khஆண்டு இறுதியில் சந்தோஷத்தில் ஆழ்த்திய செய்தி நமது அன்பிற்குறிய அண்ணாச்சி, (ஆசிப் அண்ணாச்சி இல்லப்பா) மண்வாசனை எழுத்தாளன் பாசமிகு கும்பமுனி நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது என்பது பொருத்தமானவர்களுக்கு சேரும்போதுதான் விருது கொடுக்கும் வைபவங்களின் மேல நம்பிக்கை வருகிறது.


அண்ணாச்சி செளக்கியமாருக்கியளா...ரொம்ப சந்தோசம்...:))
====
பெண்ணியவாதிகளுக்கு ஒரு நல்ல செய்தி, நம்பமுடியாத செய்தி ஆனால் உண்மை. மத்திய கிழக்கு நாடுகளின் புகழ்பெற்ற டிராவல்ஸ் நிறுவனமான
கானு டிராவல்ஸ் (Kanoo Travels) சவுதியில் வாடிக்கையாளர் சேவை தொடங்கியுள்ளது. இதிலென்ன ஆச்சர்யம்னா கேக்கறீங்க... இந்த வாடிக்கையாளர் சேவையில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அனைவரும் பெண்கள். அட.... இது எப்போ????? ஒருவேளை சவுதி அரசாங்க அதிகாரிகளும் போனவாரம் விஜய் டிவியில் வந்த நீயா நானாவை பார்த்து மனசு மாறியிருப்பார்களோ...? என்ன எழவோ பெண்கள் முன்னேறுனா சர்தான்...
====
காங்கிரஸ் கட்சியைசேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் கே.கருணாகரன் மறைந்தார். தன்னோட வாரிசுகளை பிரதமராகவே ஆக்கிய காங்கிரஸ் கட்சியில் இருந்துக்கொண்டு தன்னோட மகன் முரளிதரனை ஒரு வார்டு கவுன்சிலரா கூட ஆக்காம போய் சேர்ந்துட்டாரே....காங்கிரஸ் கட்சில இப்படி ஒரு தலைவரா? இதுக்குத்தான் எங்க தமிழினத்தலைவர்கிட் அப்போவே ஐடியா கேட்டிருந்துருக்கனும்....டூ லேட்...
(முரளிதரன் எம்.பி.பதவிக்கு போட்டியிட்டு மண்ணைக்கவ்வியது வேறுவிசயம்)
====
நாத்திகர்னா என்னா அர்த்தம்? கடவுள் நம்பிக்கை இலலாதவர்கள்னுதானே அர்த்தம். அப்போ ஏன் கலைஞர் கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் வாழ்த்துச்சொல்லாம கிறிஸ்துமஸ்கும், பெருநாளுக்கும் வாழ்த்து சொல்றாரு... அப்போ ஏசுநாதரும், நபிகள் நாயகமும் இறைதூதர்கள் இல்லையா?
அப்படின்னு நான் கேட்கலை...என் நண்பன் ஒருத்தன் கேட்டான்... நான்சொன்னேன் "போங்கடா நீங்களும் ஒங்க ஜாதியும், மதமும்"
ஆனா கேள்வி லாஜீக்கலா நல்லாருந்துச்சேன்னு போட்டுட்டேன்...
====
போனவார காமெடி பீஸ் விருது நமது அண்ணன் ராகுல் காந்திக்கு செல்கிறது. அப்போ அதுக்கு முந்துன வாரம் யாருக்குப் போச்சுன்னாலும் கேட்கப்படாது. இப்போதைக்கு இவர்தான். திராவிட கட்சிகளின் மேல் தாவி தாவி சவாரி செய்யும் ஒரு கட்சி காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ்-ல் இருந்து ஒருவர் தமிழகத்தின் முதல்வர் ஆவார்னு சொன்னதும் மகராசன் படத்தில் கமல்-செந்தில் பேசும் வசனம்தான் ஞாபகம் வந்தது. "என்ன அவ்ளோ ஈஸீயா ஏமாத்த முடியாது".... "அப்போ கொஞ்சம் கஷ்டப்பட்டா ஏமாத்திடலாங்கறியா?" :)) பீஹார்ல வாங்குன அடி அதுக்குள்ள மறந்துபோச்சுன்னா இவருதான்டா அடுத்த இரும்பு மனிதரு...அங்...
====
அண்ணா நீங்க போட்டுத்தாக்குங்கோ அவாளை.... ...:))
யதா யதா ஹிதர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத......:))))))
====



30 comments:
வாங்க நாஞ்சில்.. நொறுக்ஸ் கடைசில ஒரு கவிதை போட்றுங்க இனிமே... இன்னும் நன்னா இருக்கும் :)
நாஞ்சிலுக்கு அவார்டு கிடைச்சதில் ரொம்பவே சந்தோஷம் :-))
அய்யய்யோ கவிதயா? எனிவே, போடுங்கோ போடுங்கோ .. நன்னாத்தான் இருக்கும்ன்னேன் :-)
நண்பர் ராமசாமி வேண்டுகோளுக்கு இணங்க, பிரதாபுக்கு பதிலாக நான் ஒரு கவிதை சொல்றேன்:
நாஞ்சில் பிரதாப்பு,
அரசியல்வியாதிகளுக்கு
வக்கிறியே, ஆப்பு!
