Friday, July 16, 2010

சிவாஜி கணேசன் - ஒரு யூத்தின் பார்வையில்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்திய சினிமாவின் மர்லோன் பிரான்டோ.
சிவாஜி கணேசனின் நடிப்பை பற்றி புதுசாக நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. சிறுவயதில் துர்தர்ஷனில் சிவாஜியின் படங்கள் ஒளிபரப்பப்படும்போது பக்ககத்துவீட்டு பாட்டி ஒரு படங்களையும் தவறவிடுவதில்லை. சிவாஜியின் தீவிர ரசிகை. சிவாஜியைப்பற்றி புகழ்ந்துகொண்டியிருப்பார், படத்தை விட பாட்டி, அவரைப்பற்றிய சொல்வதை ஆர்வத்துடன் கேட்டதுண்டு.மர்லோன் பிரான்டோவுக்கே பிடித்த நடிகர் நமது நடிகர் திலகம். ஆனால் காட்பாதர் படத்தில் பிரான்டோ எங்காவது ஓவர் ஆக்டிங் செய்வதை நம்மால் பார்க்க முடிந்ததா? இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற ஒப்பற்ற நடிகர் பிரான்டோவுக்கு இணையாக மதிக்கப்பட்ட நடிகருக்கு ஒருமுறை கூட தேசிய விருது கிடைக்காதது ஏன்??


அப்போதைய படங்களில் நடிப்பு என்பது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டதாகவே அறியப்பட்டது.
சிவாஜியிடம் தன்னிடமிருந்து அபாராமான நடிப்புத்திறமையை வைத்து அவர் யதார்த்த நடிப்பில் ஏன்அதிகம் கவனம் செல்லுத்தவில்லை என்ற கேள்வி என்னுள் எழுந்ததுண்டு.
அம்மாவிடமும், தங்கையிடமும், காதலியிடமும் பாசத்தை காண்பிக்கும்போது அவர் கொடுக்கும் முகபாவனைகள் டயலாக் டெலிவரிகள் எல்லாம் யதார்த்தில் நாம் நம்வீட்டில் உள்ளவர்களுடன் நாம் காண்பிப்பதில்லை.


யோசித்துப்பாருங்கள், சில மாதங்களுக்குப்பிறகு வீட்டிற்கு செல்கிறீர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சென்று, சிவாஜி கணேசன் மாதிரி பீலிங்கோடு, கண்ணில் நீரோடு "உங்களையெல்லாம் பார்க்காம ரொம்ம்ம்மபபபப கக்ஷ்டப்பட்டேன்...அதை எப்படி சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்", என்று ஒருகையை பின்னால் கட்டி ஒருகையை நெத்தியில் அடித்து காதலியுடனோ, பொற்றோர்களோடு பேசிப்போருங்கள், போகும்போது நல்லாத்தான்யா இருந்தான் ஏன் இப்படி ஆச்சுன்னு உங்களை ஒரு மாதிரி பார்க்கலாம்.


யதார்த்ததில் நாம் இப்படி இல்லாதபோது சினிமாவில் அதை எப்படி ரசிக்க முடிந்தது.
பாசமலர், வசந்த மாளிகை, கௌரவம், தெய்வமகன் போன்ற படங்கள் சிவாஜிக்கு மிகவும் பெயர் வாங்கிகொடுத்த படங்கள்தான். ஆனால் இந்தப்படங்களில் சிவாஜியின் மிகைப்படுத்த நடிப்புத்தான் அதிகம். பலே பாண்டியா படத்தில் கொஞ்சம் லூசாக நடித்திருக்கும் சிவாஜியின் பாத்திரம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பின் உச்சம்.


பாடல்களில் டி.எம்.எஸ், அவருக்கு பின்னணி குரல் கொடுத்தால் எச்சில் தெரிக்கும் அளவுக்கு சிவாஜி கொடுக்கும் வாயசைவும், முகபாவனைகளும் உண்மையில் தேவைப்படும் ஒன்றா?சிவாஜி கணேசன் நடித்த படங்களில் யதார்த்த நடிப்பாக, என்னை மிகவும் கவர்ந்த படங்கள்
புதிய பறவை, மற்றும் தேவர்மகன். புதிய பறவை படத்தில் சிவாஜியின் நடிப்பு ஒரு அளவிட முடியாத ஒரு எல்லையைத்தாண்டி இருப்பதை கவனித்திருக்கிறேன். உதாரணம் இப்படத்தில்
பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல். (இந்தப்பாடலை youtube ல் இருந்து நீக்கிவிட்டார்கள் ஏனோ?)

சவுகார் ஜானகி ஓட்டலில் பாடுவதை ஒரு சேரில் அமர்ந்து சிகரெட்டு ஊதி ரசித்துக்கொண்டிருப்பார் சிவாஜி. இதுஒரு சாதாரண காட்சிதான், சவுகார் ஜானகி பாடிக்கொண்டிருப்பார். சிவாஜி ரசித்துகொண்டிருப்பார். சிவாஜிக்கு வசனமோ எதுவும் கிடையாது. ஆனால் ஒரு கோடீஸ்வரன் வீட்டு பணத்திமிர் பிடித்த இளைஞனின் உடல் மொழி எப்படி இருக்கும் என்பதை அந்த சிகரெட்டை புகைத்துக்கொண்டே உதட்டில் ஒரு அலட்சியமான புன்சிரிப்புடன் அவர் உட்காந்திருப்பது...இந்திய நடிகர்கள் சாரி...அந்த பிரான்டோ வந்தாலும் அதை அத்தனை இயல்பாக செய்வது கஷடம்தான்.

