தோகாவில் ஆசியக்கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்றுவருகிறது, இன்னும் கொஞ்சம் நாள் உறக்கம் போகும். ஆஸ்திரேலியா, பக்ரைனுடன் போட்டியிட்டு நமது இந்தியா மிகவலுவான நிலையில் இருக்கிறது அப்படின்னு சொல்ல ஆயைாத்தான் இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் நான்கிற்கு பூஜ்யம் (அடேங்கப்பா) என்ற படுதோல்வியும், பக்ரைனுடன் ஐந்துக்கு- இரண்டு என்ற கணக்கில் மீசையில் மண் ஒட்டாமலும் தோற்றிருக்கிறது இந்தியா.
TEAM WORK என்ற வார்த்தைக்கு பொருத்தமான பல விளையாட்டுக்களில் காற்பந்து போட்டிக்கு சிறப்பான இடம் உண்டு. உலக அளவில் காற்பந்து விளையாட்டுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். கிரிக்கெட் என்றாலே சச்சினை உலக அளவில் பலர் புகழ்ந்து தள்ளுவதற்கு காரணம், அவரது மொத்த ஸ்கோர்களும், சாதனைகளும் மட்டும் அல்ல. இப்போதும் சதங்களை அடித்து இளம் வீரர்களுக்கு சரிசமகாக தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கு காரணம் கிரிக்கெட் பற்றி அவர் தெரிந்துவைத்திருக்கும் நுட்பமான அறிவு.
| Pele |
பிரேசில் அணி என்றாலே உடன் ஞாபகத்துக்கு வரும் வீரர் பீலே. காற்பந்து போட்டியின் நூற்றாண்டு நாயகனாக அறிவிக்கப்பட்டவர். அவரைப்போலவே காற்பந்தின் பல நுணுக்கங்களை தெரிந்த வீரர் யாரனெ்று கேட்டால் நிச்சயமாக அவர் பிரேசிலின் ராபர்ட் கார்லோஸ். வேகம் மட்டும் அல்ல விவேகம் உள்ள வீரர்.
![]() |
| Carlos |
கீழே உள்ள இந்த காணொளியை பார்க்கவும். கோல் விழுவதற்கான நிகழ்தகவு 179 டிகிரியில் கோல் அடிக்கும் தொலைவிலிருந்து கோல் போஸ்ட் இருக்க அதை 0.82 டிகிரியில் கோல் அடிக்கும் நிகழ்தகவாக மாற்றுவது என்பது சாதாரண விசயமல்ல.
கிரிக்கெட்டில் பந்தை ஸ்விங்(Swing) செய்வது என்ற முறை ஒன்று உண்டு. விவரமாக அறிய இந்தப்பதிவை படிக்கலாம், அதில் Air Swing என்ற முறை மிகவும் கடினமானது. அதாவது பந்தை எறியும்போது பந்து தரையில் விழும்முன்பே திசைதிரும்புவது. பேட்ஸ்மேன் எதிர்பாராத திசையில் பந்து வந்து விக்கெட்டுகளை பதம் பார்த்திருக்கும், அல்லது எக்குத்தப்பாக மட்டையில் பட்டு எவர் கையிலாவது வந்து உக்காரும். பாகிஸ்தானின் வாக்கர் யூனிஸ், வாசிம் அக்ரம் இதில் புலிகள்.
காற்றின் திசையையும், பந்தின் வேகத்தை கணிப்பது இதில் மிகமுக்கியம்.
பந்தை கையிலிருந்து ஸ்விங்க் ஆக்குவதே கடினமான செயல். அதை காலால் செய்யமுடியுமா? முடியும் கீழே உள்ள காணொளியைப்பாருங்கள். வேகமாக விடுபடும் பந்து வெளியேத்தான் போகிறது என்று வாய்பிளந்த அனைவருக்கும் அல்வா கொடுத்து அனாயசமாக கோல்போஸ்ட்டின் உள்ளே விழுவதே கவனியுங்கள். பந்தை உதைக்கும் வேகம்,கோல் போஸ்டின் தூரம், காற்றின் திசை இவை மூன்றையும் துல்லியமாக கணித்தால் மட்டுமே இது சாத்தியம்.
மீண்டும் சில கால்பந்து சுவாரஸ்யங்களுடன் வருகிறேன்...



11 comments:
good one pratap :)
நைஸ் ஒன் பிரதாப். ஆனா ஃபுட்பாலை ஸ்விங் பண்றது ஈஸி. பால் பெருசு, உள்ள காத்துதான். பளபளன்னும் இருக்கும். நீங்களே செஞ்சிப் பாக்கலாம். ஜஸ்ட் செண்டர் ஆஃப் த பால்ல அடிக்காம கொஞ்சம் சைடுல அடிச்சிப் பாருங்க.
கண்டிப்பாக தொடர்ந்து இதை போல பகிர்ந்து கொள்ளுங்கள். சூப்பர் வீடியோஸ் !
எனக்கும் ஃபுட்பால் புடிக்கும் சாரே... ஆனா அது ஒரு காலத்துல, டவுசர் போட்டுகினு இஸ்கூல்ல ஆடும்போது மட்டும்தான் :-) ... இப்பல்லாம் கம்ப்யூட்டர் கேம்ஸ் தான். மத்தபடி, நீங்க போட்ருக்குற ரெண்டு வீடியோவின் மேட்சுகளையும் டிவில பார்த்திருக்கேன் ...
அருமையான பதிவு.
//ஆஸ்திரேலியா, பக்ரைனுடன் போட்டியிட்டு நமது இந்தியா மிகவலுவான நிலையில் இருக்கிறது அப்படின்னு சொல்ல ஆயைாத்தான் இருக்கிறது.///
மேட்ச் ஆரம்பிச்சதுமே நெனச்சேன் உருப்பட மாட்டானுங்கன்னு....
இவ்வளவு நுணுக்கமா சொல்றீங்க? :)
வீடியோக்கள் அருமை
நானும் ரசிகனே ....
good article
ok
நல்ல பதிவு பிரதாப்
Post a Comment