Thursday, March 31, 2011

நொறுக்ஸ் - 31/03/2011

இந்தியா- பாக் கிரிக்கெட். வழக்கம்போல இந்தியா ஜெயித்தது. துபாயில் பல கம்பெனிகளுக்கு அரைநாள்விடுமுறை.மாலை நெரிசல் இல்லாத சாலைகள், வெறிச்சோடிய கிரிக்கெட் ஒளிபரப்பாத ஓட்டல்கள் என இந்த ஆட்டம் ஏற்படுத்திய திடீர் மாற்றங்களை பார்க்க முடிந்தது. வெற்றியில் துபாய் நகரமே அல்லோகலப்பட்டது. அதிலும் பாகிஸ்தானியர்களின் முன்னால் நம்மக்கள் செய்த அலப்பறை ரசிக்கும்படியே இருந்தது. :))
நான் டென்ட் போட்டிருக்கும் மினாபஜார் ஏரியா சும்மா அதிர்ந்தது... அந்தப்பகுதியின்  ஒரு சாம்பிள்

==============


ஹார்லிக்ஸ் வாங்குனா காலாணாவுக்கு பொறாத பிளாஸ்டிக் கரண்டி இலவசம்னு சொன்ன காலத்துலேருந்தே நாம இலவசத்துக்கு அடிமையாயிட்டோம். அதை அரசியல்வாதிங்க ஓட்டுக்காக சரியா பயன்படுத்துகிறார்கள். அரிசி, டிவியில் ஆரம்பித்தது இப்போ ஆடு மாடு வரைக்கும் வந்துடுச்சு.    என்னைக்கேட்டா நாட்டில் குற்றங்கள், ரவுடிசம் குறையவும், வீட்டு பிரச்சினைகள் தீரவும் வீட்டுக்கொரு பொம்மிஸ் நைட்டி இலவசமா குடுக்கலாம்... பொம்மிஸ் நைட்டியின் வரலாறு, அருமை பெருமை தெரியாதவர்களுக்காக இந்த வீடியோ, விளம்பரத்திற்காக அல்ல, வரலாறு முக்கியம். :)

==============

வடிவேலு, குஷ்பு போன்ற போன்ற அரசியல் பற்றி எதுவுமே தெரியாத தற்குறிகள் பிரச்சாரத்திற்கு கிளம்பி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது என்றுகேட்டால் சொல்லத்தெரியுமா?. இவர்கள் பிரச்சாரம் செய்வதால் கூட்டம் கூடும், ஆனால் ஏட்டுசுரக்காய் கறிக்கு உதவாது. குஷ்பு பிரச்சாரம் செய்யும் இடங்களில் கூட்டம் கூடுவது குஷ்புவின் "டமில் சொற்பொலிவை" கேட்குறதுக்குன்னா நினைக்கிறீங்க? கோயில் கட்டிய பக்தர்கள், சாமி ப்ரீயாதரிசனம் கொடுத்தா  விடுவானுங்களா? :)

========


மதுப்பழக்கம் எத்தனை கொடியது என்று சொல்லும் ஒரு திருக்குறள்

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
(பொருட்பால்: அதிகாரம் கள்ளுண்ணாமை:குறள் 921)

உரை : போதைப் பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்து போவார்கள்.

இதுல பெரிய காமெடி என்னன்னா இந்த உரை கலைஞரால் எழுதப்பட்டது.
அட சிரிக்காதீங்கப்பா..... தலீவரு ஊருக்குத்தான் உபதேசம் பண்ணுவாருன்னு தெரிஞ்சதுதானே.
திருக்குறளுக்கெல்லாம் "உரை" போட்டுருக்காய்ங்க...........(நன்றி விவேக்) ஒருவேளை குடும்ப அரசியல்ங்கற கெட்டப்பெயரை தவிர்த்திருந்திருக்கலாமோ. but it's toooooo late. :)

===============

நடக்கவே நடக்காதுன்னு  நினைக்கிற விசயங்கள் திடீர்னு நடந்தா எப்படி இருக்கும். அதுவும் இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு நினைச்ச விசயங்கள் நடந்தால்... அது வேற ஒண்ணும் இல்ல கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க... இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க......
இன்னும் நான் சுயநினைவுக்கே வரல ......பரம்பொருளே இவர்கள் அறியாமல் செய்யும் தவறை மன்னித்துவிடு :)

28 comments:

சுடுதண்ணி said...

// கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க...//

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் :)

bandhu said...

// கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க...//
congrats!

Chitra said...

என்னைக்கேட்டா நாட்டில் குற்றங்கள், ரவுடிசம் குறையவும், வீட்டு பிரச்சினைகள் தீரவும் வீட்டுக்கொரு பொம்மிஸ் நைட்டி இலவசமா குடுக்கலாம்...