நீ கலக்கு,மாப்பு!
இதோ இன்னொன்னு:
நறுக்ஸ், சுருக்ஸ்,
இதுதான்
பிரதாப்பின் நொறுக்ஸ்!
No greetings for god, greetings for prophet.
என்ன இப்படி சொல்லீட்டீங்க.கருணாகரனுக்கு வாரிசு பாசத்தால் தான் இறங்குமுகமே துவங்கியது.
//பீஹார்ல வாங்குன அடி அதுக்குள்ள மறந்துபோச்சுன்னா இவருதான்டா அடுத்த இரும்பு மனிதரு//
எதையும் தாங்கும் இதயம் ;)))
///https://www.blogger.com/comment.g?blogID=3929369262328618938&postID=4486184191154449733&isPopup=true////---இதுபோன்ற முட்டாள்த்தன உளறல்களும் நீங்கள் உதிர்த்ததுதான்...
இப்போது...
///பெண்ணியவாதிகளுக்கு ஒரு நல்ல செய்தி, நம்பமுடியாத செய்தி ஆனால் உண்மை....
...இந்த வாடிக்கையாளர் சேவையில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அனைவரும் பெண்கள். அட.... இது எப்போ????? ///---இதுவும் நீங்கள்தான்!!!???
ஆக, உங்கள் பார்வையில்...
பெண்ணியம் என்றால் என்ன?
பெண்விடுதலை என்றால் என்ன?
பெண்ணடிமைத்தனம் என்றால் என்ன?
ஒரு நிலையில் நில்லாமல் ஏன் அடிக்கடி குட்டிக்கரனை அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?
சவூதியில் பெண்கள் வேலை பார்ப்பது இதுவா முதல் முறை?
UFO= உங்கள் கமண்ட் பார்த்தாலே தெரியுது எது முட்டாள்தனமான கருத்து என்று. புலிகேசியின் பதிவில் ஒரு ஊரில் நடக்கும் பெண்ணடிமைத்தனத்தை எழுதியிருந்தேன்(டிவில் காண்பித்ததை), அதுமாறவேண்டும் என்பதைத்தான் எழுதியிருந்தேன். சவுதியில் முதல்முதலாக பெண்களை வேலையில் அமர்த்துவதை பற்றி நான் சொல்லவில்லை. அதற்கான சட்டத்திட்டங்கள் தளர்த்தப்பட்டு இப்போது பெண்கள் வேலைசெய்வதற்கான முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. சும்மா குண்டுசட்டியில் குதிரை ஓட்டக்கூடாது.
நாஞ்சில் நாடனிற்கு விருது அளித்து விருதின் மதிப்பை அதிகரித்திருக்கிறார்கள்.
மற்ற நொறுக்குகளும் நன்றாக இருந்தது.
நீங்கதான்=//சும்மா குண்டுசட்டியில் குதிரை ஓட்டக்கூடாது.//
---சவூதியில் நேற்றுவரை பெண்கள் வேலை பார்க்க தடை இருந்தது என்றும் அது தளர்த்தப்பட்டது என்றும் நீங்க சொல்றீங்க... சர்த்தான்... எங்க சொத்தக்கார பாட்டி ஒருத்தங்க இருபத்தி அஞ்சு வருஷத்துக்கு முந்தியே சவூதி அரசு ஆஸ்பத்திரிலே நர்சா வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாங்க...
அது இப்போ மேட்டர் இல்லை...
இப்போது //இந்த வாடிக்கையாளர் சேவையில் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அனைவரும் பெண்கள்//என்று இதனை பெண்விடுதலை என்ற நீங்கள்...
காயல்பட்டினத்தில்...
ஆண்கள்(not allowed)என பெண்களுக்கான தனி சாலை, பெண்களுக்கான தனி ATM(icici bank)வசதி,பெண்களுக்கான தனி ஷாப்பிங் வசதி, வாழ்நாள் முழுதும் புகுந்தவீடு போக வேண்டிய கட்டாயமின்றி... பெண்கள் தங்கள் பெற்றோர்+கணவன் உடன் 'தங்கள் வீட்டிலேயே' வாழ்தல்... ஆகிய இவற்றை எல்லாம் பெண்ணடிமைத்தனம் என்று ஓங்கி முழங்கியது ஏன்? எதற்கு இந்த முரண்பாடு?
///அப்போ ஏன் கலைஞர் கிருஷ்ண ஜெயந்திக்கு மட்டும் வாழ்த்துச்சொல்லாம கிறிஸ்துமஸ்கும், பெருநாளுக்கும் வாழ்
த்து சொல்றாரு...///
இந்துக்கள் இளிச்சவாயர்கள்
எல்லாம் அருமை. எனக்கு மனதில் தோன்றியதை சித்தன்555 சொல்லியிருக்கிறார் .
