கல்கத்தா நியுஸ் என்ற மொக்கை படத்திற்குப்பின் பிளஸ்சி இயக்கிய அற்புதமான படம் ப்ரம்மரம். தமிழில் அதிகம் விமர்சனம் இடப்பட்ட மலையாளப்படங்களில் ஒன்று. பிடித்த படங்கள் எது என்றுகேட்டால் ஆயிரம் சொல்லலாம். பாதித்த படங்கள் எதுவென்று கேட்டால் சில படங்கள் மட்டுமே நினைவில் வரும். அதில் ஒன்று ப்ரம்மரம்.
சிறுவயதில் செய்யாத தவறுக்கு தண்டனைப்பெற்று அதனால் இளமையைத்தொலைத்து பின் புதிய வாழ்க்கை தொடங்கிய ஒருவனின் வாழ்க்கையில் மீண்டும் அதே பிரச்சனை புயலை கிளப்பும்போது அதனை எதிர்கொள்ள, பிரச்சனையை தீர்க்க எடுக்கும்முயற்சி கடைசில் அவன் அவன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதா? வண்டின் இரைச்சல் போன்று மனதில் குடைச்சல் கொடுக்கும் விசயத்திற்கு தீர்வு கிடைத்ததா? படத்தைப்பார்க்கவும்.
பள்ளிப்பருவத்தில் இரண்டு மாணவர்கள் ஒரு மாணவியை குளத்தில் தள்ளிக்கொலை செய்ய தவறுசெய்யாத மாணவன் சிவன்குட்டி(மோகன் லால்) மேல் பழிசுமத்தப்படுகிறது. ஏழுவருடங்கள் சிறையில் கழித்து இளமையை தொலைத்து திரும்ப வருபவன் ஊரைவிட்டுசென்று பெயரையும்மாற்றி பழசை மறந்து திருமணமும் செய்து அன்பு மனைவி, அழகான பெண்குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.
ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள அங்கு சிறுவயதில் கொலைசெய்யப்பட்ட மாணவியின் தாய் சிவன்குட்டியை அடையாளம் கண்டு அவனிடம் ஆத்திரம் கொள்ள, இந்த சம்பவம் ஊருக்கும், அவன் மனைவிக்கும் தெரியவருகிறது. தன் கணவன் ஒரு கொலைகாரன் என நினைத்து மகளுடன் தன்தாய் வீட்டுக்கு கிளம்புகிறார் மனைவி.
மனைவி மகளிடம் அதிக பாசம் வைத்திருக்கும் சிவன்குட்டி அவர்களிடம் அந்த கொலையை தான் செய்யவில்லை என்ற உண்மையை அந்த கொலையை செய்தவர்களை கூட்டிகொண்டுவந்து
உண்மையை புரியவைக்க அந்த இரண்டு பேரையும் தேடி பயணப்படுகிறார். கடைசியில் உண்மைதெரிந்து சிவன் குட்டி மனைவி மகளுடன் சேர்ந்து வாழ்ந்தாரா? படத்தைப்பாருங்கள்.
படம் முழுவதும் லாலேட்டனின் ஆதிக்கம். தன்மாத்திரா, நரன் படங்களில் பார்த்த மோகன்லாலை விட இதில் இருமடங்கு விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். பால்ய நண்பனின் வீட்டில் நண்பனாக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் நுழைவதும் தன்னை அடையாளம் கண்டுகொண்ட நண்பனிடம் பிரச்சனையை விளக்கி வீட்டுக்கு வந்து உண்மையைசொல்லுமாறு கேட்பதும் என காட்சிக்கு காட்சி மோகன்லாலின் ஆக்கிரமிப்பு. மோகன்லால் என்னும் நடிப்பு அரக்கனின் முன் வருபவர்கள் எல்லாம் தூசாக தெரிகிறார்கள். லாரிஓட்டும்போது ஒரு டிபிக்கல் லாரி ட்ரைவரை கண்முன்னே நிறுத்துகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில்... போதும் இதற்குமேல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கடைசியாக ஒன்றும் மட்டும் இந்தப்படத்தில் புரியவில்லை, பிளஸ்சி ஏன் இதில் பூமிகா வை நடிக்க வச்சாரு? அன்னார கண்ணா வா பாடல் இன்னும் மனதில் நிற்கிறது.