இந்த மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு காலப்போக்கில் எப்படி மாறிப்போனது. யதார்த்த சினிமாக்கள், யதார்த்த நடிகர்களை மக்கள் எப்படி ஏற்றுகொண்டார்கள், மாற்றங்கள் ரசிப்புத்தன்மைக்கும் தேவைப்படுகிறது என்பதே அதன் காரணம்.

டிஸ்கி : நடிகர் திலகத்தைப்பற்றி எழுதுவதால் என்னையும் 60-70 களை சேர்ந்தவன் என நினைத்துவிடகூடாது என்பதற்காகவே தலைப்பு இப்படி.

41 comments:

Madhavan said...

யோசித்துப்பாருங்கள், சில மாதங்களுக்குப்பிறகு //வீட்டிற்கு செல்கிறீர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சென்று, சிவாஜி கணேன் மாதிரி பீலிங்கோடு, கண்ணில் நீரோடு "உங்களையெல்லாம் பார்க்காம ரொம்ம்ம்மபபபப கக்ஷ்டப்பட்டேன்...அதை எப்படி சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்", என்று ஒருகையில் பின்னால் கட்டி ஒருகையை நெத்தியில் அடித்து காதலியுடனோ, பொற்றோர்களோடு பேசிப்போருங்கள், போகும்போது நல்லாத்தான்யா இருந்தான் ஏன் இப்படி ஆச்சுன்னு உங்களை ஒரு மாதிரி பார்க்கலாம்.//

100% rightu saami..

goma said...

நேற்று தெய்வமகன் படத்தில் ஒரு பாடல் காட்சி பார்த்தேன்.
தெய்வமே தெய்வமே.....என்று அவர் தன் தாயை முதலில் பார்த்து வந்த மகிழ்ச்சியில் துள்ளுவார் பாருங்கள்....
மிகை நடிப்புக்கு அது ஒரு உதாரணம்

கருந்தேள் கண்ணாயிரம் said...

இது எல்லாத்தையும் விட காமெடி என்னன்னா, அவரு போட்டுட்டு வருவாரே ஒரு பிரம்மாண்டமான விக்கு.. தலைக்கு முன்னாடி கொண்டை போட்ட ஒரே நடிகரு இவுருதாய்யா.. :-)

அந்தக் காலத்துல, நெத்திக்கி நேர் மேல புறாக்கூடு இருக்குற மாதிரி ஹேர்ஸ்டைல்தான் ஃபேமஸ் போல.. இவுரு, எம்சியாரு, ஜெமினி, ரவிச்சந்திரன் இப்புடி அல்லாருமே புறாக்கூடுகளைத் தலைக்கு மேல கட்டிக்கினுதானே நடிச்சாங்கோ.. அது மெகா காமெடி மாமு ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

அதுமட்டுமில்ல.... வாயிலயே வீணை வாசிச்ச மொதோ ஆக்குடர்ர்ர்ரு இவருதான் ;-) . . போக்கிரி படத்துல வர்ர டயலாக், அப்புடியே இவுருக்குப் பொருந்தும்..

‘என்னாது இது.. இந்த ஆளுக்கு, ஒடம்புலயே வாய் மட்டும் தான் வேல செய்யுது போலயே’.. ;-)

கருந்தேள் கண்ணாயிரம் said...

இவுரோட ஃபைட் சீன்ஸ் பார்த்துருக்கீங்களா? கைய கால விலுக் விலுக்னு இளுத்துக்குவாரு.. அதான் இவுரு பாஷைல ஃபைட்டு ;-) கடவுளே... தப்பிச்சோம்டா சாமி..

கருந்தேள் கண்ணாயிரம் said...

வோட்டே போட முடில.. என்ன கொடுமைய்யா இது ;-(

நாஞ்சில் பிரதாப் said...

@ மாதவன் = அப்ப நீங்க அந்தமாதிரி ட்ரை பண்ணி பார்த்ருக்கீ்ஙளோ அண்ணாச்சி :))

@ கோமா - என்ன கோமாக்கா உங்க பீரியட் ஹீரோவாச்சே அவரு...நீங்க சப்போர்ட் பண்ணுவீங்கன்னு பார்த்தா.....

@தேளு - தல அந்த விக் மேட்டரு சூப்பரா சொன்னீங்க. எனக்கு ஞாபகமே வரல. அப்ப புறாக்கூண்டு வைக்காத்த நடிகர்களே கிடையாது. ஒண்ணு தலைல படிக்கட்டு இருக்கும் இல்ல புறாக்கூண்டு இருக்கும்... நல்லவேளை தப்பிச்சோம்.... :))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல பகிர்வு பிரதாப்.

kavisiva said...

//"சிவாஜி கணேசன் - ஒரு யூத்தின் பார்வையில்//

நாஞ்சில் யூத்தாமாங்.... நம்பிட்டோமுங்கோ :)

சிவாஜியா அது சூப்பர் ஸ்டாரு பேத்தியோட ஜோடி போட்டு நடிச்ச(?!) படம்ல்ல அது?

ஓஹ் நம்ப கட்டபொம்மனை சொல்றீங்களா? நீங்கள் சொல்வது 100% உண்மை.

