Monday, February 8, 2010

மலையாளிகள் - ஒரு பார்வை

ஒரு முறை பீகாரில் நடந்த ரயில் விபத்து பற்றி இந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் வேடிக்கையாக ஒரு செய்தி வெளியிட்டிருந்ததாம்
இந்த விபத்தில் மலையாளிகள் யாரும் இறக்க வில்லையென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு மலையாளிகள் இல்லாத இடமில்லை. சாதாரண தொழிலாளி முதல் பெரிய உயர்பதவிகள் வரை இவர்களை பார்க்கலாம். இவ்வளவு இருந்தும் இவர்களிடம் இருக்கும் குறுகிய மனப்பான்மை படிப்பறிவு அற்ற பீகாரிகளை விட கேவலமான ஒன்று.


மற்ற மாநிலத்தவர்களை ஏளனமாக பார்ப்பது மலையாளிகளின் குணம். அதிலும் தமிழன் என்றால் இவர்களுக்கு கேலிப்பொருள். சமீபத்தில் நடிகர் ஜெயராம் தமிழ்பெண்களைப்பற்றி விமர்சனம் செய்தது ஒன்றும் மலையாளிகளை பொறுத்த வரை புதிய விசயமல்ல. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கிண்டல் பண்ணுவது என்பது அவர்களுக்கு சாதாரணமான ஒன்று. தமிழனை பாண்டி என்றும் பெண்களை தமிழத்தி என்றும் என்றும் கிண்டலாக அழைப்பதுண்டு.

காடுகளில் வாழ்ந்து கப்பை கிழங்கையும், மத்தி மீனையும் சுட்டுத்தின்று கட்டஞ்சாயா குடித்து வயிறு நிரப்பியவர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து,
பேச மொழியையும் கற்றுக்கொடுத்தவன் தமிழன். மலையாள இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கடைசி தலைமுறை. இவர்கள் தமிழர்களை கிண்டல் பண்ணுவது வேடிக்கைான ஒன்று.

பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று, அதுவே பத்து தமிழர்களுக்கு நடவில் ஒரு மலையாளி என்றால் அது மாதிரி நமக்கு யோசிக்கவே தோணாது.

மலையாளக்கரையோரத்தில் பிறந்தவன் என்பதால் மலையாளிகளைக்குறித்து சற்று அதிகம் தெரிந்தவன் நான். நான் சும்மா சொல்கிறேன் என்று நம்ப மறுத்தால் நாஞ்சில் நாடன் எழுதிய தீதும் நன்றும் படித்துப்பாருங்கள். மலையாள கரையோர எழுத்தாளனின் அனுபவங்களில் இதைப்பற்றி அதிகம் எழுதியிருப்பார். அவர் சொல்லியிருக்கும் இதுபோன்ற பல உதாரணங்களில் ஒன்று: மலையாள நாடன் பாட்டு என்று சொல்லப்படும் நாட்டுப்புற பாட்டு ஒன்றில் "சுத்தம் இல்லாத தமிழனுக்கு சூலடி" என்று ஒரு வரிவரும், சூல் என்றால் துடைப்பைக்கட்டை. சுத்தம் இல்லாத தமிழனுக்கு துடைப்பக்கட்டையால் அடிகொடுக்கவேண்டும் என்பது அர்த்தம்.

சுத்தம் பற்றி பேசுபவர்களின் சுத்தம் எப்படி என்று தெரியவேண்டுமென்றால் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்துநிலையம் சென்றால் அறியலாம். ஒரு மாநிலத்தில் தலைநகரின் முக்கிய பேருந்து நிலையம் எப்படி நாறிப்போய் கிடக்கிறதென்று பார்க்கலாம். வெயில் காலத்திலேயே கால் வைத்தால் தொற்றுநோய் வந்துவிடுமோ என்றநிலை. மழைவந்தால் சும்மா மணக்கும். இவர்கள் தமிழனின் சுத்தம் பற்றி பேசுகிறார்கள்.


சினிமாவிலும் தமிழர்களை கிண்டல் பண்ணுவதை கவனிக்கலாம். திருடர்கள், கூலிவேலைக்காரர்கள், வீட்டுவேலைக்காரர்கள், அடியாட்கள் இதுபோன்ற பாத்திரங்களில் தமிழர்களையே தமிழ்பேசி நடிக்க வைப்பார்கள் அல்லது மலையாளிகளை தமிழ்பேசவைத்து நடிக்க வைப்பார்கள். தமிழர்களின் ஒழுக்கத்தை குறை சொல்பவர்களின் ஓழுக்கம் பற்றி ஊருக்கே தெரியும். இந்தியாவில் அதிகம் மது அருந்துபவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா, அதிகம் கருச்சிதைவு நடக்கும் மாநிலம் கேரளா. மலையாளிகள் பங்கு இல்லாமல் வளைகுடாக்களில் கொலை, கொள்ளையில் நடப்பதில்லை. இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழனின் ஒழுக்த்தை குறைசொல்கிறார்கள்.

கோவை, குமரி மாவட்டத்தின் எல்லைகளில் செல்லும் வாகனங்களை இரண்டு நாட்கள் நிறுத்தினால் மொத்த கேரளாவும் அரிசி கிடைக்காமல் பட்டினி கிடக்கும், குழந்தைகள் பால் இல்லாமல் பசியில் அழும், கட்டிட வேலைகளுக்கு மண் இல்லாமல் வேலைகள் முடங்கும், நெய்வேலியிலிருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்தினால் மொத்த கேரளாவும் இருட்டில் மூழ்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டை அண்டிப்பிழைக்கும் இவர்களுக்கு இத்தனை நக்கல் அதிகம் தான்.


சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆப்படிக்கும் நோக்கத்தில் கட்சி நடத்தும் சிவப்புக்கொடி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவதிலிருந்தே தெரிகிறது, மலையாளிகளின் புத்திசாலித்தனம்.

