1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
"நாஞ்சில்" பிரதாப்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
எதிர்காலத்துல பல வீர தீர பிரதாபங்களை செய்வான்னு அப்பா அம்மா ஆசையோட வச்சப்பேரு பிரதாப் குமார். ஆனா ஒரு பதிவரா வருவான்னு அவங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா மொக்கை குமார்-னு கூட வச்சிருந்திருக்கலாம். நல்லவேளை தெரியாம போச்சு...
பேருக்கு முன்னாடி "நாஞ்சில்" சேர்த்துக்க காரணம் ஊர்மேல இருக்கற ப்ரியம், அப்புறம் நாஞ்சில் குமரன் மாதிரி ஐ.பி.எஸ் ஆபிசராகத்தான் ஆகமுடில. ஆனா நாஞ்சில் நாடன் மாதிரி ஒர பிரபல எழுத்தாளரா வரலாம்னு ஒரு அற்ப ஆசை (ஏய்...ஏய்...ஏய்... யாருப்பா அது
நோ பேட் வேர்ட்ஸ்.... கல்லை கீழப்போடுங்கப்பா )
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
எல்லாம் கெட்டநேரம்தான் காரணம், எனக்கில்ல பதிவுலகத்துக்கு. பதிவர் மா.சிவக்குமார் பதிவுகளை முதலில் படித்தேன். ஏதாச்சும் இலவசமா கிடைச்சா வாக்குரிமையையும் அடகுவைக்கிற தமிழர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனானதால் இலவசமா கிடைக்கிறதே என வலைப்பதிவை தொடங்கினேன். காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன். கூகுளாண்டவரின் இலவசத்துக்கு நன்றி.
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
குட் கொஸ்டீன். ஆனா இதை எங்கிட்ட ஏன் கேட்டீங்கன்னு புரியல. இருந்தாலும் சொல்றேன்.
வால் போஸ்டர் அடிச்சு ஒட்டாததை தவிர எல்லாம் பண்ணேன். சிறிதுகாலம் SEO துறையில் வேலைபார்த்த அனுபவம் இருந்ததால் அதை எனது வலைப்பதிவுக்காக சரியாக பயன்படுத்தினேன். எக்ஸ்ட்ராவா ஏதோ நாலுபேரு உள்ளே ஏதாச்சும் இருக்கும்னு வந்து ஏமாந்துட்டுப்போனங்க.
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சில்லி கொஸ்டின்...இருந்தாலும் வெட்கத்தவுட்டு ஜொல்றேன். நான் பல்பு வாங்குன கதைலேருந்து, சினிமாவுல நடிச்ச கதை வரைக்கும் நிறைய சொந்த விசயங்களை சொல்லிருக்கேன். விளைவுன்னு பார்த்தா, இப்போ என்னோட பெரிய வீக்னசே பிலிப்பைன்ஸ்தான். யாரை கும்மியடிச்சாலும் அதைச்சொல்லியே நம்ம வாயை பொத்திடறாயங்க. அப்புறம் சில அனானிங்க வந்து அசிங்க அசிங்கமா திட்டிட்டு போனாய்ங்க...(அரசியல்ல இதுல்லாம் சாதாரணம்ப்பா...)நல்லவேளை கமண்ட் மாடரேஷன் போட்டதனால என்னோடப்போச்சு... என்னா அடி... பின்ன நான் மால்குடி டேஸா எழுதினேன்... அவார்டு வாங்கறதுக்கு...
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
என்னது சம்பாதித்தியமா?? கையிலேருந்து போனதுதான் மிச்சம். முழுநேரப்பதிவராகனும்னு மடிக்கணிணி வாங்குனது, அதுக்கு நெட் கனெக்ஷ்ன் கொடுத்தது, தடுப்பூசி போட்டது(ஆன்ட்டி வைரஸ்), அடிக்கடி வைத்தியம் பார்த்தது இதுக்கெல்லாம் ஆப்பக்கடை அம்சாவா வந்து காசுகொடுத்தா...ம்க்கும்..எல்லாம் என் கைகாசுதான்....
