Wednesday, October 6, 2010

அப்பாடா தப்பிச்சேன்....

எந்திரனை பார்த்தே ஆகனும்னு சன் குழுமம் துப்பாக்கியை வச்சு மிரட்டாததுதான் குறை. சினிமா பதிவுளே இதுவரை எழுதாத சில பெண்பதிவர்களும் எந்திரன் படம் பார்த்ததை சிலாகித்து எழுதியதை பார்த்து மெய்சிலித்து போனேன். சமுதாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய சன்குழுமத்திற்கு என் நன்றிகள்.

போன பதிவுல ஒரு எந்திரன் விமர்சனத்தின் சுட்டியை கொடுத்ததற்கு இங்கு தன்னிலை விளக்கம் கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்...
என்னா காரணம்னா...

பிரபல ஜோசியர் செங்கல்பட்டு செங்கல்வராயன் பெரிய குண்டைத் தூக்கிப்போடருக்காரு...அவரு சொல்றாரு...
"எலே மக்கா வலைப்பதிவு வச்சிருக்கவங்க கண்டிப்பா எந்திரன் படம் பார்த்து அதுக்கு விமர்சனம்போடுங்கடே... இல்லன்னா சாமிகுத்தம் ஆகி அப்புறம் HITS கிடைக்காம, இருக்கற ஃபாலோயர்லாம் போயி யாருமே இல்லாம டீ ஆத்த வேண்டியததாம்டேனு சொன்னதும் எனக்கு பக்குன்னு ஆகிடுச்சு..

அவருக்கு போனைப்போட்டு அய்யா அந்தப்படத்தையே பாரக்க கூடாதுன்னு நினைக்கவறங்களுக்கு ஒரு பாரிகாரமும் இல்லையான்னு கேட்டதுக்கு, "இருக்குடே...யாராச்சும் படம் பார்த்தவங்களோட விமர்சனத்துக்கு இணைப்புக்கொடுடே சாமி குத்தம் ஆகாம சரியாயிடும்னாரு"...


இப்போ புரிஞ்சுதா நான் ஏன் இந்த கட்டியை சாரி சுட்டியை இங்க கொடுத்தேன்னு...

எந்திரன் - ஒரு துன்பியல் அனுபவம்


கருப்பு பெட்டி






17 comments:

எஸ்.கே said...

நீங்க எந்திரனை எதிர்க்கிற குரூப்பா? ஆதரிக்கிற குரூப்பா? இல்ல எந்த குரூப்புனு தெரியாம குழம்பி நிக்கிற குரூப்பா? :-)

RNS said...

Thank you for giving my link in your blog :-)

கொழந்த said...

//RNS said...
Thank you for giving my link in your blog//

ஐயோ..பாவம்..இதுல உள்ள உள்குத்து தெரியாம தேங்க்ஸ் சொல்லிட்டார்..

Anonymous said...

150 கோடி‍ முதலீட்டில் ஆயிரம் கோடி‍(!)பணம் சம்பாதிக்க சன் குழுமம் சினிமா எனும் கனவு தொழிற்சாலையை செம்மையாக பயன்படுத்தியிருக்கிறது. சிறந்த, தரமான கலைகளை ஆதரிப்பதில் நாம் என்றும் சராசரிக்கும் கீழேதான். அந்த அப்பாவிதனத்தை சிஜி போன்ற வெளிநாட்டு‍ சமாச்சாரங்களை உலவ விட்டு‍ வாயைபிளக்க வைத்து‍, காசாக்கி தங்கள் பையில் நிரப்பியுள்ளனர். சினிமாவை கலை என்ற வடிவத்தில் பார்க்கும் ஒரு‍ சிலருக்கு‍ வேண்டுமானால் இது‍ ஏமாற்றமாக இருக்கும். அது‍ முழு‍மையாக வணிக-வியாபாரம் ஆகிவிட்டதை அறிந்தவருக்கு‍ எந்த ஏமாற்றமும் இல்லை. தமிழ் கூறும் நல்லுலகம் தெரிந்து‍ கொள்ள வேண்டிய விஷயம், சாதாரண பொருளை தகுந்த விதத்தில் கூவினால் அதற்கான டிமாண்டை சந்தையில் ஏற்படுத்திவிடலாம் என்பதே. அதை மிகச் சரியாக செய்து‍ ஜெயித்திருக்கிறார்கள்.
ஜெ.பாபு
கோவை

கொழந்த said...

@நாஞ்சில் பிரதாப்..
ணா...எங்கப்பா RDOவாக 2007-2008 வரை இருந்தார். வீடு holy cross ரோட்ல இருந்திச்சு..உங்களுக்கு Government ஆளுங்க யாராவது தெரிந்தால் "மனோகரன்-RDO"னு கேட்டுப்பாருங்க. தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு...நல்ல ஊர்..நல்ல இடங்கள்..என்ன கொஞ்சம் கோவக்கார ஆட்கள்....

மைதீன் said...