தன்மாத்ரா படம் கொடுத்த வெற்றியில் விருது வாங்குவதற்காக அதே தாக்கத்தில் இந்தப்படத்தை எடுத்ததாக கூட சொல்வதுண்டு. ஆனால் இரண்டு படத்துக்கும் எந்த விதத்தில் ஒற்றுமை இல்லை. தனித்தனியாக பிரம்மிப்பூட்டுகின்றன. நல்ல படங்களை தேடிச்சென்று பார்ப்பவர்கள் இந்தப்படத்தை தவறவிடவேண்டாம்.
ப்ரம்மரம்- முழுப்படமும் யூட்யுபில் கிடைக்கிறது.



31 comments:
அருமையான படம் இது பிரதாப். பார்த்து முடித்த பின் அதன் பாதிப்பு எனக்கு வெகு நாள் இருந்தது. உங்கள் விமர்சனம் மிக அருமை.
சிடி வாங்கிட்டேன்...விரைவில் பார்க்கனும் ;))
நல்லா எழுதியிருக்க கண்ணு ;)
உள்ளேன் அய்யா...
என்னடா இன்னும் ஒண்ணும் காணோம் என்று பார்த்தேன்..வழக்கம் போல் நல்ல அலசல் தல..
மறக்க முடியாத திரைப்படம் பிரதாப். நன்கு விமர்சித்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.
உங்கள் விமர்சனத்தில், உங்கள் மனதில் படம் விட்டு சென்ற பாதிப்பு தெரிந்தது. :-)
பிரம்மரம் ஒரு அருமையான படம் பிரதாப் . உங்கள் விமர்சனம் சூப்பர் சிஷ்யா கலக்கிட்டீங்க .
பிரம்மரம் ஒரு அருமையான படம் பிரதாப் . உங்கள் விமர்சனம் சூப்பர் சிஷ்யா கலக்கிட்டீங்க .
விமர்சனமே படம் படம் பார்க்கவேண்டும் எனும் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது!
பின்னூட்டமிட கஷ்டமாயிருக்கு பிரதாப்! தனியான விண்டொவிலோ அல்லது பாப் அப்பிலோ வையுங்களேன்! சேம் பேஜில் ஆபிஸில் இருந்து இட இயவில்லை.
பிரபாகர்.
ரைட்டு, யூட்யுபில் புகுந்துற வேண்டியதுதான், நன்றி பிரதாப் இந்த அறிமுகத்திற்கு.
நான் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த படம்! எப்படியும் ஏசியாநெட்டில் விஷூ வுக்கு போடுவானே அப்ப பார்க்கலாம்னு இருந்தேன் :-). உங்கள் விமர்சனம் படித்ததும் உடனே பார்க்கத் தூண்டுது!
பார்க்கிறதுக்கும், விமரிசனம் எழுதுறதுக்கும் மட்டும் மலையாளப் படங்கள்தான் சிறந்தவை, இல்லையா பிரதாப்?
நல்ல பகிர்வு பிரதாப். உங்கள் விமர்சனம் படம்பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இது போன்ற விமர்சனங்களை மேலும் எழுதுங்க நண்பா.
(போன பதிவுல, ஏன் படம் போடலை நல்லாத்தானே இருந்தது என்ற அர்த்தத்தில் தான் எழுதியிருந்தேன் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் போடும் படமும் கமெண்டும் மிக அழகாக இருக்கின்றன.)
-:)அட்டண்டன்ஸ்ல பேர ஏத்திடுங்க
நல்லாருக்கு உங்க விமர்சனம்
பிரமரம்னா வண்டு தான . . விமர்சனம் நன்னாயிட்டு உண்டு . . சீக்கிரம் நோக்கணும் . . அப்புடியே, இனிமே படத்தின் டைட்டிலுக்கும் ஒரு சின்ன அருஞ்சொற்பொருள் கொடுக்கணும்னு, புரியாத மொழிப்படங்களை விரும்புவோர் சங்கத்துல இருந்து ஒரு வேண்டுகோள் . .:-)
வே முதல்ல டெம்ப்ளேட்டை மாத்துவே...
எழுத்தே தெரிய மாட்டுது..
