Thursday, February 3, 2011

DHOBI GHAT (Mumbai Diaries)-- 2011 - இந்தி

லகான், தாரே ஜமீன் பர், jane tu jane na , பீப்லி (லைவ்) வரிசையில் ஆமீர்கானின் மற்றொரு தயாரிப்பு. மேற்சொன்ன வெற்றிப்படங்களில் வரிசையில் இதையும் சேர்த்துக்கொள்ள முடியுமா?  கடைசியில்...

ஒரு சினிமாவுக்கு உரிய எந்த அடையாளங்களும் இல்லாமல் ஆரம்பிக்கிறது படம். கடைசி வரை அப்படியே. கோடிக்கனக்கான மக்கள் வசிக்கும் மும்பையில் சிறுபுள்ளிகளாக இருக்கும் நான்கு வெவ்வேறு வாழ்க்கைத்தரத்தில் வாழும் நாலு விதமான மனிதர்களின் எதிர்பார்ப்புகளும், ஆசைகளும், விரக்திகளும், அனுபவங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.

விவாகரத்தான ஓவியர் ஆமிர்கானுக்கு ஒரு ஓவியக்கண்காட்சியில் அறிமுகமாகிறார் நிறைய பணங்களை வைத்து செலவழிக்க தெரியாமல் போட்டோ எடுக்கிறேன், டாக்குமெண்ட்ரி எடுக்கிறேன் என மும்பைக்கு வரும் அமெரிக்காவில் வேலைபார்க்கும் மேட்டுக்குடி வீட்டு பெண் ஷய். .இவரகள் இருவருக்கும் அறிமுகமாகிறார் அவர்களின்  உடைகளை சலவை செய்து கொடுக்கும் தொழிலாளியாக  ஷோயிப்.

ஷய்-உடன் ஏற்பட்ட ஒரு ஊடலில் தன்வீட்டை மாற்றும் ஆமிருக்கு அந்த வீட்டில் ஏற்கனவே வசித்து சென்றவர்கள் விட்டுச்சென்ற 3 வீடியோ டேப்களில் பதிவான வீடியோ மூலம் அறிமுகமாகிறார் யாஸ்மின்.

சலவைத்தொழிலாளியாக ஷோயிப். நடிகனாக வேண்டும் என கனவுடன் வாழும் ஒரு பாவம் இளைஞன். மிகச்சிறந்த நடிப்பை இந்த பையனிடம் பார்க்க முடிந்தது. தனக்கு உதவிபுரிந்து தன்னிடம் டாக்குமென்ட்ரிக்காக உதவிகேட்டு தன்னுடன் சுற்றும் ஷய்யை விரும்புகிறார். கடைசியில் தான் செய்வது தவறு என உணர்ந்து அமீரின் முகவரியை கொடுத்த திருப்தியுடன் சிரிப்பது என்ற ஒரு காட்சி போதும்.

தனித்து வாழும் இந்த நான்கு பேரின் மனநிலைகளை திரைப்படமாக ஓடவிட்டிருக்கிறார்கள். நான்கு பாத்திரங்களுடன் ஊடே நாமும் பயணப்படுகிறோம். இதில் யாஸ்மின் என்ற பாத்திரம் கதையில் உருவாக்கும் பாதிப்புதான் அதிகமாக இருக்கிறது. உ.பியின் ஒரு கிராமத்தில் இருந்து கல்யாணம் என்ற பெயரில் மும்பைக்கு கூட்டிவந்து கூண்டுக்குள் அடைக்கப்படும் யாஸ்மின் தனிமையில் தனது சகோதரனுடன் பேசுவதை வீடியோவாக 3 டேப்களில் பதிவு செய்கிறாள். அதனை ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும்போது பார்க்கிறார் அமீர்.

யாஸ்மீனின் கடைசி வீடியோவில் இருந்தது என்ன? ஷய்யை விரும்பும் ஷோயிப் என்னவானான்? அமீரை விரும்பும் ஷய் என்னவானாள்? ஆமிரின் முடிவென்ன? எல்லவாற்றுக்கு ஒரு முடிவு கொடுக்காமல் முடிவிலும ஒரு புதிய ஆரம்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த விசயங்களே அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், மற்றும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவர்களின் மனநிலையை அப்படியே எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் காண்பித்ததுதான்.

சலவை தொழிலாளி ஷோய்புக்கு ஷய்  வீட்டில் வைத்து  பணிப்பெண் காப்பி கொடுக்கும் காட்சி, மேல்தட்டு பெண்களின் சுயநலங்கள் இப்படி பல நிகழ்வுகளை குறியீடுகள் மூலம் காண்பித்திருப்பது புதிது.


முதல் பத்தியில் கேட்ட கேள்விக்கு பதில்? அமீர் தயாரித்த வெற்றிப்படங்களின் வரிசையில் இதை சேர்க்கலாமா? எனது பதில் அமீரின் தயாரிப்பு என்று மட்டுமல்லாமல் அவர் நடித்த படம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் எனக்கு சிறு ஏமாற்றத்தையே தந்தது, ஆனால் சிறந்த மாற்று சினிமாக்களின் வரிசையில் DHOBI GHAT  நிச்சயம் இடம் பெறும்.

20 comments:

இராமசாமி said...

சிறந்த மாற்று சினிமாக்களின் வரிசையில் DHOBI GHAT நிச்சயம் இடம் பெறும்.
---
okay.. pathuruvom ....

MANO நாஞ்சில் மனோ said...

