ஊழல். ஒருவேளை சோற்றுக்கே சிங்கியடிக்கும் குடும்பங்கள் வாழும் நம் திருநாட்டில் தான், எத்தனை பூஜ்யம் என்றுகூட தெரியாத பெரும்பணத்தைசுருட்டுகிறார்கள். உலகச்சந்தையில் பெரும் மதிப்பு கொண்ட அலைக்கற்றைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஜெர்சி பசு விலைக்கு கைமாற்றுகிறார்கள். பலமில்லாத எதிர்கட்சிகள், ஒன்றுக்கும் உதவாத அரசியல் அமைப்புசட்டம், சிநதித்து ஓட்டுப்போட தெரியாத மகாபொதுஜனம் இருக்கும் வரை அசைக்கமுடியாது. ஃபோபர்ஸ் பீரங்கி பேர ஊழல்னு ஒண்ணு நடந்துச்சே...யாருக்காச்சும் ஞாபகமாவது இருக்கா? வாழ்க ஜனநாயகம்.
============
துனிஷீயா, எகிப்தை தொடர்ந்து ஜனநாயக உரிமைகளுக்காக நடக்கும் புரட்சி பஹ்ரைன், லிபியா, ஏமன் நாடுகளிலும் பரவி உள்ளது. உலக அரசியலே ஆட்டம் கண்டுவருகிறது. எஙகெல்லாம் அதிகார வர்க்கம் அடக்குமுறைசெய்கிறதோ, மக்கள் பணம் சுரண்டப்படுகிறதோ, முதலாளித்துவம் தலையெடுக்கிறதோ அங்கு புரட்சி அவசியம் என்கிறது கம்யூனிசம். அப்படிப்பார்த்தா இந்தியாவில் குறைந்த பட்சம் தமிழ்நாட்டுலயாவது என்னிக்கோ புரட்சி வெடிச்சிருக்கனும். எங்க? நம்மூர்ல வெடிக்கிறது ரெண்டே விசயம்தான்.ஒண்ணு குண்டு வெடிப்பு இன்னொண்ணு மக்கள் தொகை வெடிப்பு...மீண்டும் வாழ்க ஜனநாயகம்.
============
நான்வழக்கமாக சாப்பிடும் ஓட்டலுக்கு அதன் உரிமையாளர்கள் ஒருவருரின் மகன் வந்திருந்தார். அந்த ஓட்டலில் வேலையே செய்யாத சூப்பர்வைசரையே தான் சாப்பிட்ட தட்டை எடுக்கவைத்தார். ஊழியர்களிடம் உத்தரவு பிறப்பித்துக்கொண்டிருந்தார். அவரின் வயது என்ன தெரியுமா? 5-6 வயசு சிறுவன். பையனின் குறும்புத்தனம் ரசிக்கும்படி இருந்தாலும். அவன் முதலாளியாக வளர்வது அல்லது வளர்க்கப்படுவது பார்ப்பதற்கு கடுப்பாகத்தான் இருந்தது. நல்லவேளை கார்ல் மார்க்ஸ் மர்கயா.
============
சோம்பேறியா இருந்தநான் இப்போ ரொம்ப சுறுசுறுப்பா ஆயிட்டேன்...அதுக்கு காரணம் குளுக்கோன்-டி இல்லை, அப்போ பூஸ்டா? நெவர்... அதுக்கு காரணம் நம்ம வள்ளுவர் பெருந்தகை. அந்த திருக்குறளை படிச்சதிலிருந்து ரொம்ப மாறிட்டேன். எனக்காகவே எழுதிவச்சாமாதிரி இருந்தது. இந்த பயலுக இப்படித்தான் இருப்பானுகன்னு அவருக்கு ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு/குறள். நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். (பொருட்பால் குறள்:605)
உரை: காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.
