கேப்டனோட அரசாங்கம் படத்தை பார்த்து விமர்சனம் எழுதுனதுக்கு. ஒரு கேப்டனின் ரத்தத்தின் ரத்தம் பின்னூட்டம் போட்டிருந்தார், "உன்னையெல்லாம் யாருடா தமிழ்ப்படம் பார்க்கச்சொன்னது, நாகர்கோவிலை இன்னும் தமிழ்நாட்டுலயே சேர்க்கலைடா அந்தப்படத்துக்கு என்னடா குறைச்சல்" இதுதான் அந்தக்கமண்ட். இப்படி சம்பந்தமே இல்லாம பின்னுட்டம் போடறவங்களும் இருக்கிறார்கள்.
ஒரு படத்தைப்பார்த்து அதுல என்ன இருக்கோ அதைத்தானே எழுதமுடியும். இப்பல்லாம் ஊருக்கு வரனும்னு நினைக்கும்போது திருவனந்தபுரம் ஏர்ப்போட் வெளியே பொருளோட சிலபேரு வெயிட் பண்றமாதிரியே கனவுல்லாம் வேற வருது. உடம்புல வேற தெம்பு இல்லை. இருந்தாலும் நமக்கு கடமைன்னு ஒண்ணு இருக்கே. வரலாறுல இடம் புடிக்கனும்னா கடமையைச்செய் பலனை எதிர்பார்க்காதேன்னு கீதைல கிருஷ்ணர் சொல்லிருக்காரு....
விருதகிரி.
ரொம்ப நாளா ஒரு நல்ல காமெடிப்படம் பார்க்கனும்னு ஆசை...நன்றி கேப்டன். கேப்டனின் வசனங்களும், நடிப்பும் இனியும் இவரு நடிக்கிறாரேன்னு அவர்மேல் பரிதாபம் வரவழைக்கிறது,
கறுப்பு எம்ஜீஆர்(அப்படின்னு அவர்தான் சொல்லிகிறாரு) கேப்டன் இயக்கி நடித்தப்(?) படம். புரட்சித்தலைவரின் நாடோடி மன்னன் படத்துக்கும் விருதகிரி படத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எம்ஜீஆர் இயக்கி நடித்த முதல்படம் நாடோடி மன்னன். நம்ம கேப்டனும் இயக்கிய நடித்த முதல்படம் இது, கிட்டத்தட்ட புரட்சித்தலைவர் பாணியிலேயே வர்றாருபோல. விருதாச்சலம் தொகுதியின் சென்ட்டிமென்டாக விருதகிரி.
ஆனால் புரட்சித்தலைவர் இயக்கிய எல்லாப்படங்களுமே வெற்றிப்படங்கள் (நா. மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ம,மீ,சுந்தர பாண்டியன்) . கேப்டனும் இப்படி தொடர்ந்து இயக்கி நடிப்பாரோ என பயமா வேற இருக்கு,
கலைஞருக்காக புளியந்தோப்பு பழனி பாடிய கானா பாடல்கள் கேட்டமாதிரி சாமி=பூமி, முன்னாடி=பின்னாடி, இப்படி பல அடுக்குமொழிகளோட ஒரு தன்புகழ் பாடும் டைட்டில் சாங். என்ன இப்பவே கண்ணைக்கட்டுதா? இனிதான் ஆரம்பிக்குது காமெடி.
கேப்டன் என்ட்ரியானதும் "சரியான நேரத்துல வந்தீங்க ஆபிசர்" என்று சொல்லும் ஸ்காட்லாந்து போலீஸ் ஆபிசரிடம் "நான் வந்தா நல்லதே நடக்கும்" இப்படி ஆரம்பிக்கும் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் படம் முழுவதும் விரவிக்கிடக்கிறது...ஸ்ஸஸஸஸஸப்பா....
