=========
பத்து பதினைஞ்சு மிரட்டல் கடிதங்கள் வந்த பிறகும் அம்மாவின் அதிரடி மதுரை கூட்டம் மிரளவைக்கிறது. அடேங்கப்பா என்னாக்கூட்டம். என்ன ஒரு பிரச்சனைன்னா கூட்டத்துக்கு வர்ற எல்லா மக்களும் ஓட்டுப்போடுவங்கன்னு இன்னும் அரசியல்வாதிங்க நம்ம மக்களை நம்புறாங்க. நம்ம மக்கள் ஆளைப்பாத்து ஓட்டுப்போட்டது
எம்.ஜீ.ஆரோ டப்போச்சு... இப்ப ஆளைப்பார்த்து இல்லை தாளைப்பார்த்துதான் ஓட்டு ( ப்ச் ரைமிங்ல பின்றடா பிரதாப்பு). ஆனாலும் அஞ்சாநெஞ்சனின் கோட்டையிலே இத்தனை கூட்டத்தைகூட்டிய அம்மா ஒரு தைரியலட்சுயேதான். அம்மான்னா சும்மா இல்லடா...
(கூகுள்ல அம்மான்னு போட்டா நம்ம அம்மாவை தராம ஒரு கேரள சாமியாரினி அம்மாவைக்கொடுக்கிறது. இது கண்டிப்பா திமுக=வின் சதியாத்தான் இருக்கும். இதுக்காகவே அடுத்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவுல கூகுள் கம்பெனி வாசல்லதான்டா...அங் )
=========
அடுத்த மாசம் அவசரமா ஒரு மும்பை ட்ரிப் போகலாம்னு இருந்தேன், இப்போ கேன்சல் பண்ணிட்டேன். நான் வழக்கமா தங்குற தாஜ்ஓட்டல்ல இந்தியாவுக்கு விசிட் வரும் ஓபாமா தங்கப்போறாராம்ல. ஒபாமா வந்தா ஒனக்கு என்ன? நீ ஒரு மூலைல ரூம் எடுத்து தங்கவேண்டியதுதானேனு கேட்டா, ஓட்டு மொத்த ஓட்டலையும் புக் பண்ணி வச்சுருக்கானுங்க அதுவும் ரெண்டு நாளைக்கு. அட போங்கடான்னு ட்ரிப்பையே நான் கேன்சல் பண்ணிட்டேன்.... நம்மள மதிக்காவனுங்களை நாம ஏன் சார் மதிக்கனும்...மதியாதார் வாசல் மிதியாதே.ஆங் சொல்ல மறந்துட்டேன் எங்க ஊரு கணபதி லாட்ஜ்குள்ளேயே நான் போனதில்லைங்க....எனக்கு தெரிஞ்ச ஒரே தாஜ் நம்ம டி.ஆர் அறிமுகப்படுத்துன நம்ம மும்தாஜ்தான். மலை மலை மலை மருதமலை...
=========
கட்டத்துரைக்கு சட்டம் தெரில இந்த கைப்புள்ளையோட மோதுறதே வேலையாப்போச்சு. காஷ்மீர் மாநிலம் இல்லாமல் இந்திய வரைபடம் வெளிவந்தது நினைவிருக்கலாம். அது நம்ம பங்காளி பாகிஸ்தானின் சதி வேலை, இப்போ பாகிஸ்தானின் பாடிகார்ட் சைனா தனது வரைப்படத்தில் அருணாச்சல பிரதேசத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறது. சப்பை மூக்கனுங்களுக்கு என்னாவில்லத்தனம். தமிழ்நாடு இல்லாத இந்திய வரைப்படத்தையும் யாராவது வெளியிடுங்கப்பா சீக்கிரம். அதுவும் நடக்கலாம், தமிழ்நாடு இல்லாத இந்தியவரைப்படத்தை ஆளும் மத்திய அரசு கொண்டுவந்தாலும் ஆச்சர்யப்படறதுகில்லை.
