சுவிஸ் வங்கியில் கறுப்புபணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட சட்ட ரீதியாக பிரச்சனைகள் இருக்கிறது என்று மாண்புமிகு மந்திரி பிரணாப் கொடுத்த அறிக்கை சிரிப்பை வரவழைக்கிறது. தன்னையும், சகபாடிகளையும்,தலைமையையும், படியளக்கும் பணமுதலைகளையும் காப்பாற்ற கொடுத்த காசுக்கு மேலேயே கூவுறாருப்பா....சட்டம் என்ன சித்திரகுப்தன் எழுதி வானத்துலேருந்து தூக்கிப்போட்டதா? போங்கய்யா நீங்களும் உங்க அரசியலமைப்பும்... சட்டம் ஒரு இருட்டறைன்னு அன்னிக்கே எஸ்.ஏ. சந்திரேசேகர் சொன்னாரு அது இப்பத்தான் புரியுது...
===
ஒரு மளிகை கடையில் நின்றிருத்தபோது இரு பெண்கள் சந்தித்துக்கொண்டார்கள்.
" ஹாய் அவ் ஆர் யு? ஹவ் இஸ் யுவர் ஹஸ்பண்ட்?"
"ஐ எம் ஃபைன்? அவ் ஆர் யு? ஹவ் இஸ் யுவர் ஹஸ்பண்ட்? "
இப்படி ஆரம்பித்து ரொம்ப நேரம் பீட்டர் விட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கு திடீர்னு தோனுச்சு இரண்டு ஆண்கள் சந்தித்துக்கொண்டால் பரஸ்பரம் மனைவிகளின் நலம் பற்றி விசாரிப்பார்களா?
எனக்கென்னவோ அப்படி தோணலை(இதுவும் ஆணாதிக்கமோ?) பீட்டர் முடிந்து அவர்கள் கிளம்பும்போது அதில் ஒரு பெண் "ஒருநாள் வீட்டுக்கு வாங்க" என்றார் அழகிய தமிழில். டமால்...பாவம் அவங்களுக்கு தமிழ்ல தெரிஞ்சது அந்த ரெண்டே வார்த்தைதான் போலருக்கு.... வாள்க டமில்.
====
ஒரு வாரம் முன்பு முதன்முறையாக அபுதாபி போயிருந்தேன்.. அபுதாபில இறங்குனதும். அபுதாபி மண்ணெடுத்து நெத்தில பூசிகிட்டேன். பிரபல பதிவர்கள் வசிக்கும் புண்ணிய பூமியாயிற்றே... கொஞ்சம் மண்ணையும் டப்பாவுல எடுத்துட்டு வந்திருக்கேன். நமக்கு வரலாறு முக்கியம்ல...))))
====
தமிழில் பிறமொழி கலப்புகளை களையவேண்டும். உலக மொழிகளுக்கே முன்னோடி நமது தமிழில் இல்லாத வார்த்தைகளா? அடிபொலி என்ற மலையாள வார்த்தை இப்போது சென்னைதமிழ் வரை புழங்கிவருகிறது. இதற்கு பொருத்தமான தமிழ்வார்த்தை என்னவென்று சரியாக சொல்பவர்களுக்கு மருத்தவர் அய்யா வர்ற தேர்தல்ல ஒரு சீட்டு தரப்போறாராம்... அவருக்கு கொடுக்கப்போவதே ஒரு சீட்டுதான்றீங்களா-??? நோ கமெண்ட்ஸ்...
====
மருத்துவர் அய்யான்னதும் அவர் சமீபத்தில் விட்ட அறிக்கை ஞாபகம் வருது. நடிகர்கள், திரையுலகினர் அரசியலுக்கு வர்றதை தடுக்கவேண்டுமாம். நடிப்புத்தொழில் என்பது அவ்வளவு கேவலமான தொழிலா என்ன? எல்லாரும் இவரைமாதிரி டாக்குடராவும், வக்கீலாவும் இருந்தாத்தான் அரசியலுக்கு வரனும்னு எதிர்பார்க்கறது வடிகட்டிய கையாலாகாத்தனம். இப்படின்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒருவேளை அன்புமணியை அன்புகாந்த் னு மாத்தியிருந்துருப்பாரோ? அவரையெல்லாம் மதிச்சு....அப்படின்றீங்களா....அதுவும் சர்தான்...
=====
வருகிற சட்டமன்ற தேர்தலின்போது நான் ஊர்ல இருப்பேன்னதும்...நண்பன் கேட்டான்
"யாருக்குடா ஓட்டுப்போடுவே?"
"எனக்கு யார்போடுறாங்களோ அவங்களுக்கு.".... பிளாக்கோஃபோபியா....:)))


26 comments:
ம்ம்.. நொறுக்ஸ்.. மொருமொருன்னு..
கருப்புப் பணம் பத்தியெல்லாம் நாம கூவி ஒன்னும் ஆகப்போவதில்லை.
அபுதாபி மண்.. ஹிஹி..
ஜூப்பர் நொறுக்ஸ்..
ப்ளாக்கோஃபோபியா :-))))))))
வருகிற சட்டமன்ற தேர்தலின்போது நான் ஊர்ல இருப்பேன்னதும்...நண்பன் கேட்டான்
"யாருக்குடா ஓட்டுப்போடுவே?"
"எனக்கு யார்போடுறாங்களோ அவங்களுக்கு.".... பிளாக்கோஃபோபியா....:)))//
U r a pirapala pathivar... hehe
mm yaara solRiingkanu puriyuthu
avvvvvalavu payamaakkum/
malikaikadaiyaa?
hihi
கடைசில சொன்னீங்க பாருங்க. சூப்பர்.
நொறுக்ஸ் ரொமப் மொறுமொறுன்னு சூப்பராயிருக்கு...
