Monday, September 27, 2010

மெகாசீரியல் கொடுமைகள்

சமூகம் எத்தனை வேகமாக முன்னேறினாலும் அதை இழுத்துப்பிடித்து நிற்பாட்டுவதற்கு பல காரணிகள் இருக்கிறது. அதில் ஒன்று இந்த மெகாசீரியல் அதாவது கலைஞர் டிவி பாஷையில் சொன்னால் நெடுந்தொடர். ஒரு காலத்தில் விசு, அவருக்குப்பின்னர் வி.சேகர் போன்ற இயக்குனர்கள் தியேட்டரில் காட்டிக்கொண்டிருந்ததை இப்போது வீட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.

என்னைக்கேட்டால் மூளையை மழுங்கடிக்கும் இந்த மெகாசீரியல்கள் பெண்களுக்காகவே தயாரிக்கப்படுகிறது. காரணம் பெண்களுக்கே உள்ள இளகிய மனம் மற்றும் அடுத்தவீட்டில் என்ன நடக்கிறது என்ற தெரிந்து கொள்ளும் ஆர்வம்(curiosity). இது குயில் மயில் கூட்டில் முட்டையிடுவது மாதிரியான ஒரு பிறவிகுணம்(instinct). இதற்காக என்னை ஆணாதிக்கவாதி என்றாலும் பரவாயில்லை. ஆனால் உண்மை இதுதான். நான் எல்லாரையும் சொல்லவில்லை. மெகாசீரியல்களை வெறுக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.


சில வருடங்களுக்கு முன்பு அதாவது இந்த தனியார் டிவி சானல்கள் வருவதற்கு முன்பு சாயங்காலம் குடியிருப்பு பகுதிகளுக்குச்சென்றால் அக்கம் பக்கத்துவீட்டுப்பெண்கள் வீட்டுவாசலில் அமர்ந்து ஒன்றுசேர்ந்து கதைபேசுவதை பார்க்கமுடியும். இன்னிக்கு என்ன கறி, குழம்பு என ஆரம்பித்து பத்துகிலோ மீட்டர் அந்தப்பக்கம் உள்ள ஒரு பொண்ணுக்கு டைவர்ஸ் ஆன கதை போன்ற நாட்டுக்கு மிகமுக்கியமான பல கருத்துக்கள் அங்கு விவாதிக்கப்படும்.
இதைத்ததான் இந்த சின்னத்திரை இயக்குனர்கள் மெகாசீரியலில் சரியாக பயன்படுத்திருக்கிறார்கள். வெளில இருந்து ஏன் பேசுறீங்க வீட்டுக்குள்ள வாங்க என்று மெகாசீரியலை ஆரம்பித்தார்கள்.



90 களில் தூர்தர்ஷனில் மந்திரா பேடி நடித்த ஷாந்தி, ஜூனுன்,
வக்த் கி ரஃப்தார் போன்ற இந்தி சீரியல்களில் தொடங்கிய தொற்று வியாதி மெல்ல மெல்ல தமிழிலிலும் மொழிமாற்றி வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். தமிழ் அகராதியிலேயே இல்லாத வாக்கிய அமைப்புகளை வைத்து தமிழில் மொழிமாற்றம் செய்து தமிழை சிதைத்த ஜூனுன் தமிழ் என்பது மிகபிரபலம்.


எந்த மெகாசீரியலாவது அறிவியல் சம்பந்தப்பட்ட, ஆக்கப்பூர்வமான விசயங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறதா? சோத்துல விஷத்தை வைக்கிறேன்டி, ஒம்புருஷனை உங்கிட்டேருந்து பிரிக்கிறேன்டி, வீட்டைப்பிரிக்கிறேன்டி, சொத்தைப்பிரிக்கிறேன்டினு மேக்கப்போட்டுட்டு கொடுரமான டயலாக்குகளை பேசும் பெண்களை பார்க்கும்போது அதை தன்வீட்டில் நடப்பதாகவே கற்பனை செய்து உச் கொட்டுகிறார்கள். பலபெண்கள் தனக்கும் இதுபோன்ற நடக்குமோ என கற்பனை செய்துகொண்டு மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

