தெய்வதிருமகள் வெளியானதிலிருந்து தமிழக ஜவுளிக்கடைகளில் கர்சீப் அமோக விற்பனையானதாக கேள்விப்பட்டேன். நம்ம மக்கள் சீரியலை புறக்கணிச்சுட்டு தியேட்டருக்கு போய் மூக்கு சிந்துறாங்கன்னா படத்துல ஏதோ இருக்குன்னு நானும் ஒரு கர்சீப் எக்ஸ்ட்ராவா பாக்கெட்டுல வச்சுட்டு தியேட்டருக்குப்போனப்புறம்தான் தெரிஞ்சுது... ரெண்டு கர்சீப்புக்கு பதிலா இன்னும் பத்துகர்சீப் எக்ஸ்ட்ராவா கொண்டு போயிருக்கலாம்னு, ஏன்னா எல்லாத்தையும் ஒண்ணாக் கழுத்துலக்கட்டி தொங்கறதுக்கு வசதியா இருந்திருக்கும்.
ஆங்கிலப்படத்திலிருந்து காப்பி அடிச்சப்படம்னு 52021 தடவையா இவனும் ஒரு பதிவு போட்டு கொல்றான்டான்னு நினைக்கவேண்டாம். படத்தைப்ப்பற்றி எழுத படத்தில் பெரிய சுவாரஸ்யம் ஒன்றும் இல்லை. பொதுவாக இந்த மாதிரி படங்களை கமல்தான் புதுசா பண்றேன்னு(!?) தமிழுக்கு கொண்டுவருவார். ஒருவேளை பதினாறுவயதினிலே, சிப்பிக்குள்முத்து, குணா போன்ற "கோளாறு" உள்ள பாத்திரத்தில் நடித்து அவருக்கு போரடித்திருக்கலாம், அல்லது அதன் பாதிப்பு வந்திரக்கூடாதுன்னு தவிர்த்திருக்கலாம் அல்லது நிலா என்ற பெண்ணுக்கு அப்பாவா நடிச்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்கன்னு தவிர்த்திருக்கலாம், ஆனா ஒண்ணு மட்டும் புரியுது இயக்குனர் விஜய் இதை தமிழில் எடுக்கமுக்கிய காரணம் விக்ரம் மட்டுமே.
கமல், விக்ரமை தவிர வேற யாரு இந்த கிருஷ்ணா பாத்திரத்தை நல்லா செய்திருப்பாங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்தா யாருமே தேறவில்லை. ஒருவேளை இளைய தளபதியை வச்சு எடுத்திருக்கலாமோ...? அட அவரு சாதாரணமா நடிச்சாலே அப்படித்தானே இருக்கு...:)
============
I AM KALAM (Hindi)
அப்துல் கலாமின் பேச்சை தொலைக்காட்சியில் கேட்டு கனவு காணும் ஒரு ஏழைசிறுவனின் கதையே
I AM KALAM. ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தில் வறுமையின காரணம் ஒரு தாபாவில் வேலைக்கு சேருகிறான் சிறுவன். படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ள சிறுவன் அப்துல்கலாம் பேசுவதை தொலைக்காட்சியில் பார்த்து தன்னையும் கலாம் என்று பெயர் மாற்றிகொள்கிறான். எப்படியாவது பள்ளிக்கு சென்று படிக்கவேண்டும் என அவன் காணும் கனவுகள், அவன் சந்திக்கும் நபர்களால் நிஜமானதா, பள்ளிக்கு சென்றானா என்பதே படம்.
தாபாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளிடம் ஆங்கிலத்தில் பேசுவதும், தன்னை கலாமாக நினைத்து அப்துல் கலாம் போன்று தலைமுடியை வாரிக்கொள்வதும் என சிறுவனின் நடிப்பு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசியவிருதை பெற்றுதந்திருக்கிறது.
படத்தில் நிறைய க்ளிஷேக்கள் நிறைந்திருந்தாலும் சிறுவனின் நடிப்பும், கதைக்களனும் ஒரு நல்லப்படத்தை பார்த்த திருப்தியை தருகிறது.