நானும் எவ்ளோ நாளுதான் படிக்காமலே கமெண்ட் போடுவேன்..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:)
hi Nanjil,
Here is my review on bramaram,http://ananyathinks.blogspot.com/2010/01/blog-post_31.html
I too felt the same as you did.
படம் நல்லப்படம்தான். ஆனா என்ன, அதில் வரும் தமிழ் வசனங்கள் ஒரு நெருடல். மற்றப்படி ரொம்ப நல்ல படம். படத்தில் வரும் குழந்தைகள் பேச்சு அவ்வளவு அழகாக இருக்கும், Innathey chintha vishyam போல.
விமர்சனம் ரொம்ப நல்லாயிருக்கு.படம் பார்க்கனும்தோனுது.
உங்க விமர்சனத்தை படித்து பெருமழைக்காலம் படம் பார்த்தேன்.படம் சூப்பர்ர்ர்!! பகிர்தலுக்கு மிக்க நன்றி!!
@நன்றி ராமசாமி
@கோபி: யோவ் சிடி வாங்கி என்ன பூஜைபண்ணவா வச்சுருக்க...?
@மலரக்கா: அட்டனன்ட்ஸ் போட்டா மட்டும் போதுமா?? :)
@நன்றி ஸ்டீபன்... கண்டிப்பா போடுவேன் தல கவலைப்படாதீங்க
@நன்றி சரவணன்
@ சித்ரா டீச்சர்: நீங்க டீச்சர்தானே...எப்ப மனநலமருத்துவரா ஆனீங்க....? :)
@ ஸ்டார்ஜன்: நன்றி குரு...
@ பிரபாகர்: நன்றிங்கணோவ்... கமண்ட் வின்டோ மாத்திட்டேன்...நீங்க சொல்லி செய்யாமலா?
@ சை.கொ.பரோட்டா: பாருங்க தல... படம் சூப்பர்
@ கவிசிவா: விஷூவுக்கு இன்னும் நாள் இருக்கே...எப்படியும் ஓசிலதான் பார்க்கப்போறோம்... அதை உடனே யூடியுப்லபாருங்க :)
@ஹுசைனம்மா: நீங்க குத்திக்காட்டறது புரியுது. ஊருக்கு ஒரு உபதேசம் குடும்பத்துக்கு ஒரு உபதேசம் பண்ணுற அரசியல்வாதிகளை ஓட்டுப்போட்டு முதல்வர் ஆக்குவீங்க...என்னை மாதிரி ஆளுங்ககிட்ட குறுக்குகேள்வி கேட்பீங்க... எங்ககேட்கனுமோ அங்க கேட்காதீங்க. அவங்களை நிறுத்தச்சொல்லுங்க நான் நிறுத்தறேன். :)
@ அக்பர்: நீங்க கேட்டது நியாயமான கேள்விதான். என்னது வருத்தப்படறதா? இப்படி நீங்க சொல்றதுதான் வருத்தமா இருக்கு தல...ப்ரீயா வுடுங்க...நம்மக்குள்ள என்ன பார்மாலிட்டி. நம்ம குருகிட்டசொல்லி ஒரு கவுஜை ரெடிபண்ணிக்குடுங்க தல... :)
@ஷபி: செல்லாது செல்லாது... கருத்துச்சொன்னாத்தான் அட்டனன்ட்ஸ் போடுவேன்...
@சதீஷ்: நன்றிங்க
@கருந்தேள்: என்னத்தல வுட்ட தமிழ்வாத்தியார் ரேன்சுக்கு கொண்டுப்போயிருவீங்க போல... ஆமா அப்ப மத்த பதிவுல்லாம் புரியுதா?
@கண்ணா: நல்லத்தானவே இருக்கு...வேறயாருக்கும் இந்தபிரச்சனை இல்லயே... எப்படித்தெரியுது. என்னோட பொட்டில கிளியரா இருக்கு தல...
@அனன்யா: பார்தேன் படித்தேன். கருத்துமழை பொழிந்தேன்..நன்றி அனன்யா...
@மேனகா: பாத்தீங்களா? சூப்பர் படம் அது. காழ்ச்சா பாருங்க இன்னும் நல்லாருக்கும்.உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...
வணக்கம் தல..... நேத்துதான் உங்களோட "வலைப்பூ" முதல் தடவையா பார்த்தேன். வேற பக்கம் போறதுக்கு மனசே வரல தல.......ரொம்ப நாளைக்கு அப்புறமா நம்ம பக்கத்து பாஷையை கேக்க (படிக்க) மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.....