பல வீடுகளில் சன்டிவியில் ஏழு மணிவரை நிழ்ச்சிகள் பாப்பவர்கள் சரியாக ஏழரை வரை சன்டிவி பக்கம் போவதில்லை காரணம் ஏழு முதல் ஏழரை வரை செய்திகள். அதை எவன் பார்ப்பான்? செய்திகளைப் பார்த்தால் உலகஞானம் வந்துடுமே அது ரொம்ப தப்பாச்சே. ஒரு தொடர் ஒடிக்கொண்டிருக்கும்போதே அதில் விளம்பரம் வரும்போது மற்ற சானலில் வரும் தொடரையும் பார்க்கிறார்கள். இந்தசானலில் புருசனாக வந்தவன் மற்ற சானலில் சகோதரனாக வருகிறான். இந்த சானலில் செத்துப்போனவன் அந்த சானலில் கல்யாணம் செய்கிறான்...கொஞ்சநேரம் பார்த்தால் மண்டை காய்ந்துவிடும். முக்கியமான காட்சியில் தொடரும் போட்டுவிட்டால் அந்த சானல் உரிமையாளர் பலமாக டேமேஜ் பண்ணப்படுவார்.


கஸ்தூரி என்ற ஒரு மெகாசீரியல் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் கதையை எடுத்து இரண்டு மூன்றுவருடங்களுக்கு மேலாக ஓட்டுகிறார்கள். நான் துபாய் வருவதற்கு முன்பே ஆரம்பித்தது என நினைக்கிறேன். போனவருசம் சென்றபோது பார்த்த ஒரு எபிசோடும் இந்தவருசம் போனபோது போன பார்த்த ஒரு எபிசோடும் ஏதோ நேத்து பார்த்த எபிசோட்டின் தொடர்ச்சியாகவே தெரிகிறது. திரைக்கதையில் அப்படி ஒரு வேகம்(?!!).


நீயுமா மெகாசீரியல் பார்க்க ஆரம்பிசுட்டியான்னு என்னை கேட்டா...
வேற வழி? இருக்கறது ஒரு ரிமோட் தானே அதுவும் 10 மணிவரை எங்க இருக்குன்னு கண்டுபிடிக்கறதுக்கு சி.பி.சி.ஐ.டி.யைத்தான் கூட்டுட்டு வரனும். ஆனா சேனல் மட்டும் சரியா சீரியல் உள்ள சேனலா மாறிட்டு இருக்கும். அந்த ரகசியம் மட்டும் எப்படின்னே தெரில...


நம்ம பணத்துல நமக்கே வாங்கிகொடுத்து அதை இலவசம்னு சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கும் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் என்றால் இந்த மெகாசீரியல்கள் மற்றொரு பக்கம். நாட்டின் மிகவலிமையான சக்தியான பெண்கள் அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என அறியாமல் மெகாசீரியல்களில் மூழ்கி கிடக்கிறார்கள். இந்த நிலை கண்டிப்பாக மாறவேண்டும்.


மெகா சீரியல்கள் பலபேருக்கு சோறுபோடுகிறதே?
மெகாசீரியல்கள் ஒன்றும் விவசாய தொழில் அல்ல. விளைநிலங்களை அழித்தால் விவசாயம் குறையும் உணவு உற்பத்தி குறையும் பட்டினி அதிகரிக்கும் என்று சொல்வதற்கு.

மெகா சீரியல்களை ஒழித்தால் நாடு முன்னேறிடுமா ?

மெகாசீரியல் வரும் நேரத்தில் குறைந்த பட்சம் ஒரு குடும்பமாவது சானல்களில் வரும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியையோ, நாட்டுநடப்புகளையோ
(ஜெயா செய்திகள், கலைஞர் செய்திகள் இதில் வராது) பார்த்தால் அதுவே பெரிய வெற்றிதான்.



31 comments:

இராமசாமி கண்ணண் said...

என்னமோ சொல்றீங்க ... போங்க....

ஜீவன்பென்னி said...

ஐயோ கொடுமையே............ மாம்ஸ் நீ இவ்வளோ கொடுமைலயா வாழ்ந்துகிட்டிருக்க........

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கரெக்டா சொல்லிருக்கீங்க பிரதாப். பெண்கள் இன்னும் அந்த சீரியல் என்ற மாயையிலிருந்து வரமாட்டேன்ங்கிறார்கள். என்றைக்குதான் மாறுமோ தெரியலியே..

நல்ல பகிர்வு.

kavisiva said...

அய்யோ உண்மையை இப்படி போட்டு உடைக்கறீங்களே!

சீரியலா எனக்கும் அதுக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம். நல்ல வேளை எங்க வீட்டிலும் இப்போ யாரும் பார்ப்பதில்லை. முன்னாடி மெட்டி ஒலி, கோலங்கள் னு பார்த்துக்கிட்டு இருந்தாங்க. எத்தனை வருஷம் கழிச்சு ஊருக்குப் போனாலும் கதை(?!) நமக்கு நல்லாவே புரியும்.


