வரலாற்று நாயகர்களின் வரலாற்று குறிப்புகள் மண்ணோடு மண்ணாக புதைந்து விடக்கூடாதே என்பதற்காக நான் பல்பு வாங்கிய சரித்திர நிகழ்வுகளை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.
===================
மும்பைக்கு முதல்தடவையாக வேலைக்கு சென்றிருந்த நேரம். இந்தி அவ்வளவா...மனனிக்கவும் சுத்தமாவே மாலும் நஹீ. டில்லி தூர்தர்ஷனின் உபயத்தில் தெரிந்தது மொத்தமே ஒன்றிரண்டு வார்த்தைகள்.
வேலையில் சேர்ந்து ரெண்டு நாள் இருக்கும், அலுவலகத்தில் இருந்து ஒருவர் என்னைக்கூப்பிட்டு ஷாதி ஹோகயா கையா? ன்னு கேட்டாரு.. வழக்கம்போல பெப்பே ன்னு நான் பார்க்க, "மேரேஜ் மேரேஜ்"னு தாலி கட்டுற சைகையோட காண்பிச்சாரு (மொழி தெரியாதவனை ஏதோ காதுகேட்காதவன் மாதிரியே டீல் பண்றாயங்க.) ஓகோ, கண்ணாலம் ஆயிடுச்சான்னு கேட்கறாருனுட்டு... நஹீ அப்படினேன். அப்பாடா இந்தில பதில் சொல்லிட்டேன் இதோட எஸ்கேப்புடான்னு நவுரபார்ததா டமால்னு அடுத்தகேள்வியை கேட்டாரு.
உமர் கித்னா? அப்படின்னாரு, என்னடா இது... அமிதாப் பச்சன் வுடமாட்டான் போலருக்கே, பயில்வான் கிட்ட மாட்டுன சார்லிசாப்ளின் மாதிரி ஆயிடுச்சே என்நிலைமை. ஆனா நாம யாரு? இதுக்கும் இந்திலேயே பதில்சொல்லுவோம்னு அவர் கொஸ்டினை அப்படியே ஸ்டடி பண்ணேன். கித்னா அப்படின்னா எத்தனைன்னு தெரியும். ஆனா உமர் அப்படின்னா என்னன்னு யாருக்கு தெரியும்? எங்கூருல இருக்கற உமர் E.N.T., ஆஸ்பத்திரியைத்தான் தெரியும். முதல் கேள்வி கல்யாணம் ஆயிடுச்சான்னு கேட்டாரு. அப்போ இந்த கேள்வி குழந்தைங்க எத்தனைன்னு கேக்குறாரு போல... வந்துச்சுப்பாருங்க கோபம் "அடிங்... கல்யாணம் ஆகாத ஒரு பச்சபன்னுகிட்டப்போய் சாரி பசசமண்ணுகிட்டப்போய் குழந்தைங்க எத்தனைனு கேக்கறியே உனக்கு அறிவில்லை?". அப்படின்னு கேக்கலாம்னா அதை இந்தில எப்படி கேக்கறதுன்னு தெரியாது. கோபத்தை அடக்கிட்டு
உமர் நஹீ அப்படினனேன் டபுள் ஸ்டராங்கா. யார்கிட்ட?
ஆனா சொல்லி முடிக்கிறதுதுக்குள்ள அமிதாப் பச்சன் சிரிக்க ஆரம்பிச்சுட்டாரு. இதுல சும்மா இருந்தவங்களையும் கூப்பிட்டு,கூப்பிட்டு விசயத்தை சொல்லி கூட்டமா சிரிக்க ஆரம்பிச்சுட்டானுங்க... அப்படி என்னய்யா தப்பா சொல்லிட்டேன்னு என் முகம் இருந்த கன்டிஷனை பார்த்து அவரே சொன்னாரு. நான் கேட்டது How old are you? ன்னாரு. அய்யா தெய்வமே இதை ஒழுங்கா முதல்லயே இங்கிலிபிசுல கேட்கவேண்டியதானே... அதுசரி... எங்கிட்ட இந்தில கேள்வி கேட்டதே, இவனுக்கு இந்தி தெரியாதுங்கறதுக்காத்தானே.
=============
மேல அமிதாப் பச்சன்கிட்ட வாங்குனது ஜீரோ வோட் குண்டு பல்புனா கீழே வாங்குனது ஆயிரம் வோட் நியான் பல்பு.
சொந்தத்துல ஒரு அக்கா வீட்டுக்கு போயிருந்தேன். அக்காவோட தம்மாத்துண்டு புத்திரி ஏதோ அகில உலக பள்ளில அதான் இன்டர்நேஷனல் இஸ்கூல்ல எல்.கேஏஏஏஏஏஏஏஏ.ஜீ படிக்குதாமாம்(ஏதோ பெரிய படிப்பா இருக்கும்போல!!) நான் போயிருந்தபோது கைல புக்கை வச்சுட்டு A FOR APPLE வாசிண்டுருந்துச்சு. அந்த புக்கை வச்சு அவளுக்கு கொஞ்சம் சொல்லிக்கொடுன்னு அக்கா என்கிட்ட சொன்னாள். அது எனக்கு வைக்கப்பட்ட சூனியம்னு அப்போ எனக்கு தெரில.
