ஹாய்..ஹாய்...ரொம்ப நாளைக்குப்புறம் உள்ளாற வந்து பார்த்தா விட்ஜெட், பேனர்னு டெம்ப்ளேட் முழுக்க ஒரே ஒட்டடை புடிச்சுகிடக்கு. பழைய பொட்டி புஸ்ஸாயிடுச்சு வேற பொட்டி வாங்குனப்புறமும் எழுதமுடில. இந்த கம்பெனிக்கு நீதான் பில்லர்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே வேலை வாங்குறாய்ஙக. எத்தனை நாளுதான் பில்லராவே இருக்கறது, பவுண்டேஷன் எப்போ ஆகறது...?
=======================
அமீரகத்துல ஒரு தமிழ் "புண்"பலை (எழுத்துப்பிழை அல்ல) அரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இருந்த ஒரு தமிழ் பண்பலையை இழுத்துமுடிவிட்டார்கள். இதில் வரும் நிகழ்ச்சிகளைப்போல ஒரு மொக்கை பண்பலை நிகழ்ச்சிகளை நான் கேட்டதே இல்லை. எனக்கு பிடிச்ச ஒரே விசயம் அதல் வரும் செய்திகள், நல்ல தமிழ் உச்சரிப்புடன் ஒரு அம்மணி செய்தி வாசிக்கிறார். நல்ல நிகழ்ச்சிகளுக்கு நடுவே திருஷ்டிப்பொட்டுனு சொல்லி லாஸ்ட் பெஞ்சு என்ற ஒரு நிகழ்ச்சி இரவு வருகிறது. அதுலபேசுற அந்த 3 பேரு மட்டும் என்கைல சிக்குனாய்ஙக.....!!!!!!! மற்றப்படி மல்லு பண்பலைகளில் ஒருமணிநேரத்திற்கு நடுவே வரும் ஒரு தமிழ்பாட்டுக்காக பழைய துர்தர்ஷன் ரங்கோலி நிகழ்ச்சியை வாய்பிளந்து பார்ததமாதிரி இனி காத்திருக்கவேண்டாம்.
=======================
லீவுல ஊருக்கு போயிருந்தபோது ஒருத்தர் கேட்டாரு "மக்கா துபாய்ல ரோட்டுல குப்பை கொட்டுனா ஃபைனு அடிப்பாங்களாம்டே.. உண்மையா"னனு கேட்டாரு. குப்பையை நம்ம ஊரு ரோட்டுல கொட்டுனாலும் தப்புதான், அதென்ன துபாய்ல மட்டும். வெளிநாடுகளில் கடைபிடிக்கற சட்டத்தை நம்ம மக்கள் ஊர்ல பண்றதில்லை. அதேமாதிரி பாக்கு கறை பொழியாத, சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் இல்லாமல், ஆடிமாசம் அம்மனுக்கு கூழ் ஊத்தறவிழா போஸ்டர்
இல்லாமல், தலைவனுக்கு நன்றி சொல்லும் போஸ்டர் இல்லாமல் ஒரு பேருந்து நிறுத்தம் நம்ம ஊர்ல இருந்தா காட்டித்தாங்க...
=======================
கடந்த 17ம்தேதி ஒரு தமிழ்சினிமாவின் அத்தியாயத்தில் வரலாற்றில் இடம்பெறப்போகும் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்திருக்கிறது. இந்தப்படத்துல ஒரு சீனில் நடித்த ஒலக நாயகன்,தமிழ்சினிமாவின் வருங்கால விடிவெள்ளி ஒருத்தர் நடிச்சிருக்காரு. வேற யாரு நான்தான். நடிச்ச சினிமான்னும் சொல்லலாம், நடந்த சினிமான்னும் சொல்லலாம். படம் பாதிலயே புட்டுகிசிச்சுனு சொன்னாங்க. ஆனா இசைவெளியிட்டு விழா செய்தி எனக்கு நம்பிக்கை தருகிறது. ஒரு பெரிய்யய ரவுண்டு வருவேன். ரசிகர் மன்ற விண்ணப்பங்கள் வரவேற்க்ப்படுகிறது.
=======================
மற்றவர்களின் ஆங்கில அறிவை நான் கிண்டல் செய்வதே இல்லை. ஏன்னா நானும் ஆங்கிலத்தில் ஒரு முழுமையற்ற தற்குறிதான். ஆனால் நம்ம ஜனகராஜ் மாதிரி நேசமணிபொன்னையா தெருவை நாசமாபோனியாதெருன்னு வாசிச்சா சிரிப்பு வரத்தான் செய்யும். எனக்கு ஒருத்தர் ஒரு பதிவில் ஆங்கிலத்தில் கமண்ட் போட்டிருந்தார். அந்த பதிவுக்கும் கமண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் அந்த கமணட்டில் அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை குப்புறப்படுத்து, தலைகீழாநின்னு, மொட்டைமாடில நின்னுலாம் எழுதிவச்சுப்படிச்சுப்பார்த்தேன். ம்ஹும் சுத்தமா புரியல...ஒருவேளை எனக்குத்தான் அந்த ஆங்கிலத்தை புரியற அளவுக்கு அறிவு பத்ததலையோ என்னவோ.? யாருக்காச்சும் புரிஞ்சா தயவு செய்து சொல்லவும்...
"WHY PEOPLE DOING CHEETING ,,RESON IS GOVT ALSO ,TRAIN RUNNING TIME WHY NEVER DOOR CLOSING,RAILWAY STATON ONLY DOOR OPENING CAN "
ஸ்ஸஸஸபா....


17 comments:
செம கமெண்ட் போங்க....