மலையாளிகள் தமிழர்களை கிண்டல் பண்ணுவதற்கும் சூரியனைப்பார்த்து நாய் குரைப்பதற்கும் பெரிதாக வித்தியாசயொன்றுமில்லை. நல்லாருங்கடே மக்கா...

68 comments:

Anonymous said...

Good Post.

Tamils never realise it.

gulf-tamilan said...

ரொம்ப சூடு!!!நிறைய அனுபவமோ.வளைகுடா நாடுகள் எல்லாவற்றிலும் அவர்கள் ராஜ்ஜியம்தான்.நல்லது செய்பவர்களும் இருக்கிறார்கள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நெத்தியடி பிரதாப்

Chitra said...

இம்பூட்டு விஷயம் இருக்கா? இதை படிச்சிட்டு, யாரும் "ஓட்டோ" ஒன்றை "gelf " உக்கு அனுப்பிடாம.

ஸ்ரீராம். said...

ஐயோ...பயமுறுத்தறீங்களே ...நாளை கேரளா கிளம்பணும்

திருவாரூரிலிருந்து சரவணன் said...

//கோவை, குமரி மாவட்டத்தின் எல்லைகளில் செல்லும் வாகனங்களை இரண்டு நாட்கள் நிறுத்தினால் மொத்த கேரளாவும் அரிசி கிடைக்காமல் பட்டினி கிடக்கும், குழந்தைகள் பால் இல்லாமல் பசியில் அழும், கட்டிட வேலைகளுக்கு மண் இல்லாமல் வேலைகள் முடங்கும், நெய்வேலியிலிருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்தினால் மொத்த கேரளாவும் இருட்டில் மூழ்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டை அண்டிப்பிழைக்கும் இவர்களுக்கு இத்தனை நக்கல் அதிகம் தான்.//

இது நமக்கு தெரியுது. நம்ம அரசியல் வாதிகளுக்கு தெரியலையே.

ஜெய்லானி said...

////பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று,///

100 க்கு 100 உங்கள் கருத்து சரி. ஆனால் அவர்கள் பருப்பு என்னிடம் வேகாது. அதிகம் படித்த வடிகட்டின முட்டாள்கள் அவர்கள்.
நம்பிக்கை மோசடியில் நெ 1. மலையாளி சரியான கொலையாளி!!!

அமைதிச்சாரல் said...

நல்லாத்தான் பதிலடி கொடுத்திருக்கீங்க... ஆனாலும், சூடு கொஞ்சம் கூடுதல்தான்..

பிரியமுடன்...வசந்த் said...

இன்னும் நிறையா சொல்லலாம் மாப்பி இவனுங்க இம்ச தாங்க முடில இவனுங்கள தாண்டி தப்பித்தவறி மேல வந்திட்டோம் அம்புட்டுத்தேன் சுத்திவளைச்சு இவனுங்க கொடுக்குற இமச சொல்லி மாளாதுடே...ஆனாலும் அதெல்லாம் மிதிச்சு வெளிய வரும்போது அப்பாடான்னு ஒரு நிம்மதி......

பொழச்சு போறாய்ங்க விட்டுத்தள்ளு மாப்பி...

நாடோடி said...

என்ன தல அனல் பறக்குது......

வினோத்கெளதம் said...

ஏன் இந்த திடிர் கொலைவெறி.. ரொம்பவே பாதிக்கப்பட்டு இருப்பிங்கப்போல..
அதுசரி நீங்களே 'மலையாளி'ன்னு ஊருக்குள ஒரு பேச்சு இருக்கே உண்மையா..:)

அபுஅஃப்ஸர் said...

சந்திரமண்டலத்துலேபோய் ஒரு ஒரு கல்லை தூக்கி பார்த்தால் அதுக்கு கீழே மலையாளி இருப்பான், இப்ப்படி எங்கும் பரவி இந்தியனின் மானத்தை வாங்க வந்தவனுங்க‌

அவன் ஒரு காலும் நான் இந்தியன் என்று சொல்ல மாட்டானுங்க நான் மலையாளினுதான் சொல்லுவானுங்க, யாருக்கு தெரியும் இன்னும் கொஞ்சநாள்லே கேரளா தனிநாடு போராட்டம் தொடர வாய்ப்பிருக்கு

நல்லா சாடிருக்கீங்க தல‌

அக்பர் said...

தல பதிவுல அனல் பறக்குது.

யாராவது மலையாளி சேட்டை பண்ணிட்டாங்களா. சொல்லுங்க தல சொல்லுங்க.

Anonymous said...

மலையாள மேனன்கள் இந்திய வெளியுறவுக்கொள்கை வகுப்பில் பெருமளவு தலையிடுகின்றனர். ஈழத்தமிழர்களின் அழிவில் மேனன்களின் பங்கு அதிகம். நயவஞ்சகர்கள். என்றைக்கும் மன்னிக்க முடியாது. தமிழனை கருவறுப்பதில் எப்போதும் குறியாய் இருக்கின்றனர். ஆனால் தமிழன் மலையாள நடிகர் நடிகைகளுக்கு வாரிவாரி கொடுத்துக்கொண்டிருக்கின்றான். அஜித்த தல என்று கூவி புலம்பித் திரியிறான். நாம நாய் மாதிரி இருந்தா எவன் மதிப்பான்?

Sampath said...

தல .. மத்த இவனுங்க தொல்ல ஐடி'லயும் இருக்கு .... ஒரு மல்லு மேனேஜர் டீம்'ல யாரவது மல்லு இருந்தா அந்த மல்லு தான் முதல்ல ப்ரோமோசன் வாங்குவான் ... அவனுக்கு பின்னாடி தான் மத்த ஸ்டேட்காரங்க எல்லாருக்கும் ... அப்படி பண்ணி என்னத்தை சாதிக்க போறாங்கன்னு தெரில ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

Excellent idukai

தாராபுரத்தான் said...