குட் போஸ்ட்
நொறுக்ஸ் நல்ல மொறு மொறுன்னு இருக்கே ;)
அட..! நீங்க இன்னும் என் தளத்தை இன்னும் பார்க்க வில்லையா சகோ.?
[[[[புலிகேசியின் பதிவில் ஒரு ஊரில் நடக்கும் பெண்ணடிமைத்தனத்தை எழுதியிருந்தேன்(டிவில் காண்பித்ததை), அதுமாறவேண்டும் என்பதைத்தான் எழுதியிருந்தேன்.]]]---->>>இதற்குத்தான் இரண்டு பதிவுகள் போட்டேன்... உங்களுக்கும், புலிகேசி அவர்களுக்கும் பதிலாக..!
இன்னுமா இதில் வீண் சர்ச்சை...?
முடியலை... சகோ.
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post.html
http://pinnoottavaathi.blogspot.com/2010/12/blog-post_12.html
(அவர் தளத்திலேயே இதே சுட்டிகளுடன் மறுப்பு வெளியிட்டும் புலிகேசி அவற்றை மட்டுறுத்தி விட்டார்.நீங்கள் எப்படி என்று பார்ப்போம்..!)
நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப நாள் முன்னாடி இதெல்லாம் கொடுத்திருக்கணும்..நீங்க சொன்னதுதான்..இப்ப்வாச்சும் கொடுத்தாங்களே...
பதிவுலகத்து புலன் விசாரணை புலியே..
ஹானேஸ்ட்ராஜே...
பதிவுலகத்தில் தனி அரசாங்கம் நடத்துபவரே....
எங்கள் ஆசானே..
உங்களது சிறந்த பதிவை படித்துதான் விருதகிரி என்ற காவியத்தை பார்க்கும் ஆவல் எழுந்தது..
ஆனா அந்த படத்தின் டிவிடிய கேட்டாமட்டும் ஒரு alienயனை போல என்ன பார்க்குறாங்களே...ஏன் தல...
//பதிவுலகத்து புலன் விசாரணை புலியே..ஹானேஸ்ட்ராஜே...
பதிவுலகத்தில் தனி அரசாங்கம் நடத்துபவரே..எங்கள் ஆசானே..//
தீர்ப்பு சொல்லும் சின்னக்கவுண்டரே, லஞ்சம் ஒழிக்கும் ரமணாவே, பெரியண்ணாவே...
இதையெல்லாம் யார் வந்துசொல்லுவாங்க...அங்....:)))
என்னாத்தல எப்படி இருக்கீங்க...???:)) விருதகிரிபட கேப்டன் மாதிரி என்ட்ரி கொடுக்குறீங்க...:))
சரி ரைட்டு
என்ன அவார்டா யாரு ஏமாந்தது.
//என்ன எழவோ பெண்கள் முன்னேறுனா சர்தான்...//
So, only if a lady can work (that too in customer service!!), it means that she can attain liberation!! What an idea Sirji!! :-))))))))))
(Sorry for English)
//என்னாத்தல எப்படி இருக்கீங்க...???:)) விருதகிரிபட கேப்டன் மாதிரி என்ட்ரி கொடுக்குறீங்க//
comment போடாட்டியும் உங்க பதிவுகளை படிச்சிகிட்டி தான் இருக்கேன்..
இருந்தாலும் உங்க விருதகிரி பதிவு என்னை ரொம்பவே நெகிழச் செய்து விட்டது. அதுனால நானும் நாளையிலயிருந்து தீவிரமாக களத்தில் இறங்கி - கேப்டனுக்கு ஆதரவாக பதிவு போடப் போறேன்..
//சரி ரைட்டு
என்ன அவார்டா யாரு ஏமாந்தது.//
அய்யோ ஜலீலாக்கா...உண்மையிலேயே புரியலயா? இல்லை புரியாதமாதிரி வழக்கம்போல
டேமேஜ் பண்றீங்களா? அவார்டு எனக்கில்ல... நாஞ்சில் நாடனுக்கு...:) எனிவேஸ்... எனக்கும் சீக்கிரம் கிடைக்கலாம்...:)))
//So, only if a lady can work (that too in customer service!!), it means that she can attain liberation!! What an idea Sirji!! :-))))))))))
(Sorry for English)//
இங்கிலிபிசுல கமண்ட் போடறவங்களுக்கெல்லாம் நாங்க பெட்ரோமக்ஸ் லைட் வாடகைக்கு தரமாட்டோம்... ஐ மீன்...பதில் சொல்லமாட்டோம்...:))))
நல்லாருக்கு
அன்பிற்குரிய நாஞ்சில் நாடன் ஐயாவிற்கு வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு நாஞ்சில்.
சார்!! உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
உங்கள் பாணியில அபப்டி தானே சொல்லுவீங்க.
வாங்க நானும் உஙக்ளுக்கு கொடுக்கிறேன் வந்து ஏமாந்துட்டு போங்க
சும்மா தான் சொன்னேன்.அடுத்து போஸ்ட் செய்தது போஸ்ட் ஆகல போல....
நாஞ்சில் நாடானுக்கு வாழ்த்துக்கள்
Post a Comment