நம்ம ரேன்ஜ் என்ன? ஒரு நர்சரி புள்ளைக்கு பாடம் எடுக்கவச்சுட்டியேன்னு புலம்பிகிட்டு நானும் புக்கை வாங்கி A FOR APPLE-னு ஆரம்பிச்சேன்...
E வரைக்கும் நல்லாத்தான் போயிட்டுருந்துச்சு. அடுத்தது F FOR ஃபளவர் அப்படின்னதும், திரும்ப சொல்லாம பேசாம இருந்தாள், சொல்லும்மா F FOR ஃபளவர்-னு நான் திரும்பவும் சொன்னதும் நக்கலா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு, "அம்மா இந்த அங்கிளுக்கு ஒண்ணுமே தெரில A FOR ஃபளவர் னு சொல்றாங்க ...அது F FOR ஃபளார் தானம்மா..."? ஆகா...நான் படிச்ச கார்ப்பரேஷேன் ஸ்கூல் வாத்தியாரு F FOR ஃபளவர்- னு தான சொல்லிக்கொடுத்தாரு.
பல்பை வாங்கி உள்ளபோட்டுகிட்டு சரி...சரி...அப்படியும் சொல்லாம், நீ சொல்றமாதிரியும சொல்லலாம்னு செந்தில் மாதிரி சமாளிச்சுட்டு திரும்புவம் புக்கை பார்த்தா இன்னும் 20 எழுத்து மிச்சம் இருக்கு... இனி எத்தனை பல்பு வாங்கனுமோ...?! "அங்கிளுக்கு போன் வருதும்மா நீ படின்னு புக்கை கொடுத்துட்டு அழைப்பே வராத மொபலை எடுத்துட்டு ஒரு ஓரமா எஸ்கேப்பு.....
எனக்கு இங்கிலிபிசு கத்துக்கொடுத்த அந்த ரிட்டையர்டு ஆன வாத்தியாரை ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்....


27 comments:
போடு முத வெட்டை
பல்பெல்லாம் பெருசா வாங்கிருக்கிங்க,.
நம்ம சூரியன் மாதிரி எப்பவும் ஒளிவீசக்கூடிய ஒரு பெரிய பல்பு வாங்க வாழ்த்துகிறோம்,..
>>>வரலாற்று நாயகர்களின் வரலாற்று குறிப்புகள் மண்ணோடு மண்ணாக புதைந்து விடக்கூடாதே
யோவ் .. கொலை விழுந்துடும்ம்...
ஹாஹா வரலாற்றிலேயே முதல் முதல் வாங்கின பல்பு ஹிந்தி பல்பு படு ஜோர் . அபப்ரம் எப்படியே தட்டு தடுமாறி வந்துட்டீங்க போல
இப்பல்லாம் ஹிந்தி சரளமா வந்ததா.அதுக்குள்ள எத்தனை பல்பு வாங்கினீங்க?
உங்களது பல்பு ந.நி.நாய் தந்த எரிச்சலில் இருந்து சற்று வெளியே வர உதவியது.இரண்டாவது பல்பு நானும் வாங்கியிருக்கிறேன்.எனது 14 வயதிற்க்கு போய் வந்தேன்.நன்றி
உங்கள் முதல் பல்பு மாதிரி நானும் நிறைய வாங்கி இருகிறேன் தல....
மும்பைல போயிதான் பல்பு வாங்கணுமா...ஊர்ல கிடைக்கலியா மக்கா......
//நஹீ அப்படினேன். அப்பாடா இந்தில பதில் சொல்லிட்டேன் இதோட எஸ்கேப்புடான்னு நவுரபார்ததா டமால்னு அடுத்தகேள்வியை கேட்டாரு.//
புதுசா மும்பை வர்றவங்களுக்கு முதல்ல நாங்க கெட்ட வார்த்தைதான் சொல்லி கொடுப்போம். பயபுள்ளைங்க என்னா ஆர்வமா வேகமா கத்துருவானுங்க தெரியுமா[[நேர்மையா சொல்லி குடுத்தா எவன் கேக்குறான்]] ஹா ஹா ஹா...
சரி இனி துபாய்ல அரபிகிட்டே வாங்குன பல்பு பற்றி சொல்லுங்க மக்கா...
//ஹாஹா வரலாற்றிலேயே முதல் முதல் வாங்கின பல்பு ஹிந்தி பல்பு படு ஜோர் . அபப்ரம் எப்படியே தட்டு தடுமாறி வந்துட்டீங்க போல///
ஹா ஹா ஹா ஹா.....
