உனது திருமண பத்திரிக்கை
கண்டு கண்ணீர் பெருகுதுடி
அன்று விடுமுறை இல்லை
கல்யாண சாப்பாடு நஷ்டமடி
==
பேருந்தில் உனக்கும் சேர்த்து
இரண்டு வருடமாக
டிக்கெட் எடுக்கிறேன்
ஐ லவ் யு சொல்லிவிடு
இல்லை கணக்கு பார்த்து
பைசல் பண்ணிவிடு
==
எனது காதல் கடிதத்தில்
இலக்கணப்பிழை என்று நீ
எழுதிய கடிதத்தில் ஆயிரம்
எழுத்துப்பிழைகள்
==
பரிட்சைக்கு
பிட்டு அடிக்க "சிட்டி"ரஜினி
மாதிரி உதவ
சொல்கிறாயே
நீ என்ன ஐஸ்வர்யா ராயா?
==
இனி மிஸ்டு கால்
கொடுப்பதை நீ
நிறுத்திவிடு
ஏர்டெல் கம்பெனி
உன்னிடம் நஷ்டஈடு
கேட்டு வழக்கு
தொடரலாம்
==
காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
என் எதிரியின்
முகவரி
தருகிறேன்
==



18 comments:
//பரிட்சைக்கு
பிட்டு அடிக்க "சிட்டி"ரஜினி
மாதிரி உதவ
சொல்கிறாயே
நீ என்ன ஐஸ்வர்யா ராயா?//
டைமிங் கவுஜ கலக்கல் மச்சி!
ஆஹா.. ரசிக்கும் படி இருக்கு..;-))
கல்க்கல்ஸ் ஆப் நாஞ்சில்....
ரொம்ப நொந்துபோயி இருக்கீங்க போலிருக்கு. ஆனாலும், லகலகலகன்னு இருக்கு :-))))))))))
என்னாச்சு, மாப்பு?
எவளாவது
வச்சுட்டாளா, ஆப்பு?
(அட, இதுவும் கவித!)
கொன்னுட்டீங்க...
நல்லாருக்கு....
ரொம்ப நல்லா இருக்குங்க! மிகவும் ரசித்தேன்!
பிலிபைனி அல்வா குடுத்துடுச்சா ..!! சோகராகம் ஓவரா இருக்கே ..!! ஹா..ஹா..:-)))))
ok.. ஒத்துக்கறோம்.. நீங்களும் விரைவில் டைமண்டாக வாழ்த்துக்கள்..
//உனது திருமண பத்திரிக்கை
கண்டு கண்ணீர் பெருகுதுடி
அன்று விடுமுறை இல்லை
கல்யாண சாப்பாடு நஷ்டமடி//
நாஞ்சிலின் கற்பனை காதலி:
நீ சாப்பாட்டு ராமன்னு எனக்குத் தெரியுமே! அதான் உஷாராயிட்டோம்.
//பேருந்தில் உனக்கும் சேர்த்து
இரண்டு வருடமாக
டிக்கெட் எடுக்கிறேன்
ஐ லவ் யு சொல்லிவிடு
இல்லை கணக்கு பார்த்து
பைசல் பண்ணிவிடு//
நாஞ்சிலின் கற்பனை காதலி:
டிக்கெட் மட்டும்தான் நீ எடுக்கற
காசு என்னுது. சீக்கிரமா பைசல் பண்ணிடு.
//எனது காதல் கடிதத்தில்
இலக்கணப்பிழை என்று நீ
எழுதிய கடிதத்தில் ஆயிரம்
எழுத்துப்பிழைகள்//
நாஞ்சிலின் கற்பனை காதலி:
கண்ணாடியை நல்லா துடைச்சுப் போட்டு வாசி. கண்ணு தெரியாம போனதுக்கெல்லாம் கம்பெனி பொறுப்பாகாது.
//பரிட்சைக்கு
பிட்டு அடிக்க "சிட்டி"ரஜினி
மாதிரி உதவ
சொல்கிறாயே
நீ என்ன ஐஸ்வர்யா ராயா?//
நாஞ்சிலின் கற்பனை காதலி:
இவரு பெரிய ரசினிகாந்து.ஐஸ்வர்யா ராய் கேட்குது!
//இனி மிஸ்டு கால்
கொடுப்பதை நீ
நிறுத்திவிடு
ஏர்டெல் கம்பெனி
உன்னிடம் நஷ்டஈடு
கேட்டு வழக்கு
தொடரலாம்//
நாஞ்சிலின் கற்பனை காதலி:
மிஸ்டு கால் கொடுக்க நாங்க பேட்டண்ட் ரைட் வாங்கி வச்சிருக்கோம். ஒன்னும் பண்ண முடியாது :)
//காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
என் எதிரியின்
முகவரி
தருகிறேன்//
சீக்கிரமா அவன் முகவரியைக் கொடு. அவனிடம் சொல்லி உன்னை போட வைக்கறேன்
"கற்பனை" என்ற இடத்தில் ஃபிலிப்பினோ என்ற வார்த்தை ஞாபகத்தில் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :)
nice pa...
// நீ என்ன ஐஸ்வர்யா ராயா?//
indha line arumai....
கணக்கு பார்க்க காதல் ஒரு வியாபாரம் அல்ல. அனைத்தும் வாசித்து ரசித்தேன்.. வாழ்த்துக்கள்
//காதல் வந்தால்
சொல்லி அனுப்பு
என் எதிரியின்
முகவரி
தருகிறேன்//
எவ்வளவு நொந்து போய் இருக்கீங்க எண்டதற்கு இந்த வரி போதும். புண்பட்ட நெஞ்சை புகை விட்டு ஆத்துங்க
இப்படியே புலம்பியே காலம் போவுது, என்ன செய்ய!! :-))))
eppa engkiruwthaathaan ippdi oru kavuja kodduthoo..
aduththa thadavai uurukku pookum varai intha pulappama?
"எனது காதல் கடிதத்தில்
இலக்கணப்பிழை என்று நீ
எழுதிய கடிதத்தில் ஆயிரம்
எழுத்துப்பிழைகள்"//
பழிக்குப் பழி...!
Post a Comment