Sunday, February 6, 2011

சின்னஞ்சிறு கதைகள் - சுஜாதா



சுஜாதாவின் சின்னஞ்சிறு கதைகளை எழுதுவது எப்படி மற்றும் அவரின் சின்னஞ்சிறு கதைகளை நிறைய படித்து நாமும் அதுபோல் முயற்சித்தால் என்ன என்று பலமுறை நினைத்ததுன்டு. படிப்பவர்களின் உடல்நிலையை மனதிற்கொண்டு எழுதுவதில்லை.

நகைச்சுவை நடிகர்களுக்கு எப்படி சந்திரபாபு, நாகேஷ் இவர்களின் பாதிப்பு இல்லாமல் நடிக்க முடியாதோ அதுபோல் சுஜாதாவின் கதைகளை படித்து கதை எழுத ஆரம்பித்தவர்களுக்கு அவரின் பாதிப்பு இல்லாமல் எழுதுவே முடியாது.

அவர் சொல்வது, சின்னஞ்சிறுகதைகள் கதையின் சுருக்கமாக இருக்ககூடாது. சடன் பிக்ஷன் (Sudden Fiction) கதையில் கண்டிப்பாக இருக்கவேண்டும். அவர்எழுதிய பல கதைகளை படிக்கும்போது அவருக்கு எப்படி இது தோணியிருக்க முடியும் என்று வியந்ததுண்டு. எப்போதோ வாசித்த சடன் பிக்ஷன் வைத்து அவர் எழுதிய ஒரு திருமணம் என்ற சிறுகதை என்னை ரொம்பவே கவர்ந்தது. இன்னும் அந்த ஞாபகம் இருக்கிறது. சாதாரண கதையாக இருந்திருந்தால் எப்போதோ மறந்து போயிருக்கும்.  எழுத்துலகின் பல ஜாம்பவான்களும் என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கும் எல்லாம் ஆசான் அவர்தான்.

நான் முயற்சித்த குட்டி  Sudden Fiction (மொக்கை) கதைகள் கீழே.  நல்லாருக்கு, அருமை, சூப்பர்னு டெம்ப்ளேட் கமண்ட் மட்டும் போட்ராதீங்க...அப்புறம் இது மாதிரி நிறைய வந்துட்டே இருக்கும்...:)))))

======

ஒரு சயின்ஸ் பிக்ஷன்...(மாதிரி)

"இவ்ளோ வேகமா  நாம எங்க போய்கிட்டு இருக்கோம் ஜேஜே"

"நாம இப்போ மணிக்கு 2000 கிமீ ஒளிவேகத்துல செவ்வாய் நோக்கி போய்கிட்ருக்கோம் கேகே"

"ஒருவேளை நமக்கு முன்னாடி செவ்வாய்க்கு பூமி மனிதர்கள் வந்துட்டா நமக்கு தேவையானது கிடைக்காமலேயே போய்விடுமா ஜேஜே?"

"கவலைபடாதே  கேகே எவ்வளவு விலைகொடுத்தாவது செவ்வாய்க்கு வரும் பூமி மனிதர்களை விலைக்கு வாங்கிடுவோம். தண்ணீர் நமக்கு மட்டும்தான்".

====


ஒரு திகில் (மாதிரி)

 ‘சார் இந்த அட்ரஸ் எங்க இருக்குன்னு சொல்றீங்களா?"

 "இப்படி ஒரு இடமே இப்போ இல்லையே சார்? இந்த இடத்துல இப்போ பிளாட் கட்டிட்டாங்க. உங்களுக்கு தெரியாதா? "

"தெரியாது சார், கொஞ்ச வருசம் வெளியுர்ல இருந்தேன்.  இங்க இருந்த புளியமரத்தைக்கூட வெட்டிட்டாங்களா சார்?"

"அட என்ன சார் நீங்க? இங்க இருந்த புளிய மரம் வேப்ப மரம், பக்கத்துல இருந்த சுடுகாடு எல்லாத்தையும் எடுத்துமாத்திட்டுதான் இப்போ இவ்ளோ பெரிய குடியிருப்பு வந்துருக்கு..."

 மனுசங்க மட்டும்தான் இந்த உலகத்துல வாழ  முடியுமா? என்று புலம்பிக்கொண்டே வேறு புளியமரம் தேடி பயணித்துக்கொண்டிருந்தான்.
 =====

20 comments:

சிநேகிதன் அக்பர் said...

அட!

Chitra said...

நான் முயற்சித்த குட்டி Sudden Fiction (மொக்கை) கதைகள் கீழே. நல்லாருக்கு, அருமை, சூப்பர்னு டெம்ப்ளேட் கமண்ட் மட்டும் போட்ராதீங்க...அப்புறம் இது மாதிரி நிறைய வந்துட்டே இருக்கும்...:)))))

.....நல்லாருக்கு, அருமை, சூப்பர்.
இந்த மாதிரி நிறைய வரட்டும், பிரதாப்!

டெனிம் said...

