பொதுவா ஆண்கள் இயற்கையிலேயே அழகு. அப்படின்னு நான் சொல்லை. சயின்ஸ் சொல்லுது . (இதுக்கெல்லாம் விக்கிபீடியா லின்க் கேட்டா தரமுடியாதுப்பா). ஆனா பாருங்க சங்ககாலத்துலேருந்து தாடி வச்ச கவிஞர்கள் நிறையபேரு காசுக்காக பெண்களின் அழகையே வர்ணிச்சு வர்ணிச்சு, ஆண்களுக்கு எதிராக பெரிய துரோகத்தை செய்திருக்கிறார்கள்.
மேட்டருக்கே வர்றேன். அண்ணனை வற்புறுத்தி போகச்சொன்னதும், அவன் சமீபத்தில் திருமணமான தன் நண்பனுக்கு போனைப்போட்டு கேட்க, அவர் ஒரு ஆண்கள் அழகு நிலையத்தை பரிந்துரைக்க, என்னையும் துணைக்கு கூட்டிகிட்டு இருவரும் அங்குப்போனோம்.
வெளியே சாதாரணமாக இருந்த பியுட்டி பார்லரின் உள்ளே நுழைந்ததும், டி.ஆர். படத்தோட ஷுட்டிங்க் ஸ்பாட்டுக்கு வந்தமாதிரி ஒரு ஃபீலிங்க், பயங்கரமா செட் போட்டிருந்தார்கள். கரண் ஜோஹர் படங்களில் வருவதுபோல ஹைகிளாஸ் வீடுகள்மாதிரி பளிச்சென்று இருந்தது. நம்மூர்ல இப்படி ஒரு பியுட்டி பார்லரா? உள்ளே போனதும் வரவேற்புலாம் நல்லாத்தான் இருந்துச்சு. மெனுவைக்கொடுத்தார்கள். சாயத்தைப்பூசி ஏமாத்த போறீங்க... இதுக்கு மெனுகார்ட் வேறயா? உள்ளுக்குள்ளே புலம்பிட்டு மெனுவைப்பார்த்தா பல மாதிரியான ஃபேஷீயல் முறைகள் கொடுக்கப்பட்டிருந்தது இருப்பதுலேயே விலை கூடுன ஒரு வழிமுறையை உடன் பிறப்பு சொல்ல, அழைத்துச்சென்றார்கள். அவனுக்கு ஃபேஷீயல் செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என்னிடம் நீயும் பண்ணுடான்னு சொன்னபோது, "எனக்கு இதுக்கு மேலயுமா அழகுவேணும்னு" வடிவேல் ரேன்சுக்கு நான் கேட்க, அங்க நின்னுட்டு இருந்த பியுட்டிஷீயன் என்னை கேவலமா ஒரு லுக்கு விட்டாரு. ஆனா என் அண்ணன் ஒரு விசயம் சொன்னா பாருங்க... "டேய் கல்யாண வீடுன்னா நாலு ஃபிகருங்க வந்துப்போற இடம்டே, உங்க அண்ணிகூட படிச்ச புள்ளைங்கல்லாம் வரும்டே, நீயும் பண்ணு" ன்னதும் எனக்கு கண்ணீரே வந்துடுச்சு அண்ணனுக்கு எம்மேல என்னா அக்கறை...நன்றி சொல்லவே உனக்கு... ஓடிப்போய் சேர்ல நானும் உக்ககாந்துட்டேன். ஆனா அது அக்கறை இல்லை எனக்கு வச்ச ஆப்புன்னு கடைசிலத்தான் தெரிஞ்சுகிட்டேன்.
எனக்கும் ஆரம்பிச்சானுங்க... கண்களுக்கு கவசம் வச்சு, முகத்துல என்னல்லாமோ எடுத்து பூசுனானுங்க...பூசுனதையே கழுவுனானுங்க...அப்புறம் வேற எதையே பூசுனானுங்க திரும்பும் அதை கழுவுனானுங்க, அப்புறம் ரொம்ப நேரம் சொறிஞ்சுவிட்டானுங்க...திரும்ப எதையோ பூசுனானுங்க. சும்மாவே அட்டு ஃபிகருங்ககூட திரும்பி பார்த்ததில்லை, இதுல இருக்கறதையும் நாசம் பண்ணி விட்டருவானுங்களோன்னு பயம் வந்துடுச்சு. இதுல ஏதோ அமிதாப்பச்சனுக்கு மேக் அப் போட்ட ரேன்சுக்கு எனக்கு வார்னிஷ் அடிச்சவரு கொடுத்த பில்டப் மகா எரிச்சல்.