போலீஸ் ஆபிசராக கேப்டன் நடிக்கிறாருன்னு சொல்லி ஒரு பத்தாங்கிளாஸ் பையன்கிட்ட கேப்டன் படத்துக்கு திரைக்கதை எழுதிக்கொடுடான்னு கேட்டா பக்காவா எழுதிக்கொடுப்பான். அப்படி ஒன்றுதான் இதுவும். பல காட்சிகள் அமெச்சூர் தனமாக இருக்கிறது. கேப்டன் பேசும் பல டயலாக்குகள் மக்கள் தளபதி சாம்ஆன்டர்சனை ஞாபகத்துக்கு கொண்டுவந்து தொலைக்கிறது,
இந்தவாட்டி தீவிரவாதி வாசிம்கானை புடிக்க பார்டருக்கு போகாம கடத்தல்காரர்களை புடிக்க தலைவர் ஆஸ்திரேலியா போறாரு. கடத்தப்படும் தன் மருமகளை கடத்தல்காரர்களிடம் மீட்கிறார் இதுவே கதை. லியம் நீசன் நடிச்ச டேக்கன்(Taken) படம் வேற இடைல ஞாபகத்துக்கு வந்து தொலைச்சா அதுக்கு கேப்டன் பொறுப்பல்ல.
போலீஸ் உடையில் கேப்டனைப்பார்க்கும்போது ராணுவத்தில் இருந்து ரிட்டையர்டாகி செக்யுரிட்டியாக வேலைப்பார்ப்பவர்கள் ஞாபகத்துக்கு வந்தால் அதுக்கு கேப்டனே பொறுப்பு. கேப்டனின் கழுத்து முதல் கால்வரை ஒரேமாதிரியாக இருக்கிறது. கழுத்தில் மட்டுமே பத்துக்கிலோ சதை தொங்குகிறது. கேப்டன் பிரபாகரன் படத்தை கடைசியா ஒருதடவை கேப்டன் பார்த்திருந்தார்னா இப்படி ஒரு ரிஸ்க் எடுத்துருக்க மாட்டாரு. புலன்விசாரணை படத்துல போட்டிருந்த கோட்டை மறக்காம இன்னும் வச்சுருக்காரு.
படத்தின் ஒரே ஆறுதல் கேப்டனுக்கு நாயகி இல்லாதது. இருந்திருந்தா கேப்டனின் ரொமான்ஸ் கொடுமையை வேற பார்த்திருந்திருக்கனும். அரசாங்கம் படம் பார்க்கும்போது கேப்டன் ரொமான்ஸ் செய்வதை பார்த்து பக்கத்தில் இருந்த காலேஜ் பையன்கள் அடிச்ச கமண்ட் இப்ப நினைச்சாலும் சிரிப்பு வருது...
பகுதி நேர அரசியல்வாதி என்று எதிர்கட்சிக்காரர்கள் கிண்டல் அடிப்பதை நிறுத்தவும் தமிழ்சினிமாவின் எதிர்காலம் நல்லா இருக்கவும் கேப்டன் இனி சினிமாவில் நடிக்காமல் இருப்பதே நல்லது.
அடுத்த டி,ஆர்,படம் எப்போ வருதுன்னு யாராச்சும் கேட்டுச்சொல்லுங்கப்பா.....வரலாறுல இடம்புடிக்காம போறதா இல்லை....



32 comments:
வாழ்த்துக்கள் இலக்கியம்...
ராம்சாமி... நக்கலு?? :)))
போலீஸ் உடையில் கேப்டனைப்பார்க்கும்போது ராணுவத்தில் இருந்து ரிட்டையர்டாகி செக்யுரிட்டியாக வேலைப்பார்ப்பவர்கள் ஞாபகத்துக்கு வந்தால் அதுக்கு கேப்டனே பொறுப்பு.
.....ஏற்கனவே முதலில் இருந்து சிரிச்சிக்கிட்டே, வாசிச்சிக்கிட்டு வந்தேன். இந்த வரியை பார்த்துட்டு, இன்னும் சிரிச்சிக்கிட்டே இருக்கேன்... படத்தை விட, உங்கள் காமெடி விமர்சனம் சூப்பரோ சூப்பர்!! உங்களுக்கு படம் பார்த்த துன்பம் வருங்கால், நாங்கள் நகுகிறோம்.....!!!
இதுக்காகவே திருவனந்தபுரம் ஏர்போர்ட் வாசல்ல அருவாளோட காத்துருக்கேன் பாருங்க..........
கொடுமை......
இவுகளையெல்லாம் நடிக்க வா வான்னு யாரு அழுதா??????
காமெடியான விமர்சனம் ப்ரதாப்!!!!