"அடிப்பொலி கேட்டோ " = "செம தூள் போங்க.."
//அடிபொலி என்ற மலையாள வார்த்தை இப்போது சென்னைதமிழ் வரை புழங்கிவருகிறது//
அடி தூள்'ன்னு சொல்லலாமா....
[எனக்கு சீட்டெல்லாம் வேண்டாமப்பூ ஹி ஹி]
// எஸ்.ஏ. சந்திரேசேகர் சொன்னாரு அது இப்பத்தான் புரியுது...//
ஏ அந்தா கானூன் ஹய்....
நல்ல நொறுக்ஸ்.. ரொம்ப நாளைக்கப்புறம்..
அடி, போலி / போளி --- தமிழ் தானே ?
// "ஒருநாள் வீட்டுக்கு வாங்க" என்றார் அழகிய தமிழில். டமால்...பாவம் அவங்களுக்கு தமிழ்ல தெரிஞ்சது அந்த ரெண்டே வார்த்தைதான் போலருக்கு.... வாள்க டமில்.//
நாசமா போச்சு போ....
//பூமியாயிற்றே... கொஞ்சம் மண்ணையும் டப்பாவுல எடுத்துட்டு வந்திருக்கேன். நமக்கு வரலாறு முக்கியம்ல...))))//
அப்பிடியே பஹ்ரைன் பக்கமும் வாங்க ரெண்டு குப்பி பக்கார்டியை தலையில ஊத்தி அபிஷேகம் பண்ணி விடுறேன்[ரோம்]....
//, வக்கீலாவும் இருந்தாத்தான் அரசியலுக்கு வரனும்னு எதிர்பார்க்கறது வடிகட்டிய கையாலாகாத்தனம்//
விஜய் பன்ச்.......
// "எனக்கு யார்போடுறாங்களோ அவங்களுக்கு.".... பிளாக்கோஃபோபியா....:)))//
நல்லாயிருடே மக்கா.............
நல்லா இருந்துச்சு
சட்டம் ஒரு இருட்டறை... அறிஞர் அண்ணா. கடைசியில ஏஸ்.ஏ.சி.க்கு கொடுத்தீட்டிங்களே நண்பா. இதுதான் சினிமாக்காரனின் அட்டகாசம் என்பது.
//சட்டம் ஒரு இருட்டறைன்னு அன்னிக்கே எஸ்.ஏ. சந்திரேசேகர் சொன்னாரு//
அவர் ஒரு தீர்க்கதரிசி!! அதனாலத்தான், அவர் வராட்டியும்கூட, அவர் வாரிசை தமிழ்நாட்டைக் காப்பாத்த அனுப்ப நினைக்கிறார் பாருங்க!!
//ஒரு மளிகை கடையில்//
துபாயில மளிகைக் கடையா? அப்படியே இருந்தாலும், நீங்க ஏன் அங்க போறீங்க? குடும்பஸ்தரா நீங்க? ஓ.. தமிழ்ப் பொண்ணுங்களை அங்கதானே பாக்க முடியும், அதுனாலயா?
//அபுதாபி மண்ணெடுத்து நெத்தில பூசிகிட்டேன்//
அந்தப் பயம் இருக்கட்டும்!!
//அபுதாபி மண்.. ஹிஹி..// செந்திலுக்கும் சொல்லி வைங்க!! :-)))
/அடிபொலி// அது அடிபொழி!! பொலி, போளின்னுகிட்டு... (ஆக்சுவலி, அது ளி&ழி யைக் கலந்து ஒருமாதிரி நாக்கைச் சுழிச்சுச் சொல்லணும். டிரை பண்ணாதீங்க, வாய் சுளுக்கிகிடும்)
////அபுதாபி மண்ணெடுத்து நெத்தில பூசிகிட்டேன்//
மளிகை கடைன்னு சுத்த தமிழ்ல சொன்னேன்...பலசரக்கு கடைன்னு சொல்லனுமோ??? :))
//அந்தப் பயம் இருக்கட்டும்!!//
நீங்களும் அபுதாபிலயா இருக்கீங்க... சொல்ல்ல்ல்லவே இல்ல........:)))
மளிகைக் கடைக்கு போனமா, வாங்குனமான்னு இல்லாம.. என்ன விளையாட்டு இது :)
---
கிரிக்கெட் தமிழ் கலாச்சாரத்தைக் கெடுக்கிறது. அதை தடைசெய்ய வேண்டும் - மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
ஒரு வாரம் முன்பு முதன்முறையாக அபுதாபி போயிருந்தேன்.. அபுதாபில இறங்குனதும். அபுதாபி மண்ணெடுத்து நெத்தில பூசிகிட்டேன். பிரபல பதிவர்கள் வசிக்கும் புண்ணிய பூமியாயிற்றே... கொஞ்சம் மண்ணையும் டப்பாவுல எடுத்துட்டு வந்திருக்கேன். நமக்கு வரலாறு முக்கியம்ல...))))
.....Super பொறுக்ஸ் ..... சாரி, நொறுக்ஸ் !!!!
நொறுக்ஸ் நல்லாருக்கு பிரதாப்பு..
அபுதாபி மண்ணு.. ரைட்டு மக்கா.
// "எனக்கு யார்போடுறாங்களோ அவங்களுக்கு.".... பிளாக்கோஃபோபியா....:)))//
same blood!
கிடிலம்
அடிபொலி - அருமையான
// "எனக்கு யார்போடுறாங்களோ அவங்களுக்கு.".... பிளாக்கோஃபோபியா....:)))//
பதிவுலக நோய் எல்லாருக்கும் பரவுது போலவே... நானும் ஓட்டு போட்டுடறேன் ...ஹெ ஹெ ஹெ
Nice
Post a Comment