அப்புறம் ஒரு சின்ன விஷயம்.... Chorme -ல RSS Feed பண்ண முடியல.... Fire Fox- la பண்ண முடிஞ்சது......அத மட்டும் கொஞ்சம் கவனிச்சிங்கன்னா --- நல்லா இருப்பேடே மக்கா....
நன்கு விமர்சித்துள்ளீர்கள்
ஹீ ஹீ . . மத்த பதிவெல்லாம் பிரியுதுன்னு சொன்னா, நான் உண்மை சொன்னவன் ஆகிவிடுவேன் என்பது நடந்து விடுமோ என்ற ஒரு உணர்வினால், நான் பொய் சொன்னவனாகவே ஆகிவிடுகிறேன் என்பது அம்மணமான ஒரு உண்மையாக மாறிவிடும் என்பது எனது சகோதர சகோதரிகளான உண்மைத் தமிழர்களான எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். . ஆனால் நான் ஆஸ்காருக்கு ஆசைப் படவில்லை என்பதும் உண்மை தான். . ஆஆஅ . . (நன்றி - கமல்ஹாசன்)
இன்னா தான் நெனச்சிக்கீனு கீர, எனுக்கு தமிழே ஒயுங்கா தெரியாது !! இதுல மல்லாலப் படம் வேற கமண்டு குத்து என்ன எப்பிடியாது , பாக்க வெச்சி ஒரு வயி பண்ற முடிவுல கீரியா ? செர்தான், நானு அப்பீட்டு உட்டுக்கறேன் பா !!
@ஷண்முகம் : //வேற பக்கம் போறதுக்கு மனசே வரல தல//
உண்மையாவா? பொய்தான...? :)
FIRFOX பீட் பண்ணியாச்சுல்ல அப்ப பயர்பாஸ்சுலேயேப்படிங்க... க்ரோம் சில பிரச்சனைகள் இருக்குத்தல. IE - FEED பண்ணிக்கோங்க... இல்லன்னா கூகுள் ரீடர்ல போட்டுவைங்க பிரச்சனையே இல்ல... ரொம்ப நன்றி தல... அடிக்கடி வந்துட்டுப்போங்க...
நன்றி டிவிஆர் சார்...
@கருந்தேள்: போய்ட்டு திரும்பவந்ததோட இல்லாம இப்படி புரியற(?)மாதிரி ஒரு கருத்தைச்சொன்ன கருந்தேள் வாழ்க... நடக்கும்போது தேளு கடிக்க... **&*&**&#*&#*&*#&*#&*#&#*
@டவுசரு : தல அல்லாத்தையும் தெரிஞ்சு வஞ்சுக்கோ தல... பின்னாடி உதவும்... சப்பை மேட்டரு தல இதெல்லாம்...
அதெல்லாம் சரி.. இப்பத்தானே நீங்க மலையாளியை பத்தி நெகடிவா எழுதினீங்க.. அப்புறம் ஏன், மலையாளப் படங்களா விமர்சனம் பண்ணிட்டு இருக்கீங்க ?
//Madhavan said...
அதெல்லாம் சரி.. இப்பத்தானே நீங்க மலையாளியை பத்தி நெகடிவா எழுதினீங்க.. அப்புறம் ஏன், மலையாளப் படங்களா விமர்சனம் பண்ணிட்டு இருக்கீங்க ?//
அப்ப ஃபிகரு மடியல....இப்போதான் மடியுது...
இதெல்லாம் உள்நாட்டு விவகாரம் நீங்க தலையிடாதீங்க...
ஆனா ஒண்ணு அந்த பிலிப்பைனி பாவம்....
வே.கண்ணா: .. வேணாம்வே... ஜாதகத்துல ஒரு கொலை பண்ணனும்னு போட்டிருக்கு... அது யாரைன்னு இன்னும் முடிவுபண்ணலை... இப்ப முடிவு பண்ணவேண்டிருக்கும்போல...
நேத்துதான் பாத்தேன். படம் முழுக்க மோகன்லால்தான். கலக்கியிருக்கிறார்.
Ji
after your review yesterday i saw that film ..
thanks to torrent
Good movie
Post a Comment