போதாது செருப்படி.

Anonymous said...

1000 Kolayali = 1 Malayali

Anonymous said...

உண்மை .முற்றிலும் உண்மை. இது காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தமிழனை 'பாண்டி'
அல்லது 'பாண்டிக்காரன்' என்று நக்கலாக தான் அழைக்கிறார்கள். ஆனால் இதை நாம் நக்கலாக எடுத்து கொள்ள வேண்டாம்.இப்படி அழைப்பதற்க்கு ஒரு சரித்திர காரணம் உண்டு. அது தெரியாமல் காலம் காலமாக தமிழனை பாண்டி என்று அழைக்கும் மலயாளிகளை பொறுத்தவரை 'பாண்டி' என்பது ஒரு இழி சொல்லாகவே போய் விட்டது.பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்திலே பக்கத்து நாடான பாண்டி நாட்டு மக்களை பாண்டி நாட்டுக்காரன் என்று அந்த காலத்தில் அழைத்தார்கள். அது தான் கால போக்கில் மறுவி பாண்டி என்பது மலயாளிகளை பொறுத்தவரை தமிழனை குறிக்கும் சொல் என்று ஆகி விட்டது.அவர்களது அறியாமையை மன்னிப்போம்.இது கிட்டதட்ட நாம் தெலுங்கர்களை 'கொல்ட்டி' என்றும் மலயாளிகளை 'மலயாளத்தான்' அல்லது மல்லு என்றும் அழைப்பது போல தான்.மலயாள சினிமாவில் கூட தமிழனை பாண்டி என்று தான் அழைக்கிறார்கள்.

நம்மிடம் சுத்தம் இலை என்று அவர்கள் சொல்ல நாமும் ச்ற்று இடம் கொடுத்து விட்டோம் என்று எனக்கும் தோன்றுகிறது.நம் கிராமங்களில் இன்றும் பொது இடத்தை கழிப்பறையாக பயன்படுத்தும் சிறுவர்களையும் ,ஏன் பல சமயங்களில் பெரியவர்களையும் ரயில்லோ அல்லது பேரூந்திலோ செல்லும் பொழுது சாலை ஓரங்களில் இன்றும் தமிழகத்தில் காண முடியும்.இது கேரளாவில் காண்பது மிக மிக அரிது என்பதை நாம் ஒத்து கொல்ள்ள தான் வேண்டும்.அவர்கள் நம்மை சுத்தம் இல்லாதவர்கள் என்று சொல்வதற்க்கு முக்கிய காரணம் இது தான்.கல்வி அறிவில் நாட்டிலயே முதலாவதாக இருப்பதால் சுகாதாரத்தின் மேன்மையை அவர்கள் நம்மை விட நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.முன்னொரு காலத்தில் இருந்ததை விட இந்த சுகாதார கேடு இன்று பல மடங்கு குறைந்திருக்கிறது

Anonymous said...

ஜெயராம் ஒரு வார்த்தை சொல்லிட்டாருன்னு இந்த குதி குதிகிறோமே. மலையாள சேச்சிகளுக்கு தமிழ் படங்களில் என்னைக்காவது மேல் துண்டு போட்டு நடிக்க விட்டிருக்கொமா. அவங்க எல்லோருமே அடுத்தவன் கணவருக்கு அலையிற கேசாதனே காட்டுறோம்

☀நான் ஆதவன்☀ said...

இன்னைக்கு மொறவாசல் உன் முறை போல :) நடத்து நடத்து மச்சி :))

வடகரை வேலன் said...

ஒரு அமைதியான மனநிலையில் இதே பதிவைப் படித்துப் பாருங்கள்.

இதே வார்த்தைகள் தமிழகத்தில் ஒரு ஜாதியினரையும், இந்தியாவில் ஒரு மதத்தினரையும் அவமதிக்க எழுதப்பட்டே வருகின்றன.

சப்ளைகளை நிறுத்தினால் வாடிவிடுவார்கள் என்பது சிறுபிள்ளைத்தனம். நமது தொழில் பாதிக்காதா? கோழிப்பண்ணை உரிமையாளர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் அதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருப்பதால்தானே உங்களால் லாபம் பார்க்க முடிகிறது?

மேலும் தமிழ்ப்படங்களில் மலையாளப் பெண்களை எந்த அளாவுக்குக் கேவலப் படுத்தி இருக்கிறோம் எனப் பாருங்கள். முக்கியமாக விவேக்.

ஜெயராம் சொன்னது சரி என வாதாடவில்லை. அது தவறு. ஆனால் இப்படி வெறுப்பை உமிழணுமா?

தங்கள் உழைப்பால் தமிழகத்தில் எங்கும் அவர்கள் பரவி இருக்கிறார்கள். ஏன் நமது சோம்பேறித்தனம்தானே? ஏன் நம்மால் முடியவில்லை. கற்றுக் கொள்ள அனேகம் இருக்கிறது அவர்களிடம்.

அவர்கள் மாநிலத்திற்குத் தேவையான உரிமைகளை அவர்கள் போராடிப் பெறுகிறார்களே அதைப் பார்த்துக் கொண்டு நாம் என்ன செய்கிரோம். பாரதியார் சொன்னது போல பொட்டைப் புலம்பல்தானே நமக்குத் தெரியும்.

”மிகை நாடி மிக்க கொளல்” வள்ளுவர் சொல்லியிருக்கார்; குற்றத்தை மட்டும் நாட வேண்டாம்.

மோகன் குமார் said...

நான் ஒரு மலையாளி CEO கிட்டே வேலை செய்த போது அவர் சொல்லுவார்: " மலையாளிங்க அவங்க ஊரில் இருந்தா ரொம்ப ஆடுவாங்க. வெளியூர் வந்தா ஒழுங்கா வேலை பார்ப்பாங்க" என்று..

