாலஜியை ஒன்றும் எந்திரனில் பயன்படுத்திருக்க போவதில்லை என எல்லாருக்கும் தெரியும், ஆனால் அது தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்திய சினிமா வரலாற்றிலேயே புதிய விசயம். அதை பாராட்டுவதை விட்டுவிட்டு அதை ஆங்கிலப்படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது அதில் உழைத்தவர்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் கேவலப்படுத்துவதற்கு சமம்.

This is written by you...

But now u always insulting someone puprosely.. and not putting their comment..

If someone insults kamal u feel hurt.. same thing u r doing...

ஸ்ரீராம். said...

ஐந்தாவது பாய்ன்ட் கரெக்ட். அது சரி என்றால் பதினொன்றாவது பாய்ன்ட் தவறு. அவர்கள் தயாரிப்பாயிருந்தால் விளம்பரம் அவர்கள் சம்பந்தப் பட்ட தொ(ல்)லைக்காட்சிகளில் மட்டும்தான் வரும்!

nizhal ulagam said...

சினிமாவிற்கு மொழி கிடையாது.உலக சினிமாகள் பலவற்றை பார்த்தவர்களுக்கு தமிழ் சினிமாவில் செய்யப்படும் முயற்சிகளை உலக சினிமாகளுடன் ஒப்பிடுவது இயல்பு.அப்போது

Anonymous said...

like your views

MADHANKUMAR said...

i agree with nanjil express.

FEEDJIT Live Traffic Feed