===================



19 comments:
இந்த பதிவின் சிறப்பம்சம்.....
மௌஸ்ஸ ஸ்க்ரோல் பண்ணாமயே படிச்சிட்டேன்...இப்புடியே எல்லாம் எழுதுணீங்கன்னா நல்லாதான் இருக்கும்....
மொக்கைனு தெரிஞ்சும் உங்கள யாரு போக சொன்னா ??
மொதல்ல உயர்திரு 420 என்ற அட்டகாசமான ஒரு படம் வந்திருக்கு. அத பாக்குற வழியப்பாருங்க
கொயந்த இப்பலாம் பதிவு போடறதே இல்லை... எழுதுறதையும் சுருக்கி எழுதுன்னு சொன்னா எப்படி?:)
நான் ரிவ்யு படிச்சுட்டேன் 420 ஐ பார்க்கறேன்... உஙகளையெல்லாம் நம்பமாட்டேன் :)
ஜூப்பரு :-))))
ம்ம்ம் நல்லா இருக்கு.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.என் ரசனைதான் மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லையே.ரொம்ப அலுத்துக்காதீங்க பாஸ்.
தமிழில் பெரும்பாலான படங்களை .. ஹாலிவூட்டின் பிரதிதான். அதில் எவ்வளவு வீதம் சொந்த சரக்கினை நுளைக்கிறார்கள் என்பதில் இயக்குனரின் திறமையிருக்கிறது :)
//ஒருவேளை இளைய தளபதியை வச்சு எடுத்திருக்கலாமோ...? அட அவரு சாதாரணமா நடிச்சாலே அப்படித்தானே இருக்கு...:)//
ஏன் ஏன் ..?நாங்க தமிழ் நாட்டுல இருக்கணுமா வேண்டாமா ?
உண்மையில் அந்த படமும் அந்த படத்தில் விக்ரமின் நடிப்பும் பாராட்டத்தக்கதே. இப்படி ஒரு படத்தை உருவாக்கி பார்த்தால் தான் அதன் கஷ்டம் புரியும். உங்களால் நானும் I am kalam படத்தை பார்க்க நானும் ஆசைப்படுகிறேன். நன்றி.
நன்றி அமைதிசாரல்
நன்றி-லஷ்மி
ஜார்ஜ்-பாஸ் நான் எனது ரசனையை மட்டுமே எழுதியுள்ளேன். எங்காவது யாரும்பார்க்கவேண்டாம் என சொல்லவில்லையே. இது எனது ரசனைமட்டுமே.நன்றி
சாய்= கரெக்ட், ஆனா ஈஅடிச்சான்காப்பி மாதிரி படம் எடுத்தால் அது தப்புதானே.?
பாபு- அதைப்பத்தி நீங்கதானகவலைப்படனும்..:))
விஜயன்- அண்ணாச்சி எலலாரும் படத்தை உருவாக்கித்தான் கஷ்டத்தை தெரிஞ்சக்கனும்னா தியேட்டருக்குபோய் படம் பார்க்கறது யாரு. பார்வையாளர்களின் கருத்துக்களை படைப்பாளிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். கருத்து எப்படி என்பது பார்வையாளர்களை பொறுத்தவிசயம். இது எனது கருத்து மட்டுமே.நன்றி.
கமல், விக்ரமை தவிர வேற யாரு இந்த கிருஷ்ணா பாத்திரத்தை நல்லா செய்திருப்பாங்கன்னு ஒரு லிஸ்ட் எடுத்தா யாருமே தேறவில்லை. ஒருவேளை இளைய தளபதியை வச்சு எடுத்திருக்கலாமோ...? அட அவரு சாதாரணமா நடிச்சாலே அப்படித்தானே இருக்கு...:) நாங்க தமிழ் நாட்டுல இருக்கணுமா வேண்டாமா ?