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இதுவேறையா.....ஒண்ணுக்கே தாவு தீந்துப்போகுது...கொஞ்சநாளு உள்ள வரலைன்னா ஒட்டடை அடிச்சுகுக்கிது. இதுல நாலு அஞ்சுன்னு வச்சு... நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்...
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
ஒரு பதிவர் மேல எனக்கு பயங்கர பொறாமை... அது வேற யாரும் இல்லை நான்தான். ஸ்கூல்ல படிக்கும்போது பரிட்சைக்குப் படிச்சிட்டுப்போனதையே ஒழுங்கா எழுதறதிலை. இதுல எப்படி நான் தோனுறதை எல்லாம் பிளாக்குல எழுதறேன்னு என்னாலயே என்னை நம்ப முடில... கோபம்னு பார்த்தா ஒருத்தர் மேல பயங்கர கடுப்புல இருக்கேன்... அவர் வலைப்பதிவின் முதல் எழுத்து ஓ கடைசில எழுத்து ன். என்னது யாரா?? நோ க்ராஸ் கொஸ்டின்...
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
சத்தியமாக நினைவில்லை ( பாராட்டிருந்தானே நினைவிருக்கிறதுக்கு...யாரு திட்டினதுன்னு கேட்டிருந்தா கரீட்டா சொல்லியிருப்பேன்...)
10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
ரொம்ப....முக்கியம்......
===================
எங்கள் ஊரின் கைப்புள்ளயும், எனது வில்லுகுறி ரசிகர் மன்ற கிளையின் செயலாளருமான அன்பு நண்பர் ஸ்டீபன்(நாடோடி) கையில் இந்த தீப்பந்தம் கொடுக்க்ப்படுகிறது... என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்....(மாட்டிகிட்டிரா...மாட்டிகிட்டிரா...)


30 comments:
// காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.//
உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு
//என்னது சம்பாதித்தியமா?? கையிலேருந்து போனதுதான் மிச்சம். முழுநேரப்பதிவராகனும்னு மடிக்கணிணி வாங்குனது, அதுக்கு நெட் கனெக்ஷ்ன் கொடுத்தது, தடுப்பூசி போட்டது(ஆன்ட்டி வைரஸ்), அடிக்கடி வைத்தியம் பார்த்தது இதுக்கெல்லாம் ஆப்பக்கடை அம்சாவா வந்து காசுகொடுத்தா...ம்க்கும்..எல்லாம் என் கைகாசுதான்....//
அது பிலைப்பைனி வாங்கிக் கொடுத்ததுன்னுல்ல அமீரக தகவல்கள் சொல்லுது :-)
//அப்புறம் சில அனானிங்க வந்து அசிங்க அசிங்கமா திட்டிட்டு போனாய்ங்க...(அரசியல்ல இதுல்லாம் சாதாரணம்ப்பா...)//
Please எங்களுக்காக அதெல்லாம் publish பண்ணுங்க .
உங்க பதில் எல்லாம் சூப்பர் :)
ஏதாச்சும் இலவசமா கிடைச்சா வாக்குரிமையையும் அடகுவைக்கிற தமிழர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனானதால் இலவசமா கிடைக்கிறதே என வலைப்பதிவை தொடங்கினேன். காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன். கூகுளாண்டவரின் இலவசத்துக்கு நன்றி.
.....இங்கே உங்கள் தனித்துவ முத்திரை பதித்து விட்டீர்கள், பிரதாப். அசத்தல் பதில்கள்!
//ஆனா நாஞ்சில் நாடன் மாதிரி ஒர பிரபல எழுத்தாளரா வரலாம்னு ஒரு அற்ப ஆசை (ஏய்...ஏய்...ஏய்... யாருப்பா அது
நோ பேட் வேர்ட்ஸ்.... கல்லை கீழப்போடுங்கப்பா )//
இதை மாத்திரம் அவர் படிச்சா ரொம்ப சந்தோசப்படுவார்.
//ஏதாச்சும் இலவசமா கிடைச்சா வாக்குரிமையையும் அடகுவைக்கிற தமிழர்களின் கூட்டத்தில் நானும் ஒருவனானதால் இலவசமா கிடைக்கிறதே என வலைப்பதிவை தொடங்கினேன். காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன். கூகுளாண்டவரின் இலவசத்துக்கு நன்றி.//
சேம் ப்ளட். இதைத்தான் எதிர்பார்த்தேன்.