என் அப்பா அவர் யூத்தா இருக்கும் போது சிவாஜி கணேசனின் ரசிகராக இருந்தவர். இப்போ டிவியில் அவர் சிவாஜி படங்களைப் பார்க்கும் போது அவருக்கே பார்க்கமுடியலியாம். ஓவர் ஆக்டிங்காம். ஆனா அப்போ எப்படி புடிச்சுதுன்னு கேட்டா தெரியலியேன்னு சொல்றார் :(.

ஸ்ரீராம். said...

ஓகே..ஓகே... இப்போ இருக்கும் நடிகர்களைப் பற்றி அடுத்தடுத்த தலைமுறைகள் என்னென்ன சொல்லப் போகிறதோ பார்ப்போம்...!

அமைதிச்சாரல் said...

அந்த புறாக்கூடுதான் இப்போ 'ஸ்பைக்' அப்படீன்னு பேரு மாறி வந்திருக்கு..

ஆமா... தலைப்புல சொல்லியிருக்கிற யூத்து யாரு?????????..

நாடோடி said...

என்ன‌ த‌ல‌... ந‌டிக‌ர் தில‌க‌த்தை போய் இப்ப‌டி சொல்லிட்டீங்க‌.... இத‌ற்கு ஒரே கார‌ண‌ம் தான் த‌ல‌... ப‌ழைய‌ ந‌டிக‌ர்க‌ள் அனைவ‌ரும் அந்த‌ கால‌த்தில் மேடை நாட‌க‌ங்க‌ளில் ந‌டித்து விட்டு சினிமா வ‌ந்த‌வ‌ர்க‌ள்... மேடையில் ந‌டிக்கும் போது வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு முக்கிய‌த்துவ‌ம் த‌ர‌ப்ப‌டும்.. அது ம‌ட்டும் அல்லாம‌ல் மைக்கில் க‌ன‌த்த‌ குர‌லில் பேச‌ வேண்டும். அந்த‌ ப‌ழ‌க்க‌ங்க‌ள் தான் சினிமாவிலும் தொட‌ர்ந்த‌து என்று நான் நினைக்கிறேன்.

நாஞ்சில் பிரதாப் said...

@நன்றி குரு

@ கவிசிவா - நாஞ்சில் யூத்துதாங்க...அதுலேல்லாம் உங்களுக்கு சந்தேகமே வரக்ககூடாது...:))
உங்கஅப்பா பீரியட் ஹீரோவை அவங்களாலேயே இபபோ சகிச்சுக்க முடில...
அப்ப நிலைமை...அவ்வ்வ்வ்...

@ ஸ்ரீராம்... கண்டிப்பா விமர்சனம் பண்ணனும் ராம்..அப்பத்தான் மாற்றங்கள் வரும்....

@ அமைதிசாரல் : என்னது அந்த யூதது யாரா? இப்படி கேட்பிங்கனுன்னு தெரிஞ்சுதான் புபெராபைல்ல போட்டோவைல்லாம் போட்டுருக்கேன். அதுக்கப்புறமும் இப்படி கேட்டிங்கன்னா...எல்லாரும் ஒரு முடிவோடத்தான் இருக்கீஙகபோல... :))

ஸ்டீபன் - ஆமா தல நீங்க சொன்னதுகூட ஒரு காரணமா இருக்கும்னு தோணுது... ஓவரா சவுண்டு எபக்ட், அப்புறம் லைப் எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து கொடுத்து அப்படியே பழகிட்டாங்க போல... நீங்க சொல்றது சரிதான்.

கண்ணா.. said...

யூத்தின் பார்வையா??? யாருவே அது.......

ஜெய்மோகன் எழுதி சர்ச்சைக்குள்ளான தொப்பி திலகம் படிச்சுருக்கியா? செம்ம காமெடியா இருக்கும்.... அதுல எம் ஜி ஆர் சிவாஜி ரெண்டு பேரையும் தீயா வாரிருப்பாரு

அத்திரி said...

//சிவாஜி கணேசன் நடித்த படங்களில் யதார்த்த நடிப்பாக, என்னை மிகவும் கவர்ந்த படங்கள்
புதிய பறவை, மற்றும் தேவர்மகன். புதிய பறவை படத்தில்//

முதல் மரியாதை பார்க்கலையா.............???

அக்பர் said...

ஸ்டீபனின் கருத்தோடு உடன்படுகிறேன்.

பொதுவாக அந்த கால படங்கள் எல்லாமே நாடக பாணியிலேயே இருக்கும். நடிகர்கள் யாரும் முதுகைக்காட்டி பேசமாட்டார்கள். (டீடிஎஸ் எல்லாம் கிடையாது)

இந்த மிகை நடிப்பை தவிர்த்திருந்தால் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆயிருப்பார். அதனால் மோசமில்லை இப்ப நம்ம மனசுக்கு சொந்தக்காரர் ஆயிட்டாரே அதுவே பெரியவிருதுதான்.

அப்புறம் யூத்துன்னு சொல்லி தெரிஞ்சிக்கிற நிலையில இருக்கிங்க. பாவம் தல :)

SIVA said...

நாஞ்சில் அவர்களுக்கு : ஒரு நல்ல புரிதல் இல்லாமல் ஏதோ சொல்லனுமே அப்படிங்கிறதுக்காக சொல்லப்பட்ட கருத்துத்தான் உங்களுடைய இந்தப் பதிவு என்றே கருதுகிறேன்.

மார்லன் பிராண்டோ சொன்ன ஒரு கருத்தை நீங்கள் மறந்துவிட்டீர்கள். என்னை மாதிரி திரு.சிவாஜி நடித்துவிடுவார்.ஆனால் சிவாஜி மாதிரி என்னால் நடிக்க இயலாது அப்படியென்று.