அதென்ன உங்க பிலாக ஓபன் பண்ணினா.. ஆடியோ வருது... அதால பேஜ் ஸ்லோவா இருக்கும்.. லிமிடெட் இன்டர்நெட் உள்ளவங்களுக்கு வேஸ்டா உங்க ஆடியோ (பிடிக்காம இருந்தாலும்) டவுன்லோட் ஆகும்..
தேவையா ஆட்டோமேடிக் ஆடியோ ?
வேணும்னா கிளிக் பண்ணா மட்டும் ஆடியோ வரமாதிரி போடலாமே..
ம்ம்ம்.. உங்க பிலாகு.. உங்க ஆடியோ.. உங்க இஷ்டம்..
ஆனா உங்க பேஜ்க்கு வர்றதும் வராததும்.. எங்க இஷ்டம்.. ஆமா சொல்லிபுட்டேன்..
நான் சொல்லவந்தது எதையும் குறை சொல்வது மிக எளிது. அவர்களின் இடத்தில் இருந்த பார்த்தால் அது உங்களுக்கு புரியும். என்னதான் காப்பி அடித்தாலும் விக்ரமின் நடிப்பு என்று ஒன்று இருக்கிறதே. ஒரு inspiration இல்லாமல் இருக்க முடியாது. அது தப்பில்லை.
நன்றி சுரேஷ்.
மாதவன்- பாட்டு எடுக்கறேன். இதுக்குலாம் போய் ஏன் டென்ஜனாயிட்டு :)
விஜயன்- விக்ரம் நடிப்பை நன்றாக இருந்தது என்றே எழுதிருக்கிறேன். மற்றப்படி இன்ஸ்பிரேஷன்னு சொல்றதெல்லாம் நாயகன், நந்தலாலா வகையறா படங்கள், இதுமாதிரி ஈஅடிச்சான் காப்பியை இன்ஸ்பிரேஷன் அல்ல வெறும் இன்ஜீப்ரேஜன் மட்டுமே. ஒருமுறை
I am sam பார்த்தால் அது உங்களுக்கு புரியும்.
இந்த காப்பி மன்னன் விஜய் எடுத்தப்படங்கள்
க்ரீடம் = மலையாளத்திலிருந்து,(க்ரீடம்)
பொய் சொலலப்போறோம் - இந்தியிலிருந்து சுட்டது (கோஸ்லா கா கோஸ்லா)
மதராசப்பட்டினம் - டைட்டானிக், லகான், நாடோடி தென்றலின் கலவை.
அப்புறம் இந்த தெ.திரு(ட்டு)மகள்
கற்பனை திருட்டு கண்டிப்பாக தவறு. இதே இன்ஜீப்ரேஜனை நானும் ஒரு சமயத்தில் ஆதரித்தவன்தான் என்பதை குறிப்பிடுகிறேன்.
ஐ ஆம் கலாம் பார்த்தேன். சிறுவனின் நடிப்பு முழு படத்தையும் காணும் பொறுமையை தந்தது!
//இதே இன்ஜீப்ரேஜனை நானும் ஒரு சமயத்தில் ஆதரித்தவன்தான் என்பதை குறிப்பிடுகிறேன்// - அவ்வ்வ்வவ்வ்வ்ன்னு அழுதுருவேன். முடியல . . உங்க நேர்மையை எப்புடி பாராட்டுவேன் சாமி :-)
நல்ல விமர்சனம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//விஜயன்- அண்ணாச்சி எலலாரும் படத்தை உருவாக்கித்தான் கஷ்டத்தை தெரிஞ்சக்கனும்னா தியேட்டருக்குபோய் படம் பார்க்கறது யாரு. பார்வையாளர்களின் கருத்துக்களை படைப்பாளிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும். கருத்து எப்படி என்பது பார்வையாளர்களை பொறுத்தவிசயம். இது எனது கருத்து மட்டுமே.நன்றி.//
நானும் ஏற்றுக் கொள்கிறேன்...
Post a Comment