.....Super Duper IDEA!!!!!!!

Chitra said...

நடக்கவே நடக்காதுன்னு நினைக்கிற விசயங்கள் திடீர்னு நடந்தா எப்படி இருக்கும். அதுவும் இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு நினைச்ச விசயங்கள் நடந்தால்... அது வேற ஒண்ணும் இல்ல கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க... இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க......
இன்னும் நான் சுயநினைவுக்கே வரல ......பரம்பொருளே இவர்கள் அறியாமல் செய்யும் தவறை மன்னித்துவிடு :)


.......ஆஹா.... வாழ்த்துக்கள்!!! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!!
அந்த கம்பெனி காப்பாற்ற வந்த ஹீரோ நீங்கதானா? கலக்குங்க!

Philosophy Prabhakaran said...

// ஹார்லிக்ஸ் வாங்குனா காலாணாவுக்கு பொறாத பிளாஸ்டிக் கரண்டி இலவசம்னு சொன்ன காலத்துலேருந்தே நாம இலவசத்துக்கு அடிமையாயிட்டோம். //

செம...

உலக சினிமா ரசிகன் said...

உங்க கம்பெனி கொடுத்து வச்சது....பிரமோஷன் கொடுக்க பிரதாப்னு...நல்ல வேட்பாளர் இருந்தார்.எங்க நெலமையை பாருங்க..ரெண்டே சாய்ஸ்தான்.ஊழலா?மெகா ஊழலா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//அது வேற ஒண்ணும் இல்ல கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க... இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க...//

பார்த்துப்பா............திடீர்னு இன்னிக்கு வந்து April Fool-னு சொல்லிடப் போறாங்க!
:)

ஆயிரம் தான் இருந்தாலும் உன் திறமை மேல உன்னை விட உங்க பாசுக்கு அதிகம் நம்பிக்கை இருக்குன்னு ஒரு அர்த்தம் தெரியுது. மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்!

அனாமிகா துவாரகன் said...

//எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க... இன்னுமா நம்மளை நம்புறாய்ங்க...//

ha ha.

S.Menaga said...

//அது வேற ஒண்ணும் இல்ல கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க//ம்ம்ம் வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள் ப்ரதாப்..உங்களை நம்பறதாலதானே ப்ரமோஷன் கொடுத்துருக்காங்க..ஆமா இது ஏப்ரல் பூல் இல்லையே...டிரிட் இல்லையா??

செ.சரவணக்குமார் said...

நொறுக்ஸ் நன்று.. ப்ரமோஷனுக்கு வாழ்த்துகள் பிரதாப்.

ஹுஸைனம்மா said...

பொம்மீஸ் வீடியோ - ரொம்ப நன்றிங்க, இல்லைன்னா வரலாறு தெரியாமலே போயிருக்கும்!! அத மட்டும் இலவசமாக் கொடுத்தாங்கன்னா, தமிழ்நாடு இனி அமைதிப்பூங்காதான்!!

பிரமோஷன் கொடுத்தாய்ங்க சரி, சம்பளம் கூட்டிக் கொடுத்தாய்ங்களா?

இந்தியா வெற்றிக்குச் செய்யப்படும் அலப்பறைகள் கண்டு பயம்தான் வருது. இதே போல வெற்றி தொடரணுமேன்னு.

நாடோடி said...

க‌ல்வெட்டில் ப‌திக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ வ‌ர‌லாறு தான் த‌ல‌.. :)


அப்புற‌ம் பிர‌மோஷ‌னுக்கு வாழ்த்துக்க‌ள்..

கலையரசன் said...

எல்லோருடைய விளா எலும்பையும் நொறுக்கி எடுத்துட்ட.. அதனாலதான் இதுக்கு பேருதான் நொறுக்ஸ்சா?

டேய்.. கம்பெனியிலயே படுத்து எந்திருச்சி, பல்வெளக்கி, குடியிருந்தா புரமோஷன் தராம.... மண்ண வாரியா விடுவானுங்க??


மரியாதையா பார்ட்டி வைய்யி..

பின்னோக்கி said...

அடடே... நீங்க சொன்னீங்க.. அவங்க அறிவிச்சுட்டாங்க. தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான நைட்டி அனைவருக்கும் ப்ரீயாம்.

! சிவகுமார் ! said...

//அது வேற ஒண்ணும் இல்ல கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க.//

தங்களுக்கு என் வாழ்த்துகள்.

குஷ்பு, வடிவேல்...தமிழக அரசியலின் அபார வளர்ச்சி!!

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

எலே மக்கா,
உனக்கு வீடு மீனா பஜார் தானா?சரி சரி.
மொம்மிஸ் நைட்டி செம காமெடிய்யா.
ஆமா?ஊர்நாட்டுல கிழவிங்க போடுமா?பொம்மீஸ் நைட்டி?