வடகரை வேலன் said...

//மனித உறவுகளின் உணர்வுகளைப் படமாக்குவதில் மலையாள இயக்குனர்களை அடிச்சுக்க முடியாது. இந்த வகையில் எனக்குப்பிடித்த மலையாள இயக்குனர்கள் கமல்,வினயன்,லோகிததாஸ், சத்யன் அந்திகாடு வரிசையில் இடம்பெற்றவர் இயக்குனர் பிளஸ்சி(BLESSY), காரணம் காழ்ச்சா (பார்வை).//

உங்க பதிவிலிருந்து

கண்ணா.. said...

என்னடா இது...அந்த மலையாள பிகரும் உன்க்க்கு ஓர்க் அவுட் ஆகலையா....

பயங்கர கடுப்பா இருக்கே....

all the best

Sangkavi said...

//அதிலும் தமிழன் என்றால் இவர்களுக்கு கேலிப்பொருள். சமீபத்தில் நடிகர் ஜெயராம் தமிழ்பெண்களைப்பற்றி விமர்சனம் செய்தது ஒன்றும் மலையாளிகளை பொறுத்த வரை புதிய விசயமல்ல. //

இவ்வளவு கேவலமாகப் பேசின ஜெயராம் ஏன் சென்னையில் குடி இருக்கனும் போக வேண்டியது தானே அவருடைய மலையாளத்துக்கு...


//தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கிண்டல் பண்ணுவது என்பது அவர்களுக்கு சாதாரணமான ஒன்று. தமிழனை பாண்டி என்றும் பெண்களை தமிழத்தி என்றும் என்றும் கிண்டலாக அழைப்பதுண்டு.//

ஆனால் தமிழ்நாட்டில் டீ கடை வைத்து தமிழன் பணத்தில் சோறு திண்பதை மட்டும் விடமாட்டானுங்க....

நாஸியா said...

அப்பப்பா.. எனக்கு தெரிஞ்சு என் குடும்பத்துலயும் சரி, நண்பர்கள் வட்டாரத்துலயும் சரி, மலையாளிகளை சகிச்சுக்குவேன்னு சொல்றவங்களே ரொம்ப கம்மி...

நாமளும் அவங்க மாதிரி ஒற்றுமையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.. என்ன ஜாதியோ மதமோ மலையாளின்டா எல்லாரும் ஒரே ரத்தம். ஆனா நாம எப்படி இருக்கோம்?

வடகரை வேலன் said...

//மும்பை மராத்தியர்களுக்கு மட்டுமே என சொந்தம் கொண்டாடுபவர்கள் இதை ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு சொல்லியிருந்தால் இப்போது மும்பை என்ற நாட்டின் முக்கிய வணிக நகரம் அடையாளமே தெரியாமல் போயிருந்திருக்கும். முமபையில் முதலீடு செய்து வளர்த்துவிட்ட தொழில்அதிபர்களில் பலர் மராத்தியர்கள் அல்ல. குஜராத்திகளும், பனியாக்களும், சிந்திகளுமே மும்பையை வளர்த்தவர்கள். சிவசேனா இப்படி செய்வது ஏற்றிவிட்ட ஏணியை உதைத்து கீழே தள்ளுவது போன்றது. ஜெய் மகராஷ்ட்ர். நல்லாருங்கடே...//

இதே நிலைதான் நமக்கும். ஒரு ப்க்கம் மலையாளிகளும் இன்னொரு ப்க்கம் பீகாரிகளும் ஆக்கிரமிக்கிராங்க. நாம காலி பெருங்காய டப்பான்னு பழம்பெருமை பேசிட்டு இருந்தா விளங்கிடும்.

Sen22 said...

Arumaiya Post Boss..

ஹுஸைனம்மா said...

தொடர்ந்து மலையாளப் படங்கள் விமரிசனங்கள் போடுவதால் உங்களை மலையாளி என எண்ணிவிடக்கூடாதே என்று பயந்து எழுதியது போலத் தெரிகிறது.

எல்லாரும் நல்லவர்களும் இல்லை; கெட்டவர்களும் இல்லை. சொந்தத் தேவைகளைப் பொறுத்து முகமூடிகளை மாட்டிக் கொள்கிறோம். முல்லைப் பெரியாறு, காவிரி விஷயங்களில் அம்மாநிலத்தவர் கட்சிபேதம் பாராமல் ஒன்றுசேர்ந்து போராடுவது தமிழ்நாட்டில் நம் கனவில் கூட நடக்காது. இப்படி எத்தனையோ நல்லவை அவர்களிடத்தும் உள்ளது.

நீங்கள் பதிவிட்டுப் பின் டெலீட் செய்த பதிவுகளின் வரிசையில் இதுவும் சேரும் என நம்புகிறேன்.

Anonymous said...

//அவர்கள் மாநிலத்திற்குத் தேவையான உரிமைகளை அவர்கள் போராடிப் பெறுகிறார்களே அதைப் பார்த்துக் கொண்டு நாம் என்ன செய்கிரோம்//

நாம மாநில முதல்வர் குடும்பத்துக்கு தேவையான உரிமய போராடி பெற்றுக்கொடுக்கிறமே

நாட்டில இப்ப மன்னராட்சி மறுபடி வந்துட்டுதுங்க. அடுத்து முடி சூட்டப்போவது இளவரசன் ஸ்டாலினா இல்ல இளவரசன் அழகிரியா இளவரசி கனிமொழியான்னு குழம்பிக்கிட்டுருக்கோம். நீங்க என்னடான்னா நாட்டுக்கு உரிம பத்தி ஜோக்கடிக்கிறீங்க.

அரசியலும் குடும்பமாயமாச்சு செம்மொழியும் குடும்பமயமாச்சு மீடியாவும் குடும்பமயமாச்சு சினிமாவும் குடும்பமயமாச்சு என்னங்க நாட்டுக்கு இனி மிச்சம்?