சூப்பர்,
ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.. முடியல.. இங்கேயுமா.. எப்படியாவது படம் பார்த்திடனுமின்னு ஒரு வாரமா முயற்சி பண்றேன்... அரைமணி நேரத்திற்கு மேல தாக்கு பிடிக்க முடியல.. தூக்கம் வந்து தொலைக்குது..
Hi Friend,
I am very happy to see your post. Very important post to TamilNadu people.Be ware of VIRUDAGIRI.
இப்படியே சொன்ன நாங்க எப்போ நடிக்க
கத்துக்கிறது ஆஇவ் ....
கலக்கல், பிரதாப்!
விருதகிரி இப்போது கருத்த கறி ஆயிடுச்சா! அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்
இது போல் காவலன் வந்த பிறகும் ஒரு விமரிசனம் போட்டு எங்களைக் காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்!
உங்க பொறுமைக்கு எல்லையே இல்லியா :-)))))))
வாழ்க வளமுடன்
எனக்கு ஆச்சர்யம் என்னவென்றால் எப்படி இந்த படங்களை உங்களை போன்றவர்கள் பார்க்கிறீர்கள் என்றுதான்.. நிஜமாகவே உங்கள லேப்ல கொண்டு போய் டெஸ்ட் பண்ணலாம்.
//கேப்டன் இயக்கி நடித்தப்(?) படம்.//
யோவ் நாஞ்சிலாரே!! உனக்கு யாருய்யா தமிழ்ப்பாடம் எடுத்தது.... நடித்தங்கற வார்த்தைக்கு பின்னாடி மட்டும் ஆச்சரியக்குறி போட்டு இருக்கியே.... அதுக்கு முன்னாடி வார்த்தை இயக்கின்னு வருதே... அங்க ஏன்யா ஆச்சரியக்குறி போடல!!? அதுவும் இல்லாம, துபாய்ல தான் கேப்டன் படமே வர்றதில்லையே? நீ எப்படிய்யா பார்த்த? உனக்கு தனியா ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கா?
//ஆனால் புரட்சித்தலைவர் இயக்கிய எல்லாப்படங்களுமே வெற்றிப்படங்கள் (நா. மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன், ம,மீ,சுந்தர பாண்டியன்)//
வரலாற்று பிழை இருக்கிறதய்யா நாஞ்சிலாரே!! ம.மீ.சு.பாண்டியன் டப்பா படம்.... அதுவே புரட்சித்தலைவரின் கடைசி சினிமாவாக வழிவகுத்தது.... அதற்கு முன்னால் குறிப்பிட்டு இருந்த மூன்று படங்களுமே (நா. மன்னன், அடிமைப்பெண், உலகம் சுற்றும் வாலிபன்) மாபெரும் வெற்றிப்படங்களே....
//போலீஸ் உடையில் கேப்டனைப்பார்க்கும்போது ராணுவத்தில் இருந்து ரிட்டையர்டாகி செக்யுரிட்டியாக வேலைப்பார்ப்பவர்கள் ஞாபகத்துக்கு வந்தால் அதுக்கு கேப்டனே பொறுப்பு//
// கேப்டனின் கழுத்து முதல் கால்வரை ஒரேமாதிரியாக இருக்கிறது. கழுத்தில் மட்டுமே பத்துக்கிலோ சதை தொங்குகிறது//
யோவ் தல............. ஹா...ஹா...ஹா... என்னாபா, பெரிய கொலவெறி தாக்குதலே நடத்தி இருக்கியே!!?/
//தமிழ்சினிமாவின் எதிர்காலம் நல்லா இருக்கவும் கேப்டன் இனி சினிமாவில் நடிக்காமல் இருப்பதே நல்லது.//
ஹா...ஹா...ஹா... நாம எல்லாருமே அவருகிட்ட ரொம்ப வருஷம் முன்னாடியே சொல்லியாச்சு.... அவரு தான் கேக்கற மாதிரி இல்ல..... விதி வலிது தலைவா..
//அடுத்த டி,ஆர்,படம் எப்போ வருதுன்னு யாராச்சும் கேட்டுச்சொல்லுங்கப்பா.....வரலாறுல இடம்புடிக்காம போறதா இல்லை....//
ரெடியாயிட்டு இருக்காம்... வெயிட் பண்ண சொல்றாரு.... ஆனாலும் நீ நெசமாவே தில்லுதுரை தான்யா.....
