70, 80 களில் இந்திபட உலகில் இசையை ஆக்கிரமிருத்திருந்த ஆன்ந்த்ஜி கல்யாண்ஜி, பப்பி லஹரி போன்றவர்கள் தொடங்கி வைத்த இந்த டப்பாங்குத்து இசை 90 களில் ஆக்கிரமித்த நதீம் ஷ்ரவன்,அனு மாலிக் போன்றவர்களாலும் மாறாமல் இருந்தது. இசைப்புயல் நுழைந்தபோது டப்பாங்குத்துக்கு மாற்றாக அவர் கொடுத்த பல நுனுக்கமான வித்தியாசமான இசையே அவருக்கு இந்திபட உலகிலும் தனி இடத்தைப்பெற்றுத்தந்தது. இல்லையென்றால் தென்னிந்திய கலைஞர்களை அவர்கள் அங்கே வளரவிடுவது அபூர்வம்.
கமல் அங்கே காலூன்ற நினைத்து தோற்கடிக்கப்பட்டதுதான் நிஜம். இத்தனைக்கும் அவர் நடித்த சத்மா, சனம் தேரி கசம், ஏக் துஜே கேலியே போன்றவை பெரிய வெற்றிப்படங்கள். நடிகைகளுக்கு மட்டும் இது விதிவிலக்கு. நடிகைகளின் மார்க்கெட்டிற்க்கு ஆயுட்காலம் குறைவு என்பதால் கூட இருக்கலாம்.
இப்போது இருக்கும் ஹீமேஷ் ரேஷ்மயா, சாஜித் வாஜித்,மற்றும் ப்ரிதம் போன்றவர்கள் உலக இசையை காப்பி அடிச்சாவது அந்த ட்ரென்டை கொஞ்சம் மாற்றும் முயற்சியை செய்கிறார்கள்.
எனக்கு ஒரு ஆசை இந்த டப்பாங்குத்து இசையமைக்கும் இசையமைப்பாளர்களுக்கு இசைஞானி இசையைமத்த ஏதாவது ஒரு பாடலை போட்டு கேட்கவைக்கவேண்டும். பின்னணி இசை என்றால் என்ன என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். வட இந்திய கலாச்சாராத்துக்கு இசைஞானியின் இசை பொருந்தாது என்றுகூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. இளையராஜா இசையமைத்த பல Super Hit இந்திப்பாடல்களே இதற்கு சாட்சி.
இளையராஜா இசைமைத்த அருமையான பின்னணி இசை அமைந்த ஆயிரக்கணக்கான பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல், வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே. ஜெயசந்திரனும், வாணி ஜெயராமும் பாடியது. இந்தப்பாடலை கொஞ்சம் அனுபவித்து கேட்கும்போது பாடலின் கம்போஸ் செய்யப்பட்டு விதம் நம்மை ஆச்சர்யப்படவைக்கும்.ஒரு சிறிய மணியோசையில் ஆரம்பிக்கும் பாடல் ஜெயசந்திரனின் குரலுடன் இணைந்து ஊடே ஒரிரண்டு நொடிகள் வரும் நுணுக்கமான புல்லாங்குழல் ஒலியும் பின் அதன் நீட்சியாக வரும் வீணையின் இன்னிசையும்....விவரிக்க வார்த்தைகளே இல்லை. வாணி ஜெயராமின் குரலும், பாடல் முழுவதும் வீணையை வைத்து திருவிழாவே நடத்தியிருக்கும் அழகு, இசைஞானியை தவிர யாராலும் யோசிக்க முடியாத நோட்ஸ் என்றே சொல்லுவேன்.
இந்தப்பாடல் என் தந்தைக்கும் மிகவும் பிடித்த ஒருபாடல். எங்களுடன் இல்லாத தந்தையை இதுபோன்ற பாடல்கள் கண்முன்னே கொண்டுவருகிறது. சில பாடல்கள் பொழுதுபோக்குக்காக என்றவிசயத்தையும் தாண்டி நமது வாழ்க்கையின் அழியாத சில நினைவுகளாகவும் மாறிவிடுகிறது. ராகதேவனுக்கு எனது நன்றிகள்.