ரிப்பீட்டே.....
அபி, ஆப்கா உமர் கித்னா ஹை பையா??(bhaiya):-)))))))))))))
மும்பைல வாங்கினது பல்பு இல்ல. பயபுள்ளைக உங்களை ஒரு கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆக்கி நக்கல் பண்ணி ரசிச்சிருக்காங்க. நீங்களும்...!!! ஹிந்தி தெரியாதுன்னு முதல்லயே சொல்லாமே என்னாத்துக்கு ஃபிலிம் காட்டணும்? பல்பு வாங்கணும்? இல்லை, அந்தாளு ஹிந்தில பேசுனா, நான் தமிழேண்டான்னு தமிழ்ல பேசிருந்தா பல்பு அங்க கொடுத்திருக்கலாம்ல? இத பல்பு வாங்கின கதைன்னு பெருமையா வேற... !!!!!?????
//ஃபளவர் //
correct thaanga ithu. neenga sariyaa thaan solli irukkeenga. (unga vaathiyaar nallaa thaan solli kuduthirukkuraaru)
//ஃபளார்// kondippa thappu...
india-la romba stylish-a pesuratha nenchikittu ippidi thaan thappu thappaa pesuraanga.
//திரும்புவம் புக்கை பார்த்தா இன்னும் 20 எழுத்து மிச்சம் இருக்கு... //
கிகிகி.///////////////))))
///அம்மா இந்த அங்கிளுக்கு ஒண்ணுமே தெரில A FOR ஃபளவர் னு சொல்றாங்க ...அது F FOR ஃபளார் தானம்மா..."? ///
தப்பா சொல்லி குழந்தை கையால ஃபளார் ன்னு வாங்கிராதிங்க.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
நாஞ்சில்... இனிமே எவனாவது புரியாத மொழில மொக்கைய போட்டா, நீங்க அவண்ட்ட தமிழ்லயே பேசி அவனை பல்பு வாங்க பண்ணிருங்க..அவனுக்குத் தமிழ் புரியாத மொழியாச்சே.. அப்புறம் ஓடிருவான்.. எப்புடி இந்த ஐடியா? :-)
நாஞ்சிலாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
ஒரு சின்ன சந்தேகம்...இது மணி விழாவா...
பவள விழாவா...:))
//மொழி தெரியாதவனை ஏதோ காதுகேட்காதவன் மாதிரியே டீல் பண்றாயங்க//
ஹா.ஹா..நிதர்சனம்.
// A FOR APPLE//
இன்னும் ஆப்பிள மாத்தவே இல்லியா?.
//எனக்கு இங்கிலிபிசு கத்துக்கொடுத்த அந்த ரிட்டையர்டு ஆன வாத்தியாரை ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்//
அவர் என்னங்க செய்வார் பாவம். அவரோட ஆசிரியர் யாரோ?
பல்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
ஆனா நீங்க வாங்குனது 1000 வாட்ஸ் பல்பு :)
Wish u many more happy returns of the day!!
//ஒரு சின்ன சந்தேகம்...இது மணி விழாவா...பவள விழாவா //
கலைஞருக்கு பிறந்தநாளுன்னு தப்பா நினைச்சிட்டீங்க போலருக்கு...பிறந்த நாள் எனக்கு. வெள்ளிவிழா...:))
நன்றி மேனகா
//மும்பைல வாங்கினது பல்பு இல்ல. பயபுள்ளைக உங்களை ஒரு கைப்புள்ள ரேஞ்சுக்கு ஆக்கி நக்கல் பண்ணி ரசிச்சிருக்காங்க. //
அதே!!
அதே!!!! :))
इस युवा प्रताप कुमार मौजूद 41 साल से कम है पुराना
//எனக்கு இங்கிலிபிசு கத்துக்கொடுத்த அந்த ரிட்டையர்டு ஆன வாத்தியாரை ரொம்ப நாளா தேடிகிட்டு இருக்கேன்...//
அது சரி, உனக்கு இங்கிலீஷ் கத்துக் குடுத்த ஒரே காரனதுனாலதான் வெறுத்துப் போயி வி.ஆர்.எஸ். வாங்கிட்டுப் போனாரு அவரு, அவரைத் தேடித் போயி வம்புல மாட்டாதே!
பிரகாசமான பல்புகள் .வாழ்த்துக்கள்.
அன்பின் பிரதாப் = பல்பு வாங்காதவனே கிடையாது -ஆனா வாங்குன பல்பப் பத்தி பெருமையா ஒரு பதிவு வேற - அதுக்கு 25 ம்று மொழி வேற .. ..... ம்ம்ம் ந்ல்லாருங்கப்பா - நட்புடன் சீனா
Post a Comment