நீங்கள் இருக்கும் காலகட்டம் வேறு.நீங்கள் விம்ர்சிக்கும் காலகட்டம் வேறு. மேலும் அந்த காலகட்டத்தில் அவர்கள் பார்த்து பின்பற்றுவதற்கு என்று எந்த நடிகர்கள் இருந்தார்கள். இவர்கள்தான் மாதிரிகளையே உருவாக்கினார்கள். இன்று கூட கமலஹாசன்,நாசர் போன்றவர்கள் நடிப்பைப் பற்றிய ஒரு கருத்தை சிவாஜியுடைய காலகட்டகங்களிலிருந்துதான் துவங்குகிறார்கள்.

இன்றைக்கு நீங்கள் எதை ஒவர் ஆக்டிங் என்று சொல்கிரீர்களோ அன்று அதுதான் எதார்த்தம். சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு 20பது 30பது ஆண்டுகள் பொதுவாக எல்லாருமே ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் விளங்கிய காலகட்டமே.நீங்கள் இதை அந்த சமயத்தில் வந்த இலக்கியங்களில் கூட கண்ணுறலாம்.

திரு.பத்மா சுப்ரமனியம் என்ற கலைஞரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு.மிகச்சிறந்த பரத நாட்டிய கலைஞர் அவர். அவர் சொல்கிறார் பொதுவாக பரத்தில் ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு பாவமுண்டு.அது படியே பரத நாட்டியம் ஆடப்படும்.அவ்வாறு கூறப்பட்டுள்ள முகபாவங்களை நான் திரு.சிவாஜி கணேசனின் நடிப்பில் கண்டு வியந்துபோய் இருக்கிறேன் என்று.

விருதுகளை பற்றி எனக்கு எப்போதுமே உயர்வான கருத்து இருந்ததில்லை. பிரான்ஸ் அரசின் மிக உயரிய விருதான செவ்வாலியர் விருது திரு.சிவாஜிக்குப் பிறகு நம்முடைய நடிகர்கள் வேறு யாருக்காவது வழங்கப்பட்டுள்ளதா..

எனக்குத் தெரிந்து அதிக தேசிய விருதுகள் வாங்கிய திரு.மம்முட்டி, கமல், மோகன் லால் இவர்களுக்கு கூட நான் கேள்விப்பட்டவரையில் பிரான்சின் இந்த விருது வழங்கப் படவில்லை.அதற்காக இவர்கள் சிறந்த நடிகர்கள் இல்லை எனவோ இல்லை இவர்கள் அதற்கு தகுதியில்லாதவர்களோ என்றோ கூறி விட முடியுமா?.

மன்னிக்கவும்.தட்டச்சு செய்வதில் உள்ள சிரமம் காரணமாக என்னால் இன்னும் விளக்கமாக விரிவாக இந்த விவாதத்தை வைக்க இயலவில்லை.

மேலும் உங்கள் தளத்தை நான் சமீபமாக தொடர்ந்து வாசித்தாலும் இது தான் என்னுடைய முதல் பின்னூட்டம். அதுவும் நீங்கள் இதை வெறும் பயனுள்ள அர்த்தப்பூர்வமான விவதமாகவே கொள்வீர்கள் என்ற காரணத்திற்காகவே இங்கு பின்னூட்டமிடுகிறேன்.

மற்றபடி பிரச்சனக்குரிய விவாதமாகும் எனில் எனக்கு அதில் விருப்பமில்லை.

இதைப் பற்றி விரிவாக நட்பு ரீதியாக நீங்கள் விவாதிக்க ஆர்வமுடை -யவராக இருப்பீகளேயானால் நான் என் அலைப் பேசி எண்ணை மின்னஞ்சலில் தெரியப்படுத்துகிறேன். இதைப் பற்றி இன்னும் விரிவாகவேப் பேசலாம்.

நாஞ்சில் பிரதாப் said...

திரு. சிவா அவர்களுக்கு,
தங்களது பின்னூட்டத்திற்கு நன்றி,

புரிதல உள்ளதால்தான் நண்பர் ஸ்டீபன் இட்ட பின்னூட்டத்தை ஒத்துக்கொண்டிருக்கிறேன். நாடகத்திலிருந்து வந்த பாதிப்பு தான் சினிமாவில் இது போன்று நடிக்க வைத்திருக்கலாம். நீங்கள் சொன்னதுபோல் அவர்களுக்கு மாதிரி நடிகர்கள் இல்லாததும் ஒரு காரணம்தான் ஒத்துக்கொள்கிறேன்.

அதே நேரம் நான் எனதுபதிவில் நான் சொன்ன சிலவிசயத்தை நீங்கள் கவனிக்கவில்லை என நினைக்கிறேன். புதியபறவை, முதல்மரியாதை, தேவர்மகன் போன்ற படங்களில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திருப்பவர் அனேகம் படங்களில் ஓவர் அக்டிங் செய்திருப்பதையே நான் தெரிவித்திருந்தேன். அவரின் முகபாவனைக்ள், உடல்மொழிகள் அப்போதைய காலகட்டத்துக்கு ஒத்துப்போயிருக்கலாம் இப்போதைய கண்ணோட்டத்தில் அது ஓவர் ஆக்டிங்காகவே தெரிகிறது அதைத்தான் பதிவு செய்திருக்கிறேன்.

அவருக்கு யதார்த்தமான நடிப்பு வரவில்லை என நான் தெரிவிக்கவே இல்லை.