21 comments:
சுட்டியில் தரப் பட்டிருக்கும் இரண்டு பாடல்களுமே நல்ல பாடல்கள். சாஜனில் 'மேரா தில் பீ', 'பஹத்து பியார் கர்த்தே ஹை' போன்ற பாடல்கள் மெலடி வகையை சேர்ந்தவைதானே... எழுபது எண்பதுகளில் ஆக்கிரமித்திருந்த கல்யாண்ஜி ஆனந்த்ஜி, பப்பி லஹரி சரி... ஆர் டி பர்மன், எஸ் டி பர்மன், சலீல் சவுத்ரி, கையாம், ராஜேஷ் ரோஷன் போன்ற மெலடி கிங்குகள் அங்கும் உண்டு.
உங்கள் பதிவு கேட்கத் தூண்டுகிறது.....
இந்த பதிவுக்கு வேற என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியல...
ஹிந்தி பாட்டு எனக்கு அவ்வளாவா தெரியாது. ஏதோ முன்னாடி ரங்கோலினு போடுவாங்க.அதுல பார்க்கிறதோட சரி..
ரஹ்மானின் பெரும்பாலான ஹிந்தி பாடல்கள் மட்டுமே என்னிடம உள்ளது. அப்பறம் கொஞ்சம் கிஷோர்,ரஃபி அவ்வளவே.
பப்பி லஹரி பாடல்களில் இருக்கும் beatஎனக்கு ரொம்ப பிடிக்கும்.
எனக்கு கொஞ்சம் இசையை பற்றிய அறிவு கொஞ்சம் கம்மி தான்..... இருந்தாலும் உங்கள் பதிவு எனது அப்பா விரும்பி கேட்கும் சில பாடல்களை எனக்கு நினைவு படுத்துக்கிறது....
தென்னிந்தியர்களை இங்கே உள்ளவங்க வளர விடறதில்லைங்கிறது என்னவோ உண்மைதான்.ஆனாலும், இளையராஜா கிடைச்ச வாய்ப்பையும் வீணடிக்கிறார். 'சீனிகம், பா' போன்ற படங்களே சாட்சி. தமிழ்ப்படங்களில் கேட்டுக்கேட்டு புளிச்சதை இங்கே பரிமாறுறார். புதுச்சரக்குகளை எடுத்துவிட்டு இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் வயித்துல புளியை கரைக்க வேணாமா :-))
//ஆனாலும், இளையராஜா கிடைச்ச வாய்ப்பையும் வீணடிக்கிறார். 'சீனிகம், பா' போன்ற படங்களே சாட்சி. தமிழ்ப்படங்களில் கேட்டுக்கேட்டு புளிச்சதை இங்கே பரிமாறுறார். புதுச்சரக்குகளை எடுத்துவிட்டு இங்கே உள்ள இசையமைப்பாளர்கள் வயித்துல புளியை கரைக்க வேணாமா :-))//
Balakrishnan (Balki), director of Cheeni Kum and Paa is a big fan of Ilaiyaraja. In his earlier profession as adman, he has used Raja's music in many ad jingles. He was particular to introduce the Tamil melodious hits of Raja to North India. And hence re-used those tunes. On his request, Raja improvised the orchestra to suit the north indian palate.
Hope this helps.
தல.. நீங்க இந்த போட்டில கலந்துக்கலையா?
நா எழுதிய சிறுகதைய இங்க வந்து படிக்கவும்.. (மறக்காம காமேண்டும், இன்ட்லிய ஓட்டும் போடுங்க..)
எனக்குப்பிடித்தது.. கோழி கூவுது, படத்தில் வரும் ஏதோ மோகம்... ஏதோ தாகம்....எந்த சிம்பனிக்கும் குறையாத பாடல் இது.
