Wednesday, August 31, 2011

மங்காத்தா......



தல-க்காக முதல்நாள் முதல் ஷோ. தியேட்டரில் ரஜீனி் படத்துக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ்  இருந்தது.

 மங்காத்தாவை பார்க்கும்முன்  The Italian Job(2003) என்ற ஆங்கிலப்படத்தின் அவுட்லைனை பார்த்துவிடுவோம்(ஆரம்பிச்சுட்டாங்கடா). ஒரு கொள்ளைக்கும்பல், பிளான் பண்ணி வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது. கும்பலில் ஒருத்தன் மற்ற உறுப்பினர்களுக்கு நாமம்போட்டு தங்ககட்டிகளுடன்  எஸ்ஸாகிறான். ஏமாற்றப்பட்டவர்கள் அந்த அப்பாடக்கரிடமிருந்து மீண்டும் தங்ககட்டிகளை எப்படி கைகப்பற்றுகிறார்கள் என்பதே  அதன் அவுட்லைன்.

தங்ககட்டிகளுக்கு பதிலாக பெட்டிங் செய்வதற்காக பிரியும்   பணத்தை போட்டு கொஞ்சம் டிங்கரிங் வொர்க் செய்து வெளியிட்டால் அதுவே மங்காத்தா. செட்டியாரிடமிருக்கும் பெட்டிங் பணம் 500 கோடியை கொள்ளையடிக்க, பல தில்லாலங்கடி  வேலைசெய்து செட்டியாரை நெருங்கி ஸ்கெட்ச் போட்டு பணத்தை ஐந்துபேருடன் சேர்ந்து கொள்ளையடிக்கிறார் போலீஸ் என்ற பொறுக்கியான அஜீத்.

ஐந்துபேரில் இரண்டுபேர் பணத்துடன் எஸ்ஸாகிறார்கள். ஒரு பக்கம் செட்டியாரும், ஒரு பக்கம் அஜீத்தும் பண்த்தை துரத்துகிறார்கள். கடைசியில் பணம் யாருக்கு கிடைத்தது? அஜீத்துக்குத்தான்னு படத்தை பார்க்காமலயே எல்லாருக்கும் தெரியும். ஆனால் எப்படி என்பதில்தான் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

மும்பை சிட்டியிலுள்ள டிராஃபிக் சிக்னலை "ஹேக்" செய்து தங்கள் முழுகட்டுப்பாட்டில் கொண்டு வந்து வண்டியில் இருக்கும்  பணத்தை ஆட்டையப்போடுதை அப்படியே The Italian Job படத்திலிருந்து சுட்டு மொக்கையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதைபார்க்கும்போது பழைய எம்ஜீஆர் படமான அவசரபோலீஸ் 100-ல் வரும் போலீஸ்  கட்டுப்பாட்டு அறை( Control Room) தான் ஞாபகத்துக்கு வருகிறது.


எல்லாப்படங்களிலும் "ஹேக்" செய்ய ஐஐடி ட்ராப் அவுட், ஐஐடி கோல்ட் மெடலிஸ்ட்டை கூப்பிடுவதை பார்த்தால் ஐஐடி-யில் "ஹேக்" செய்வது எப்படி என்பதற்கு தனியாக க்ளாஸ் வைத்து சொல்லிக்கொடுக்கிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. ஐ.டி.ஐ க்கு கூட போகாத நம்ம கேப்டனை இந்த டெக்னாலஜீ விசயத்துல அடிச்சுக் முடியாது. பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை வைத்து வாசிம்கானின் இருப்பிடத்தையும், நெட்வொர்க்கையும் கண்டுபிடிக்கும் அளவுக்கு தமிழ்சினிமாவில் யாருக்கும் டெக்னாலஜீ பத்தி தெரியவில்லை.

காவல்துறையிலிருந்தும், ராணுவத்திலிருந்தும் ஓய்வூதியம் கிடைக்கவேண்டிய அளவுக்கு தேசபத்தியுள்ள ஆபிசராக நடிக்கும் அர்ஜுனுக்கு இந்தப்படத்தில் நடித்ததால் இனி அந்த வாய்ப்பில்லை. அதற்கான காரணத்தை அறிய படத்தைபார்க்கவும்.

சிக்ஸ் பேக் வைத்தும், வழுக்கை தலைக்கு விக் வைத்தும் நடிக்கும் மாஸ்ஹீரோக்கள் மத்தில் தொப்பையுடனும், நரைத்த தலையுடன் படம் முழுக்க ஆக்ஷன் மற்றும் காமெடி  அராஜகம் நடத்தும் தல-க்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம்.

மங்காத்தா - The Game of  THALA

8 comments:

Philosophy Prabhakaran said...

நீங்களும் பாசிடிவ் விமர்சனம் போட்டதில் மகிழ்ச்சி...

Philosophy Prabhakaran said...

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

kobiraj said...

நல்ல விமர்சனம் .அருமை

Raazi said...

good review

Jaleela Kamal said...

எப்பா எங்க பார்த்தாலும் மக்க்கா மங்காத்தா தானா?

Jaleela Kamal said...

ஓசியில ஒரு விமர்சனம் படிச்சாச்சு

Anonymous said...

மொக்க படம் அடபோன்கையா

கருந்தேள் கண்ணாயிரம் said...

எனக்கு எவ்வளவு முயற்சி பண்ணியும் இந்தப் படம் புடிக்காமயே போயிருச்சி. அஜீத் - அட்டகாசமா இருக்காரு. ஆனா அதையே எத்தனை படத்துல தான் பார்க்கிறது? எனிவே....

FEEDJIT Live Traffic Feed