Saturday, December 25, 2010

நொறுக்ஸ் - 25/12/2010

khஆண்டு இறுதியில் சந்தோஷத்தில் ஆழ்த்திய செய்தி நமது அன்பிற்குறிய அண்ணாச்சி, (ஆசிப் அண்ணாச்சி இல்லப்பா) மண்வாசனை எழுத்தாளன் பாசமிகு கும்பமுனி நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது என்பது பொருத்தமானவர்களுக்கு சேரும்போதுதான் விருது கொடுக்கும் வைபவங்களின் மேல நம்பிக்கை வருகிறது.

அண்ணாச்சி செளக்கியமாருக்கியளா...ரொம்ப சந்தோசம்...:))

====

பெண்ணியவாதிகளுக்கு ஒரு நல்ல செய்தி, நம்பமுடியாத செய்தி ஆனால் உண்மை. மத்திய கிழக்கு நாடுகளின் புகழ்பெற்ற டிராவல்ஸ் நிறுவனமான
கானு டிராவல்ஸ் (Kanoo Travels) சவுதியில் வாடிக்கையாளர் சேவை  தொடங்கியுள்ளது. இதிலென்ன ஆச்சர்யம்னா கேக்கறீங்க... இந்த வாடிக்கையாளர் சேவையில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அனைவரும் பெண்கள். அட.... இது எப்போ????? ஒருவேளை சவுதி அரசாங்க அதிகாரிகளும் போனவாரம் விஜய் டிவியில் வந்த நீயா நானாவை பார்த்து மனசு மாறியிருப்பார்களோ...? என்ன எழவோ பெண்கள் முன்னேறுனா சர்தான்...

====

காங்கிரஸ் கட்சியைசேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைந்தார். தன்னோட வாரிசுகளை பிரதமராகவே ஆக்கிய காங்கிரஸ் கட்சியில் இருந்துக்கொண்டு தன்னோட மகன் முரளிதரனை ஒரு வார்டு கவுன்சிலரா கூட ஆக்காம போய் சேர்ந்துட்டாரே....காங்கிரஸ் கட்சில இப்படி ஒரு தலைவரா? இதுக்குத்தான் எங்க தமிழினத்தலைவர்கிட் அப்போவே ஐடியா கேட்டிருந்துருக்கனும்....டூ லேட்...
(முரளிதரன் எம்.பி.பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக்கவ்வியது வேறுவிசயம்)

====


நாத்திகர்னா என்னா அர்த்தம்? கடவுள் நம்பிக்கை இலலாதவர்கள்னுதானே அர்த்தம். அப்போ ஏன் கலைஞர் கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் வாழ்த்துச்சொல்லாம கிறிஸ்துமஸ்கும், பெருநாளுக்கும் வாழ்த்து சொல்றாரு... அப்போ ஏசுநாதரும், நபிகள் நாயகமும் இறைதூதர்கள் இல்லையா?
அப்படின்னு நான் கேட்கலை...என் நண்பன் ஒருத்தன் கேட்டான்... நான்சொன்னேன் "போங்கடா நீங்களும் ஒங்க ஜாதியும், மதமும்"
ஆனா கேள்வி லாஜீக்கலா நல்லாருந்துச்சேன்னு போட்டுட்டேன்...

====

போனவார காமெடி பீஸ் விருது நமது அண்ணன் ராகுல் காந்திக்கு செல்கிறது. அப்போ அதுக்கு முந்துன வாரம் யாருக்குப் போச்சுன்னாலும் கேட்கப்படாது. இப்போதைக்கு இவர்தான். திராவிட கட்சிகளின் மேல் தாவி தாவி சவாரி செய்யும் ஒரு கட்சி காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ்-ல் இருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார்னு சொன்னதும் மகராசன் படத்தில் கமல்-செந்தில் பேசும் வசனம்தான் ஞாபகம் வந்தது. "என்ன அவ்ளோ ஈஸீயா ஏமாத்த முடியாது".... "அப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டா ஏமாத்திடலாங்கறியா?" :))  பீஹார்ல வாங்குன அடி அதுக்குள்ள மறந்துபோச்சுன்னா இவருதான்டா அடுத்த இரும்பு மனிதரு...அங்...