கடைசில ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு கண்ணாடியைப்பார்த்தா...அதே மூஞ்சிதான் இருந்துச்சு...அப்புறம் ஃபேஷீயல் பண்ணா கமலஹாசன் மூஞ்சியா வரும். நம்ம உடன் பிறப்பு என்னப்பண்றாருன்னு திரும்பிபார்த்தா அவரு ஆளையேக் காணோம்... அவரு எப்பவோ முடிச்சுட்டு கிளம்பிட்டாராம்.
கூடப்பொறந்த பாவத்துக்கு அவனுக்கும் சேர்த்து காசை நான் அழுதுட்டு வந்தேன்...ரொம்ப இல்ல பர்ஹெட் ஜஸ்ட் 1300 ரூபாதான். அடப்பாவிகளா இதுக்கு நான் நேர்மையான ஹமாம் சோப்புல நாலுவாட்டி முகத்தை கழுவிருந்தா இன்னும் பளிச்சுன்னு இருந்திருப்பேன்...பத்துரூவால முடிய வேண்டிய சமாச்சாரத்துக்கு 2600 ரூபாய் மொய் வச்சேன்.
திரும்ப வீடடுக்கு வந்து நாலுவார்த்தை நல்லா கேட்கலாம்னு அந்த பாசமுள்ள உடன்பிறப்பை எங்கேன்னு தேடுனா...உடன்பிறப்பு ஒண்ணுமே நடக்காத மாதிரி கூலா வருங்கால மனைவிகூட பல உலகப்பிரச்சினைகளை எப்படி தீர்க்கறதுன்னு ஃபோன்ல சிரிச்சு சிரிச்சு ஆலோசனை பண்ணிட்டிருந்தாரு... கொடுமைடா சாமி.....


25 comments:
நீங்க சொன்ன பார்லரை பேங்கில் பதினைஞ்சு லட்சம் கடன் வாங்கில்ல ஆரம்பிச்சிருக்கான். அதை எப்படி வசூலிக்கறது உங்களை மாதிரி ஆட்கள்கிட்டதானே :).
ஃபிகர் ஏதாச்சும் லுக் விட்டுச்சா?!
@ கவி:உண்மைதாங்க நல்லாவே ஏமாத்துறானுங்க...நல்லவேளை அலர்ஜீ எதுவும் ஆகலை.
எப்படி இருக்கீங்க... இந்தோனேஷீயாவுல சுனாமி, எரிமலைன்னு சொல்றானுங்க...
நாங்க இருக்கும் தீவில் பிரச்சினை ஏதும் இல்லை பிரதாப்.
//நாங்க இருக்கும் தீவில் பிரச்சினை ஏதும் இல்லை பிரதாப்.//
அதானே... ஒரு தீவுல ஒரு சுனாமியோ, எரிமலையோதானே இருக்கமுடியும்...:))
சுத்தமாக இருந்தாலே யாரும் அழகுதான் . ஏதாவது பேரை சொல்லி காசு பண்ணும் வேலைதான் இந்த "பூட்டி பார்லர்"
அரை மூடி எலும்மிச்சை பழமும் சிறிது நிவியா க்ரீம்மும் நமக்கு போதுமே.
பழசாற்றை முகம் ,கழுத்துவரை தடவி அரைமணி /ஒருமணி கழித்து குளித்துவிட்டு முகத்தை பாருங்கள்.
நன்றாக ப்ளீச் ஆகி இருக்கும்.பின்னர் தேவை எனில் ஷேவ் செய்துகொண்டு சிறிது நிவியா க்ரீம் தடவிட்டு
லேசாக சந்தன பவுடர் போட்டு தேய்த்து விடுங்கள். உங்க ஊரில் நீங்கதான் கமல் ஹாசன்/ அரவிந்தராஜ் .
ஷேவ் செய்து விட்டு பழச்சாறை தடவிக்கொண்டு தாண்டவம் ஆடாதீர்கள். :)))))
மேட்டரும் அழகு, அத சொன்னா விதமும் அழகு!
பிரதாப், டாப்!
ஃபிகர் ஏதாச்சும் மாட்டுச்சான்னு கடைசிவரை சொல்லவேயில்ல :-)))))
\\நேர்மையான ஹமாம் சோப்\\இந்த வார்த்தைபிரயோகம் என்னை மிகவும் கவர்ந்தது
வாழ்த்துக்கள்.. அருமையா இருக்கு.
பேசியல் பண்ணிக்கிறது.. அதுவும் அடுத்தவன் காசுல ...
மெனுவைக்கொடுத்தார்கள். சாயத்தைப்பூசி ஏமாத்த போறீங்க... இதுக்கு மெனுகார்ட் வேறயா?
.....எல்லாம் சரி! அப்புறம் அண்ணி கூட வந்த தோழிகள் எல்லாம் 'பிரகாசமான' முகத்தை பார்த்தாங்களா? இல்லை, கண்ணு கூசி - கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு "s " ஆகிட்டாங்களா?