பரவாஇல்லை எதோ ட்ரை பண்ணி இருக்கீங்க,இன்னும் கொஞ்சம் முயற்சித்தால் அருமையாக வரும் தல....

ஹுஸைனம்மா said...

ரெண்டும் வேறவேற கதையா? நான் ஒரே கதையின் ரெண்டு பேராகிராஃப் போலன்னு நினைச்சு, எப்படி லிங்க் பண்றதுன்னு யோசிச்சு, யோசிச்சு... சரி, விடுங்க, புதுமை படைச்சிட்டீங்க பாஸ்!!

பின்னோக்கி said...

முதல் கதை நல்லாயிருக்கு. ரெண்டாவது ரொம்ப சீக்கிரமே கண்டுபிடிக்க முடியுது.

RVS said...

வாத்தியார் பேரைப் பார்த்து உள்ளே வந்தேன். வாத்தியார் வாழ்கிறார் போங்கள்!!! (டெம்ப்ளேட் கமென்ட் இல்லை. சரியா? ) வாழ்த்துக்கள் பிரதாப். ;-) அற்புதம். (இது ரெண்டையும் சேர்க்காமல் இருக்கமுடிய வில்லை. ) ;-)

Ganesh Chandrasekaran said...

Nice Try

அமைதிச்சாரல் said...

ஆஹா!!, ஓஹோ!!.. அருமை, ச்சே, பின்றீங்கப்பா, கதைகள் நல்லாருக்கு.. தொடருங்கள் :-)))))

பா.ராஜாராம் said...

ரெண்டாவது நல்லா இருக்கு நாஞ்சில்! :-)

ஆதவா said...

நல்லா வந்திருக்குங்க... இருந்தாலும் நாம ஏதாச்சும் சொல்லாட்டி தூக்கம் வராதில்ல??

இரண்டாவது கதையில புளியமரம் பேசிகிட்டு இருந்தா எப்படி இருந்திருக்கும்???

MANO நாஞ்சில் மனோ said...

//வேறு புளியமரம் தேடி பயணித்துக்கொண்டிருந்தான்.//

ஐயோ பாவம்....

ஸ்ரீராம். said...

ரெண்டுமே நல்லா இருக்கு.

The S c o r p said...

மீ த பேக்.

கதைகள் சூப்பர்.. அட்டகாசம்.. அபாரம்.. வாவ்.. பின்னுது.. அய்யய்யோ.. கொன்னுட்டீங்க.. சபாஷ்.. பிச்சி ஒதறிட்டீங்க.. தெய்வமே.. பின்னிட்டீங்க..

இதுல எதுவேணாலும் போட்டுக்குங்க :-)

உலக சினிமா ரசிகன் said...

ஒவ்வொரு வரியிலும் சுஜாதா வித்தியாசம் காட்டுவார்.கிளைமாக்சில் சிக்ஸர் அடித்த நீங்கள் முதல் வரியிலிருந்தே மெனக்கெட்டால் நாஞ்சில் சுஜாதாவாக பரிமளிப்பீர்கள்.

Jaleela Kamal said...

என்ன இத்துனுண்டு மொக்க கதை

நாஞ்சில் பிரதாப்™ said...

//என்ன இத்துனுண்டு மொக்க கதை//

ஹஹஹ ஜலீலாக்கா... சூப்பர்...நச்சுன்னு உண்மையைச்சொன்னீங்க... ஐ லைக் இட்....:))))

அன்னு said...

முதல் கதைல ரெம்ப நாடகத் தன்மை தெரியுது. பேர்களை திரும்ப திரும்ப சொல்றதும் ஒரு போரிங் தருது.

ரெண்டாவது கதைய "..பயணித்துக்கொண்டிருந்தான்." அப்படின்னு முடிச்சதால சீக்கிரம் புரியலை, எனக்கு மட்டும்தானான்னு தெரியலை. அதை நோட் பண்ணுங்க.

http://www.scribd.com/doc/2364197/Sujathas-Short-Stories-in-Tamil ல பாத்தீங்கன்னா, ஒவ்வொரு கதையின் பின்னாலும் சுஜாதா எப்படி எழுதலாம், எபப்டி எழுதக்கூடாதுன்னு சொல்லியிருப்பார். உபயோகமா இருக்கும். :)

goma said...

நல்லா இருக்கே

நானும் ட்ரை பண்ணலாமா

R.Gopi said...

அட....

நாஞ்சிலார் எழுத்துலக ஆசானை அப்படியே ஒற்றி எடுத்து எழுத முயற்சித்து இருக்காரே...

நீங்கள் முயற்சித்த அதே பாணியில் நான் முயற்சித்தது இதோ :

தோப்பும்... புங்கை மரமும்... பின்னே ஞானும்
http://edakumadaku.blogspot.com/2009/08/blog-post_17.html

Rajan said...

.....நல்லாருக்கு, அருமை, சூப்பர்.
இந்த மாதிரி நிறைய வரட்டும், பிரதாப்!

FEEDJIT Live Traffic Feed