அதகளம் பண்ணீட்டிங்களே தல. சிரிச்சி முடியல.
ரொம்ப நேர்மையான ஆள் நண்பா நீங்க.
மிச்ச கமெண்ட்ஸ் மாலை 5 மணிக்கு மேல். (ஆஃபீஸ் முடியட்டும், கச்சேரிய அப்புறமா வச்சிக்கிறேன். முக்கியமா அந்த வீக்னெஸ் மேட்டர் பத்தி டீடெய்லா விவாதிப்போம் ஓகே வா.)
உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு பிரதாப்
///தெரிஞ்சிருந்தா மொக்கை குமார்-னு கூட வச்சிருந்திருக்கலாம். நல்லவேளை தெரியாம போச்சு...///
இவ்ளோ உண்மையா பேசுறீங்க ..!!!
//காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன். ///
///எக்ஸ்ட்ராவா ஏதோ நாலுபேரு உள்ளே ஏதாச்சும் இருக்கும்னு வந்து ஏமாந்துட்டுப்போனங்க. ///
நானும் கூட .!!!
nalla iruku maapu
ஒரு வாரத்திற்கு முன்தான் தங்களின் பதிவை கண்டேன். அட்டகாசமாக ஒவ்வொன்றையும் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு தடவையும் தன்னை தாழ்த்தி அல்லது தன்னையே கிண்டல் செய்து கொண்டு எழுதுவது என்பது எல்லோருக்கும் வராத ஒரு தனிக் கலை. உங்களைப் போலவே ஒரு சீனியர் சிட்டிசன் கடுகு தாளிப்பு என்ற பெயரில் எழுதி வருகிறார். கண்டிப்பாக தங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். படித்துக் கொண்டிருக்கும்போதே இது யாருடைய பதிவு என்று சில நேரம் குழப்பமடைய வைக்கும் அளவிற்கு இருவரும் ஒரே மாதிரியான நடையை வேறுவேறு தமிழில் கையாளுகிறிரக்ள். இரண்டுமே அட்டகாசமாக உள்ளது. "வாக்குரிமையை
அடமானம்... " சான்ஸே இல்லை. மீண்டும் ஒரு அட்டகாசம்
ஜெ.பாபு
கோவை-20
சூப்பர்.
இலவசமா கிடைச்சா வாக்குரிமையை அடகு வைக்கும் கூட்டம் ..... சான்ஸே இல்லை. எப்படி சார் இப்படி
ஜெ.பாபு
கோவை - 20
நாஞ்சிலு, அதகளம்! :-))
ம்ம்...அப்புறம்....
//இதுக்கெல்லாம் ஆப்பக்கடை அம்சாவா வந்து காசுகொடுத்தா.//
இந்த பிலிப்பைனி மேட்டர் தெரியும் . இதாரு ஆப்பகடை அம்சா.....அம்சா தமிழ்நாடா இல்ல யூ ஏ இயா ...ஒன்னும் புரிய்லையே.....!!
சிரிச்சி முடியலை தல..இந்த வாரம் கொஞ்சம் ஆணி அதிகம் தல ... அடுத்த வாரம் கண்டிப்பா தீப்பந்தந்தை எடுத்து போய் நல்ல சொக்கப்பானையா பார்த்து கொளுத்திடலாம்...
அட்ரா சக்க... அட்ரா சக்க...
எல்லாம் அசத்தலுங்கோ.. ஒளிவு மறைவின்றி பேசும் உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்குங்க..