ஹிந்தி சுத்தமாக தெரியாது! ஏதோ இசை கேட்க வைக்குது! ஆனா பாடல்கள் எல்லாமே நல்லாயிருக்கு!
Unmaithaan Thala.....
இன்பத்தில் ஆடுகிறது மனசு ...
nice songs
மனதில் கவலை அப்பியிருக்கும்போது, இளையராஜா பாடல்கள் தான் அதை துடைத்தெறியும். '"மெட்டி ஒலி காற்றோடு " என்ற பாடல் என் ஆல் டைம் பேவரிட்.
இந்தப் பாடல்தான் எனக்கும் மிக மிக பிடித்த பாடல். எப்பொழுதாவது தனிமையாய் தோன்றினாலோ அல்லது மனம் சரியில்லை என்றாலோ இந்தப் பாட்டுதான் வாயில் சலசலக்கும்.
//மாவிலை தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ...//
இந்த வரிகள் வரும்போது மனம் தன்னையறியாமல் துள்ளும் நிலைக்கு செல்வது இதன் வெற்றியே :)
நன்றி அந்த காணொளிக்கும். :)
இளையராஜா எண்பதுகளிலும் எழுபதுகளிலும் இசையமைத்த பாடல்களுக்கு நான் அடிமை...
ஹிந்தியில், பின்னணி இசை பட்டையைக் கிளப்பும் பாடல்கள் ஏராளம் உண்டு. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அந்த ஹிந்திப் பாடல் இணைப்பு கொடுத்தபின், ப்ரு பதிவையும் எழுத ஆரம்பித்து, அது பாதியில் நிற்கிறது... அதை முடித்துவிடுவேன் :-)
இளையராஜாவின் அற்புதங்கள் குறித்து விரைவில் ஒரு பெரிய பதிவு வரும் :-)
ஹிந்தினாலே நமக்கு எட்டாத மொழிதான்.. ஆனால் நீங்கள் அதற்கு இணையான தமிழ்ப் பாடல்களை சொல்லியிருப்பதால் புரிய முடிகிறது.. :)
இரண்டு பாடல்களும் நல்ல பாடல்கள் ... வாழ்த்துக்கள் '
இதையும் கொஞ்சம் உணர்ந்துகொள்வோம் ..இதுவும் ஆயுத பூஜை தான்
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
இளையராஜா இந்திப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறாரோ?
\\
எனக்கு ஒரு ஆசை இந்த டப்பாங்குத்து இசையமைக்கும் இசையமைப்பாளர்களுக்கு இசைஞானி இசையைமத்த ஏதாவது ஒரு பாடலை போட்டு கேட்கவைக்கவேண்டும். பின்னணி இசை என்றால் என்ன என்பதை அவர்களுக்கு புரியவைக்க வேண்டும். வட இந்திய கலாச்சாராத்துக்கு இசைஞானியின் இசை பொருந்தாது என்றுகூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. இளையராஜா இசையமைத்த பல Super Hit இந்திப்பாடல்களே இதற்கு சாட்சி\\\
ரீப்பிட்டிக்கிறேன் ;))
கலக்கல் பதிவு மாப்பி ;)
Thanks dear buddy!
Welcome to : amazingonly.com
by
TS
வட இசையாளர்களை குறை சொல்ல முடியாது என்றாலும், நம்ம ராஜா என்றுமே ராஜா என்பதும் உலகறிந்தது. ஆனால் வட இந்தியர்கள், தென் இந்தியர்களை அவ்வளவா ஏற்றுக் கொள்வதில்லை!!!
உதாரணம், ஜேசுதாஸ், ஹிந்தியில் அவர் பாடின பாடல்கள் எல்லாம் செம ஹிட். மக்கள்[வட] ஏற்றுக் கொண்டனர் கொண்டாடினர், ஆனால் அங்கே உள்ள சினிமா பிரபலங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை!!!
Post a Comment