====

காமெடி பீஸ் ராகுல்னா..அப்போ ஹீரோ யாரு? சாட்சாத்தான் நம்ம சுப்பிரமணியசுவாமிதான்... ...
அண்ணா நீங்க போட்டுத்தாக்குங்கோ அவாளை.... ...:))

யதா யதா ஹிதர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத......:)))))) 
====

Friday, December 17, 2010

விருதகிரி - கொலைவெறி

கேப்டனோட அரசாங்கம் படத்தை பார்த்து விமர்சனம் எழுதுனதுக்கு. ஒரு கேப்டனின் ரத்தத்தின் ரத்தம் பின்னூட்டம் போட்டிருந்தார், "உன்னையெல்லாம் யாருடா தமிழ்ப்படம் பார்க்கச்சொன்னது, நாகர்கோவிலை இன்னும் தமிழ்நாட்டுலயே சேர்க்கலைடா அந்தப்படத்துக்கு என்னடா குறைச்சல்" இதுதான் அந்தக்கமண்ட். இப்படி சம்பந்தமே இல்லாம பின்னுட்டம் போடறவங்களும் இருக்கிறார்கள்.

ஒரு படத்தைப்பார்த்து அதுல என்ன இருக்கோ அதைத்தானே எழுதமுடியும். இப்பல்லாம் ஊருக்கு வரனும்னு நினைக்கும்போது திருவனந்தபுரம் ஏர்ப்போட் வெளியே பொருளோட சிலபேரு வெயிட் பண்றமாதிரியே கனவுல்லாம் வேற வருது. உடம்புல வேற தெம்பு இல்லை. இருந்தாலும் நமக்கு கடமைன்னு ஒண்ணு இருக்கே. வரலாறுல இடம் புடிக்கனும்னா கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதேன்னு கீதைல கிருஷ்ணர் சொல்லிருக்காரு....


விருதகிரி.

ரொம்ப நாளா ஒரு நல்ல காமெடிப்படம் பார்க்கனும்னு ஆசை...நன்றி கேப்டன்.  கேப்டனின் வசனங்களும், நடிப்பும் இனியும் இவரு நடிக்கிறாரேன்னு அவர்மேல் பரிதாபம் வரவழைக்கிறது,

கறுப்பு எம்ஜீஆர்(அப்படின்னு அவர்தான் சொல்லிகிறாரு) கேப்டன் இயக்கி நடித்தப்(?) படம்.  புரட்சித்தலைவரின்  நாடோடி மன்னன் படத்துக்கும் விருதகிரி படத்துக்கும் ஒரு ஒற்றுமை  இருக்கிறது.  எம்ஜீஆர் இயக்கி நடித்த முதல்படம் நாடோடி மன்னன். நம்ம கேப்டனும் இயக்கிய நடித்த முதல்படம் இது,  கிட்டத்தட்ட புரட்சித்தலைவர் பாணியிலேயே வர்றாருபோல. விருதாச்சலம் தொகுதியின் சென்ட்டிமென்டாக விருதகிரி. 

ஆனால் புரட்சித்தலைவர் இயக்கிய எல்லாப்படங்களுமே வெற்றிப்படங்கள்  (நா. மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ம,மீ,சுந்தர பாண்டியன்) . கேப்டனும் இப்படி தொடர்ந்து இயக்கி நடிப்பாரோ என பயமா வேற இருக்கு,


கலைஞருக்காக புளியந்தோப்பு பழனி பாடிய கானா பாடல்கள் கேட்டமாதிரி  சாமி=பூமி, முன்னாடி=பின்னாடி, இப்படி பல அடுக்குமொழிகளோட ஒரு தன்புகழ் பாடும் டைட்டில் சாங்.   என்ன இப்பவே கண்ணைக்கட்டுதா? இனிதான் ஆரம்பிக்குது காமெடி.


கேப்டன் என்ட்ரியானதும்  "சரியான நேரத்துல வந்தீங்க ஆபிசர்" என்று சொல்லும் ஸ்காட்லாந்து போலீஸ் ஆபிசரிடம் "நான் வந்தா நல்லதே நடக்கும்" இப்படி ஆரம்பிக்கும் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் படம் முழுவதும் விரவிக்கிடக்கிறது...ஸ்ஸஸஸஸஸப்பா....