அதுக்காக ஒன்னுக்கு ரெண்டா லிங்க் குடுத்தீரு? நல்லாருக்குவே உம்ம விளக்கம். ஆமா ரெண்டுமே ஒரே வகை மாதிரில்லா தெரியுது?

நாஞ்சில் பிரதாப் said...

எஸ்கே... இதுக்கு மேலயுமா குழப்பமா??? :) என்னங்க இது :))

RNS.. என்ன நன்றியா?? இது என் கடமை தலைவரே...:))

///ஐயோ..பாவம்..இதுல உள்ள உள்குத்து தெரியாம தேங்க்ஸ் சொல்லிட்டார்..//

கொழந்த = ஹஹஹ..விடுங்க... அதான் என் கடமைன்னு சொல்லிட்டனே...:))


நன்றி பாபு= பணமும் அதிகாரமும் இருந்தால் என்னவேணா பண்ணலாம்கறது இப்போ உறுதியாயிடுச்சு...ப்ரீ வுடுங்க பாஸ்...

கொழந்த = என்னது எங்கூரு மக்கள் கோவக்காரங்களா? எலே பசுபதி எட்றா என்ட்ற அருவாளை... :))
நன்றி சரவணன். ஆமா அதென்ன குழந்தை... இன்னும் குழந்தையாவே இருக்கறதா நினைப்போ:)

பின்னோக்கி said...

எந்திரனை திட்டும் நாஞ்சில் பதிவை யாரும் படிக்க வேண்டாம் எனக் கேட்டுக் ‘கொல்லப்’ படுகிறார்கள் :)

கொழந்த said...

http://saravanaganesh18.blogspot.com/2010/07/blog-post.html

எனக்கு விளம்பரங்கள் சுத்தமா பிடிக்காது..

ஹுஸைனம்மா said...

ஜோசியத்தை அலட்சியம் பண்ணாம, அதுக்குப் பரிகாரம் என்னன்னு “கேட்டு” செஞ்சுட்டீங்க பாருங்க, இங்க ப்ரூவ் பண்ணுறீங்க நீங்க கமல் ரசிகன்னு!!

:-)))))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

//// எஸ்.கே said...

நீங்க எந்திரனை எதிர்க்கிற குரூப்பா? ஆதரிக்கிற குரூப்பா? இல்ல எந்த குரூப்புனு தெரியாம குழம்பி நிக்கிற குரூப்பா? :-)////

ஹா ஹா ஹா... ரிப்பிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே...

நாடோடி said...

ந‌ல்ல விள‌க்க‌ம் த‌ல‌... ஹி..ஹி.. :))

|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...

யோவ் மக்கா,நீயே இப்புடி தினம் இதுக்கு விளம்பரம் தேடிக்குடுக்குறியே?:))
நல்லா இருக்குன்னு சொன்னவங்களே மத்த வேலைய பாக்க போயிட்டோம்,இதுக்கு மேல எந்த எந்திரன் பதிவுக்கும் நான் கமெண்ட் போடமாட்டேன்,இது சத்தியம்.

ஜெய்லானி said...

நீங்க நல்லவரா கெட்டவரா..!!! ஏற்கனவே ‘எந்திரிகா’தவன் பாக்கி இருக்குதுங்க..ஹா..ஹா..

அமைதிச்சாரல் said...

கமல் ரசிகர்களையும் திரும்பத்திரும்ப பேசச்செய்கிறதே.. அதான் ரஜினி :-))))))).

நாங்க மறந்தாலும் நீங்க மறக்கமாட்டீங்க போலிருக்கு.

கண்ணா.. said...

லேய்....சவுத்து மூதி....

இன்னும் வயித்தெரிச்சல் விடலையாவே உனக்கு.........

ஏன் துபாய்ல ஜெலுசில் ஈனோல்லாம் ஸ்டாக் தீர்ந்து போச்சாக்கும்....

நடத்து...நடத்து....

ங்கொய்யால...நீயெல்லாம் எந்திரன் பதிவோ... பதிவு பத்தின லிங்கோ கொடுக்கலேன்னு யாருவே அழுதா?

btw படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாமே....:)))))))))

நாஞ்சில் மனோ said...

எந்திரனும் எந்திரிக்காதவனும்னு, ரிலீசுக்கு முன்னே எழுதி கொளுத்தி போட்டீங்க ஓகே, இப்போ படம் ரிலீசாகி, பல பதிவர்கள் எந்திரனை பன்சர் ஆக்கின பின்னர், இப்போ இந்த பதிவை போட்டு இருக்கீங்களே.....
பிரதாப் ஏதாவது உள் குத்து உண்டாடே மக்கா.....
[[நான் படத்தை பாதி பார்த்து விட்டு தலை தெறிக்க வெளியே ஓடி வந்து, ரெண்டு பெக்கை[[லீவு நாள்தான்]] போட்ட பின்தான் நார்மலானேன், சவுத்த மூதி]]

FEEDJIT Live Traffic Feed