=========
யானையை மத்திய அரசு தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்திருக்கிறது. பார்யா... இந்த விசயம் மட்டும் யானைக்கு தெரிஞ்சுது கூட்டம் கூட்டமா தூக்கு போட்டு செத்துரும். யானை முகத்தை வச்சு பிள்ளையாருக்கு படையல் போடுவானுங்க. காடுகளில் கிடைக்காத தண்ணீருக்காகவும், சாப்பாட்டுக்காவும் உண்மையான யானை ஊருக்கு வந்தா கரண்ட் ஷாக் கொடுத்து விரட்டுவானுங்க, தெரு தெருவா பிச்சை எடுக்க வப்பானுங்க, அரைகிலோ உருண்டை சோத்துக்கு ஆயிரம் டன் மரத்தை தூக்கசொல்லுவானுங்க...போங்கய்யா நீங்களும் உங்க பாரம்பரியமும். என்னைக்கு புலியை தேசிய விலங்காக அறிவிச்சுாங்களோ அதுக்கப்புறம்தான் புலிகளின் எண்ணிக்கை குறையவே ஆரம்பிச்சுருக்கு....நல்லாருங்கடே
(நான் நாத்திகனும் அல்ல புர்ச்சியாளனும் அல்ல என்பதை இங்கு எடுத்து இயம்ப கடமைப்பட்டிருக்கிறேன்,)
=========


23 comments:
இந்தத்தடவை நொறுக்ஸ், நம்ம ராமலச்சுமி கடை பக்கோடா மாதிரி சூப்பரா இருக்கு. தாஜ்??? அய்யோ பாவம் :-)))))))).
@அமைதிசாரல் = ராமலட்சுமி கடை முறுக்கு பிடிக்காதா? ஐ லைக் இட்:))
//ராமலட்சுமி கடை முறுக்கு பிடிக்காதா?//
அய்ய...அதுக்கு, சிப்சும் பக்கோடாவும் ஆயிரம்தடவை பெட்டர் :-)))))
ஆஹா ரசிக்கக் கூடிய பதிவு ஒன்ற.. நன்றிகள்...
நொறுக்ஸை போட்டா போதுமா.. கடைக்கு(தமிழ்மணம்) அனுப்பாண்டாமா???. நானே அனுப்பிட்டேன் :-))
பிரதாப்பு அந்த சட்டைதான்(ராமராசன் சட்டை) போட்டோல போட்ருக்கறதா.. நல்லா இருக்கப்பு :)
---
அம்மாக்கு கூடின கூட்டம் கிராபிக்ஸின்னு மயில்ராவணன் மாம்ஸ் சொல்றாப்ல.. கொஞ்சம் என்னான்னு கேளுங்கப்பு :)
எல்லா மேட்டரையும் ரொம்ப சுவையா சொல்லுறீங்க..
என்னால அந்த அளவுக்கு சொல்ல முடியாது..
நொறுக்ஸ் டேஸ்டாத்தான் இருக்கு!
செம ஃபார்ம்ல இருக்கீங்க போல..
ஆள..தாள அப்புறம் தாஜ்ஹோட்டல்.. மேட்டர்..
ப்ரொபைல்ல போட்டோ மாத்திட்டீங்க போல :).
//அந்த சட்டையின் அருமை பெருமைகளை இங்கே அறிந்து கொள்ளவும்.//
அங்க ஏன் போகணும்? ஃப்ரொஃபைல் ஃபோட்டோவுலய ஜிங்குச்சா பாடுறீங்களே!!
//காஷ்மீர் மாநிலம் இல்லாமல் இந்திய வரைபடம்//
போன வாரம்,மகன் கேட்டான்னு இந்தியா மேப் பிரிண்ட எடுத்துக் கொடுத்தேன். அதைப்பாத்துட்டு, அப்பாவும், புள்ளையும் என்னைக் காறித்துப்பாத குறைதான், இதுகூடத் தெரியலையான்னு. நெட்டிலயும் அப்படி மேப்புகள் வலம் வருதுன்னு நான் என்னத்தக் கண்டேன்!! :-((
தேசிய பாரம்பரிய விலங்கு - யானை...இந்த மேட்டர் முதல்ல சிரிக்க வெச்சது. ஆனா யோசிச்சு பார்த்ததும் ரொம்பவேதனை. கரண்ட் ஷாக் ஒருபக்கம். யானையோட பாதையில ரயில் டிராக்க போட்டு ரயில்ல அடிபட்டு சாகுறது ரொம்ப கொடுமையான விஷயம்.