கொடுமை என்னன்னா அந்த சீரியல் கொடுமைகளை எல்லாம் பார்த்துட்டு அதைப்பற்றி விவாதம் வேற நடக்கும். இந்த விவாதம் இணைய தளங்களில் கூட நடப்பது அதை விடக் கொடுமை :(.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இதையே ஒரு சீரியலா எடுக்கலாமே..

ஷண்முகா said...

மிகச் சரியான பதிவு பிரதாப் ......திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல மக்களாகப் பார்த்து திருந்த வேண்டும்.....எவ்வளவோ நல்ல விஷயங்களில் நேரத்தைச் செலவிடலாம்.

என்னது நானு யாரா? said...

ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கிறதும், வன்முறையில இறங்குறதும். அப்ப்பா! ரொம்ப கொடுமை!

இந்த கோபம், ஆக்ரோஷம், வன்மம், நடிப்புல வர்றதுக்கு, நடிகைங்க கூட தண்ணிப் போட்டுட்டுத் தான் நடிக்கிறாங்களாமே!

என்ன கொடுமைங்க! பெண்கள் ஏன் தான் இப்படி சீரியல் பள்ளத்தில விழறாங்களோ தெரியலையே?

ஜாக்கி சேகர் said...

நல்ல அலசல் நாஞ்சில் முக்கியமா கோபுரங்கள் சாய்வதில்லை கஸ்தூரி.. சூப்பர்.

ஜாக்கி சேகர் said...

மெகாசீரியல் வரும் நேரத்தில் குறைந்த பட்சம் ஒரு குடும்பமாவது சானல்களில் வரும் ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சியையோ, நாட்டுநடப்புகளையோ
(ஜெயா செய்திகள், கலைஞர் செய்திகள் இதில் வராது) பார்த்தால் அதுவே பெரிய வெற்றிதான்.//

செம பஞ்ச் இதுதான்

நாடோடி said...

சீரிய‌ல் கொடுமை, ரெம்ப‌ கொடுமைதான் பிர‌தாப்பு.. ம‌க்க‌ள் மாற வேண்டும்.

Jaleela Kamal said...

இப்ப எல்லாம் இந்த் மெகா சீரியலை
பேச்சுலர்ஸ் தான் தொடர்ந்து பார்க்கிறார்களாம்.

ஒரு கதைய ஒரு வாரத்துக்கு ஒரு முறை பார்த்தால் போதும் போல
5 வருடத்துக்கு ஓட்டி, அவர்களும் பெருத்து உட்கார்ந்து பார்ப்பவர்க்ளையும் பெருக்கவைத்து விடுகிறார்கள்.
அதோடு இரண்டு முன்று பிள்ள குட்டியும் சேர்ந்து ஆச்சு

எஸ்.கே said...

எங்க அம்மா சீரியலை பார்த்துட்டு அதில் வரும் கேரக்ட்ருக்காக அழுவுவாங்க. வில்லி கேரக்டர பயங்கரமா திட்டுவாங்க தெரியுமா! இந்த சீரியலுக்காக என் தம்பிங்களுக்கும் அம்மாவுக்கும் பயங்கர சண்டையே வரும். நம்மளும் அதை பார்க்க ஆரம்பிச்சு டைமுக்கு அந்த சீரியல் அப்படின்னு மைண்ட் செட்டாயிடுச்சு சார்!

Madhavan said...

அப்போ, நாகூட மெகா சீரியல் எடுத்து விட்டா.. நல்லா பணம் சம்பதிக்கலா முங்களா ? அட இது தெரியாம வெட்டியா இங்கிட்டு (ப்ளாக்) டயத்த வேஸ்டு பண்ணிக்கிட்டு இருக்கேனே..

கே.ஆர்.பி.செந்தில் said...

நான் தமிழ் டிஸ்கவரி சேனல் ரசிகன் ...அதனால் இந்த சீரியல் குப்பைகளை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை ...

ப.செல்வக்குமார் said...

//ஒரு தொடர் ஒடிக்கொண்டிருக்கும்போதே அதில் விளம்பரம் வரும்போது மற்ற சானலில் வரும் தொடரையும் பார்க்கிறார்கள்//

இந்த அளவுக்கு அறிவாளியா இருக்காங்கல்ல , அத பார்த்து சந்தோசப் படுறத விட்டுட்டு குறை சொல்லிக்கிட்டு இருக்கீங்க .. ஹி ஹி ஹி ..

அப்துல்மாலிக் said...