அசத்தலா தொடர்ந்திருக்கீங்க.என்னங்க பெரீய்ய போஸ்டர்.. உங்களுக்கு சிலையே வெச்சிரலாம் :-)))))
என்னது இது ரெண்டு கமெண்ட் அடுத்தடுத்து போட்டா ஒன்னுதான் வருது ..கூகிள் காக்கா போகும் போதே சாப்பிடுச்சா..அதிலயும் தப்பா ஒன்னும் போடலையே.... அவ்வ்வ்
@ கவி = இப்பத்தானே சொன்னேன்... பிலிப்பைனிங்கற வார்த்தையே நமக்கு அலர்ஜின்னு... யார் எதைச்சொன்னாலும நம்பாதீங்க :))
@ கார்த்திக் = நோ நோ...பயந்துருவீங்க...:))
@ நன்றி சித்ரா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...:))
@ நன்றி அக்பர்= தல இதுல உள்குத்து ஒண்ணும் இல்லையே...
@ நன்றி சரவணன் = அந்த மேட்டரை நாம சந்திக்கும்போது தனியா பேசிக்குவோம்.. தல:))
@ நன்றி அப்துல்
@ நன்றி செல்வம்
@ நன்றி கார்த்திக்
@ நன்றி அனானி அவர்களே... ரொம்ப புகழாதீங்க...எல்லாம் மாயைதான். கடுகு தாளிப்பு படிச்சிருக்கேன்... அந்த அளவுக்கெல்லாம் என்னால் எழுத முடியாது சார்
@ நன்றி பாரா சார்
@ கண்ணா= என்னது அப்புறமா நான் என்ன ராமாயணமா சொல்றேன் .. இதுக்கு நீரு வராமலே இருந்திருக்கலாம்.
@ நன்றி ஜெய்லானி = ஆப்பக்கடை அம்சாவை தெரியாதா? கராமா பக்கம் வாங்க காட்டித்தர்றேன்...என்ன சாமி இதுக்கூட தெரியாம...
@ ஸ்டீபன் = அது...ஆனா கண்டிப்பா கொளுத்தனும்..:))
@ ஸ்டார்ஜன் நன்றி குரு
@ நன்றி ரியாஸ்
@ அமைதிசாரல் = நீங்கதானே சொன்னீங்க எக்ஸ்பிரஸ் எப்படி ஓட ஆரம்பிச்சுன்னு தெரியனும்னு அதான்... சிலையை CST பக்கம் வைக்காதீங்க புறா வந்து அசிங்கம் பண்ணிடும்...:))
@ஜெய்லானி = ஒண்ணுதானே தலப்போட்டிங்க...நீங்க என்ன சொன்னாலும் நான் பப்ளிஷ் பணணுவேன்... சத்தியமா ஒரு கமண்ட்தான் தல வந்துச்சு...
மாப்ள நாஞ்சில் நாடனோட பிராந்து புத்தகம் வாங்குறப்போ சத்தியமா உன்னோட ஞாபகம் வந்துச்சுப்பா...
//மாப்ள நாஞ்சில் நாடனோட பிராந்து புத்தகம் வாங்குறப்போ சத்தியமா உன்னோட ஞாபகம் வந்துச்சுப்பா.//
hahaha...நாஞ்சில்னு பார்த்து நான் எழுதின புக்குன்னு நினைச்சிட்டியோ.....:)))
கலக்கல் பதிவு. இந்தப் பதிவு கீழ்கண்ட வலைப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்ற பதிவுகளை படிக்க..
http://senthilathiban.blogspot.com/2010/07/blog-post_31.html
ரொம்ப சுவாரசியமா இருக்கு...
// ( பாராட்டிருந்தானே நினைவிருக்கிறதுக்கு...யாரு திட்டினதுன்னு கேட்டிருந்தா கரீட்டா சொல்லியிருப்பேன்...)//
அப்பவும் கரீட்டா சொல்ல முடியாதுப்பா.....எத்தனை பேரைன்னு சொல்லுவே?
நல்லா இருக்குப்பா, உன்னோட autograph
உண்மையாகவே சிரித்து சிரித்து வாய் வலித்து விட்டது
பிரதாப்....போதும் நிறுத்துங்க.....சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது... எப்படி சார் இப்படி..........
ரசிக்கும் படி இருந்தது.உங்களது பதில்.இலவசமாக கிடைச்சா வாக்குரிமை அடகு வைக்கும்....... நல்ல உதாரணம்
ரசிக்கும் படி இருந்தது தொடர்பதிவு.
Post a Comment