தாக்குங்க...தாக்குங்க ...
கூகுள்ல அம்மான்னு போட்டா நம்ம அம்மாவை தராம ஒரு கேரள சாமியாரினி அம்மாவைக்கொடுக்கிறது. இது கண்டிப்பா திமுக=வின் சதியாத்தான் இருக்கும். இதுக்காகவே அடுத்த ஆர்ப்பாட்டம் அமெரிக்காவுல கூகுள் கம்பெனி வாசல்லதான்டா...அங்
Avanga pera koduthu search panna kooda vera silarin vivagaramana image yellam varuthu...
அடடா,
பின்ற மக்கா
அண்ணன் நான் மும்பைல இருக்கேம்லாடே, ஒபாமா என்ன ஒபாமா, அவுரு தங்குற ஓட்டல் முன்னாலேயே டெண்ட அடிச்சி குருங்கட்டி பலகையில சம்பளம் போட்டு உக்காந்துருவோம்....கவலையே படாதே மக்கா.......கிளம்பி வா ஆங்.
I just gone thro ur post about Ramarajan Shirt. After MGR movie songs the next maximum good and nice songs were from Ramarajan & Mohan. Rajni , Kamal & Sivaji songs could not match with them
நொறுக்ஸ் ஒவ்வொன்னும் கலக்ஸ். Keep it up, பிரதாப்!
உடன்பிறப்பே.. மதுரையில் நடந்த கூட்டம், கூட்டமே அல்ல.. பக்கத்து திரையரங்கில் எந்திரன் பார்த்து விட்டு வெளிவந்த மக்கள் கூட்டத்தை, மாநாட்டுக்கூட்டம் என்று ஒரு கும்பல் புறம் பேசித் திரிகிறதடா கண்மணி.. வஞ்சகரின் வலையில் வீழ்ந்துவிடாதேயடா எனது வெண்மணீ..கண்கள் பனித்தன... உதடுகள் இனித்தது... வாய் வலித்தது.. வயிறு கலக்கியது
கண்டிப்பாக நீங்க zeole.com/chennai க்கு வந்து, எதாவது எழுதணும்.
பாரம்பரிய விலங்காக் அறிவிச்சதுக்கு பதிலா, இனி பாதுகாக்க வேண்டிய விலங்கா அறிவிச்சு இருக்கலாம். யானை மட்டுமில்ல, நம்ம நாட்டுக்குன்னு ஸ்பெசலா இருக்கற இன்னும் பல வாயில்லா ஜீவன்களையும் :(
மொறு மொறுனு இருக்குதே.....
ம.தி.சுதா =நன்றி
அமைதிச்சாரல்= ஃப்ரீயா, சுவையா நொறுக்ஸ் சாப்பிட்டு போகாம இப்படி கொஞ்சம் வேலை செய்யுங்க..:)
ராம்சாமி= இது ராமராஜன் ஷர்ட் இல்லை ராமராஜன் டீஷர்ட் :))
நன்றி மாதவன் = ஓட்றீங்களா பாராட்டுறீங்களான்னே தெரியலயே...
நன்றி=எஸ்கே
நன்றி பின்னோக்கி= புரஃபைல் போட்டோவை மாத்தல...சட்டையை மட்டும் மாத்திருக்கேன்..:)
ஹுசைனம்மா= வாழ்க்கை கலர்ஃபுல்லா இருக்கனும்னு சிம்பாலிக்கா சொல்ற போட்டோ அது.
//அப்பாவும், புள்ளையும் என்னைக் காறித்துப்பாத குறைதான், // பல்பு வாங்கறது நமக்கென்ன புதுசா...:))
நன்றி சரண்
நன்றி செந்தில் ஜீ
கிருஷ்= அப்போ ஆர்ப்பாட்டம் கன்பார்ம்ட்...:))
நன்றி கார்த்தி
நன்றி மோகன்= மக்கள் நாயகன் வாழ்க :))
நன்றி பெ.சொ.வி. சார் :)
தி கிட்= என்னை நம்பாதீங்க...கிட்...:))
நன்றி அன்னு
நன்றி சித்ரா
Post a Comment