ஒவ்வொருவரும் முடிந்தவரை தன் மனைவி/சகோதரிகளை திருத்தினாலே இந்த மாதிரி சீரியல்களை ஒழிக்கலாம். இதன் மவுஸு கூடிப்போய் பெரிய திரையிலிருந்து சின்னத்திரைகு படையெடுப்போர் அதிகம். இதன்மூலம் வியாபார ரீதிய்ல் மெகாசீரியல் வெற்றியடைகிறது.

என்னத்த சொல்லுறது.....

ஹுஸைனம்மா said...

எல்லாரும் கேட்டுக்கோங்கப்பா. பெண்கள்தான் சீரியல் பாக்குறாங்களாம். இவுருக்குப் பிடிக்காதாம். ஆனா, எல்லா சீரியல்களோட கதைகளும் தெரியுமாம் இவருக்கு. அதுவும் எந்த சீரியல் எந்தப் படக்கதைன்னு ஒப்பிடுவாராம். இப்பப் பாத்த எபிஸோட், போஓஓஓன வருஷ எபிசோட் மாதிரியே இருக்குன்னு கூட கரிக்டா கண்டுபுடிச்சு சொல்லுவாராம். ஆனா இவுருக்கு சீரியல் பிடிக்காதாம். கேட்டுக்கோங்கப்பா.

எந்தப் பெண்ணாவது சீரியல் பத்தி பதிவு எழுதிப் பாத்திருக்கீங்களாப்பா? ஆனா இவரைப் போல ஆண்கள் அதைத் திட்டிகிட்டே கதை விமர்சனம் எழுதுவாங்க!!

போங்க, போய் பேச்சுலர்ஸ்கிட்ட (அதுவும் லேபர் கேம்புகளில்) கேளுங்க. சீரியல் பைத்தியம் பெண்களைவிட இவங்ககிட்டதான் ஜாஸ்தி!!

ஹுஸைனம்மா said...

//இந்த தனியார் டிவி சானல்கள் வருவதற்கு முன்பு சாயங்காலம் குடியிருப்பு பகுதிகளுக்குச்சென்றால் அக்கம் பக்கத்துவீட்டுப்பெண்கள் வீட்டுவாசலில் அமர்ந்து ஒன்றுசேர்ந்து கதைபேசுவதை பார்க்கமுடியும். .... வெளில இருந்து ஏன் பேசுறீங்க வீட்டுக்குள்ள வாங்க என்று மெகாசீரியலை ஆரம்பித்தார்கள்.//

இதுதான் கோவத்துக்குக் காரணமா? :-))))))))

அப்புறம் என்னாத்துக்கு குயில், மயில் கதையெல்லாம் சொல்லிகிட்டு...?

subra said...

நாங்க நிம்மதியா நாசமா போக விடமாட்டிங்க
போல இருக்கு

Cool Boy கிருத்திகன். said...

ப்ளாக்ல பந்தாவா சொல்லீட்டீங்க..
இதயோ போய் யாராவது ஆன்டி கிட்ட சொல்லிப்பாருங்க.. பல்லு பேந்துரும்..

பின்னோக்கி said...

நீங்க வேற, சீரியல்ல வர்ற வசனத்தை ம்யூட் பண்ணிட்டு, பேக்கிரவுண்ட் இசையைக் கேட்டீங்கன்னா ஹார்ட் அட்டாக் வந்துடும். ஜீராசிக் பார்க் படத்துலக் கூட இப்படி ஒரு டாஷ்..டும் சவுண்ட் வந்துருக்காது...

கருந்தேள் கண்ணாயிரம் said...

என்னாது மெகா சீரியல் தப்பா? யாய்ய்ய்ய்ய்ய்... அல்லா ஆண்ட்டிகளும் ஒண்ணு கூடுங்க.. கிளம்புங்க நாஞ்சிலைத் தேடி... அடி பிரிக்கணும்..

ராம நாராயணன் வாழ்க.. வி. சேகர் வாழ்க.. ராதிகா வாழ்க.. திருச்செல்வம் வாழ்க.. மெகா சீரியல் புகழ் ஓங்குக...

கருந்தேள் கண்ணாயிரம் said...

உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது

varagan said...

வாழ்த்துக்கள் பல

நமது கலாட்சாரத்தை எப்படியும் மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் எடுத்து இருப்பது இந்த மொகாசீரியல்கள் மட்டும் அல்ல வேறு நிகழ்ச்சிகளும் இதில் அடக்கம்.

நல்ல பதிவு.

மக்கள் டிவி மட்டும் இதற்கு விதிவிலக்கு

நன்றி

வராகன்.

நாஞ்சில் பிரதாப் said...