நம்மள பாண்டி என்னு சொன்னதுக்கு மலயாளிங்களை கண்டிக்கணும் ஏன்னா பன்னாடை என்பதே சரியானது.

ஜெய்லானி said...

////வடகரை வேலன் said...
ஒரு அமைதியான மனநிலையில் இதே பதிவைப் படித்துப் பாருங்கள்.
இதே வார்த்தைகள் தமிழகத்தில் ஒரு ஜாதியினரையும், இந்தியாவில் ஒரு மதத்தினரையும் அவமதிக்க எழுதப்பட்டே வருகின்றன///

தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்து பாருங்கள்.(முடிந்தால் இந்தியா) உங்கள் நடுநிலை எப்படி என்று உங்களுக்கே புரியும்.

கண்ணா.. said...

@ வடகரைவேலன் அண்ணாச்சி,

மலையாளி, பீகாரின்னு பிரிச்சு பாக்க ஆரம்பிச்சா அது ஆரோக்யமான சூழலை உருவாக்காது என்ற உங்கள் எண்ணம்தான் என்னுடையதும்..

அதே வேளையில் உங்கள் ஒரு கருத்தில் என் மாற்று பார்வையையும் இங்கு பதிவு செய்கிறேன்.

//தங்கள் உழைப்பால் தமிழகத்தில் எங்கும் அவர்கள் பரவி இருக்கிறார்கள். ஏன் நமது சோம்பேறித்தனம்தானே? ஏன் நம்மால் முடியவில்லை. கற்றுக் கொள்ள அனேகம் இருக்கிறது அவர்களிடம்//

தமிழகத்தில் அவர்கள் பரவி இருப்பதற்கு காரணம் அவர்களுடைய சூழலும் மிக முக்கிய காரணம்.
அங்கு தொழிற்சாலைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான சூழல் மிக குறைவு. அதனால்தான் அவர்கள் வேலை தொழில் நிமித்தமாக அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

இதன்மூலம் உலகில் மலையாளிகள் இல்லாத இடமே இல்லையென்று புத்திசாலிதனமான மார்க்கெட்டிங்க்கும் ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று நிலமையே வேறு...உலகெங்கும் தமிழன் இல்லாத நிலைதான் எங்கும்.

இந்த பதிவில் கூறியிருந்த

//பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று, அதுவே பத்து தமிழர்களுக்கு நடவில் ஒரு மலையாளி என்றால் அது மாதிரி நமக்கு யோசிக்கவே தோணாது//

இந்த வாசகம் இங்கு அமீரகத்தில் சத்தியமான உண்மை.


//நாம காலி பெருங்காய டப்பான்னு பழம்பெருமை பேசிட்டு இருந்தா விளங்கிடும்//

பழம்பெருமை இல்லை.. அண்ணாச்சி...இன்றும் தமிழர்களின் உலகளாவிய தொழில்நுட்ப பங்களிப்பே இதற்கு சாட்சி...

இங்கு அமீரகத்தில் தொழில்நுட்ப பங்களிப்பில் தமிழர்களின் பங்குதான் அதிகம். இது இன்னும் தமிழ்நாட்டில் பலபேருக்கு தெரியாது என்பதுதான் வருத்தமான விஷயம். இதற்கு நமக்கு நம்மை விளம்பர படுத்தி கொள்ளும் திறன் குறைவு என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

Anonymous said...

i think u said real fact of malayaali.... good post bcas am wrkg s.arabia i know this malayaalis...

chinnappenn2000 said...

மலையாளிகள் என்ன, மற்ற மாநிலத்தவர் அனைவருமே தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் என்று நினைப்பதற்கு இடம் கொடுத்தது தமிழர்களின் கேவலமான பிரிவினை பேசும் திராவிட கலாசாரம் தான்.எங்கு திரும்பினாலும் மஞ்ச துண்டு,அவரது குடும்பத்தார் மற்றும் ஒரு லோக்கல் தி மு க அசிஙத்தின் கேவலமாக வில்லன் சிரிப்பு சிரிக்கும் முகங்கள் ,போஸ்டர்கள்/கட் அவ்ட்டுகளில் இருக்கும்.இந்த மூஞசிகளுக்கு ஜால்ரா போட்டு பிழைக்க சினிமா கும்பல்,எழுத்தாளர் குமப்ல் தினம் தினம் செய்யும் கேவலம இருக்கிறதே..தாங்க முடியாது சாமி.இந்த அழகுல திராவிட தமிழ் மூஞ்சிகளுக்கு தங்கள் கலாசாரத்தின் மேல் அளவு கடந்த கர்வம் வேறு.உலகிலேயே மூத்த குடி தமிழன்..வந்தாரை வாழவைப்பவன் இத்யாதி.உண்மை என்னவென்றால் தமிழர்களும் கணிசமான அளவில் வெளியே சென்று வாழ்பவர்கள் தான்.அனைவருமா மஞ்ச துண்டுக்கு சலாம் போட்டு பிரியாணி/சாராயம் சாப்பிட்டு பிழைக்க முடியும்.முதலில் உங்கள் கலாசாரத்தின் கேவலத்தை உண்ருங்கள்.பிறகு மலையாளியையோ,கன்னடவனையோவெய்யலாம்.

ஜீவன்சிவம் said...

பத்து மலையாளிகளுக்கு மத்தியில் ஒற்றை தமிழனாக வேலை பார்த்த அனுபவம் எனக்குண்டு.
துபாயில். உறவினர்களால் ஆதரவற்று கைவிடப்பட்ட நிலையில் எனக்கு அடிக்கலாம் கொடுத்தது
ஒரு இலங்கை தமிழனும், மலையாளிகளும் தான். இலங்கை தமிழன் தான் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தான். மலையாளிகள் இருக்க இடம் தந்தனர். தனிப்பட்ட முறையில் மலையாளி நல்லவன் தான். குழு மனப்பன்மஎன்று வரும் பொது தான் அவர்கள் வேலையை காட்டுவார்கள். நிறைய அவமானபட்டிருகிறேன்.
பெரும்பாலும் அவர்கள் கூடியிருக்கும் போது என் இருப்பை நான் காட்டிகொண்டதில்லை.