நான் திருந்திட்டேன்... அப்போ நீங்க..:)))
============
பார்போற்றும் ஒரு உலகத்தர எழுத்தாளனின் ஆக்கத்தை சுடுவது என்பது ரயில்வே தண்டவாளத்தில் உள்ள இரும்பை திருடி விக்கிறது மாதிரி, எங்கிருந்து சுட்டதுன்னு எளிதில் தெரிந்துவிடும். அப்படி ஒரு எழுத்தாளன் ஆக்கத்தை வெறும் தலைப்பை மட்டும் மாற்றி ஒரு வலைப்பூவில்
கட்& பேஸ்டிருந்தார்கள்... அந்த பதிவரின் சேவை பதிவுலக்கு தேவை. அந்த பார்போற்றும் உலகத்தர எழுத்தாளன் யாரு? ஹீஹீஹீ...கூல்
நோ பேட் வேர்ட்ஸ்...:)))))


21 comments:
//இந்தியாவில் குறைந்த பட்சம் தமிழ்நாட்டுலயாவது என்னிக்கோ புரட்சி வெடிச்சிருக்கனும். எங்க? நம்மூர்ல வெடிக்கிறது ரெண்டே விசயம்தான்.//
இங்க வெடிக்கிறதெல்லாம் மவுனப் புரட்சிதான், பிரதாப், எலக்சன் வரட்டும், அப்ப தெரியும்.
ஒரு விஷயம் உண்மை.............நாமலாம் ரொம்ப பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு அப்புறம்தான் வெடிக்கிறோம், அது கொஞ்சம் மாறனும்!
//காலம் தாழ்த்தி செய்வது, மறதி, சோம்பல், ஓயாத் தூக்கம் இவை நான்கும் அழிவை நாடுவார் விரும்பி ஏறும் சிறு படகாகும்.//
அதே திருவள்ளுவர், இப்படியும் சொல்றாரே, பிரதாப்!
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
(எதிலும் தனக்கேற்ற மாதிரி சாக்கு தேடுவோர் சங்கம்)
கடைசியில் நமது காங்கிரஸ் அரசு சாதித்தே விட்டது # ஸ்விஸ் வங்கியில் இருக்கும் கறுப்புபணம் இந்தியா வருகிறது # பிப் 29 அன்று
//நம்மூர்ல வெடிக்கிறது ரெண்டே விசயம்தான்.ஒண்ணு குண்டு வெடிப்பு இன்னொண்ணு மக்கள் தொகை வெடிப்பு..//
// அந்த பதிவரின் சேவை பதிவுலக்கு தேவை.//
யாருங்க அது?
இந்த நொறுக்ஸ் தொகுப்பு நல்ல மொறுமொறுப்பானதாக இருந்தது..
குறள் விளக்கம் நல்லாருந்தது பிரதாப்.
//ரயில்வே தண்டவாளத்தில் உள்ள இரும்பை திருடி விக்கிறது மாதிரி, //
அருமையா எழுத வருதேண்ணே உங்களுக்கு. நிறைய எழுதுங்கள் ப்ளீஸ்.
எழுத்துப்பிழையால் முந்தைய கமெண்ட்டை நீக்கினேன். தவறாக எண்ணவேண்டாம் நண்பா.
//அருமையா எழுத வருதேண்ணே //
என்னது நான் உங்களுக்கு அண்ணனா சரியாப்போச்சு....:))-
//அந்த பார்போற்றும் உலகத்தர எழுத்தாளன் யாரு?//
யாரு..யாரு??.. மில்லியன் டாலர் கேள்வி :-)))))
////அருமையா எழுத வருதேண்ணே //
என்னது நான் உங்களுக்கு அண்ணனா சரியாப்போச்சு....:))//
அதானே. சூப்பரா எழுதுறீங்க சித்தப்பு :)
// நான் திருந்திட்டேன்... அப்போ நீங்க..:))) //
வள்ளுவர் நல்ல விஷயம் பல சொல்லி இருக்காரே.. அதலாம் கண்டிப்பா ஃபாலோ பண்ண வேண்டியதுதான்..
அதுல சில சாம்பிள்
அன்னிக்கே அங்கேயே சொல்லிட்டோமே.. நீங்கள்தான் என்னோட கடைக்கு வர்றத மறந்திட்டிங்க..
!!! குறளுக்கு நன்றி அண்ணே! (சத்தியமா நான் தம்பிதாங்க)
//பார்போற்றும் ஒரு உலகத்தர எழுத்தாளனின் ஆக்கத்தை சுடுவது என்பது ரயில்வே தண்டவாளத்தில் உள்ள இரும்பை திருடி விக்கிறது மாதிரி,//
என்ன ஒரு உதாரணம்,..நச்,..
நீங்க எமிரேட்ஸ்ல எங்க ??? துபாயா??
