இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித்தந்த காங்கிரஸ் இயக்கத்திடமிருந்து, ஊழலிருந்து சுதந்திரம் வேண்டி போராட்டம் நடக்கிறது. இந்த கொடுமையெல்லாம் காண நல்லவேளை அண்ணல் காந்தி உயிருடன் இல்லை. திமுக வரலாறும் காங்கிரஸ் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே போல. அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்ற கழகம் கலைஞர் கையில் கொடுக்கப்பட்டு அது குடும்ப கழகமாக்கப்பட்டு பின் திருடர் முன்னேற்ற கழகமாக பெயர் மாற்றம் பெற்றது. நேருவின் கையில் கொடுக்கப்பட் காங்கிரசும் அதே நிலைமையில்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட 30 வருடங்கள் பிரதானமான எதிர்கட்சி இல்லாமல் தனிராஜ்யம் நடத்திய காங்கிரசின் ஊழல் வரலாறு சாதராணமானதல்ல. இவர்களின் நிர்வாகத் திறமையின்மைக்கு இந்த ஊழலே சாட்சி.
சுதந்திரம் அடைந்தபிறகு இந்தியா என்ற ஜனநாயக நாடு வெள்ளையர்களாலும், இரண்டாம் உலகப்போரினாலும் பிணந்தின்னிகழுகளால் குதறப்பட்ட எஞ்சிய எலும்புகூடாகவே காணப்பட்டது. 46 கோடி மக்களுக்கு போதுமான உணவு இல்லாமல் இருந்தபோது நேருவின் தலைமையில் அமைந்த புதிய அமைச்சரவை முதல் ஐந்தாண்டு திட்டத்தில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைய விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மாறாக இரும்பு எஃகு உற்பத்திக்காக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மக்கள் பசித்தால் இரும்பையும் எஃகையும் உண்ணுவார்கள் என்று நினைத்துவிட்டார் நேரு.
13 ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுததி காங்கிரஸாரின் குடும்பம் வளர்ந்ததே தவிர நாட்டின் எந்த வளர்ச்சியும் காணவில்லை. காங்கிரஸ் தலைவி மருத்துவத்திற்காக அமெரிக்கா செல்கிறார். சாதாரண குடும்பபத்தலைவிகள் எங்கே செல்வார்கள்.?

சீக்கியர்களை கொன்று குவித்துவிட்டு அவர்களின் ஓட்டுக்காக ஒரு சீக்கியரை அமைச்சராக்கி பிரதமராகவும் ஆக்கியது இந்த கிழட்டு காங்கிரஸ். பதவிக்காக வரலாற்றையும் மறந்தவர் நம் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்..
காந்தி செய்த மிகப்பெரிய தவறு சுதந்திரத்திற்கு பின் காங்கிரசை கலைக்காமல் விட்டது. நேருவின் கையில் காங்கிரஸ் கிடைத்த கதைக்கும், வடிவேலு கையில் பேக்கரி கிடைத்த கதைக்கும் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. காங்கிரசின் தலைமை பொறுப்பை காந்திதனக்குப்பின் யாருக்கு கொடுக்கலாம் என்ற நிலை வந்தபோது, காங்கிரசின் முத்த உறுப்பினர்கள் முலம் வாக்கெடுப்பு நடைபெற்றது. தலைவர் போட்டிக்கு முன்னிறுத்தப்பட்டவர்கள் நேருவும், சர்தார் வல்லபாய் பட்டேலும். 15 பேர் வாக்களித்ததில் 14 ஓட்டுகள் பட்டேலுக்கும், வெறும் ஒரு ஓட்டு நேருவுக்கும் கிடைத்தது.
தான் பிரதமராக முடியாது என்று பயந்த நேரு காந்தியிடம் சென்று காங்கிரசை உடைத்து தனிக்கட்சியை உருவாக்குவேன் என்றதும், எப்போதும் நாட்டையும் மக்களையும் நினைத்து கவலைப்படும் காந்தி பட்டேலை சமாதானப்படுத்தி தலைவர் பதவி நேருக்கு அளிக்கப்பட்டது. இதுவே நேரு தலைமையில் முதல் அமைச்சரவை அமைந்த வரலாறு.
காங்கிரசில் இருந்தவர்களே நேருவை விரும்பவில்லை என்பதுதான் உண்மை. காரணம் நேருவின் தனிமனித ஒழுக்கமின்மை. மவுண்ட்பேட்டன் பிரபு தனது மனைவியை நேருவிடமிருந்து காத்துகொள்ளவே இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தவிட்டு மனைவியுடன் எஸ்ஸானார் என சரோஜாதேவிக்கு சளைக்காத பல கதைகளும் காங்கிரசின் வரலாற்றில் உண்டு.