D.R.Ashok said...

நல்ல பதிவு ப்ரதாப் :)

colvin said...

என்னதான் இருப்பினும் தமிழர்களை தவறக்குறைவாக நினைப்பதையும் பேசுவதையும் நிறுத்த வேண்டும்.

தமிழர்கள் என்றால் இந்தியத் தமிழர்கள் மட்டுமா இவர்களுக்கு ஞாபகம் வருகிறது.

இலங்கைத் தமிழர்கள் மலையாளிகளை எப்படி பார்ப்பார்கள்?
விகிகாதார அடிப்படையில் மலையாளிகளை விட இலங்கைத் தமிழர்களின் கல்வி அறிவு சதவீதம் அதிகம். மலையாளிகள்....?

கடின உழைப்பாளிகள்... சிங்களவர்களே சொல்லுவார்கள். மலையாளிகள்....? போரின் பின்னர் அவ்வளவு விரைவாக தங்கள் பகுதிகளை கட்டியெழுப்பினார்கள் என்று சரித்திரம் சொல்லும்.

மலையாளிகள் அண்டிப்பிழைப்பர்கள். இலங்கைத்தமிழர்கள் அவ்வாறவர்கள் அல்லர். சுயஉழைப்பு....உழைப்பு.

சுகாதாரத்தில் எவ்வளவு சிறந்தவர்கள் இங்குள்ள தமிழர் பகுதியை பார்வையிட்டாலே போதும். மலையாளிகள் எங்களுடன் ஒப்பிடும் போது சுத்தம் குறைந்தவர்கள்.

வெளிநாடுகளில் கடினஉழைப்பிற்கு தமிழனா மலையாளி யா என வரும்போது இலங்கைத் தமிழனே தேர்வில் முதல் நிற்பான்.

மாந்திரீகத்திலும் மூடநம்பிக்கையிலும் பேர்பெற்றவன் மலையாளத்தான். மலையாள மாந்தீரிகம் என்று ஒன்று உண்டு. தமிழ் மாந்திரிகம் என்று எங்காவது கேள்விட்டுள்ளீர்களா?

நன்றி

டவுசர் பாண்டி said...

//தமிழ்நாட்டை அண்டிப்பிழைக்கும் இவர்களுக்கு இத்தனை நக்கல் அதிகம் தான்.//

சூப்பரு !! கேரளால நம்பளுக்கு புட்ச்சது ஹி ஹி ஹி ஹி ஹி ,
............................
...........................
..........................
..........................
............................

அட கொயாப் புட்டு தாம்பா நீ வேற இன்னாவோ இன்னு நெனச்சிட்டியா ? ஹையோ ஹையோ !!

எறும்பு said...

ஆமாண்ணே, தமிழன எவன் மதிக்கிறான்.. நாம போராடுவோம்..

ஆதி மனிதன் said...

//Sangkavi said... ஆனால் தமிழ்நாட்டில் டீ கடை வைத்து தமிழன் பணத்தில் சோறு திண்பதை மட்டும் விடமாட்டானுங்க....//

இதற்கு பதில் கீழே...

//வடகரை வேலன் said... தங்கள் உழைப்பால் தமிழகத்தில் எங்கும் அவர்கள் பரவி இருக்கிறார்கள். ஏன் நமது சோம்பேறித்தனம்தானே? ஏன் நம்மால் முடியவில்லை. கற்றுக் கொள்ள அனேகம் இருக்கிறது அவர்களிடம். //

SUFFIX said...

எங்கள் அலுவலகத்திலும் அவங்கதான் டாமினேஷன், ஆனா சில நல்லவங்களும் இருக்காங்க. அவர்கள் ஒற்றுமை உணர்வு பாராட்டப்பட வேண்டியதே!!

வடகரை வேலன் said...

//
தமிழகத்தில் அவர்கள் பரவி இருப்பதற்கு காரணம் அவர்களுடைய சூழலும் மிக முக்கிய காரணம்.
அங்கு தொழிற்சாலைகள் மற்றும் புதிய தொழில் தொடங்குவதற்கான சூழல் மிக குறைவு. அதனால்தான் அவர்கள் வேலை தொழில் நிமித்தமாக அதிக அளவில் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.//

ஆமாங்க அவங்க சூழ்னிலைய டக்குன்னு புரிஞ்சுக்கிட்டு வெளியேறி ஜெயிச்சாங்க. நாம? எனக்கு இந்தி தெரியாது. தமிழ்நாடுதான் உசத்தின்னு இங்கியே குப்பை கொட்டிட்டு இருக்காங்க. என்ன சொல்லுங்க அடாப்டிங்க் டு தி ப்ளேஸ் அவங்ககிட்ட இருக்கு. நாம அது இல்லை இது இல்லை அது நொல்லை இது நொல்லை.


//
//பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று, அதுவே பத்து தமிழர்களுக்கு நடவில் ஒரு மலையாளி என்றால் அது மாதிரி நமக்கு யோசிக்கவே தோணாது//

இந்த வாசகம் இங்கு அமீரகத்தில் சத்தியமான உண்மை.


//நாம காலி பெருங்காய டப்பான்னு பழம்பெருமை பேசிட்டு இருந்தா விளங்கிடும்//

பழம்பெருமை இல்லை.. அண்ணாச்சி...இன்றும் தமிழர்களின் உலகளாவிய தொழில்நுட்ப பங்களிப்பே இதற்கு சாட்சி...