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

ப்ரொமோஷன் கொடுத்தாலே ஆப்பு என்று தான் அர்த்தம்.கூடுதல் வேலை சொற்ப கூடுதல் சம்பளத்துக்கு செய்ய ப்ரொமோஷன் கொடுப்பார்கள்.மேலும் நிறைய ப்ரொமோஷன் வாங்க வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

ப்ரொமோஷனுக்கு வாழ்த்துகள் பிரதாப்.

வழக்கம் போலவே நொறுக்ஸ் அருமை.

kavisiva said...

// கம்பெனில எனக்கு பிரமோஷன் குடுத்துருக்கானுங்க...//

வாழ்த்துக்கள் பிரதாப்! சீக்கிரமே குடும்பஸ்தன் பிரமோஷனும் வாங்கிடுங்க :)

பயாநிதி காரன் said...

அங்கெல்லாம் எங்க அண்ணன் பழகிரி வரமாட்டாருன்ற தைரியத்துல கண்டபடி எழுதும் நாஞ்சிலே . . ஒன்டிக்கி ஒண்டி வர்றியா?

வேற்காடு காராசாமி said...

நாஞ்சிலின் புயல் பதிவுக்குப் பின் தலைமைக் கழகத்தில் நடந்த உரையாடல்.

குறைமுருகன் - தலிவரே . . பொம்மிஸ் நைட்டி இலவசமா குடுக்கலாம்னு கழகக்கண்மணி நாஞ்சில் எழுதிருக்காரு. . இன்னா சொல்றீங்க ?

குலைஞர் - அன்புக்கண்மணி குறைமுருகா . .பொம்மிஸ் நைட்டி மட்டும் ஏனடா ஏந்தலே? அதற்குள் ஒரு பெண்மணியை நுழைவித்து, மொத்தமாகக் கொடுத்துவிடலாமடா கொடாரிக்காம்பே . . யாரங்கே ?

அருள் said...

"பயோடேட்டா - பா.ம.க ..." வெளியிட்டவர் கே.ஆர்.பி.செந்தில்

http://krpsenthil.blogspot.com/2011/04/blog-post_09.html

// //டிஸ்கி : பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?
// //

அருள் கூறியது...

// //பசுமைத் தாயகத்தை தொடங்கியவர் மருத்துவர் அய்யா அவர்கள்தான்.

அவர் இப்போது தைலாபுரத்தில்தான் இருக்கிறார்.// //

விந்தைமனிதன் கூறியது...

// //பசுமைத்தாயகம் அமைப்பைத் தொடங்கியவர்கள் இரண்டு இளைஞர்கள். பெயர் அருள் & சீனிவாசன் என்று நினைக்கிறேன். அந்த அமைப்பின் துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார். இன்னும் துல்லியமான தகவல்களைத் தேடித்தந்தால் நீங்கள் விவாதத்துக்குத் தயாரா?// //

அருள் கூறியது...

// //தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.

மருத்துவர் அய்யா பல்வேறு அமைப்புகளை தொடங்கியுள்ளார்கள். பொங்குதமிழ் அறக்கட்டளை, தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சி, சமூகநீதிப் பேரவை, சமூக முன்னேற்ற சங்கம் என்று மிக நீளமானது அந்த பட்டியல்.

அவ்வாறு, அவர் 1995 ஆம் ஆண்டு தொடங்கிய மற்றுமொரு அமைப்புதான் பசுமைத் தாயகம்.

நீங்கள் குறிப்பிடும் இரண்டு பேர் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன். அவர்கள் இரண்டு பேரும் கடந்த இருபது ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக உலக் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் (இன்றைக்கும் அவர்கள் குடும்பத்தோடு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்). மருத்துவர் அய்யா அவர்கள் பசுமைத் தாயகம் அமைப்பை தொடங்கிய போது அவர்கள் இருவரையும் அந்த அமைப்பின் பொருப்பாளர்களாக மருத்துவர் அய்யா நியமித்தார்.

அவர்கள் இருவரும் தொடர்ச்சியாக இந்தியாவில் இருக்க இயலாத காரணத்தால் பின்னர் அருள் என்பவர் பொருப்பாளராக ஆனார். பசுமைத் தாயகத்தை ஒரு முன்னிலை அமைப்பாக மாற்ற வேண்டி மருத்துவர் அன்புமணி இராமதாசு அதன் தலைவர் ஆனார். இதுதான் பசுமைத் தாயகத்தின் வரலாறு.