போலீஸ் ஆபிசராக கேப்டன் நடிக்கிறாருன்னு சொல்லி ஒரு பத்தாங்கிளாஸ் பையன்கிட்ட கேப்டன் படத்துக்கு  திரைக்கதை எழுதிக்கொடுடான்னு கேட்டா பக்காவா எழுதிக்கொடுப்பான். அப்படி ஒன்றுதான் இதுவும். பல காட்சிகள் அமெச்சூர் தனமாக இருக்கிறது. கேப்டன் பேசும் பல டயலாக்குகள்  மக்கள் தளபதி சாம்ஆன்டர்சனை ஞாபகத்துக்கு கொண்டுவந்து தொலைக்கிறது,


இந்தவாட்டி தீவிரவாதி வாசிம்கானை  புடிக்க பார்டருக்கு போகாம கடத்தல்காரர்களை புடிக்க தலைவர் ஆஸ்திரேலியா போறாரு. கடத்தப்படும் தன் மருமகளை கடத்தல்காரர்களிடம் மீட்கிறார் இதுவே கதை. லியம் நீசன்  நடிச்ச டேக்கன்(Taken) படம் வேற இடைல ஞாபகத்துக்கு வந்து தொலைச்சா அதுக்கு கேப்டன் பொறுப்பல்ல.

போலீஸ் உடையில் கேப்டனைப்பார்க்கும்போது ராணுவத்தில் இருந்து ரிட்டையர்டாகி செக்யுரிட்டியாக வேலைப்பார்ப்பவர்கள் ஞாபகத்துக்கு வந்தால் அதுக்கு கேப்டனே பொறுப்பு. கேப்டனின் கழுத்து முதல் கால்வரை ஒரேமாதிரியாக இருக்கிறது. கழுத்தில் மட்டுமே பத்துக்கிலோ சதை தொங்குகிறது. கேப்டன் பிரபாகரன் படத்தை கடைசியா ஒருதடவை கேப்டன்   பார்த்திருந்தார்னா இப்படி ஒரு ரிஸ்க் எடுத்துருக்க மாட்டாரு. புலன்விசாரணை படத்துல போட்டிருந்த கோட்டை மறக்காம இன்னும் வச்சுருக்காரு.

படத்தின் ஒரே ஆறுதல் கேப்டனுக்கு நாயகி இல்லாதது. இருந்திருந்தா கேப்டனின் ரொமான்ஸ் கொடுமையை வேற பார்த்திருந்திருக்கனும். அரசாங்கம் படம் பார்க்கும்போது  கேப்டன் ரொமான்ஸ் செய்வதை  பார்த்து பக்கத்தில் இருந்த காலேஜ் பையன்கள் அடிச்ச கமண்ட் இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது...

பகுதி நேர அரசியல்வாதி என்று எதிர்கட்சிக்காரர்கள் கிண்டல் அடிப்பதை நிறுத்தவும் தமிழ்சினிமாவின் எதிர்காலம் நல்லா இருக்கவும் கேப்டன் இனி சினிமாவில் நடிக்காமல் இருப்பதே நல்லது.  

அடுத்த டி,ஆர்,படம் எப்போ வருதுன்னு யாராச்சும் கேட்டுச்சொல்லுங்கப்பா.....வரலாறுல இடம்புடிக்காம போறதா இல்லை....


Wednesday, December 8, 2010

பாரதியின் வெண்பா

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா










Friday, December 3, 2010

கண்ட நாள் முதல்....

சிலநேரம்
கரண்ட்டில் அடிப்பட்ட
காகம் போல
விறைத்துக்கொள்கிறது
என் இதயம்

சிலநேரம்
பொறியில் அகப்பட்ட
எலியைப்போலவும்
துள்ளி குதிக்கிறது

சிலநேரம்
பறவை காய்ச்சல்
வந்த கோழியைப்போல
முடங்கிப்போகிறது

சிலநேரம்
திருவிழாவில் வெட்டப்படும்
குறும்பாட்டைப்போல
முரண்டுபிடிக்கிறது

சிலநேரம்
சிலந்திவலையில்
ஒட்டிக்கொண்ட
கொசுவைப்போல
பறக்க முயன்று
தோற்றுப்போகிறது


சிலநேரம்
தேன் குடித்த
தேனீபோல
உண்டமயக்கத்தில்
உறங்கிவிடுகிறது.


மனித இதயமாக
லப்டப் லப்டப்
எனதுடிக்க மறந்து
நாட்கள் பல
ஆகிறது


இதயத்தையும்
வீட்டுக்காவலில்
வைக்கும் வித்தையை
எங்கிருந்து
கற்றுக்கொண்டாய்



FEEDJIT Live Traffic Feed