நன்றி ராம்சாமி சாரி..நன்றி ராகவன் ஐபிஸ்:)

நன்ற பென்னி=போய்யா யோவ் உன்கிட்டப்போய் சொன்னம்பாரு...:)

ஸ்டார்ஜன்=நீங்களும் நிறைய பார்ப்பதா அக்பர் சொன்னாரே உண்மையா குரு...

கவி=சீரியலே பார்க்மாட்டீங்களா...நம்பிட்டேன்..:)

ரமேஷ்=அய்யா ராசா ரொம்ப நன்றி போய்ட்டு வாங்க:)

நன்றி சாப்ளின்=வார்த்தையாலே வன்முறைகள் நடத்துவாங்க பாஸ் தாங்காது...

ஷண்முகா=என்னது மக்களா பார்த்து திருந்தறதா...நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க சார்?

நன்றி ஜாக்கி ஜி..:)

நன்றி ஸ்டீபன்

நாஞ்சில் பிரதாப் said...

நன்றி ஜலீலாலாக்கா= என்னது பேச்சலஸ் பார்க்கறாங்களா? யாரோ உங்களுக்கு ராங் இன்பமேஷசன் கொடுத்துருக்காங்க...உசைனம்மா கூட இனி சேராதீங்க...:))


எஸ்கே= நீங்களுமா ? அம்மாவுக்காக இவ்ளோ பெரிய தியாகம் பண்றீங்களே கிரேட் சார்...:))

மாதவன்= சார் நீங்க நல்லவரா ? கெட்டவரா??

செந்தில்=நீங்க ரொம்ப டீசனட் செந்தில் ஜி. அதாவது நம்ம கேட்டகிரி:)

செல்வகுமார்=யோவ் நான் குமுறிகிட்டு இருக்கேன் நீ கும்மி அடிக்கியா--?பிச்சுடுவேன்:)

அப்து்ல மாலிக்= கரிட்டா சொன்னீங்க பாஸ்...:)

நாஞ்சில் பிரதாப் said...

உசைனம்மா = ஒருவிசயத்தை பத்தி எழுதனும்னா அதை கொஞ்சம் ஸ்டடி பண்ணிட்டு எழுதனும். அதைத்தான் நான் எழுதிருக்கேன். உடனே நான் சீரியல் பார்க்கறவன்னு சொல்லிடறதா?
நீங்க ஒரு சீரியல் ரசிகைன்னு இப்போ கன்பார்ம் ஆயிடுச்சு.... யப்பா என்ன கோபம் வருது...?:)

வெளிநாடு வாழ் தமிழர்கள் அதுவும் லேபர்கேம்ப்ல் உள்ளவங்களை இந்த லிஸ்ட்ல சேர்க்கமுடியாது. ஊரூல மாதிரி வேற ஏதாச்சும் உருப்படியான விசயங்களை லேபர்கேம்புல உக்காந்து பண்ணமுடியுமா? டிவியே கதின்னு இருக்கவேண்டியதுதான். நான் ஊர்கதையை சொல்றேங்க, நீங்க துபாய் கதையை சொல்றிங்க... போங்க கோலங்கள் சீரியலுக்கு டைம் ஆயிடுச்சு மிஸ் பண்ணிடாதீங்க..:)
நாளைக்கு மறக்காம கதைசொல்லுங்க ஓகே?:)


சுப்ரா= அதென்னா நிம்மதியா நாசமா போறது...:))

கிருத்திகன்=hahaha சூப்பரா சொன்னீங்க...

பின்னோக்கி= எல்லாம் இந்த தினா பண்ற வேலை.... நீங்க இப்படி வேற ட்ரை பண்ணிருக்கீங்களா???:))

தேளு=தல முக்கியமான ஆளுங்களை விட்டீங்க... பிரபு நேபால், சிஜே பாஸ்கர், சமுத்திரக்கனி, அப்புறம் கோச்சுக்க போறாங்க :)

நன்றி வராகன்=மக்கள் டிவி ஒரு நல்ல மாறுதல். ஆனா அதில் நிகழ்ச்சிகளை இன்னும் சுவாரஸ்யம் ஆக்கனும்...:(

mano said...

smmaa athiruthulla......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பின்னீட்டீங்க சார்! சரியான மெசேஜ்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் எப்பவுமே சீரியல் பார்த்ததில்லை!

கண்ணா.. said...

லேய்... பிரதாப்பு...எந்திரன் படம் பட்டய கிளப்புது....தலைவரு சும்மா பின்னி பெடலெடுத்துருக்காரு....

FEEDJIT Live Traffic Feed