இதோ வந்துவிட்டார் அடுதத் வாரிசு. 42 வயது இளைஞராம். (அப்போ நாங்கலாம் யாரு.?)அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட, நதி நீர் இணைப்பு நாட்டுக்கு ஆபத்தாக முடியும் என்று சொன்ன மிகப்பெரிய புத்திசாலி. இரட்டை குடியுரிமை கொண்ட பாக்கியசாலி. இவர்கையில் நாடு இனி செல்லப்போகிறது. இவர் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டுமென நினைத்தால் முதலில் தந்தை ராஜீவ் காந்தி போபர்ஸ் பீரங்கி பேரத்திற்காக ரஷ்யாவிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்களில் வாங்கப்பட்ட கமிஷன் பணம் இத்தாலியிலும், சுவிஸ்-ம் முதலீடு செய்யப்பட்டடிருக்கிறது அதை முதலில் இந்தியாவின் நாட்டுமையாக்கட்டும். பாபாராம்தேவ் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு இதுமட்டுமே காரணம்.
இனி தமிழ்நாடு காங்கிரஸ். எனக்கு புரியாத புதிர் இந்த காங் தொண்டர்கள். தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தொண்டரிடம், சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்றால் எந்த சாதனையைச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்பீர்கள் என்று கேட்டால், "காங்கிரஸ் சுதந்திரம் வாங்கித்தந்த கட்சி என்பார்கள்" அது ஆயிடுச்சு 65 வருசம் வேற என்ன சாதனை பண்ணீங்கன்னு கேட்டால். "முப்பனார் ஹைவேஸ்ல மரம் நட்டார் வாழப்பாடியார் அதற்கு தண்ணீர் ஊற்றினார்" என்பார்கள், அது ஆச்சுய்யா 30 வருசம் அதுக்கப்புறம் என்ன பண்ணீங்கன்னு கேட்டால் பதிலே இருக்காது... இவர்களின் உண்மையான சாதனை ஊழல் மட்டுமே. அதற்கு இந்த புகைப்படமே சான்று.
கடைசியாக ஒன்று தன் தந்தை சாவுக்கு பழிவாங்க ஒட்டுமொத்த தமிழ் இனத்தையே ரத்தமும் சதையுமாக கூண்டோடு ஒழித்துக்கடடிய காங்கிரசின் வாரிசு நாளை நாட்டை ஆளுவதற்கு தயாராக காத்து நிற்கிறார். மனிதாபிமானம் உள்ள எவரும் இந்த மனித்தன்மையற்ற காங்கிரசையும், அதன் வாரிசையும் ஆதரிக்காதீர்கள். வரலாறு மன்னிக்காது.




8 comments:
அருமையான பதிவு தலைவா. இதை நான் என்னுடைய wall லிலும் போடுகிறேன்.
பாஸ் காங்கரஸ் கத ஒரு வெக்கங்கெட்ட விசயம்னா அத விட நேரு குடும்ப கத ரொம்ப மானங்கெட்டதா இருக்கு......இந்திரா முஸ்லீமா மாறி பின் ஆட்சியில இருக்க வேண்டி பொய் ஹிந்து பேரோட இருந்தாங்க, சோனியா காந்தி கல்லூரி கூட போகல ஆனா கேம்பிரிட்ஜ்ல படிச்சேன் புருடா விட்டாங்க, அது பொய்னு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகமே சொல்லிடிச்சி, அதே மாதிரி ராகுல் காந்தி அரியர் கிளயர் பண்ணாம தன்னை ஒரு பட்டதாரினு சொல்லிக்கிறார், பிரியங்கா காந்தி புருசன் இன்னமும் அங்க அங்க ஆட்டைய போட்டுட்டு இருக்கான்......இன்னமும் காங்கரஸ்த்தொடன் சொல்லிக்கிறவங்க ஏதாவது உசரமான இடமா பாத்து ஏறி கீழ குதிச்சி செத்துடுங்க.....
உங்க டைம்ங்க நல்லா இருக்கு “இவரு இளைஞசராம் அப்ப நாங்களா யாரு”
பதிவின் கடைசி 6 வரிகள் கனம் பொருந்திய கச்சிதமான உண்மையான வரிகள்.பாராட்டுகள்.
என்ன இப்படி ஒரு பதிவு எழுதி விட்டீர்கள்!!!!!!
அப்ப கார்த்தி சிதம்பரம் தமிழ்நாடு சி.எம்
ஆகக்கூடாதா?
காமராஜர் ஆட்சி அவரு தலைமையில வரப்போவுது...
அவங்க அய்யா போட்டு வச்ச... ஸ்விஸ் பேங்க் பணத்தை...
தமிழ் நாட்டு மக்களுக்கு தருவாரு!!!...
வரிசையில் வந்து வாங்குங்க.
இந்தியா இனி இத்தாலியா ...என்று எல்லோராலும் அன்போடும் அழைக்கப்படும்
நான் படித்த பதிவுகளில் இதை விட சிறந்த பதிவு வேறு எதுவும் இல்லை. இது கண்டிப்பாக எல்லா தமிழர்களுக்கும் போய் சேர வேண்டிய முக்கியமான செய்தி ......
nalla padhivu vazhththukkal
surendran
surendranath1973@gmail.com
பா.ஜ.கா-வும் கேவலமான கட்சிதானே. அதையும் ஒழிக்கலாமே?
Post a Comment