இந்த விமர்சனத்த பாத்ததும்,கேப்டன் படத்த பாத்தே ஆகனும்ன்னு முடிவு பண்ணிட்டேன்,
ஆனா துரதிஷ்டவசமா,இப்படம் துபாயில் ரிலீஸ் ஆகல...ஆளுங்கட்சியோட சதிதான்.
போகட்டும்..இப்டில்லா பண்ணுனா,படம் பாக்காம இருந்துருவோமா என்ன?
ப்ளூரே பிரிண்ட்,டோரண்ட்ல இருக்கான்னு,வளை போட்டு வலை'ல தேடிட்டு இருக்கேன்..
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துகிட்டுதான் இருக்கு..கூடிய சீக்கிறம் அக்யூஸ்ட்ட சாரி கேப்டன புடிச்சுருவோம்...
வருங்கால அமேரிக்க சனாதிபதி...வாழ்க வாழ்க....
//அடுத்த டி,ஆர்,படம் எப்போ வருதுன்னு யாராச்சும் கேட்டுச்சொல்லுங்கப்பா.....வரலாறுல இடம்புடிக்காம போறதா இல்லை....//
ஆமாமா வரலாறு ரொம்ப முக்கியம், அதுவும் கரடி நடிக்கும் படத்தை பார்க்கா ரொம்ப ஆவலாத்தான் இருக்கோம் ஏன்னா நமக்கும் கிண்டல் பண்ணி....நேரம் போகணும்ல....
ஏய் யாருலே அங்க நாஞ்சிலானுக்கு ஒரு 'வீராசாமி' டிவிடி பார்சல் பண்ணி கூரியர்ல அனுப்புங்கலேய்.....:]]
அந்த படம் தான் மொக்கைனு தெரியுமே தல அப்புறம் ஏன் அதை பாக்கணும்????
ஏன் இந்த கொலைவெறி.
நாளைக்கு மந்திரி சபையில இடம் வேண்டாமா?
அடிமைப்பெண் இயக்குநர் கே.சங்கர்
சரியாய் சொன்னீங்க வாழ்த்துக்கள்!
ஏய்ய்... விருதகிரி நல்லாயில்லையா? என்ன கொடுமை இது.. எடுங்கடா சாமானை.. குத்துங்கடா.. ஆஅங் !!
நானெல்லாம் ஒரு காலத்துல வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா அப்புறம் தல எலக்ஷன் கமிஷனரா நடிச்ச படம்னு ரவுண்டு கட்டி தியேட்டர்ல பார்த்தவன்.. இங்க பெங்களூர்ல இன்னும் விருதகிரி வரல .. வந்துச்சு.. மக்கா ஃபர்ஸ்ட்டு டிக்கட்டு எனக்குத்தாம்ல :-) .. நீங்க இப்புடி எழுதிட்டீங்கல்ல.. இருங்க கேப்டனுக்கு விண்டோஸ் மீடியா ப்ளேயர்ல ஈமெயில் அனுப்புறேன் :-)
பிரதாப்பண்ணே... சூப்பர் விமர்சனம். படம் பார்த்த எபெக்ட்லதான் புழுதிப் புயலை நிப்பாட்ட கேப்டன்கிட்ட யோஜன கேக்கச் சொன்னீகளோ??
உடம்பு இப்ப நல்லாருக்குல்ல. ஆஸ்பிட்டல் போனீங்களா? டேப்லெட்டெல்லாம் கரெக்டா சாப்புடுங்க நண்பா.
வேலியில போற ஓணானை எடுத்து...
//வேலியில போற ஓணானை எடுத்து...//
சொல்லவந்ததை முழுசாத்தான் சொல்லிட்டு போறது...:))
யாரா கேட்டுயா எங்க வீர தளபதி சாம் அண்டர்சனோட கேப்டன கம்பர் பண்ணர...
வரலாற்றில் இடம் ப்டிக்க இந்த கொடுமைகளை சகித்து கொண்டதற்கு பாரட்டுகள்
To release this movie, they removed some good movies from their original slots.
Post a Comment