உங்கள் பின்னூட்த்திலிருந்தும் சிலவிசயங்களை அறிந்து கொண்டேன். கருத்துக்கு மிக்க நன்றி...

சிபி.செந்தில்குமார் said...

கிண்டலடிப்பது ஈஸி,சினி ஃபீல்டில் ஜல்லி அடிப்பது (நன்றி-சுஜாதா)கஷ்டம்.
மண்ணை விட்டு மறைந்தவரை,பலர் மனதில் பல தாக்கம் ஏற்படுத்தியவரை நக்கல் அடிக்கலாமா

கண்ணா.. said...

என்னா மச்சி எல்லாரும் விவாதத்தை சீரியசா கொண்டு போறாங்க.....

@சிபி செந்தில்குமார்,

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது ஓன்றுமே இல்லை. ஆனால் விமர்சிக்கப்படும் முறை நாகரீகமாக இருக்க வேண்டும். எனக்கு இவரின் விமர்சனம் எல்லை மீறவில்லை என்றுதான் தோன்றுகிறது

இளம் தூயவன் said...

நடிகர்கள் எல்லோரும் ஒரு குட்டையில் விழுந்த மட்டை. நடிப்பில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நல்ல நடிகர்கள்.

vasan said...

கால‌ம் த‌ன்னோடு அனைத்தையும் மாற்றிக் கொண்டேயிருக்கிற‌து நாஞ்சில்.
வேஷ்டியிலிருந்து பேண்ட், சேலையிலிருந்து, ஜீன்ஸ், டீ ச‌ர்ட்.
எழுப‌துக‌ளில், 'பெல்ஸ் பாட்ட‌ம், ஹிப்பி த‌லை' பேஷ‌ன். இப்ப‌ப் போட்டா
கோம‌ளி மாதிரி இருக்கும். மிகை நடிப்பிலிருந்து ம‌க்க‌ளின் ர‌ச‌னைக்கேற்ப‌
மாறிய‌தால் தான் சிவாஜியால் இறுநூற்று ஐம்ப‌து ப‌ட‌ங்க‌ளை தாண்ட‌ முடிந்த‌து.
இப்போதைய‌ இள‌ம் த‌லைக‌ளும், த‌ள‌ப‌திக‌ளும் ஐம்ப‌து தாண்ட‌வே?
இருப‌து த‌டிய‌ன்க‌ளை ஒரே அடியில் வீழ்த்தி, ர‌யிலிருந்து, விமான‌த்திற்கு
தாவி, ம‌லைய‌ருவியில் விழுந்து, எழுந்து வ‌ரும் மாயாவிக‌ளை ர‌சிக்கும்
யூத்தை விட‌, 'அந்த‌நாள்' ர‌சிப்பும் நடிப்பும் ரெம்ப‌வே உய‌ர‌ம் தான்.
தாத்தாவுக்கு, ப‌த்து ப‌ன்னிர‌ண்டு, அப்பாவுக்கு, நாலைஞ்சு, ந‌ம‌க்கு ஒன்று
அல்லது ரெண்டு, வ‌ருங்கால‌த்துக்கு ஒன்னோ அல்ல‌து இல்லையோ.
குழ‌ந்தைக‌ள் க‌ண‌க்கைச் சொன்னேன். இப்ப பிர‌தாப், நீங்க‌ சொல்லுங்க‌,
யார் ச‌ரி? தாத்தாவா?அப்பாவா?நாமா? பிள்ளைக‌ளா?
சொல்லுங்க‌ள் காத்திருக்கிறேன்.

ப.செல்வக்குமார் said...

///டிஸ்கி : நடிகர் திலகத்தைப்பற்றி எழுதுவதால் என்னையும் 60-70 களை சேர்ந்தவன் என நினைத்துவிடகூடாது என்பதற்காகவே தலைப்பு இப்படி.///
ஐயோ .. உங்களை போய் அப்படி நினைக்க முடியுமா ..? நீங்க 40 -50 ஐ சேர்ந்தவர்னு எண்களுக்கு தெரியும்ல ..

நாஞ்சில் பிரதாப் said...

@சிபி- நண்பர் சிவாவுக்கு சொன்னதைத்தான் உங்களுக்கும் பதிலாக சொல்லவிரும்புகிறேன். எங்குமே நக்கல் என்ற தொணி இல்லை. அப்போதைய நடிப்பு எப்படி இருந்தது என்பதை மட்டுமே சொலிலியிருக்கிறேன். விருதை வைத்து ஒரு கலைஞனை எடைபோடமுடியாது.
ஆனாலும் ஆகா ஓகோ என்ற பாராட்டும் ரசிகர்கள் அதிகாரத்தில் இருந்தும்கூட அவருக்கு ஒரு தேசியவிருது கிடைக்கவில்லை அல்லது அதுமாதிரியான படங்களில் நடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். முதல் மரியாதை இதற்கு அப்பாற்பட்டது.அந்த படத்திற்காவது இவருக்கு கொடுத்திருக்கலாம்.

@கண்ணா- நான் எதிர்பார்த்ததுதான் கண்ணா. இதை விவாதத்திற்காக எழுதலை. உண்மையத்தான் எழுதினேன். அவர் ஓவர் ஆக்டிங்க் பண்ணாருங்கறதை எல்லாரும் ஒத்துக்கறாங்க. அனால் அதுக்கும் நியாயம் கற்பிக்கிறாங்க அவ்ளோதோன். அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நாஞ்சில் பிரதாப் said...