எனக்கு அந்த குரல் ரொம்ப பிடித்திருந்தது,அந்த பதிவர் யாருன்னு சொல்லிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்
பெ.சொ.வி. = நன்றி சார் எலக்ஷன்ல நடக்கபோறது எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே..
நீங்க சொன்ன குறள் தேவையானதுதான். ஆனா அது நான் போட்ட குறளக்கு எப்படி எதிர்வினையாகும் சார்...:))
பாரதி - நன்றி. அந்தப்பதிவர்யாருன்னு தெரியனுமா? ஏன் நாலுபேர் என்பதிவை காப்பி அடிச்சுப்போடறது உங்களுக்கு பிடிக்கலையா? :))
அமைதிசாரல் = :))) அது பில்லியன் டாலர் கேள்வி.
அக்பர் = பதிவை படிக்காம கமண்டை மட்டும் படிக்கிறது சங்கத்துல சேர்ந்துட்டீங்களா பெரியப்பு:))
மாதவன்= கடைக்கு வந்துட்டாப்போச்சு சார்...புதுசா சரக்கு ஏதாச்சும் வந்திருக்கா.?
சிவக்குமார் = நம்பிட்டம்ண்ணே :)
ஜோதி - சீரியஸா கேக்கறீஙகளா இல்லை, வடிவேல் பாணில கேக்கறீங்களா? ஹீஹீ நான் துபாய்ல இருக்கேன் :))
டெனிம் = யரோட குரல் புடிச்சிருந்தது டெனிம், எஸ்பிபி குரலா? இல்லை ஜேசுதாஸ் குரலா? அது குறள் தல...:)) அவரு யாருங்கறது எதுக்கு... அப்படியாச்சும் என் என் பதிவை நாலுபேர் காப்பி அடிச்சு போட்டட்டுமே...:))
//அந்த பதிவரின் சேவை பதிவுலக்கு தேவை. //
அதனாலத்தான் (இன்னும்) நாலுபேர் படிக்கட்டுமேன்னு ரீ-பப்ளிஷ் பண்ணிருக்காங்க. நல்ல காரியத்தைப் பாராட்டுறத விட்டுட்டு...
//அந்த பார்போற்றும் உலகத்தர எழுத்தாளன் யாரு? //
சே... சாருன்னு மாத்திப் படிச்சுட்டேன்!!
;-)))))))
//ஜோதி - சீரியஸா கேக்கறீஙகளா இல்லை, வடிவேல் பாணில கேக்கறீங்களா? ஹீஹீ நான் துபாய்ல இருக்கேன் :))//
ச்சிசி ,.. உண்மையாகத்தான் கேட்டேன்,..இப்போ அபுதாபியில் வாசம். அதனால்தான் கேட்டேன்,..
//அந்த பார்போற்றும் உலகத்தர எழுத்தாளன் யாரு? //
அதானே.. யாரு. ..? யோசிச்சி யோசிச்சி மண்டையே காய்ஞ்சிருச்சி.. ப்ளீஸ் .. சொல்லுங்களேன் :)
அந்தத் திறுக்குரல் எனக்கும் புடிச்சது :-) .. அடிக்கடி இப்புடிப் போடவும்..
அப்புறம், இப்பல்லாம் எந்த ஃபோட்டோவும் வர்ரதில்லையே சைட்டுல? நான் எந்த ஃபோட்டோவைக் கேக்குறேன்னு தெரிஞ்சிருக்குமே ;-)
உசைனம்மா= நீங்க மாத்தி படிச்சதும் சரிதான் ஆனா அவர் "BAR" போற்றும் எழுத்தாளர்.:))
ஜோதி= நீங்க கத்தார்லதான் இருந்தீங்க ஜோதி... அபுதாபிக்கு வந்து அதிர்ஷ்டம் பண்ணிட்டீங்க... அது பிரபலபதிவர்கள் வசிக்கும் புண்ணியபுமி...துபாய் டேன்ஜர் பதிவர்கள் வசிக்கும் ரத்தபுமி..:))
தேளு= அந்த போட்டோவை இன்னும் மறக்கலையா தல.... போட்டுவுடறேன்..கேட்டுட்டிங்களே -:))
//துபாய் டேன்ஜர் பதிவர்கள் வசிக்கும் ரத்தபுமி..:))//
ரைட்டு துபாய் பக்கம் வந்துராதே சொல்லிட்டீங்க,.. இருந்தாலும் நாங்க விடமாட்டமில்ல,...
Post a Comment