Tuesday, November 30, 2010

முதன்முறை சந்தோஷங்கள்

முதன்முறை காதல் வந்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை சைக்கிள் கற்றுக்கொண்டபோது
வராத சந்தோஷம்

முதன்முறை லுங்கி அணிந்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை மீசை முளைத்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை கல்லூரி சென்றபோது வராத
சந்தோஷம்

முதன்முறை வேலை கிடைத்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை சம்பளம் கிடைத்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை வாகனம் வாங்கியபோது வராத
சந்தோஷம்

முதன்முறை கலர்மொபைல் வாங்கியபோது வராத
சந்தோஷம்

முதன்முறை நட்சத்திர ஓட்டல் சென்றபோது வராத
சந்தோஷம்

முன்முறை ரீபோக் ஷு அணிந்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை அருவியில் குளித்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை கணினிமுன் அமர்ந்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை தமிழில் தட்டச்சுசெய்த போது வராத
சந்தோஷம்

முதன்முறை பென்ஸ் காரில் அமந்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை திருப்பதி சென்றபோது வராத
சந்தோஷம்

முதன்முறை விமானத்தில் பயணித்தபோது வராத
சந்தோஷம்

முதன்முறை தாஜ்மகால் சென்றபோது வராத
சந்தோஷம்

முதன்முறை குழந்தையை கையில் வாங்கியபோது வராத
சந்தோஷம்

பல முதன்முறை சந்தோஷங்களை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு சந்தோஷத்தை
எதிர்பார்த்து வாழ்க்கையை
சந்தோஷமாகக் கழித்துக்
கொண்டிருக்கிறேன்....



25 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

Chitra said...

ஏதாவது
ஒரு சந்தோஷத்தை
எதிர்பார்த்து வாழ்க்கையை
சந்தோஷமாகக் கழித்துக்
கொண்டிருக்கிறேன்....



.....correction, your Honor!
I should be:
சந்தோஷமாக மொக்கை பதிவுகளை போட்டு கழித்துக் கொண்டு இருக்கிறேன்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃபல முதன்முறை சந்தோஷங்களை
முறியடிக்கும் ஏதாவது
ஒரு சந்தோஷத்தை
எதிர்பார்த்து ஃஃஃஃஃ

அழுத்தமாக வருடிச் செல்கிறது.. சகோதரம்..
அருமையான பதிவு வாழ்த்துக்கள்...

இராமசாமி கண்ணண் said...

ilayikavathi :)

சிநேகிதன் அக்பர் said...

கவிதை கவிதை....

ஏன் தல ஏன் சந்தோசத்தை வராத வராதன்னு விரட்டுறீங்க.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ரொம்ப நல்லாருக்கு பிரதாப். சூப்பர்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நம்முடைய வாழ்க்கையில் எதையோ எதிர்பார்த்துதான் பயணிக்கிறோம்.

அன்னு said...

அட..!

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க.

kavisiva said...

என்னாச்சு இப்பல்லாம் ஒரே கவிதையா கொட்டுது என்ன விஷயம் :)

நல்லாருக்கு பிரதாப்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சந்தோஷம்

ஹரிஸ் said...

வராத சந்தோஷம்.வராத சந்தோஷம்னு போயிக்கிடே இருந்ததால ஏதோ புதுசா பெருசா வந்துருக்குமோனு நினைச்சேன்...நல்லா முடிச்சிருக்கீங்க,..அருமை...

எஸ்.கே said...

மிக அருமை!

செ.சரவணக்குமார் said...

அடப்பாவி பிரதாப்பு.. இம்புட்டு சந்தோஷம் கெடச்சும் இன்னும் பெரிய சந்தோஷத்துக்காக வெய்ட்டிங்க்கா. சீக்கிரம் ஊருக்குப் போயி கல்யாணத்தப் பண்ணுங்க நண்பா.

Madhavan Srinivasagopalan said...
This comment has been removed by the author.
Madhavan Srinivasagopalan said...

எலேய் சின்ராசு.. எடுடா வண்டிய..
பிரதாப்புக்கு பொண்ணு பாக்கணும்..
கலியான ஆசையில புள்ள எதெதையோ ஒளருது..

ஸ்ரீராம். said...

அடுத்து இதைவிடப் பெரிய பெரிய சந்தோஷங்கள் கிடைக்கட்டும். இன்னும் இன்னும் எதிர்பார்க்கும் மனித மனம்!

சுந்தரா said...

இப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளில்தான் ஓடிக்கொண்டிருகிறது வாழ்க்கை.

கவிதை நல்லாருக்குங்க.

வெறும்பய said...

அப்போ இன்னும் உங்குளுக்கு சந்தோசம் கிடைக்கலையா...

The S c o r p said...

சந்தோசம் தானே... அதுதானே உங்களுக்கு வேணும்... குவார்ட்டர் கட்டிங் இருக்கவே இருக்கு... அதுல வராத சந்தோசம் இருக்கா என்ன? (நான் படத்த சொல்லல.. ஹீஹீ)

ஆமினா said...

நல்லாயிருக்கு கவிதை.....

எதிர்பார்ப்புகள் இருப்பதால் தானே வாழ்க்கை ஓடுது.....

Tamilbookmark.co.cc said...

தமிழ் வலைப்பதிவர்களே!
புதிய தமிழ் திரட்டியான தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளை இனைத்துபயன் பெறுங்கள்.
‍தமிழ்புக்மார்க்
http://tamilbookmark.co.cc

anu said...

Very nice flow.Good article
Very nice flow.Good article
Very nice flow.Good article

കെ.പി.സുകുമാരന്‍ അഞ്ചരക്കണ്ടി said...

இந்த கவிதை வாசிப்பும் எனக்கு முதன்முறை சந்தோஷத்தை தருகிறது. அருமையான கவிதை. அன்புடன் வாழ்த்துக்கள் !

K.P.Sukumaran

goma said...

உங்கள் சாதனையை முறியடிக்க
மேன்மேலும் சந்தோஷங்கள் உங்களைத் துரத்த
வாழ்த்துகிறேன்

FEEDJIT Live Traffic Feed