:-)
:-)-)-)-)))))))))))))))
அந்த கமண்ட்டின் அர்த்தம் எனக்கு தெரிந்த வரை.
En makkaL EmARRukiRArgaL. ithaRku arasAnggamum kAraNam. rayil OdumbOthu En eppozuthum kathavai mUduvathillai? rayil nilaiyaththil mattumE kathavai thiRakka vENdum.
ஏன் மக்கள் ஏமாற்றுகிறார்கள். இதற்கு அரசாங்கமும் காரணம். ரயில் ஓடும்போது ஏன் எப்பொழுதும் கதவை மூடுவதில்லை? ரயில் நிலையத்தில் மட்டுமே கதவை திறக்க வேண்டும்.
D.Jeyachandran, Madurai.
//ஒரு சீனில் நடித்த ஒலக நாயகன்//
தனக்குத்தானே கொடுத்துக்கிட்ட பட்டம் ஜூப்பர்.. அந்த அறுபது அடி ஃப்ளக்ஸ்பேனருக்கு சொல்லியாச்சா?.. அதுல பேருக்கு முன்னாடி பட்டத்தை மறக்காம எழுதச்சொல்லுங்க :-)))
துபாய்ல மட்டுமில்ல.. இங்கியும் குப்பை கொட்டுனா ஃபைன் போடறதுக்கு சட்டம் கொண்டுவரப்போறாங்களாம்ன்னு ஒரு பிட்டை எடுத்துவிட்ருந்துருக்கலாம்ல. அப்படியாவது நம்ம மக்களுக்கு பயம் வரட்டும் :-))
ஆங்கிலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி இது,இது புரியாமல் தடுமாறியிருக்கிறீர்கள்:-}}}}
//WHY PEOPLE DOING CHEETING ,,RESON IS GOVT ALSO ,TRAIN RUNNING TIME WHY NEVER DOOR CLOSING,RAILWAY STATON ONLY DOOR OPENING CAN "//
Firstu.. he wrottu..
Next you also wrote, hiyaru.
I read fullu.. but,no meaning commingu....
I thinku.. "He know no englisu"
radio patri aalai illatha oorukku palamozhi .... avangale solliduranga ithu oru thirusti pottunnu appramum atha mokkannu sonna epdi .... intha radio programmes ok than ellarum 24hrs radio kettukitte irukkangala enna driving samayathulathan kekkuranga
வேட்டுவள சுந்தரம் அல்லது, வேட்டுவிளை சுந்தரம் சினிமா நாஞ்சில் நாட்டு கதையா
இந்த கமென்ட் கொஞ்சம் பரவாயில்ல. ஆனந்த விகடன்ல கமென்ட்டுவாங்க பாருங்க. கலக்குவாங்க.
அட நம்ம நாஞ்சிலு,, எங்கே ஆளயே காணோம்.
//அதேமாதிரி பாக்கு கறை பொழியாத, சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் இல்லாமல், ஆடிமாசம் அம்மனுக்கு கூழ் ஊத்தறவிழா போஸ்டர்
இல்லாமல், தலைவனுக்கு நன்றி சொல்லும் போஸ்டர் இல்லாமல் ஒரு பேருந்து நிறுத்தம் நம்ம ஊர்ல இருந்தா காட்டித்தாங்க...
//
மக்களோட அடிப்படை உரிமைகள்ல கைய வைக்காதீங்க பாஸூ...
--
நடந்ததுக்கே படத்தை நிப்பாட்டிட்டாங்க.. நடிச்சிருந்தா நெனச்சாலே கொல நடுங்குது,,,
தல வாழ்க...
----
தல தொடர்ந்து எழுதுங்க...
////WHY PEOPLE DOING CHEETING ,,RESON IS GOVT ALSO ,TRAIN RUNNING TIME WHY NEVER DOOR CLOSING,RAILWAY STATON ONLY DOOR OPENING CAN "//
இந்த கமெண்ட் நாஞ்சில் எழுதுனதா :)
////ஒரு சீனில் நடித்த ஒலக நாயகன்////
ஒரு சீனில் நடித்த ஒலக்க நாயகன்னு யாரோ சொன்னாங்களே!
:)
//கம்பெனிக்கு நீதான் பில்லர்னு //
பில்லரா இருக்கதுதான் நல்லது; நாம இருக்கோம்கிறது நாலு பேருக்குத் தெரியும். ஃபவுண்டேஷன் ஆயிட்டா, நம்மளை போட்டு அமுக்கிட்டு, மேலே மேல ஏறிப்போயிடுவாங்க..
//அமீரகத்துல ஒரு தமிழ் "புண்"பலை (எழுத்துப்பிழை அல்ல) அரம்பித்திருக்கிறார்கள். ..... நல்ல நிகழ்ச்சிகளுக்கு நடுவே திருஷ்டிப்பொட்டுனு சொல்லி லாஸ்ட் பெஞ்சு .... மல்லு பண்பலைகளில் ... ஒரு தமிழ்பாட்டுக்காக .. வாய்பிளந்து//
இதே புலம்பலை எங்கியோ கேட்ட மாதிரி இருக்கே?? :-))))))))
இங்கேன்னு நினைக்கிறேன்... http://hussainamma.blogspot.com/2011/07/17.html
why blag wraiting tamil in lunguage reading walking no hindhi talugu but reasan simple is me ? cominng to bungalooru meet can we park hotel lodge? post aapter laaang taime and no gillmaa padam review why no giving writing? fans we waitting no? oh god me killiing suicide dying.
”டிரீம்ஸ் நடிகனின் நண்பன்” என்று பதிவு எழுத நான் தயார் ஆகிட்டேன் தல.. :))))))))
Thampi Vettothi Sundaram - padama sir.. avan periya rowdi-inganna...!
Post a Comment