இங்கு அமீரகத்தில் தொழில்நுட்ப பங்களிப்பில் தமிழர்களின் பங்குதான் அதிகம். இது இன்னும் தமிழ்நாட்டில் பலபேருக்கு தெரியாது என்பதுதான் வருத்தமான விஷயம். இதற்கு நமக்கு நம்மை விளம்பர படுத்தி கொள்ளும் திறன் குறைவு என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.//

உங்க முதல் கருத்தும் இரண்டாம் கருத்தும் எதிர்மறையாக இருக்கு பாருங்க. தமிழர்கள் அவ்வளவு சிறப்பானவங்கன்னா ஏன் இன்னும் மலையாளிகள் இழிவு செய்கிறார்கள் என வருத்தப் பட வேண்டும். அந்த இடத்தில் நமது மாம மச்சான் உற்றார் உறவினர்களாஇ வைத்து இன்னும் சிறப்பாக வாழலாமே?

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

மச்சி,
என்ன இது சாரு வின் பதிவு போல ப்யாஸ்டா இருக்கே?எல்லா இனத்திலும் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான்.
நாணயத்துக்கு இரணடு பக்கம் போல அவன் பார்வையிலிருந்து பார்த்தாலும் நம்மிடமும் குறைகள் உண்டு.
---------
எனக்கு இங்கு ஒருமுறை ஒரு மலையாளி வேலைக்கு ரெஃபெரென்ஸ் கொடுத்த்து சிவி மூவ் செய்து வேலையும் கிடைத்தது. நல்ல மலையாள நண்பர்களும் உள்ளனர்.
---------
பாண்டி என கேலி செய்தால் நாம மலையாளத்தான் என பர்கசித்துவிடுவோம் ,
வெறுப்பை உமிழ்வதை தமிழன் குறைக்கணும்.முடிந்தால் உன் ரெகமெண்டேஷனில்,நம் தெரு பையனையோ நம் மச்சானையோ அமீரகத்தில் வேலைக்கு சேர்த்துவிட்டு,இருக்க இடத்திற்கும் ஏற்பாடு செய்து அவன் முதல் சம்பளம் வாங்கும் வரை மூன்று வேளை சோறும் போடு.(போடுவோமா?)
-------------
வெள்ளைக்காரன் தெளிவாய் நம்மை
விசுவாசத்துக்கும் , பொறாமை சச்சரவுக்கும் பெயர்போனதால்
நாய்கள் என்றும்
மலையாளிகள் கூடிவாழும் குணம்,தம்மின குழு மனப்பானமை வஞ்சகம் மற்றும் பணத்தாசைக்கும் பேர்போனதால் குள்ள நரிகள் என்றும் சொல்லியிருக்கிறானாம்.
நாம் நாயாகவும் இருக்க வேணாம் நரியாகவும் இருக்க வேணாம் மனிதனாய் இருப்போம் மச்சி.

தமிழன் said...

மிகவும் சரியாகச் சொல்லி இருக்கின்றீர்கள்.
ஜெயராம் சொல்லியிருக்கிறான், அந்த படத்திலுள்ள வசனத்தைத்தான் நான் கூறினேன் என்று. எப்படி ஒரு மலையாள படத்தில் இத்தகைய வசனம் தமிழர்களை இழிவுபடுத்தி வரலாம்? “கருத்த, எருமை, தமிழச்சி’...

Mrs.Menagasathia said...

போட்டு தாக்கிட்டீங்க...

maddy73 said...

I agree with what 'chinnappenn2000' said.

How long we are going to see differences among Indians?

Isn't it true that a tamil fellow him/herself is spoiling another one.

ponga appu.. pulla kuttiya padikka vaiyunka.. polappa paarunkappu.

adhusari.. naanjilaar eppa romba serious matter laam poda mudiveduththaaru?

goma said...

நாஞ்சில் எக்ஸ்பிரஸ் கேரளா பக்கம் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...

கோபிநாத் said...

அய்யே..ஞான் பேடிச்சு போயி.. வல்லிய பதிவு

பித்தனின் வாக்கு said...

ஆஜர் ஆஜர் ஆஜர்.

பித்தனின் வாக்கு said...

வடகரை வேலன் ஜாக்கிரதை, தமிழ் தமிழ் என்னும் உணர்வு பொங்கும் போது இப்படி சொன்னால் உங்களை தமிழனத்தூரோகி என்றும் பார்ப்பன ஆதரவாளர் என்றும் சொல்வார்கள்.

ரகுநாதன் said...

வடகரை வேலனுக்கு இந்த விஷயத்தில் அனுபவம் கம்மி போல இருக்கு....நானெல்லாம் பயங்கரமா பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஒருத்தன் மேனேஜரா வந்தான்...மொத்த ஆபீசும் மாறிடுச்சு...என்ன பண்றது தமிழன் எப்பவும் ஏமாளிதானே.

ரகுநாதன் said...

மலையாளதானுக்கு கோவையில் என்ன பேரு தெரியுமா... கஞ்சியான்... இந்த ஜெயராம் ஒரு தமிழன்தான். பூர்வீகம் கும்பகோணம். கோவை கல்லூரிகளில் இந்த கஞ்சி பெண்கள் செய்யும் குடி, கூத்து பற்றி ஜூ.வியில். ஒரு மாதம் முன்னாடி எழுதுனாங்களே. இவளுகள பாத்து நம்ம ஊர் பொண்களும் கெடுதுங்க...

Busy said...

Good Post !!!,

I agree with Velan also..

But in GULF Most of the Tamil Person only in Top Most Position......

All under him....

angel said...

இந்த போஸ்ட் வருங்காலத்துல காணப்போக வாய்ப்பிருக்குன்னு நினைக்கிரேன்

angel said...

கண்ணா அவர்கள் கூரியது உண்மையா?

angel said...

நாம் மட்டும் ஒழுங்கு கிடையாதே தமிழ் படத்திலேயே எத்தனையோ கருப்பு பெண்களை கிண்டல் அடிக்கிறாங்க.