@திரு வாசன்- அண்ணாச்சி உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். நானும் அதைத்ததான் சொல்கிறேன். இப்போதை பார்வையில் சிவாஜீயின் நடிப்பு மிகப்படுத்தப்பட்டதாகவே தெகிறது. அதைத்தான் விமர்சித்துள்ளேன். மற்றபடி சிவாஜீன் நடிப்பு வரவில்லை என்றோ இயல்பாக நடிக்கத்தெரியாதென்பதோ அல்ல என் வாதம். இயல்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தவில்லை என்றே சொல்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி.

நாஞ்சில் பிரதாப் said...

@ அத்திரி : ஆமா நண்பேரே...எழுதும்முன் அதை யோசித்தேன் பதிவில் எழுத தவறிவிட்டேன்.

@ அக்பர்: ஸ்டீபனின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்னு அவருக்கு பதில் போட்டேன் தல...

@ கண்ணா: ஜெயமோகன் எழுதியதை ஆ.வி.படிச்சேன். அநாகரிகத்தின் உச்சம். அந்த அளவிற்கு எல்லைமீறி இருந்திருக்கவேண்டாம். அதற்குத்தான அவரு அனுபவசிச்சாரே...

@ நன்றி இளம் துயவன்

@ செல்வகுமார் - தம்பி கரீட்டா புடிச்சீட்டிங்களே...அப்படியே என்னோட புரபைல் பேஜ் பக்கம் போங்க...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கண்ணா நீயுமா......

நாஞ்சில் பிரதாப் said...

@சதீஷ் - கண்ணா நீயுமா??? இல்ல நண்பரே...
கண்ணா நீயும் நானுமா?? :))

கண்ணா.. said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...

கண்ணா நீயுமா......//

தல.. என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலையே...!!! நானெல்லாம் கொஞ்சம் ட்யூப்லைட்டு பாஸ்.... கொஞ்சம் விளக்கி சொன்னீங்கன்னா புரிஞ்சுகிடுவேன்...

செ.சரவணக்குமார் said...

நல்ல அலசல் பிரதாப்.

உண்மையில் ஒரு மகத்தான நடிகனை நம் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. அவர் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தை தவிர்த்துப் பின்னாட்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த பல படங்களில் இதைக் காணலாம். தேவர்மகன் என்ற ஒரே படத்தைத் தவிர அவரை நம் இயக்குநர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஹிந்தியில் அமிதாப்பச்சன் செய்தது போன்ற வேடங்கள் அவருக்குக் கிடைத்திருக்குமாயின் சிவாஜி நிச்சயம் வேறு விதமாய்ப் பேசப்பட்டிருப்பார்.

எத்தனை சொன்னாலும் அவர் மகாநடிகன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பின்னோக்கி said...

நாஞ்சில், இவர் நாடகங்கள் மிகுந்த கால கட்டத்தில் இருந்ததால், மிகையான முக பாவங்கள் இருந்தன.

இவர் பிற்காலத்தில் நடித்த முதல் மரியாதை, தேவர் மகன் இவரின் நடிப்புத் திறமையை, எக்காலத்திற்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்.

முதல் மரியாதைக்கு விருது கிடைத்திருக்க வேண்டியது.

ஜோ/Joe said...

மக்கள் மனதில் பதிந்தோராக நடித்து தன் பெயரை நிலை நாட்டிக்கொண்டவர்கள் உண்டு .ஆனால் தன் நடிப்பால் பல பாத்திரங்களை ,ஏன் வரலாற்று புருஷர்களை மக்கள் மனதில் பதிய வைத்தவர் நடிகர் திலகம் .இன்றைக்கு நிஜ கட்டபொம்மன் வந்தால் அவன் கணேசன் அளவுக்கு கம்பீரமாகவும் சிம்மக்குரலும் இல்லையென்று ஏற்க மறுப்பார்கள் நம் மக்கள். தனக்காக பாத்திரங்களை மாற்றிக்கொண்டு தன்னை முன்னிறுத்தியவர் மத்தியில் , பாத்திரங்களுக்காக தன்னை மாற்றிக்கொண்டு அந்த பாத்திரங்களை சரித்திரமாக்கியவர் நடிகர் திலகம். நடிகர் திலகம் என்னும் நடிகன் பிறவாதிருந்திருந்தால் அவரால் சரித்திரமான பாத்திரங்களில் வேறு யார் நடித்திருப்பார் ,நடித்திருந்தால் அது எத்தனை பெரிய காமெடியாக இருந்திருக்கும் என நினைத்துப்பார்த்தால் சிலருக்கு உண்மை விளங்கலாம்

அதிகம் சொல்ல விரும்பவில்லை ..இங்கே எள்ளி நகையாடுவோரை நினைத்து அனுதாபப்படுகிறேன் .அவ்வளவு தான்.

நாஞ்சில் பிரதாப் said...

@சரவணன்- சரியாக சொன்னீர்கள். அவரை ஒரு மசாலா நடிக்கராவே கடைசிவரை வைத்திருந்தார்கள். அவரை சரியான பயன்படுத்தியிருந்திருக்கலாம்...

@ பின்னோக்கி - நன்றி

@ஜோ= உங்க கருத்துக்கும், அனுதாபத்திற்கும் மிக்க நன்றி...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒரு ரசிகனாக நீங்கள் எழுதியிருக்கும் பதிவு இது..........உங்கள் கருத்தை எழுதியிருக்கிறீர்கள்! எல்லா கலைஞர்களுக்குமே சில சறுக்கல்கள் உண்டு, நடிகர் திலகத்துக்கும் இருந்தன என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், யார் என்ன சொன்னாலும் சிவாஜி ஒரு மிகப் பெரிய நடிகர், நடிகர் திலகம் என்ற பட்டம் வேறு யாருக்கும் - நீங்கள் ரசிக்கும் கமல் உட்பட - பொருந்தாது என்பது நிதரிசனம்.

