Friday, December 3, 2010

கண்ட நாள் முதல்....

சிலநேரம்
கரண்ட்டில் அடிப்பட்ட
காகம் போல
விறைத்துக்கொள்கிறது
என் இதயம்

சிலநேரம்
பொறியில் அகப்பட்ட
எலியைப்போலவும்
துள்ளி குதிக்கிறது

சிலநேரம்
பறவை காய்ச்சல்
வந்த கோழியைப்போல
முடங்கிப்போகிறது

சிலநேரம்
திருவிழாவில் வெட்டப்படும்
குறும்பாட்டைப்போல
முரண்டுபிடிக்கிறது

சிலநேரம்
சிலந்திவலையில்
ஒட்டிக்கொண்ட
கொசுவைப்போல
பறக்க முயன்று
தோற்றுப்போகிறது


சிலநேரம்
தேன் குடித்த
தேனீபோல
உண்டமயக்கத்தில்
உறங்கிவிடுகிறது.


மனித இதயமாக
லப்டப் லப்டப்
எனதுடிக்க மறந்து
நாட்கள் பல
ஆகிறது


இதயத்தையும்
வீட்டுக்காவலில்
வைக்கும் வித்தையை
எங்கிருந்து
கற்றுக்கொண்டாய்



25 comments:

இராமசாமி said...

ilakiyam.. ilakiyam.. kavithai. kavithai ...

நாஞ்சில் பிரதாப்™ said...

மிஸ்டர் ராம்சாமி= நான் கவுஜன்னு சொல்லி காமெடி பண்ணா...நீரு இலக்கியவியாதின்னு காமெடி பண்றீராக்கும்.....^%^%&^&^&$$$#^$^^&^ :))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமை

இராமசாமி said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமை
---
ippadiye ethivite ilakiyavathingala usupethi vitrunga neenga..

Chitra said...

சிலநேரம்
கரண்ட்டில் அடிப்பட்ட
காகம் போல
விறைத்துக்கொள்கிறது
என் இதயம்


.......முதல் பஞ்ச்லேயே நாங்க அவுட்! கலக்குறீங்க, மக்கா!

சிநேகிதன் அக்பர் said...

அதே, அதே அதேத்தான்...

அமைதிச்சாரல் said...

மனிதர் உணரும்படி துடிக்க இது மனித இதயமே அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது :-))))

எஸ்.கே said...

இதயத்தையும்
வீட்டுக்காவலில்
வைக்கும் வித்தையை
எங்கிருந்து
கற்றுக்கொண்டாய்
///
ஆஹா! ஆஹா!

கவிஞர் எங்கோ சென்று கொண்டிருக்கிறார்! உயரத்தை நோக்கி!

கே.ஆர்.பி.செந்தில் said...

இதய வீணை தூங்கும்போது பட முடியுமா?...

ஆமினா said...

தொடர்ந்து கவிதை மழையா கொட்டுறீங்க :)))

பயங்கரமா நனஞ்சுட்டேன் பாருங்க

ஸ்ரீராம். said...

இதயம் தவிக்கிறது....!

ப.செல்வக்குமார் said...

//சிலநேரம்
திருவிழாவில் வெட்டப்படும்
குறும்பாட்டைப்போல
முரண்டுபிடிக்கிறது//

எதுக்கும் கொஞ்சம் ஜாக்கறதையா இருங்க ..!!

☀நான் ஆதவன்☀ said...

//சிலநேரம்
பொறியில் அகப்பட்ட
எலியைப்போலவும்
துள்ளி குதிக்கிறது//

அதென்ன டூருக்காடா போகுது? துள்ளி குதிக்க? :)

//சிலநேரம்
பறவை காய்ச்சல்
வந்த கோழியைப்போல
முடங்கிப்போகிறது//

முடங்கி போகுதாம்ல.. செத்து போயிரும்ல செத்து போயிரும் :)

☀நான் ஆதவன்☀ said...

//
சிலநேரம்
திருவிழாவில் வெட்டப்படும்
குறும்பாட்டைப்போல
முரண்டுபிடிக்கிறது//

அடிங் ஒரு ஆடு உயிருக்கு போராடுறது உனக்கு குறும்பா தெரியுதா? :)

☀நான் ஆதவன்☀ said...

//சிலநேரம்
தேன் குடித்த
தேனீபோல
உண்டமயக்கத்தில்
உறங்கிவிடுகிறது.//

தேனீ தேன் குடிக்குமா? # டவுட்டு

☀நான் ஆதவன்☀ said...

//சிலநேரம்
கரண்ட்டில் அடிப்பட்ட
காகம் போல
விறைத்துக்கொள்கிறது//

கவுஜயா எழுதுற கவுஜ... அடுத்து மீட் பண்ணுவேல்ல வா. ஷாக் கொடுத்து உன்னை காக்கா மாதிரியே ஆக்கிடுறேன்

நாஞ்சில் மனோ said...

//கவுஜயா எழுதுற கவுஜ... அடுத்து மீட் பண்ணுவேல்ல வா. ஷாக் கொடுத்து உன்னை காக்கா மாதிரியே ஆக்கிடுறேன்//
கொலை வெறியோட ஒரு கும்பலே அலையுது போல.....:]]

kavisiva said...

//மனித இதயமாக
லப்டப் லப்டப்
எனதுடிக்க மறந்து
நாட்கள் பல
ஆகிறது//

அதான் மூஞ்சிப் புத்தக ப்ரொஃபைலில் பல்லு போன கிழ குரங்கு ஃபோட்டோவா :)

தமிழ் ரயில் said...

கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வீட்டு அட்ரஸ் கொடு ராசா, பயபுள்ளக்கி சீக்கிரம் கால்கட்டு போட சொல்லி கேட்டுக்கறேன்.

SurveySan said...

அட, கவிஞரா நீங்க. ஜூப்பர் :)

பித்தனின் வாக்கு said...

moththathula house arrestnu sollunga.

கருந்தேள் கண்ணாயிரம் said...

மீ த பேக்.... இந்தக் கவிதைகளையெல்லாம் தொகுத்து நீங்க ஏன் மின்புத்தகமா வெளியிடக்கூடாது :-)

dineshkumar said...

கண்ட நாள் முதல்
சிறகடித்து பரந்த
என்னை சில நேரங்களில்
சிறைபிடித்து விட்டாயே////////////

T.N.MURALIDHARAN said...

உவமைகள் நன்று.

FEEDJIT Live Traffic Feed