தங்களை விவாதத்திற்கு வரவேற்கிறேன்.// //

விந்தைமனிதன் சொன்னது…

// //முழுத்தகவல்களைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நிச்சயம் மீண்டும் வருகிறேன். நிச்சயம் இந்த விவாத்தை நாம் தொடர்ந்தாக வேண்டும். விவாதத்தில் வெல்ல அல்ல, இதன்மூலம் தவறான பிம்பங்களை (என் பக்கம் இருப்பினும், உங்கள் பக்கம் இருப்பினும்) தெளிவுபடுத்த...// //

உங்களுக்கு ஏதேனும் தகவல் தேவை எனில் என்னிடமும் கேட்கலாம்.

1995 ஆம் ஆண்டு பசுமைத் தாயகம் தொடங்கப்பட்ட புதிதில், கல்பாக்கத்தில் அணு எதிர்ப்பு கருத்தரங்கம், கடலூரில் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கம், ஆற்காட்டில் தோல்தொழில் மாசுபாட்டிற்கு எதிரான கருத்தரங்கங்கள் நடத்தப்பட்டன.

அதனையொட்டி, 1996 இல் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி தொடங்கி வாலாஜா வரை"பாலாற்றைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும், மேட்டுப்பாளையம் தொடங்கி பவானி வரை "பவானி நதியைக் காப்போம்" மிதிவண்டி பிரச்சாரமும் நடத்தப்பட்டது. அதேபோன்று கடலூரில் உயிர்காக்கும் பேரணியும் நடத்தப்பட்டது.

நீங்கள் குறிப்பிடும் சீனிவாச ராவ் மற்றும் ஞானசேகரன் இரண்டு பேரும் மேற்கண்ட நிகழ்ச்சிகளில், பசுமைத் தாயகத்தின் பொருப்பாளர்கள் என்ற முறையில் பங்கேற்றனர். மருத்துவர் அய்யா தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நடந்தன.

நடைமுறையில் இந்த நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவுகளை ஏற்றவர்கள் - அந்தந்த மாவட்ட பா.ம.க'வினர்தான்.

இதில் நிங்கள் குறீப்பிடுவது போல "துவக்கவிழாவுக்கு வருகை தந்தவர்தான் ராமதாஸ். பிறகு அந்த இரண்டுபேரையும் டம்மியாக்கித் தானே கவர்ந்துகொண்டார்" எனும் கோயபல்ஸ் பிரச்சாரம் எங்கிருந்து வந்தது?

"பசுமைத்தாயகத்தை ஆட்டைய போட்டீங்களே, அந்த அமைப்பை ஆரமிச்ச பசங்க இப்போ என்னங்கய்யா பண்றாங்க?" என்று கே.ஆர்.பி. செந்தில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவது ஏன்?

பா.ம.க'வுக்கு எதிராக கட்டுக்கதைகள் கட்டப்படுவதற்கு பின்னணி 'ஆதிக்க சாதிவெறி' தவிர வேறெதுவும் இல்லை.

மற்றபடி, பா.ம.க குறித்த அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளிக்க நான் தயார்.

Jaleela Kamal said...

நொறுக்ஸ் நல்ல கடிக்கும் படி இருக்கு
பிரொமோஷனுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்,

ம்ம் இன்னுமா சுய நினைவுக்கு வரல, தேதி 17 ஆச்சே. இல்லை சின்ஸியர் சிகாமனி ஆகிட்டீங்களா?

நல்லது தான்..

Mahi said...

ப்ரமோஷனுக்கு வாழ்த்துக்கள்! :)

பொம்மீஸ் நைட்டி-விளம்பரம்..உங்க ப்ளாக் பாத்துதான் தெரியுது எனக்கு!
/என்னைக்கேட்டா நாட்டில் குற்றங்கள், ரவுடிசம் குறையவும், வீட்டு பிரச்சினைகள் தீரவும் வீட்டுக்கொரு பொம்மிஸ் நைட்டி இலவசமா குடுக்கலாம்.../ஹஹா!!சூப்பர் ஐடியா!

ILLUMINATI said...

யோவ்,என்னய்யா புரியாம பேசிக்கிட்டு இருக்கீர்? குஷ்புவுக்கு கூட்டம் கூடினதுக்கு காரணம், அவங்கள மாதிரி குழந்தை பிறக்கணும்னு எல்லோருக்கும் ஆச இருக்கிறதால தான்.ஆமா.. :)

இராஜராஜேஸ்வரி said...

பிரமோஷனுக்குப் பாராட்டுக்கலும் வாழ்த்துக்களும்.

angel said...

நடக்கவே நடக்காதுன்னு நினைக்கிற விசயங்கள் திடீர்னு நடந்தா எப்படி இருக்கும். அதுவும் இந்த ஜென்மத்துல நடக்காதுன்னு நினைச்ச விசயங்கள் நடந்தால்...

i thought u r gng to get married hehe

நிழற்குடை said...

வாழ்க வளமுடன்

FEEDJIT Live Traffic Feed