பேநா மூடி said...

அனுபவமோ??

பின்னோக்கி said...

அட இவ்வளவு பிரச்சினை பண்றாங்களா அவங்க. சே. இவ்வளவு நாளா இந்த விசயம் தெரியாம போய்டுச்சே. பாவங்க நீங்க.

புல்லட் said...

யாராச்சும் மலையாளியை பாண்டின்னு கூப்பிட்டா லாரில அடிபட்டாப்பல சின்னாபின்னமாயிடுவான்னு கேள்விப்பட்டிருக்கேன்.. அவளோ எளக்காரமாம் தமிழன்னா.. நாம சுத்தத்தை கல்விதரத்தை அவங்களுக்கு நிகரா கொண்டாந்திட்டு அப்புறம்தான் கதைக்கலாம் எண்டு நினைக்கிறன்..நல்ல பதிவு.

kavisiva said...

தமிழனை நல்லா குறை சொல்லுவானுங்க. ஆனா மலையாள சேனல்களில் வரும் பாட்டு போட்டி நிகழ்ச்சிகளைப்பார்த்தால் 50% தமிழ் பாட்டுதான் பாடுவானுங்க. அவனுங்களுக்கு கிண்டல் பண்ணவும் தமிழன் வேணும் சாப்பாட்டுக்கும் தமிழன் வேணும் கரண்டுக்கும் தமிழன் வேணும் பொழைக்கறதுக்கும் தமிழன் வேணும். மொத்தத்தில் தமிழன் இல்லாம அவனுங்க சாகத்தான் வேணும். பொழச்சு போகட்டும் விடுங்கடே!

தொலைதூரத்தில் இருந்து குமரித் தமிழை படிக்கும் போது நம் ஊருக்கே சென்று விட்ட உணர்வு. நன்றி பிரதாப்

malar said...

ரொம்ப சூடு!!!
நல்ல பதிவு...

தம்பானூர் பஸ் நிலயத்தை சொல்ரேங்களே தி புரம் ஏர்போட் பாருங்க இண்டர் நேசனல் ஏர்போட் என்ரு பெயர் பாத்ரூம் ஆண்டவந்தான் காக்க வேண்டும்.
ஒரு மலயாளி அவனை சார்ந்தவனுக்குதான் உதவி செய்வான்

வேரு யாருக்கும் உதவி செய்யமாட்டன்.

சரி பிரதாபு அந்த பெண்ன வேண்டாம்
சொல்லிருவமா?

வில்லனின் விநோதங்கள் said...

முட்டாள்த்தனமான கருத்து, எனக்கு தெரிந்தவரை மலையாள பெண்களையும், மலையாளிகளையும் தமிழ் சினிமா கேவல்ப்படுத்துவது போல அவர்கள் சினிமாவில் செய்தது இல்லை, அப்படினா மலையாளத்தானை விட தமிழன் கேவலமானவனா

வில்லனின் விநோதங்கள் said...

என்னங்க, எல்லாரும் இனதுவேதேஷத்தோடே பின்னூட்டமிடுறிங்க, மலையாளிகள் என்றும் தமிழனை கேவலப்படுத்தியது இல்லை, அதுவும் தமிழன் அளவிற்கு,

வில்லனின் விநோதங்கள் said...

இனத்தை வைத்து திட்டுபவர்கள் எல்லா மனிதர்களிடமும் உண்டு, அப்படி மலையாளிகளும் உண்டு தமிழனும் உண்டு, கன்னத்தனும் உண்டு, எல்லாருமே உண்டு, இதுல பின்னூட்டமிட்டுருக்கவங்க மனச தொட்டு சொல்லுங்க, வேற்று மத, இன, மொழி, தேசக்காரர்களை முதல் பார்வை, சந்திப்பில இளக்காரமா இல்லாம பார்த்திருக்கிங்களா யாராச்சும்? இல்லைன்னு பொய் மட்டுமே எல்லாராலும் நிஜத்தில் சொல்ல முடியும்.

வில்லனின் விநோதங்கள் said...

இதே மாதிரி மலையாளத்தான் எவனேனும், தமிழனை கேவல்பப்டுத்தி பதிவிட்டிருக்கலாம், அதிலும் உங்களை போலவே இன வெறியர்களும், ஆமாம் சாமியினு பதிலிட்டிருக்கலாம்,

வில்லனின் விநோதங்கள் said...

என்னமோ போங்கய்யா, இந்த மாதிரிதான் எல்லாரும் இருக்கிங்க. ( கடவுள்னு ஒருத்தன் இருந்தா, )ஆண்டவா அடுத்த பிறவியில் என்னை மனிதனாக படைக்காதே.......

பன்னியாக கூட இருந்துவிடுகிறேன், மனிதனாக பிறக்க விரும்பவில்லை.

കെ.പി.സുകുമാരന്‍ said...

இந்த பதிவு எனக்கு வியப்பைத்தான் தருகிறது. தமிழர்களை கேவலப்படுத்தி இந்த மாதிரி பதிவை எந்த மலையாளி பதிவரும் போடவில்லை. உங்கள் குறுகிய மனப்பாண்மை எனக்கு வருத்தத்தை தான் தருகிறது. ஒரு சிலரை வைத்து ஒரு மானிலமக்களை மொத்தமாக கேவலப்படுத்துவது உகந்தது தானா என்று மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். எனக்கு தமிழ் மொழி,கலாச்சாரம் இவைகளில் ஆழ்ந்த பற்றுதல் உண்டு. ஆனால் எழுதுவதர்க்கு அவ்வளவு ஞானம் கிடையாது. தமிழ் ஆர்வ்வத்தால் தான் தினமும் தமிழ் ப்ளோகுகளை படித்து வருகிறேன். வணக்கம்.

FEEDJIT Live Traffic Feed