அமீர்கானின் படம்னாலே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அவர் படங்களில் சமூக சிந்தனையும் சாடல்களும் இருக்கும்....நான் இன்னும் படத்தை பார்க்க வில்லை பார்க்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

ஐயோ வடை போச்சே மக்கா.............

MANO நாஞ்சில் மனோ said...

//சிரிப்பு கார்னர்
நடிகர் சுந்தர் சி. தமிழ்சினிமாவின் மோகன்லால்


- சத்யராஜ்//


உம்ம பிளாக்கை ஓபன் பண்ணும் போதெல்லாம் இதை பார்த்து மறுபடியும் மறுபடியும் படிப்பேன் ஹா ஹா ஹா ஹா ஹா சத்யராஜின் லொள்ளுக்கு அளவே இல்லாம போச்சு போங்க.....

கக்கு - மாணிக்கம் said...

எப்படி இருந்தாலும் அமீர்கானின் படங்கள் ஒரு நிறைவைத்தரும்.இன்னும் பார்க்கவில்லை. பார்ப்பேன்.

கக்கு - மாணிக்கம் said...

நம்ம நாஞ்சில் மனோவுக்கு ஒரு கிலோ வடை (ஓட்டையுள்ள மெதுவடை மட்டும்) அனுபிவைத்தால் என்னா??
பாவம் வடை வடைன்னு சுத்திகினு இருக்கு. பஹ்ரைனில் தான் நிறைய வடை கிடைக்குமே !சத்தியமா தின்ற வடைதான் சொன்னேன்.

அன்னு said...

விமர்சனம் நல்லாயிருக்குண்ணா. படம் பாத்துட்டு சொல்றேன். :)

Chitra said...

இந்தப்படத்தில் எனக்குப்பிடித்த விசயங்களே அடித்தட்டு மக்கள், நடுத்தர மக்கள், மற்றும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவர்களின் மனநிலையை அப்படியே எந்த மிகைப்படுத்துதலும் இல்லாமல் காண்பித்ததுதான்.


..... இதுவே போதும்..... படம் புது track ல போகுதுனு... நேரம் இருக்கும் போது, இந்த படம் பார்க்கணும்.

டெனிம் said...

படத்தைப் பற்றி நானும் கேள்விப்பட்டேன் நண்பரே,பார்க்கவேண்டும்

MANO நாஞ்சில் மனோ said...

//நம்ம நாஞ்சில் மனோவுக்கு ஒரு கிலோ வடை (ஓட்டையுள்ள மெதுவடை மட்டும்) அனுபிவைத்தால் என்னா??
பாவம் வடை வடைன்னு சுத்திகினு இருக்கு. பஹ்ரைனில் தான் நிறைய வடை கிடைக்குமே !சத்தியமா தின்ற வடைதான் சொன்னேன்.//

ஹி ஹி ஹி ஹி என்னவோய் கக்கு லொள்ளா,
பிச்சிபுடுவேன் பிச்சி......நான் ரொம்ப நல்லவனாக்கும்....

Ponchandar said...

இந்த படத்தில் காலை நேர மும்பையின் ஒரு பகுதியை ஷய் கோணத்தில் காட்டுவார்கள் ! ! பக்கத்து வீட்டின் சமையல்..குழந்தை பள்ளிக்கு கிளம்புவது...வசனமே பேசாத பாட்டி...அமீர்கான் சிகரெட் பிடிக்கும் ஸ்டைல்...

வித்யாசமான படம் தான்

செ.சரவணக்குமார் said...

நல்ல விமர்சனம் பிரதாப்.

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

! சிவகுமார் ! said...

>> இயல்பான மும்பை மக்களின் வாழ்வை காண ஆசைப்பட்டேன் பிரதாப் அவர்களே. மும்பை நகரின் ஏழ்மை, திருப்பங்கள், கருத்து சொல்லுதல் என எதுவும் இல்லா படம் பார்க்க எண்ணியே இப்படத்திற்கு சென்றேன். அது இப்படத்தில் இருந்தது எனக்கு மகிழ்வை தந்தது. பெரிய அளவில் பேசப்படும் படமாக இல்லாவிடினும், வழக்கமான களத்தில் இருந்து மாறுபட்டு இருந்தது. நான் பார்க்கும் படங்கள் ஒவ்வொன்றும் கூடுமானவரை வெவ்வேறு சாயலில் இருக்க வேண்டும் என எண்ணுவதால் இதுவும் ஒரு தனி இடத்தை பிடித்து விட்டது என்றே சொல்லலாம்.

நாஞ்சில் பிரதாப்™ said...

சிவகுமார்= சிறந்த யதார்த்த படம் என்பதில் சந்தேகமில்லை. நான் உங்களுக்கு பின்னுட்டத்தில் சொல்லியதுதான்....
உங்கள் விமர்சனம் இப்போ காணவில்லை. எங்கப்போச்சு..காக்கா கொண்டுபோயிருச்சா...:)

! சிவகுமார் ! said...

>>> இருக்கே.. http://madrasbhavan.blogspot.com/2011/01/dhobi-ghat.html

ஸ்ரீராம். said...

நேற்றுதான் படம் கிடைத்துள்ளது! பார்க்க வேண்டும்.

ஹுஸைனம்மா said...

விமர்சனம் படம் பார்க்கணும்னு தோண வைக்குது. பாக்கலாம்..

இராஜராஜேஸ்வரி said...

விமர்சனம் படம் பார்க்கத்தூண்டுகிறது.

Jaleela Kamal said...

எப்படியாவது பார்க்கனும் ம்ம் பார்க்கலாம்

FEEDJIT Live Traffic Feed