அது தவிர, அவார்டு என்பதே "வாங்க"ப் படுவதுதானே தவிர வழங்கப் படுவது அல்ல என்பதும் நிதரிசனம்.

R.Gopi said...

யப்பா நாஞ்சிலு....

நல்லா யூத்து மாதிரியே பில்ட்-அப் குடுத்து இருக்கியே.... எப்படி இப்படி எல்லாம்....

சரி ...சரி.. லெஸ் டென்சன்..மோர் ஒர்க்... ஓகே...

ஆயிரம் தான் சொல்லு நாஞ்சிலு... ரிக்‌ஷாகாரனுக்கு தேசிய விருது கொடுத்தாய்ங்களே... அப்போ தெய்வ மகன்லாம் கண்ணுல தெரியலியா... சிவாஜிக்கு தேசிய விருது கிடைக்காதது மெய்யாலுமே ஒரு பெரிய கொடுமைபா...

நல்லாதான்யா எழுதி இருக்க... ஏறக்குறைய நான் ரொம்ப நாள் முன்னாடி எழுதின மாதிரியே... இங்க போய் பாருங்க...

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன்
http://edakumadaku.blogspot.com/2009/01/blog-post_5968.html

அக்பர் said...

தல உங்களது விமர்சனப்பார்வை சரியே.

இப்போதுள்ள சில நகைச்சுவை நடிகர்கள் கூட அவரைப்போலவே பேசி நக்கல் பண்ணுகின்றனர் (எ.கா. விவேக்)

வசனத்துக்கு சரியாக வாயசைப்பார் சிவாஜி என்பார் எங்கப்பா. எனக்கு அவர் வாயசைப்பதை பார்த்தால் சிரிப்பு வரும்.

அவரது புகழை குறைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இது எழுதப்படவில்லை.

இதுல சீரியஸா எடுத்துக்கிறதுக்கு ஒன்னும் இல்லைன்னு நினைக்கிறேன்.

மோகன்ஜி said...

அன்பிர்க்கினிய பிரதாப்,

நடிகர் திலகம் பற்றி நாம் என்ன சொன்னாலும் அது யானையை குருடர்கள் பார்த்த கதை தான். மிகை நடிப்பு என நீங்கள் குறிப்பிடுவது i-pod கால ரசனையின் வெளிப்பாடாய் இருக்கலாம்.
ஆனால் அவர் படங்கள் வெளிவந்த கால ரசனையில் இந்த மிகைப்படல் ஒரு சமுதாய எதிர்ப்பார்ப்பாகவே இருந்தது. திரைப்படமென்றால் நடிகர் நடிகை,அதிகபட்சமாக இயக்குனர் போன்றோரைத் தவிர்த்து வேறு ஏதும் அறியாத ரசிகர்களின் எதிர்பார்ப்பில், இந்த மிகை நடிப்போன்றே நடிப்பின் அளவுகோலாக இருந்த சூழல் அது. ஆனாலும் படங்களை தேர்வு செய்வதில் அவர் கவனம் செலுத்தாமல் இடையிடையே பல சுமாரான படங்களில் நடித்த போதும், அவர் தொட்ட உச்சங்களை இந்தியத் திரை வரலாற்றில் யாரும் தொட்டதில்லை. அவரின் நாடகப் பின்னணியையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்., இன்றைய தொழில் நுட்பம் ஏதுமில்லாத நிலையில், பரீட்சார்த்தமான கதைகளும், முற்போக்கு இயக்குனர்கள் அதிகமில்லாத காலநிலையில் நடிப்பின் வெவ்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய மேதை அவர். உரியடித்து வென்றவனின் வெற்றிக் களிப்பையும், திறமையுமே பார்க்க வேண்டுமன்றி, அவன் காலில் ஒட்டியிருக்கும் சகதியைப் பொருட்படுத்தலாகாது என்பது என் தாழ்மையான எண்ணம்.
மற்றபடி உங்கள் நடையின் நேர்த்தி வசீகரமாய் இருக்கிறது.
நான் ஓவராக்ட் பண்ணியிருந்தால் take it easy. வாழ்த்துக்கள்.
மோகன்ஜி,ஹைதராபாத்

Anonymous said...

பாலசந்தர், பாரதிராஜா போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்த நடிகர் திலகத்தை பார்த்துள்ளீர்களா?
அந்த காலத்திலும் பல படங்களில் மிக இயல்பாக , யாருமே அவ்வளவு எளிதாக கொடுக்க முடியாத முக பாவங்களை மிக எளிதாக செய்துவிட்டு போவார்.
சில இயக்குனர்கள் அவரிடம் அதிகமாக எதிர்பார்த்ததால் தான் பல படங்களில் அவரிடம் கொஞ்சம் "ஓவர் ஆக்டிங்" இருக்கும். சினிமாவை பார்க்கும் நமக்கே அது ஓவர் ஆக்டிங் என்று தெரியும் பொது அதில் மூழ்கி முத்தேடுத்தவருக்கு தெரியாதா என்ன? . காலத்தின்மற்றும் சமூகத்தின் எதிர்பார்புகளை அவர் பூர்த்திசெய்தார். ஒருவேளை ஆங்கிலப்படங்களில் அவர் நடித்திருந்தால் நீங்கள் எதிர்பார்த்தது போல நடித்திருப்பார்.

