Thursday, November 4, 2010

டீவாளி வாழ்த்துக்கள்

"ஏப்பி டீவாளி" என
அன்னிய மொழியில்
வாழ்த்துசொல்லுவதுடன்
ஆரம்பிக்கிறது தீபாவளி

நரகாசுரனை கொன்ற நாள்
நமீதா பேட்டியுடன்
கொண்டாடப்படுகிறது

சொந்தங்களை கண்டு
வாழ்த்து சொல்லிய
தீபாவளி நாட்கள்
இன்று டீவி பொட்டியுடன்
அடங்கிவிடுகிறது

தங்கை கொடுத்த மிட்டாயையும்
தாய் கொடுத்த பலகாரத்தையும்
துக்கி எறிகிறான்
தலைவர் படம் ரிலிஸாகாத
கோபத்தில்

சிறப்பு நிகழ்ச்சிகளும்
உலகவரலாற்றில்
முதன்முறையான
படங்களும்தான்
தீபாவளி என்பதை
நினைவூட்டுகிறது

பட்டாசுக்கொளுத்தவும்
பலகாரம் திங்கவும்
புத்தாடை அணியவும்
காத்திருந்த தீபாவளி
எங்கேப்போனது?


அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.






16 comments:

எஸ்.கே said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி(ஏப்பி டீவாளி) நல்வாழ்த்துக்கள்!

சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன!!

பயணமும் எண்ணங்களும் said...

அப்பி டிவாலி..

கோபிநாத் said...

இனிய டீவாளி நல்வாழ்த்துக்கள் மச்சி ;)

உலக சினிமா ரசிகன் said...

நான் காலையில் குளித்து...புத்தாடை உடுத்தி...சாமிகும்பிட்டு...பட்டாசும் கொளுத்தி...பலகாரமும் சாப்பிட்டு தியேட்டருக்குப்போனால் காலி...தீபாவளியன்று 10மணி காலைக்காட்சியே இப்படி....பார்த்த படம் மைனா...

Madhavan said...

//"ஏப்பி டீவாளி" என
அன்னிய மொழியில்
வாழ்த்துசொல்லுவதுடன்
ஆரம்பிக்கிறது தீபாவளி//

என்ன செய்யுறது,.. சிலபேருக்கு தமிழ் தெரியாதே.. (வட இந்திய நண்பர்கள்)

//நரகாசுரனை கொன்ற நாள்
நமீதா பேட்டியுடன்
கொண்டாடப்படுகிறது//

நோ.. நோ.. நோ.. நா அதெல்லாம் பாக்குறது கெடையாதே.. (எங்க ஊட்டு, தங்கமணி காதுல கண்டிப்பா விழுந்திருக்கும்.. )

//சொந்தங்களை கண்டு
வாழ்த்து சொல்லிய
தீபாவளி நாட்கள்
இன்று டீவி பொட்டியுடன்
அடங்கிவிடுகிறது//

ண்மை... அனால், காலம் மாறும்.. மக்கள், தொலைகாட்சி நிகழ்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறையும்.. நம்புவோம்.
(இருங்க மத்ததெல்லாம், தீபாவளி நிகழ்சிகள் பாத்துட்டு வந்து சொல்லுறேன்..)

வெறும்பய said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

ஜெய்லானி said...

நமிதா வா ..? அப்படின்னா யாரு..? :-))

ஜெய்லானி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சிநேகிதி said...

இனிய டீவாளி நல்வாழ்த்துக்கள்

அமைதிச்சாரல் said...

ஆப்பி திவாலி :-))))))

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இனிய தீப ஒளி வாழ்த்துகள், பிரதாப்!
பகல் முழுக்க டிவி பாத்துகிட்டே இருந்தேனா............அதான் லேட்டா வந்துட்டேன். (உண்மையில் இன்று முழுதும் டிவி மட்டுமல்ல, நெட்டையும் தவிர்த்து விட்டேன்.)

கே.ஆர்.பி.செந்தில் said...

இன்னிக்கு டிவி பொட்டிய பாக்க சகிக்கல... டீவாளி விசஸ்...ஹி..ஹி..

பாலகுமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

நாஞ்சில் மனோ said...

எங்கே போகிறோம் நாம்??
பிரதாப்பின் சாடல் புரிகிறது.

ஹுஸைனம்மா said...

என்ன பலமான தீபாவளிக் கொண்ட்டாட்டமா?

Jaleela Kamal said...

டீ வாளிககு உங்க்் ஏரியா தாஅன் கள கட்டி இருந்ததது.

FEEDJIT Live Traffic Feed