மாப்பு நீதான் வெள்ளாக்கார துரயாட்டம் கலரா இருக்கியே அப்றம் ஏன் ஃபேசியல் பண்ண?
பதிவுலகை பற்றிய பரபரப்பு தொடர் அந்நியனின் முதல் அத்யாயம்..
புரபைல இருக்கிற போட்டா அப்ப எடுத்ததா? கடைய மாத்தப்பா!
ஆஹா...கடசில நீங்களும் ஏமாந்துட்டீங்களா...சரி உங்க கல்யாணத்துல பழி வாங்கிடுங்க !! :))
கடைக்கார ஏமத்துனத விட உங்க அண்ணன் தான் கெட்டிக்காரரு....
அத விடுங்க...
கல்யாணத்துல உங்க கல்யாணத்துகு எதாவது ஏற்பாடு செய்தீர்களா....
என்னையா மாப்ஸ் புக் பண்ணிட்டாங்களா!!!
சட்டியில இருக்கதுதான் அகப்பையில வரும்னு பெரியவங்க சொல்லிருக்காங்க. அதுசரி, நீங்கதான் ஃப்ளூரஸண்ட் பச்சைச் சட்டையில இந்தக் கால ராமராசன் மாதிரி பளிச்னு இருக்கீங்களே, உங்களுக்கெல்லாம் எதுக்குங்க ஃபேஷியலும், பார்லரும்?
:-))))))))))))
உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்
புதுசா உள்ள போட்டோ பேஷியமல் செய்த பிறகு எடுத்ததா?
முகத்த பேஷியல் செய்யும் முன் கமல் மாதிர் ஆகிடடுவோமுன்னு நினைச்சி கன்ணமூடினிங்களா?அப்ப கரகாட்டம் ராமராஜ்ன் மாதிரி மாத்திட்டாங்கலா>
எலேய் மக்கா,
என்னலா அது அழகு நிலையம்?உன்கிட்ட அப்ப்டி காசு கறந்தது?
கெவின்கேர் நடத்தும் ப்யூட்டிபார்லர்லயே இவ்வளவு காசு வாங்கமாட்டானே?நீ எதுவும் பவ்டர் மசாஜ் செஞ்சுகிட்ட்டியாலே?
"நாஞ்சில் பிரதாப் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"
நன்றி மாணிக்கம் சார்... எப்பவாச்சும் எலுமிச்சைபழம் சாறு தடவுறது உண்டு. நிவியா போடுறதில்லை... நிவியாவுக்கு பதிலா ஃபேர் அனட் லவ்லி போடலாமா??? டவுட்டு :))
நன்றி பொ.சொ.வி.
அமைதிசாரல் = இன்னும் பேச்சலாக இருக்கும்போதே தெரியலையா??? :((((
நன்றி= உலகசி.ரசிகன்
நன்றி சரவணன்
செந்தில் = நல்லபழக்கம்..அடுத்தன் காசுல டீ குடிக்கறிது கேள்விப்பட்டிருக்கேன்...பேசியல் பண்றது இப்பத்தான கேள்விப்படறேன்...:))
சித்ரா= டவுட்டு கேக்கறீங்களா கலாய்க்கறிங்களா??? :))) நல்லா கேக்கறயாங்கய்யா டீட்டெய்லு...
வசந்த்= //மாப்பு நீதான் வெள்ளாக்கார துரயாட்டம் கலரா இருக்கியே அப்றம் ஏன் ஃபேசியல் பண்ண?//
யாரு, நானு?.... என்னத்த கண்ணய்யா வடிவேலுக்கிட்ட சொன்ன மாதிரியே இருக்கு...நல்லவேளை எம்ஜீஆர் மாதிரி இருக்கேன்னு சொல்லாமவுட்டியே..... :))
சுல்தான் பாய்=நன்றி இல்ல இது அதுக்கு முன்னாடி எடுத்ததது.:))
அன்னு= //உங்க கல்யாணத்துல பழி வாங்கிடுங்க !!// கேக்கறதுக்கு என்னமோ நல்லாத்தான் இருக்கு...:))
சங்கவி= ம்ஹும் என்னமோ போங்க சார்...:))))
ஜீவன்= யோவ் டிக்கெட் புக்பண்ணியாச்சான்னு கேக்கற மாதிரி கேக்கற...
ஹூசைனம்மா= ஹஹஹ... இந்த கால ராமராசன்:)) உங்க கிண்டலுக்கு ஒரு அளவே இல்லையா..:))
ஜலீலாக்கா= உண்மையிலேயே டவுட்டுத்தான் கேக்கறீங்களா? :))
இந்த மூஞ்சி என்னப்பண்ணாலும் அப்படித்தான் இருக்கும்...:)
கார்த்தி = இதுக்கு பதில் முதல் கமண்ட்ல இருக்கு கார்த்த:)
நன்றி அபதுல்
HIHI
Post a Comment