நாஞ்சில் பிரதாப் said...

மோகன்ஜீ / அனானி - உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்த்துக்களுன் ஒத்துக்போகும் வேறும் சில பின்னுட்டங்கள் வந்துள்ளன. அவர் ஓவர் அக்டிங் செய்தார் என்பது மட்டுமே எனது கருத்து. அத்தனை திறமையான நடிகரை சினிமாவுலகம் சரியாக பயன்படுத்திக்கொள்ளாததே எனது ஆதங்கம்.

அவர் உச்சத்தில் இருந்தபோது வந்த புதிய பறவை படங்கள் போலவும, அதற்கு பின் வந்த முதல் மரியாதை,தேவர்மகன் போன்ற படங்களையும் அவர் நிறைய தந்திருக்கலாம். அதுதான் நான் சொல்லவந்தது.

மீண்டும் கருத்துக்கு நன்றி.

Manickam said...

நான் நண்பர் சிவா அவர்களுடன் ஒத்துப்போகிறேன். நடிப்பு என்பதே யதார்த்தமில்லை. அப்புறம் என்ன ஓவா ஆக்டிங் அல்லது யதார்த்தாமான நடிப்பு? அப்போது வசனங்கள் நல்ல தமிழில் பேசப்பட்டது. இன்று கொச்சைத்தமிழ்.தமிழ் கொலைசெய்யப்படுகிறது. தற்போது ஒரு ஆள் 10 பேரைப் பந்தாடுகிறான். அதான் இயல்பான நடிப்ப? சிகரெட்டை துாக்கிப்போட்டு கவ்வுகிறவன் சூப்பர ஸ்டார்? இன்றைக்கு சிவாஜிகணேசன் போன்று சினிமாவில் நடிக்க எவருமில்லை.

Anonymous said...

யோசித்துப்பாருங்கள், சில மாதங்களுக்குப்பிறகு //வீட்டிற்கு செல்கிறீர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் சென்று, சிவாஜி கணேன் மாதிரி பீலிங்கோடு, கண்ணில் நீரோடு "உங்களையெல்லாம் பார்க்காம ரொம்ம்ம்மபபபப கக்ஷ்டப்பட்டேன்...அதை எப்படி சொல்லுவேன் எப்படி சொல்லுவேன்", என்று ஒருகையில் பின்னால் கட்டி ஒருகையை நெத்தியில் அடித்து காதலியுடனோ, பொற்றோர்களோடு பேசிப்போருங்கள், போகும்போது நல்லாத்தான்யா இருந்தான் ஏன் இப்படி ஆச்சுன்னு உங்களை ஒரு மாதிரி பார்க்கலாம்.//ந‌டிக‌னை,அர‌சிய‌ல்வாதியை க‌ட‌வுளாக்குவ‌து, ந‌டிக‌னின் ந‌டிப்பை ர‌சிப்ப‌தை விடுத்து அவனுக்கு பாலாபிஷேக‌ம் செய்வ‌து, ந‌டிக‌னிட‌ம் எதிர்பார்ப்ப‌தை அர‌சிய‌ல்வாதியிட‌ம் எதிர்பார்ப்ப‌து,அர‌சிய‌ல்வாதியிட‌ம் எதிர்பார்ப்ப‌தை ந‌டிக‌னிட‌ம் எதிர்ப்பார்ப்ப‌து,க‌ட‌வுளின் ம‌றுஅவதார‌ம்ன்னு சொல்ப‌வ‌ரின் காலைக்க‌ழுவி குடிப்ப‌து,ப‌க்தி என்ற‌ பெய‌ரால் அல‌கு குத்துவ‌து,த‌ரையில் சாப்பிடுவ‌து,உருண்டு பிறழ்வ‌து,சின்ன‌ விஷ‌ய‌துக்கெல்லாம் கொலைவ‌ரை போவ‌து,இற‌ந்த‌வ‌ருக்காக‌ கூலிக்கு அழுவ‌து,
பெற்றோர் பிள்ளைக‌ளிட‌ம் அதிக‌ம் எதிபார்ப்ப‌து,எத‌ற்கெடுத்தாலும் அதிக‌ சென்டிமெண்ட் பார்ப்ப‌து,இன்னும் வ‌ரிசைப்ப‌டுத்த‌லாம்,எல்லாமே மிகை.
இப்ப‌டி மிகைப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ க‌லாச்சார‌த்தை ப‌ற்றி ந‌டிப்ப‌தை எப்ப‌டி மிகை ந‌டிப்புன்னு சொல்ல‌முடியும்,
இந்த‌ கால‌ இளைஞக‌ர்க‌ளுக்கு,ராம‌ராஜ‌ன்தான் ந‌ல்ல‌ ந‌டிக‌ர்

"பாடல்களில் டி.எம்.எஸ், அவருக்கு பின்னணி குரல் கொடுத்தால் எச்சில் தெரிக்கும் அளவுக்கு சிவாஜி கொடுக்கும் வாயசைவும், முகபாவனைகளும் உண்மையில் தேவைப்படும் ஒன்றா?"

க‌ச்சேரிக‌ளில் பாடுப‌வ‌ர்க‌ள் எச்சில்தெரிக்க‌த்தான் பாடுகிறார்க‌ள், நீங்க‌ள் க‌வ‌னிக்க‌வில்லை போலும்

FEEDJIT Live Traffic Feed